161. உன்னத ஆன்மாக்கள்
# உன்னத ஆன்மாக்கள்
Higher Souls
- அனந்த சமாஜம் என்றால் புரிகிறது. அதென்ன ஆனந்த சமாஜத்தினா் ? (Ananda Samajiate)
- மாதவ், திருவாளர்
உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு ஆனந்தத்தையும், தியானத்தையும் எடுத்துச் சென்று சோ்ப்பது என்பது என் தனி முயற்சியால் மட்டுமே முடிந்துவிடக் கூடிய காரியமல்ல. அதே சேவையை செய்ய பலர் தங்களின் வாழ்வைத் தியாகம் செய்திருக்கிறார்கள்.
இந்தச் சேவையை நேரடியாக, உலகுக்குத் தருகின்ற மக்கள் ஒன்றாய் வாழுமிடத்தைத்தான் 'ஆனந்த சமாஐம்' என்கிறோம்.
ஆனந்தசமாஜத்தில் வாழும் வாய்ப்பைப் பெறாதவர்கள், அவரவா் வாழுமிடத்திலிருந்தே இவ்வளவு பெரிய தாம் செவையில் துங்களையும் இணைத்துக்கொள்ளும் பாக்கியசாலிகளைத்தான் ஆனந்த சமாஜத்தினர் (Ananda Samajiate) என்கிறோம்.
ரோடியாகமக்களின் வாழ்வை உயர்த்துவதற்கானஇந்தச் சேவைக்கு, உணர்ச்சிப்பூர்வமான பொறுப்பெடுத்து ஒரு மாதத்தில் தன்னுடைய மூன்று நாள் வருமானத்தை, மக்களுக்காக

இயங்கும் இந்தச் சேவைக்கு அளித்து, குறைந்தது ஒரு மாதத்திற்கு, ஒரே ஒரு நாளாவது தங்களுடைய நேரத்தை அர்ப்பணித்து வாழ்பவா்கள்தான் ஆனந்த சமாஜத்தினா.
முதல்வகையினர் சேவையை அனுபவிப்பதோடு நின்றுவிடுபவர்கள். இன்னொரு வகையினர் இருக்கிறார்கள். இவர்கள் தங்களுக்குத் கிடைக்கும் ஒவ்வொன்றிற்கும் நன்றி சொல்வதோடு, நன்றிக் கடனாய் ஆனந்த சேவையாய், தாங்கள் பெற்றதை உலகில் உள்ள ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் பெற, நான் உதவ வேண்டும் என்று சொல்பவர்கள்.
இந்தச் சேவை, இந்தத் தியானம், இந்தப் புத்தகம் என்னிடம் வந்து சேர்வதற்கு எத்தனைபேர் தங்களின் உழைப்பாக்கியிருப்பார்கள் ?
யாரோ ஒரு சிலர் தங்களின் வாழ்வையும், குணத்தையும், பணத்தையும் தியாகம் செய்ததினால்தான் பல்லாயிரம் மக்களின் வாழ்வு பூத்திருக்கிறது என்னும் உண்மையை உணர்ந்த உன்னத ஆன்மாக்கள்.
இந்தப் புனித சேவையை அனுபவிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல், அதற்கான பொறுப்பையும் எடுக்கும் உயா்ந்த உணர்வுடைய ஆன்மாக்கள்தான், ஆனந்த சமாஜத்தினர்.
கூட்டுத் தியானத்திற்கு அவ்வளவு சக்தியா?
So much power for mass meditation ... ?
- ஒருமுறை சேலத்திலும், ஒருமுறை கோயம்புத்தூரிலும் உங்களின் இலவச தியான சத்சங்கங்களில் பங்கு பெற்றிருக்கிறேன். எல்லோருக்கும் நீங்கள் கற்றுத் தரும் 'நித்ய தியானத்தை' நான் தினமும் வீட்டில் செய்து வருகிறேன். சக்தியோட்டத்தை நன்றாக உணர்கிறேன். வீட்டில் செய்யும் போது எனக்குள் நிகழும் ஆனந்த உணர்வை விட, சத்சங்கங்களில் செய்யும் தியானத்தில் அதிக ஆனந்த உணர்வு ஏற்படுகிறது. இது ஏன்? எதனால் இப்படி அதிகரிக்கிறது ? -கோபி, நான்சல்
காரணம், கூட்டுத்தியானத்தின் மகிமை!
பத்துப்போ சேர்ந்து பத்து பத்து ரூபாய் கொடுத்தால் நூறு ரூபாய் சேரும். அந்த நூறு ரூபாயை அதே பத்து பேர் சமமாகப் பிரித்துக் கொண்டால் ஒவ்வொருவருக்கும் வெறும் பத்து பத்து ரூபாய் மாத்திரமே கிடைக்கும்.
ஆனால் பத்து, பத்து வோல்டேஜ் மின்சாரத்தை ஒன்றாகச் சேர்த்து வைத்து, பத்துப்பேரும் சேர்ந்து ஒரே நேரத்தில் அந்தப் பேட்டரியைத் தொட்டால் என்ன நிகழும்! பத்துப் பேருமே நூறு வோல்டேஜ் மின்சார அதிர்வைப் பெறுவார்கள். கொடுத்தது பத்து வோல்டேஜ் மின்சாரம், ஆனால், பெற்ற அதிர்வு நூறு வோல்டேஜ் மின்சாரம்.
இதேதான் கூட்டுக் தியானத்தின் போது நிகழ்கிறது.
திரு. கோபி, பல நூறு மக்கள் ஒரே இடத்தில் தியானம் செய்யும் போது, அவ்வளவு பேரின் தியான சக்தியும், ஒரே அறையில் குவிகிறது. மொத்தத் தியான சக்திக் களத்தையும், நங்கள் ஒரு சேர உணர்வதால்தான், ''அதிகமாக ஆனந்த உணர்வைப் பெறுகிறேன்,'' என்று நீங்கள் கூறுகிறீர்கள்.
இப்படி எல்லோரும் தியான சக்தியை முழுமுமையாக அனுபவிக்க வேண்டும் என்பதற்காகத்தான், முடிந்த அளவு ASP தியான முகாம் நடைபெற்ற எல்லா ஊர்களிலும் தியானபீடத்தின் கிளைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
அங்கே எல்லோருக்கும் இலவசமாகத் தியானம் கற்றுத்தரப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் வியாழக் கிழமைகளில் கூட்டுத் தியானத்தின் மூலமாக, பொது மக்களுக்குத் தியானம் கற்றுத்தரப்படுகிறது.
தினம் காலை, மாலை 6.30 முதல் 7.00 மணி அளவில் நித்ய தியானம் கூட்டுத் தியானமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
கூட்டுத்தியானத்தின் மகிமையை, உங்கள் ஊரில் இருக்கும் தியானபீடக் கிளையில் சென்று, நீங்கள் தொடர்ந்து அபைவிக்கலாம்.