Books / Living Enlightenment (Gospel of Paramahamsa Nithyananda) Tamil merged

152. உடலின் ராசாயன மாற்றங்களுக்கும் உணர்வுக்கும் நேரடி தொடர்பு உண்டு

# உடலின் ராசாயன மாற்றங்களுக்கும் உணர்வுக்கும் நேரடி தொடர்பு உண்டு

Chemical changes in the body have a direct relation to your consciousness

'ஒும்காரீஸ்வரா் மலையில் கரடி என்னைத் தாக்காமல் சென்றது எப்படி?' என்ற அன்றைய கேள்விக்கு ... சமீபத்தில் அறிவியல்பூர்வமான விளக்கம் ஒன்றை படித்தேன்.

விலங்குகளை வளர்ப்பது பற்றி மிக அழகாக விளக்கும் புத்தகம் அது.

மனிதர்களைப் போன்றே விலங்குகளுக்கும் உள்ள தனிப்பட்ட உணர்வுகள், குணங்கள், விருப்பங்கள் பற்றி அப்புத்தகத்தில் அழகாய் விளக்கியிருந்தார்கள்.

நம் உடலில் இருந்து வெளிப்படும் ஒரு குறிப்பிட்ட வாசனைதான் ஒரு விலங்கு நம்மைத் தாக்குவதற்குக் காரணம்.

பயம் நம்மைப் பற்றியுகம் நம் உடலுக்குள் பல மாற்றங்கள் நிகழ்கிறது. பயம் வரும்போது, நம் உடலில் இருந்து வெளிப்படும் குறிப்பிட்ட வேதிப்பொருளின் வாச னை, அருகே உள்ள மிருகத்தை தூண்டுகிறது.

விளைவு ? மிருகங்கள் மனிதனைத் தாக்குகிறது, '' எனக் குறிப்பிட்டிருந்தார்கள்.

தொடர்ந்து செய்த தியானங்கள் என்னுள் நிதானத்தை முழுமையாக மலரச் செய்திருந்தது.

பயத்தாக்குதல் இல்லாத ரம்யமான உணர்வு நிலையிலேயே வாழ ஆரம்பித்த பின்தான் இச்சம்பவம் நிகழ்திருக்கிறது. கரடியைப் பார்த்ததும் என்னுள் பயத்தாக்குதல் நிகழவில்லை.

உடலில் பயத்தாக்குதல் நிகழாத அளவுக்கு நிதானத்தை நம்முள் பெருக்கி விட்டால் ...

நாமும் பாதிக்கப்படமாட்டோம். மற்றவரையும் வேதிப்பொருட் தேவையற்ற களும், ஹார்மோன்களும் நம்முள் சுரக்காது.

தொடர்ந்து செய்த தியானங்கள் என்னுள் நிதானத்தை முழுழமையாக மலரச்செய்திருந்தது

தியான ஆராய்ச்சி

பதஞ்சலி யோக சூத்திரம் சொல்லும் அருமையான வாழ்வியல் தத்துவம் ஒன்று. வன்முறை துளியுமில்லா மனிதனின் அருகாமை, மிருகங்களைக்கூட ஆனந்தமடையச் செய்யும் .

உங்களிடம் உள்ள வன்முறை, தடுமாற்றம் ஆகியன உங்களின் கவனத்திற்குத் (அதாவது மேல் மனத்தின் கவனத்திற்கு) தெரிந்தாலும், தெரியாவிட்டாலும் அவை தொடர்ந்து உங்கள் உடலில் ரசாயன மாற்றங்களை உருவாக்கிக் கொண்டேயிருக்கின்றன.

  1. உங்களின் அருகாமையை மனிதர்கள் எப்படி உணர்கிறார்கள் ?

  2. பயம், கோபம், காமம், வெறி போன்ற உணர்வுகள் ஆட்கொண்டிருக்கும்போது உங்களிட மும், மற்றவர்களிட மும் அவை என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன ?

  3. உடல் மாற்றங்கள், வாசனைகள் ஐந்தறிவு மிருகத்தையே பாதித்தால், ஆறறிவு படைத்த உங்களின் சுற்றத்தாரை எவ்வளவு பாதிக்கும் ? சிந்தியுங்கள்.

  4. உங்கள் வீடு உங்களுக்குச் சொர்க்கமா, நரகமா ?

பதில், உங்களின் நல்ல கெட்ட பாதிப்புகளைப் பொறுத்தது.

வீடு சொர்க்கமாக மாற ...

நங்கள் தேவர்களாக வேண்டும். தேவர்களாக நீங்கள் மாற, உங்களின் அருகாமை மற்றவரை ஆனந்தத்துக்குள் ஆழ்த்தும் அளவுக்கு நீங்கள் அருமையானவராக, எளிமையானவராக மாற வேண்டும்.

நங்கள் இருக்குமிடத்தை ஆனந்தமயமாக்கும் சொல், செயல், பாவனைகளைத் தியானியுங்கள், வெளிப்படுத்துங்கள். குவா்களாவீர்கள். அதிகரிக்க உதவும் மிக எளிய வழி. உங்களுக்குள் ரம்யமான. இனிமையான நிதானத்தை எடுத்து வருவதுதான்.