Books / Living Enlightenment (Gospel of Paramahamsa Nithyananda) Tamil merged

162. இன்னொரு குருவை ஏற்பது தவறா?

# இன்னொரு குருவை ஏற்பது தவறா?

Is it wrong to accept another Guru?

11. நம்ம வாழ்க்கையில் ஒரு குருவைச் சந்தித்து விட்டோம் என்றால், அவரை மட்டும்தான் வாழ்நாள் முழுவதும் பின்பற்ற வேண்டுமா ?

  • ரமேஷ், கோவில்பட்டி

சத்தியத்தையே வேறு யாராவது ஒருவர் வேறு ஏதாவது ஒரு ஒரு முறையிலே காட்டுவாரானால், காட்ட இயலும் என்று தெரிந்தால், அவரை முழுமையாகக் கடைபிடிப்பதற்கு நம் தா்மத்தில் சுதந்திரம் அளிக்கப்பட்டிருக்கிறது.

மிகவும் அமகாக விவேகானந்தர் சொல்வார். "freedom is the first condition for any growth" சுதந்திரம் என்பதுதான் வளர்ச்சியின் அடித்தளம்.

மேலை நாடுகளில் சமூக சுதந்திரம் உண்டு, அவர்கள் எங்கே வேண்டுமென்றாலும், எப்போது வேண்டுமென்றாலும், எதை வேண்டுமென்றாலும் மாற்றிக் கொள்ளலாம்.

வீடு, கார், வீட்டுக்காரர் மூன்றையும் மூன்று மாதத்திற்கு ஒரு தடவை மாற்றிக்கொண்டே இருக்கலாம். சமூக ரீகியாக சுதந்திரத்தில் வளர்ந்திருக்கிறார்கள். ஆனால், அவாகிளத்த ஆன்மீக சுதந்திரம் இல்லை.

வாயில் ஊட்டிவிடுவது (spoon feeding) என்று சொல்வார்களே, அதுபோல்தான், அவர்களுக்கு ஆன்மீகம் என்பது. ஒரு குறிப்பிட்ட வகுக்கப்பட்ட கொள்கைகள், சட்ட திட்டங்கள் மட்டும் இருக்கும். அவ்வளவுதான்.

நமக்குப் பெரிய சமூக சுதந்திரம் இல்லை.

ஆனால், மிகப்பெரிய ஆன்மீக சுதந்திரம் இருந்திருக்கிறது. அதனால்தான், அந்தத் துறையில் நாம் அந்த அளவிற்கு ஆழமாக மூழ்கி முத்தெடுத்திருக்கிறோம்.

அவர்களுடைய நாட்டிலே காரை மாற்றிக்கொள்வதற்கு, வீட்டை மாற்றிக்கொள்வதற்கு, வீட்டுக்காரரை மாற்றிக்கொள்வதற்குச் சுதந்திரம் இருக்கிறது.

நம் நாட்டில் நாம் செல்லுகின்ற சத்தியத்தை நோக்கிய பாதையை மாற்றிக் கொள்வதற்கு, குருவை மாற்றிக்கொள்வதற்கு, கடவுளை மாற்றிக் கொள்வதற்கான சுதந்திரம் இருக்கிறது.

ஏனென்றால், ஒன்றைத்தாண்டி ஒன்றில் நாம் போய்கொண்டே இருப்போம் என்கின்ற ஆழத்தை நம் முன்னோர்கள் உணர்ந்ததினால், அந்தச் சுதந்திரத்திலே எந்த விதத்திலும் குறுக்கீடும், கலையீடும் வராமலே பார்த்துக் கொண்டார்கள்.

இராமகிருஷ்ணர் மாதிரி ஒரு குருபக்தி உடைய ஆழ்ந்த சரணாகதி உடைய மனிதரைப் பார்க்க முடியாது. அவர் எந்த குருவிடமும் செல்வதற்குத் தயங்கவே இல்லை.

'யோக'த்தை ஒருவரிடம் கற்றார்.

அதற்கு அடுத்த நிலையான 'தந்திர'த்தை அளிப்பதற்கு, இன்னொரு பைரவி வந்தபொழுது, தயங்காமல் அவரிடம் சென்று கற்றார்.

அதற்கடுத்து, 'வேதாந்த'த்தின் உச்ச ஞானத்தை அடைவதற்கு தோத்தாபுரி என்கின்ற ஞானி வந்தபோது, தயங்காமல் பைரவி பிராமணி என்கின்ற 'தாந்த்ரீக குரு' தடுத்தபொழுதும், தயங்காமல் அவ்வளவையும் உதறிவிட்டு தோத்தாபுரியிடமும் சென்று, ஞானத்தை உள்வாங்கினார். அதுதான் அந்த சத்தியத்தின் சக்தி ..

தேடுதலை விடாமல் இருக்கின்ற ஒரே ஒரு விஷயத்தை மட்டும் நமமுடைய ஞானிகள் வலியுறுத்துகிறார்கள்

தேடுதல் உடைய ஒருவா் அடுத்த நிலைக்குத் தன்னை உயா்த்திக் கொள்வதற்கு உதவும் இன்னொரு குருவிடம் செல்வதற்குத் தயங்க வேண்டியதில்லை.

நேரங்களில் உங்களுடைய குருவின் சக்தியும், ஆசீர்வாதமுமே அடுத்த பல் பரிமாணத்தை மலர்த்த உதவும் மற்றொரு குருவிடம் அழைத்துச் செல்லும். நிம்மதியாக உங்களின் பயணத்தைத் தொடருங்கள்.

நான் ரொம்ப பிஸியானவன்

I am a verv busy person

12. நான் ரொம்ப செய்ய நேரமிருப்பதேயில்லை. என்ன செய்வது ?

  • இரகுபதி, காரைக்குடி

''தியானம் செய்ய எனக்கு நோமில்லை,'' என்று சொல்லாதீர்கள்.

"தியானம் செய்ய எனக்கு விருப்பமில்லை," என்று சொல்லுங்கள்.

காலைக்கடன்களையும், உணவையும் ''நான் பிஸியாக இருக்கிறேன்,' எனச் சொல்லித் தவிர்த்து விடுவீர்களா என்ன? ஒரு நாள் தவிர்த்தாலும் அடுத்த நாள் தொடர்வீர்கள்கானே. ?

தியானம் செய்ய எனக்கு நேரமில்லை எனச் சொல்லித் தவிர்ப்பது, தியானம் எவ்வளவு மகத்துவம் பெற்றது. அது எவ்வளவு பலன்களைத் தரக்கூடியது என்ற உண்மைகள் தெரியவில்லை என்று பொருள்.

தியானத்தின் அவசியம் ஆமப் பரியாகதால், 'தியானம் செய்ய வேண்டும்' என்ற விருப்பம் இன்றும் உங்களுக்குள் அரும்பவே இல்லை.

விருப்பம் மலராததால்தான், ஒரு நாளுக்கு வெறும் அரைமணி நேரம் கூட தியானத்திற்காக ஒதுக்குவது எப்படி என யோசிக்காமல், சாக்குபோக்குச் சொல்லித் தட்டிக்கழிக்க வைக்கிறது மனம்.

தியானம் செய்ய, விருப்பத்தை அரும்பச் செய்யுங்கள். இல்லை, தியானம் செய்ய எனக்கு விருப்பமில்லை எனச் சொல்லுங்கள். இரண்டும் சரியோனம் செய்ய நேரமில்லை என்று தயவு செய்து சொல்லாதீர்கள்.