151. உணர்ச்சிக் கொந்தளிப்புகள்
# உணர்ச்சிக் கொந்தளிப்புகள்
Emotional turmoil
டும்காரீஸ்வரர் மலைக்குகைகளில் தவம் செய்து கொண்டிருந்த காலம் அது.
ஒரு நாள் மாலை பொழுது முழுதாய்ச் சாய்ந்த மங்கலான வெளிச்சத்தில் இயற்கையை ரசித்தபடி சின்ன மலைக்குன்றில் அமர்ந்திருந்தேன்.
ஆள் நடமாட்டமே இல்லாத அந்தப் பகுதியில் தூரத்தில் இருக்கும் மரத்தடியிலிருந்து ஒரு வயதானவர் கம்பளியை போர்த்திக் கொண்டு என்னை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
மனித நடமாட்டத்தையே பார்க்க முடியாத அந்தப் பகுதியில் புதிதாய் ஒருவரை கண்டதும் ஆச்சரியமடைந்தேன்.
"யார் அவர் ? அவருக்கு என்ன வேண்டும் ? வழிதவறி இங்கு வந்துவிட்டாரோ ?'' என சிந்தித்தப்படி குன்றிலிருந்து குதித்தேன்.
குதித்தபின்கான் தெரிந்தது
எனக்கும் கரடிக்கும்
சில அடிகள்
இருந்தது ?
மட்டுமே இடைவெளி
அது மனிதர் அல்ல கரடி!
பொழுது சாயும் வேளையில் இருள் அதிகமாக இருந்ததால் இரண்டு காலில் நடந்து வந்த கரடி, மனிதன்போல தென்பட்டது. அருகே பார்த்த பிறகுதான் கரடி என்பதே புரிந்தது. ஆனால் இப்போது என்ன செய்ய முடியும்.
எனக்கும் கரடிக்கும் சில அடிகள் மட்டுமே இடைவெளி இருந்தது. என் உடலை கரடியிடமிருந்து காப்பாற்ற எந்த வழி வகையும் எனக்கு அப்போது புரியவில்லை.
காரணம், முன்னால் கரடி, பின்னால் பாறை!
அந்த நிமிடத்தில் என்னுள் பதட்டம் இல்லாமல் இருக்க முடிந்ததால், உணர்ச்சி கொந்தளிப்பு இல்லாமல் இருந்ததால் தெளிவாய் என்னால் யோசிக்க முடிந்தது. தளர்வாய் நிதானமாய் இருக்க முடிந்தது.
என்னால் எதுவும் செய்ய முடியாது என்பது ஆழமாய்ப் புரிந்ததால் ... அந்தக் கரடியை நேருக்கு நேராக எந்தச் சலனமுமில்லாமல் பார்த்தேன்!
சில நொடிகள் கரடியும் என்னைப் பார்த்தது!
பின் தலையை இடது புறமும், வலது புறமும் ஆட்டிவிட்டுச் சட்டென திரும்பிச் சென்றது.
'அதெப்படி அந்தக் கரடி என்னை எதுவும் செய்யாமல் சென்றிருக்கும்!'என்று உங்களுக்கு எப்படி இப்போது ஆச்சரியமாக இருக்கிறதோ, அப்படித்தான் எனக்கும் அப்போது ஆச்சரியமாக இருந்தது!
ஒரு சின்ன கதை ...
ஒரு ஜென் ஞானி சீடர்களோடு அமாந்து சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தாா்.
அந்தக் கூட்டத்துக்குள் திடீரென மிகப்பெரிய ராஜநாகம் ஒன்று புகுந்து விட்டது.
ராஜநாகத்தைப் பார்த்த பீதியில் கூட்டம் கலைந்தோடியது. தப்பித்தோடும் சீடா்களோடு ஜென் ஞானியும் வேக வேகமாக ஒடினார்.
எப்போதும் நிகானத்தோடு. அமைசியின் உச்சத்தில் வாழும் ஞானியும், தங்களைப் போலவே தப்பியோடுவது, சீடர்களுக்கு மிகவும் புதிரான ஒன்றாகத் தோன்றியது. சந்தேகத்தைக் கிளப்பியகு.
கடைசியாக ஒரு மரத்தடிக்கு வந்து எல்லோரும் ஓய்வாக அமர்ந்ததும் ஒரு சீடன், 'நாங்கள் பயந்தோடுவது, நியாயமானது. நோனமடைந்த நீங்களும் பயந்தோடினால் அப்புறம் உங்களுக்கும், எனக்கும் என்ன வித்யாசம்?' என படபடக்கும் குரலில் கேட்டான்.
ஜென் ஞானி, ''நீ பயந்தோடினாய். நான் தப்பித்தோடினேன்.
நான் உடலைக் காப்பாற்ற ஒடினேன். நீ பீதியால் தூண்டப்பட்டு ஒடினாய்.
அதனால்தான் நான் ஒடும்போதும், இங்கு வந்த பின்னும் நிம்மதியாகவே இருக்கி றன். நீ இன்னும் படபடப்பிலேயே இருக்கிறாய்,'' என்றார்.
உடலைக் காப்பாற்றுவதற்காகச் சிந்தித்துச் செயல்படுவதும், தப்பிப்பதும் நம் தெளிவின் வெளிப்பாடு.
இது தேவையான நடவடிக்கை. அவசர அபாய சரியாகச் சிந்திக்க முடியாமல் பீகி தூண்ட தப்பித்தோடுவது வெளிப்பாடு, உணர்ச்சி கொந்தளிப்பின் வெளிப்பாடு; இது நரம்பு மண்டலத்திற்குக் கெடுதி. இதனால் சக்தி விரயமாகும்.
மனிதன் இதிலிருந்து மீள வேண்டும்.
உடலைக் காப்பாற்றுவதற்காக சிந்தித்து செயல்படுவதும். தப்பிப்பதும் நம் தெளிவின் வெளிப்பாடு. இது தேவையான நடவடிக்கை.
