153. பகுத்தறிவைத் தாண்டிய ியங்கள்
# பகுத்தறிவைத் தாண்டிய ியங்கள்
- இறைவன் ஒரு இரகசியப் பொருளல்ல ...
ன ன் வாழ்வில் நடந்த மற்றொரு உண்மைச் சம்பவம். ஆழமாகப் புரிந்து கொள்ளுங்கள். என்னுடைய வாழ்க்கையிலே, ஒன்பது ஆண்டுகள் நடந்தே ஆன்மீக யாத்திரை செய்து கொண்டு இருந்தேன்.
உடலில் திடமிருக்கும் சிறுவயது. பிகைஷ் எடுத்துச் சாப்பிட்டு, மரத்தடியில் தூங்கி, ஊர் ஊராக நடந்து யாத்திரை செய்து கொண்டு இருந்தேன்.
இந்தியா முழுவதும் பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்கள் உண்டு. அது பன்னிரண்டு ஆலயங்களில் அமைந்திருக்கிறது. அந்தப் பன்னிரண்டு கோயில்களையும் நடந்து பார்ப்பது ஒரு மிகப்பெரிய புண்ணியமாகக் கருதப்படுகிறது. இன்னமும் அந்தப் பன்னிரண்டு ஜோதிர்லிங்க யாத்திரை உண்டு. ஆனால் இப்போதெல்லாம் மக்கள் ரயிலில் செல்கிறார்கள்.
சன்யாசிகள் 12 ஜோதிர்லிங்கத்தையும் நடந்து சென்று தரிசிப்பது ஒரு தவம். அதற்காக ஜோதிர்லிங்க யாத்திரை சென்று கொண்டிருந்தேன்.
குஜராத்தில், அஹமதாபாத்திலிருந்து சோம்நாத்புரிக்குச் சென்று கொண்டிருந்த வழியிலே நடந்த நிகழ்ச்சி.
ஆழமாக இந்தச் சத்தியத்தைக் கேளுங்கள். எப்படி, எந்த அந்தஸ்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது முக்கியமல்ல. எந்த நிலையில் வாழ்கிறோம் என்பதுதான் நிஜமான சாதனை.
சமுதாயத்தில் உயர்நிலையை (Status) அடைவது பெரிய விஷயமல்ல.
நேர்மையற்ற மனம் இருந்தால் போதும். எங்கே வேண்டுமானாலும், எந்த அந்தஸ்தை வேண்டுமானாலும் எந்த உழைப்பும் இல்லாமல் உடனே அடைந்து விடலாம். அதற்கு ஒன்றும் பெரிகாகச் செய்ய தேவையில்லை.
ஆனால் உயர்ந்த நிலைப்பாடு (State) என்பது தெளிந்த திடத்தாலும், ஆழ்ந்த ஞானத்தாலும், உயர்ந்த உணர்வாலும், அளப்பரிய ஆனந்தத்தாலும் அடையப்படுகிறது.
வட இந்தியாவில், குஜராத்தில் உள்ள கிராமத்தின் வழியாய் யாத்திரை செய்து கொண்டிருந்தேன்.
அஹமதாபாத்திலிருந்து, சோம்நாத்திற்கு சென்றுகொண்டிருந்தேன். பெரிய ஜோதிர்லிங்க ஸ்தலம் அது. ஆன்மீக யாத்திரை சென்று கொண்டிருந்தபோது நடந்த ஒரு சம்பவம் இது.
யாத்திரையின்போது ஒரு கிராமத்தில் தங்கி இருந்தேன். அந்தக் கிராமத்தில் இருந்த வயதான பாட்டி ஒருவர், வீட்டில் வந்து ஒரு வாரம் தங்கி இருங்கள், '' என்று கேட்டுக் கொண்டார்.
ஏழைகள் கொடுக்க பிடித்துவைக்கின்ற இல்லை. அவர்கள் நதி போன்றவர்கள். ஒடிக் கொண்டே இருப்பார்கள். அதனால் அவர்களுக்குத் கேவையானதும் வந்து கொண்டே இருக்கும்.
எழைகள் கொடுப்பதுபோல யாரும் கொடுக்க மாட்டார்கள். ஏழைகளுக்குப் பிடித்துவைக்கின்ற பமக்கம் இல்லை. அவர்கள் நகி போன்றவர்கள் ஒடிக்கொண்டே இருப்பார்கள்.
அந்த வயதான பெண்மணி, ''ஒருவாரம் வந்து தங்குங்கள்,'' என்று சொன்னார். நானும் '' அதற்கென்னம்மா, யாராயிருந்தால் என்ன? கூப்பிட்டீர்கள் என்றால் வந்து விடுகிழே றன்," என்று சொன்னேன்.
அந்த அம்மாவிற்கு எண்பது வயது இருக்கும். அந்த அம்மாவின் மொத்துமே, ஒரு கால் ஏக்கர் நிலமும், அந்த நிலத்துக்குள்ளேயே ஒரு சின்ன குடிசை, ஒரு பசு மா(). இவ்வளவுதான்.
அந்தக் கால் ஏக்கா் நிலத்தில் விளைகின்ற புல்லை, அந்தப் பசுமாட்டுக்குத் தீனியாகப் போட்டு, அது கறக்கின்ற பாலைத் தயிராக, மோற்றி, அந்தக் கிராமத்திலுள்ள இரண்டு தெருவில் விற்றுவிட்டு வாழுகின்ற வாழ்க்கை. சொத்து என்ற இதைத் தவிர்க்கு வேறு ஒன்றும் கிடையாது. இதைத்தான் அன்றாடங் காய்ச்சிகள் என்ற தமிழில் சொல்வோம்.
ஒரு மணிநேரம் வேலை செய்தால் ஒரு பத்து ரூபாய் சம்பாதிப்பார். ஐந்து மணி நேரம் வேலை செய்தால் ஐம்பது ரூபாய் சம்பாதிப்பார். ஐம்பது ரூபாய்தான் அவருடைய தினசரி வருமானம். அதில் அவருக்குரிய சாப்பாட்டை வாங்கிக் கொண்டு வருவார்.
அந்த வயதான அம்மா வீட்டில் ஒரு சின்ன கிருஷ்ணர் விக்ரகத்தை வைத்திருந்தார்.
அந்தக் கிருஷ்ணர் விக்ரகத்திற்கு நைவேத்யம் வைக்க என்னென்ன வேண்டுமோ அதையெல்லாம் வாங்கி வந்து வைத்து நைவேத்யம் செய்வார்.
ஒரு வாரம் அவர்கள் வீட்டில் தங்கி இருந்தேன். அந்த ஒரு வாரமும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்தக் குறைந்த வருமானத்திலே, கிருஷ்ணருக்கு எல்லா விளையாட்டுப் பொருளுளும் வாங்கிவருவார்.
'கிலுகிலுப்பை' என்று சொல்வார்கள், குழந்தைகள் விளையாடும் பொம்மை அது. அதையெல்லாம் வாங்கி வந்து கிருஷ்ணரிடம் வைத்தார்.
எனக்கு ஆச்சரியமாக இருக்கும். 'சாப்பாடு வைத்தாலும் பரவாயில்லை. நைவேத்யம்

வைத்தால் அதையும், இந்தம்மாதான் சாப்பிடப் போகிறார். பொம்மையெல்லாம் வைக்கிறாரே?' என்று யோசித்தேன்.
கடவுள் சாப்பிட்டால், எத்துனை போர் நைவேத்யம் வைப்பீர்கள்.
தொடர்ந்து செய்த தியானங்கள் என்னுள் நிகானத்தை முழுமையாக மலரச்செய்திருந்தது.
நம்பிக்கை இருக்கிறது. 'அவர் சாப்பிட மாட்டார் என்கிற நம்பிக்கை!' அதனால்தான் நைவேத்யமே வைக்கிறார்கள், தேங்காயை உடைத்தால்கூட, அது சிதறி ஒடிப்போகாமல் இருக்கத் துணியில் போட்டு உடைப்பார்கள்.
அதுவும் பரீட்சையில் துர்ச்சி அடைந்தால்தான் பிள்ளையாருக்குத் தேங்காய் உடைப்பார்கள். குர்ச்சி பெறாவிட்டால் பிள்ளையாரையே உடைப்பார்கள்! அப்பேர்பட்டது மனிக மனம்!
ஆனால், அந்த அம்மா, அவ்வளவு வயதான காலத்திலும் அவ்வளவு பெரிய பக்தியுடன், கிலுகிலுப்பை முதல் சின்ன விளையாட்டுப் பொம்மையெல்லாம் வாங்கி வந்து கிருஷ்ணர் முன்பு வைத்தார்.
ஒரு முக்கியமான உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
வறட்டு வேதாந்தம் பக்தியாகா விட்டால் அதுவே தடையாகும்
அப்போது நான் பெரிய வேதாந்தி. இந்த வேதாந்தம் எல்லாம் படித்தாலே பக்தி மேல் அவ்வளவு விருப்பம் இருக்காது. பக்தி மேல் இருந்த ஈடுபாட்டைக்கூட சில நேரம் வேறு வழியில் அது திருப்பி விட்டுவிடும்.
ஆம்! 'அந்தம்மா கிறுக்குத்தனமாக ஏதோ செய்கிறார்கள்' என்றுதான் அப்போது எண்ணினேன்.
என்னுடைய அறியாத்தனம், என்னுடைய பகுத்தறிவு அவ்வாறு என்னை எண்ண வைத்தது. அப்போது நான் ஞானம் அடையவில்லை.
ஞானம் அடைவதற்கு முன்பு சாதனை செய்து கொண்டிருந்த காலம் அது. அந்த அம்மா செய்வதைப் பார்த்து எனக்கு ஏளனமாக இருந்தது.
'இதைவிட, தியானம் செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அதை விட்டு விட்டு இப்படிச் செய்கிறார்களே. சரி, அந்தம்மாவிற்குத் தெரிந்தது அவ்வளவுதான்' என்று என்னைப் பற்றி ஒரு பெருமிதத்தோடு, சன்யாசிகளுக்கே உரிய ஒருவித் கா்வத்தோடு அந்தம்மாவைப் பார்க்கு நினைத்துக்கொண்டேன்.
அந்த அம்மா, தினந்தோறும் அந்தப் பொருட்களை வாங்கி வந்து வைத்துவிட்டு கிருஷ்ணர் முன்பு உட்கார்ந்து கொண்டு, குஜராத்தி மொழியில் பேசுவார்.
''கிருஷ்ணா, வந்து விளையாடு.
வா! வா! சாப்பிட்டுப் போகலாம்,'' என்று இப்படி அந்தம்மா பேசுவார்கள்.
'சரி, பக்தியில் அந்தம்மா ஏதோ உளறுகிறார்கள். விட்டு விடப்பா, நமக்குச் சோறு போடுகிறார்கள். நமக்கு அது போதும். நாம் ஏன் அநாவசியமாக அதில் எல்லாம் தலையிடுவானேன்' என்று நினைத்துக் கொண்டேன்.
ஆனால் அதில் இன்னொரு விஷயம், இந்த அம்மா மட்டும் பேச மாட்டார். கிருஷ்ணர் பதில் பேசுவது போலவே பேசிக்கொண்டிருப்பார்.
தொலைபேசியில் நீங்கள் பேசிவிட்டு, அவர்களுடைய பதிலுக்கு ஏற்றாற்போல் பதில் சொல்கிறீர்கள் இல்லையா, அதே மாதிரி ஏதோ கிருஷ்ணர் பதில் சொல்வது போல, இந்த அம்மாவும் பதிலுக்குப் பேசுவார்கள். என்னுடைய பட்டறிவால் அது எனக்கு மிக அதிகமாகவே தெரிந்தது.
'மிக அதிகமாகத் தெரிகிறதே அப்பா! நாம் இந்த வீட்டில் தங்கலாமா, வேண்டாமா?' என்று பயம் வேறு வந்து விட்டது.
நீங்கள் மட்டும் பேசினால், பரவாயில்லை. ஏதோ பிரார்த்தனை செய்கிறீர்கள் என்று சொல்லிவிடலாம். கிருஷ்ணர் பேசுவது போலவே இந்த அம்மா பதிலுக்கு பேசிக் கொண்டிருப்பார்கள் !
எனக்கு அது அதிகமாகவே பட்டது. "என்னடா இது, இப்படி இருக்கிறார்களே? சரி, தவறாமல் நமக்கு நன்றாகச் சோறு போட்டு விடுகிறார்கள்!' என்று இப்படியும் ஒருவிதமான யோசனையும் இருந்து கொண்டு இருந்தது.
பட்டறிவு விலகினால் இறைவனைப் பார்க்கலாம்
If the intellect gives way, you can see God
கடைசியாக ஒரு நாள் முடிவு செய்து விட்டேன். 'போதுமப்பா இது! இதற்கு மேல் தாங்காது, அந்த அம்மாவிடம் சொல்லிவிடலாம்' என்று அந்த அம்மாவைக் கூப்பிட்டு, ''அம்மா, நாளையிலிருந்து என்னுடைய யாத்திரையைத் தொடரப்போகிறேன். எனவே நாளை கிளம்புகிறேன்,'' என்று சொன்னேன்.
அந்த அம்மா "ஓ!" வென்று அழ ஆரம்பித்துவிட்டார்கள்.
நான் கேட்டேன், "ஏனம்மா, ஏன் அழுகிறீர்கள் ? "
"நான் என்ன உன்னை வேலை செய்யவா சொன்னேன் தவறாமல்தானே சாப்பாடு போட்டேன். ஏன் நீ போக வேண்டும் என்று நினைக்கிறாய் ?'' என்றார்கள்.
'இல்லையம்மா, நான் ஒரு சன்யாசி. என்னுடைய வாழ்க்கைமுறைப்படி நான் பிரயாணம் செய்தாக வேண்டும். நான் ஒரே இடத்தில் தங்க முடியாது. இது என்னுடைய தர்மம்,'' என்று சொன்னேன்.

உடனே அந்த அம்மா ''ஒ'' என்று மீண்டும் அழ ஆரம்பித்து விட்டு, கிருஷ்ணர் முன்பு போய் உட்கார்ந்து கொண்டு, 'கிருஷ்ணா நீயாவது சொல்லக்கூடாதா?
நீயாவது இவர் போக வேண்டா மென்று சொல்லக்கூடாதா?' என்கிறார்.
அந்தக் கிருஷ்ணனைப் பார்த்து பயந்துதான் நானே போகலாம் என்று முடிவு செய்தேன்! அந்தம்மா, இதை அந்தக் கிருஷ்ணரிடமே சொல்கிறார்கள்.
கிருஷ்ணரிடம் பேசிவிட்டு பிறகு பதிலும் அந்தம்மாவே பேசுகிறார்கள், ''ஓ!, ஓ!, அவா் போக வேண்டும் என்று நீ சொல்கிறாயா?''
"அவர் போக வேண்டும். அவருடைய யாத்திரையைத் தொடர வேண்டும் என்று சொல்கிறாயா! சரி, நீ சொல்லி விட்டாய் என்றால் அவர் போகட்டும், பரவாயில்லை," என்று அந்தம்மா சொன்னார்.
அதுவரை எப்படியோ பொறுமையாக இருந்தேன். அதற்குமேல் என்னுடைய பொறுமை தாங்கவில்லை. பகுத்தறிவால் அதற்குமேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை. உடனே அந்தம்மாவை பிடித்துக் கொண்டேன், ''ஏம்மா, ஒரு அளவில்லை. இதையெல்லாம் விட்டுவிட்டு நான் சொல்லிக் கொடுக்கிற தியானத்தை, தினம்தோறும் செய். உனக்கு ஆன்ம ஞானம் கிடைக்கும்.
Section 2
அதை விட்டுவிட்டு, இந்தக் கிருஷ்ணர் பொம்மையை வைத்துக் கொண்டு, அதற்குத் துணி கட்டி வைத்து, அதற்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டு, பால் விட்டுக் கொண்(டு, இந்தக் கிலுகிலுப்பை பொம்மையை வாங்கி வைத்து, அதனுடன் என்ன விளையாடிக் கொண்டிருக்கிறாய்?'' என்று கேட்டேன். ''என்னம்மா செய்து கொண்டு இருக்கிறாய்?'' என்று கேட்டேன்.
அத்தம்மா உடனே ''என்ன சாமி சொல்கிறீர்கள்?. நான் தனியாக பேசவில்லை. அங்கே அவரே உட்கார்ந்திருக்கிறாரோ!'' என்றார்.
எனக்கு இன்னும் எரிச்சல் அதிகமாகப் போய் விட்டது!
'என்னடா இது? பைத்தியம் உச்சத்தில் இருக்கிறது போல, இதை யாராலும் தெளிய வைக்க முடியாது போலிருக்கிறதே?' என்று நினைத்தேன்.
அவர் செய்வதெல்லாம் எனக்கு மிக அதிகமாகவே பட்டது.
கேளுங்கள், சத்தியம், நடந்ததை அப்படியே சொல்லுகிறேன். ஆழ்ந்து சத்தியத்தைத் தவிர வேறொன்றும் இல்லை.
அந்தம்மா மிகவும் சகஜமாக, ''என்ன சாமி சொல்கிறீர்கள்? அங்கே உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கிறாரே! பதில் சொல்கிறாரே, உங்களுக்குத் தெரியவில்லையா சாமி ?' என்று கேட்டு என் கையைப் பிடித்துக் காட்டினார்கள்.
வரட்டு வேதாந்தம் பக்தியாகா விட்டால் அதுவே தடையாகும்
சத்தியமாகச் சொல்கிறேன்,
''கிருஷ்ணனைப் பார்க்கேன்''
"கிருஷ்ணனை அங்குப் பார்த்தேன்"
யார் பரிந்துகொள்கிறீர்களோ, பரிந்து கொள்ளுங்கள்.
நம்ப முடிந்தவர்கள் நம்புங்கள். நம்ப இயலாதவர்கள் மன்னித்து விடுங்கள்.
நடந்த சத்தியம் இது.
அதுவரைக்கும் ஒருவிதமான வேதாந்த கா்வம், வறட்டுப் படிப்பினாலே வந்த கா்வத்தோடு பட்டறிவுத் திமிரோடு இருந்த நான், அந்த விநாடியே சாஷ்டாங்கமாய் அந்த அம்மாவின் காலில் விமுந்தேன்.
'அந்தம்மா வயதான கிரஹஸ்த பெண்மணி', 'நான் ஒரு துறவி' என்ற அந்தக் கா்வம் அழிந்து போய்விட்டது.
என்னுடைய பகுத்தறிவு விலகியது. நேரடியாக இறை உருவையே பார்த்தேன்.
அந்த விநாடி காலில் விழுந்து, ''அம்மா, நாங்கள் எல்லாம் யாரை நினைத்து இப்படித் தியானம் செய்கிறோமோ, அவரோடு நீங்கள் வாழ்ந்துகொண்டு இருக்கிறீர்கள்!''
தெரிந்து கொள்ளுங்கள், பாகவதத்தில் சொல்வதுபோல அருமையாக நீலவண்ணத்தோ(), கிருஷ்ணர் அமர்ந்திருந்தார்.
இன்னமும் அந்தத் தரிசனத்தை நினைத்தால் நெஞ்செல்லாம் உருகுகிறது.
நீலவண்ணத்தோடு, பிள்ளைக் குணத்தோடு, குறும்புச் சிரிப்போடு அவ்வளவு அருமையாக, அவ்வளவு அழகாக, சம்மணமிட்டு அமர்ந்திருந்தார்.
அதுவரை படித்த படிப்பினாலும், வறட்டு வேதாந்தத்தினாலும் வந்த தலைக்கனம் காணாமல் போனது.
சில ஆழமான அனுபவங்களை வார்த்தைகளாலே சொல்ல முடியாது. ஒருமூட்டைப் பஞ்சை, ஒரு ராட்டையிலே நூலாகத் திரிக்க முடியாது.
இந்த ஆழமான அனுபவத்தை ஒரு சில வார்த்தைகளில் விவரிக்க முடியாது.
அந்த அம்மா கையை எடுத்த உடனே தரிசனம் நின்று போய்விட்டது.
மீண்டும் கிருஷ்ணர் விக்ரமாகத்தான் தெரிந்தது. எப்போது அந்த வயதான பெண்மணி கையைப் பிடித்தார்களோ அப்போது தரிசனம் தெரிந்தது. எப்போது கையை விட்டார்களோ அப்போதே போய்விட்டது.
அவா்கள் ஒன்றும் பெரிய சன்யாஸி இல்லை, பீடாதிபதி இல்லை, மடாதிபதி இல்லை, காவி அணிந்து ருத்ராட்சம் அணிந்து, திரிகின்ற துறவியும் அல்ல, சித்தரும் அல்ல.

இந்த ஆழமான அனுபவத்தை ஒரு சில வார்த்தைகளில் திரிக்க முடியாது.
ஆனால் அவர்களை எல்லாம் தாண்டிய உயர்ந்த உணர்வு நிலையில் வாழ்ந்தார்கள்.
கையைப் பிடித்த மாத்திரத்திலே ஒருவனுக்குத் தெய்வ தரிசனத்தை அளிக்க வல்ல உயர்ந்த ஆன்ம நிலையிலே இருந்தார்கள்.
நான் அந்த அம்மாவின் கால்களில் விமுந்து வணங்கியதும். அந்த அம்மா தலங்கி ஆடிப்போய்விட்டார்கள். ''சாமி, நீங்கள் ஒரு சந்யாசி. என்காலில் விழலாமா? ஏன் விழுகிறீர்கள் ?'' என்று கேட்டார்.
அப்புறம்தான் சொன்னேன், "அம்மா, நாங்கள் எல்லாம் யாரை ஒரு கணம் தரிசிப்பதற்காக, காலங்காலமாகப் பூஜை, தியானம் செய்து வருகிறோமோ, பெரிய பெரிய வேகாந்த விசாரமெல்லாம் செய்கிரோமோ அவரோடு நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். ''