146. பணத் திவாலைவிட மோசமானது சக்கித் திவால்
# பணத் திவாலைவிட மோசமானது சக்கித் திவால்
Energy-ruptcy is more dangerous than bank ruptcy
டுண்ணங்கள் பணத்திற்குச் சமம். உங்களுடைய மனோ சக்தி பணத்திற்குச் சமம்.
எப்படிப் பணத்தை அனாவசியமாக, ஊதாரித்தனமாகச் செலவு செய்தால் பணரீதியாகத் திவால் ஆகிரோமோ, அதே மாதிரி நம்முடைய சக்தியை ஊதாரித் தனமாகச் செலவு செய்தால் சக்தி ரீதியாகத் திவால் ஆகிவிடுவீர்கள்.
பண ரீதியான திவால் எப்படி வாழ்க்கையில் நடக்கின்றதோ அதுபோலவேகான் சக்கி ரீகியான திவால் (energyrupcy) நடக்கிறது.
சக்கிரீகியான திவால், பண ரீதியான திவாலை விட மோசமானது.
பணம் திவாலானால், முதலுக்குத்தான் மோசம்.
சக்தித் திவாலானால், உங்களுக்கே மோசம்.
சக்தித் திவாலாகிக் கொண்டிருக்கும் ஒருவரால் பணத்தை ஈர்க்க முடியாது.
யாராவது உங்களுக்கு 1000 சூபாய் பெறுமானமுள்ள வேலை செய்தால் ஆயிரம் ரூபாய் அவருக்குச் சம்பளமாய்க் கொடுப்போம். புத்திசாலியாக இருந்தால் 900 ரூபாய் சம்பளமாகக் கொடுப்போம். உண்மையிலேயே சரியான சம்பளம் அளிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் 1000 ரூபாய் சம்பளம் கொடுப்போம்.
இது நம்முடைய மனப் பழக்கம். ஆனால் அதே மனிதர் 1000 ரூபாய் பெறுமானமுள்ள ஒரு தவறை செய்துவிட்டாரானால் எந்த அளவிற்குக் கோபத்தை அவர்மேல் கொட்டுவோம். 10000 ரூபாய் பெறுமானமுள்ள கோபத்தையாவது அவர்மேல் கொட்டுவோம். அவர்மேல் விழுந்து என்னென்ன முடியுமோ அத்துணையையும் செய்துவிடுவோம்.
எப்படி 1000 ரூபாய் வேலை செய்தவருக்கு 10000 ரூபாய் பணம் கொடுத்தால் நீங்கள் திவால் ஆகுவீர்களோ, அதே மாதிரி 1000 ரூபாய் தவறு செய்தவருக்கு 10000 ரூபாய் கோபத்தைப் பொழிந்தீர்களானால் சக்தி ரீதியாகத் திவால் ஆகிவிடுவீர்கள்.
உங்களுக்குள் இருக்கின்ற கோபம், காமம், ஆவேசம், எல்லாமே சக்தி. அதை முறையாக உபயோகித்தோமானால் வாழ்க்கையிலே பொருள் வளமோ, அடைந்து இனிமையாக வாழ்க்கையை நடத்தலாம்.
அப்படியில்லாமல் முறை தவறி தேவையில்லாத இடங்களில் பொழிவது, வீணடிப்பது என்று செய்ய ஆரம்பித்தோமானால், இயற்கையிலேயே உங்களின் சக்தித் திவால் ஆகிவிடும். அப்புறம் செலவு செய்வதற்குச் சக்தி இருக்காது. இயற்கையாகப் பணம் திவாலாவதுபோல் சக்தியும் திவாலாகிவிடும்.
இந்தச் சக்தித் திவாலை சிி செய்ய முடியும். உள்ளுலக செல்வத்தை அதிகரிப்பதால் மட்டுமே வெளியுலக செல்வத்தை அதிகரிக்க முடியும்.
நம்முடைய எண்ண ஒட்டங்களும், மன ஒட்டங்களும் தெளிந்த ஒரு பாதையை நோக்கிச் செல்லும்போது இந்த ஆன்மீகக் கருத்துகளை, வாழ்வியல் தீர்விற்கான கருத்துகளை உள்வாங்கும்போது சக்தி விரயம் ஆவது தவிர்க்கப்படுகிறது.
பலமுறை நம் பக்கர்கள் மீண்டும், மீண்டும் வந்து சொல்வதுண்டு, ''உண்மையிலேயே தியானம் செய்ய ஆரம்பித்த பிறகு 6 மாதத்தில் என்னைடைய வியாபாரம் மிகப்பெரிய வளர்ச்சிக்,குவந்து விட்டது. இது என்ன மந்திரம் ? இது என்ன மாயத்தினால் இப்படி இது நடக்கிறது ?''
எந்த மந்திரமும் மாயையும் இல்லை. உங்குளுக்குள்ளே கௌிவ வரும்பொழுது செல்வத்தை ஈர்ப்பதற்கும், அனுபவிப்பதற்கும் என்னென் குணங்கள் வேண்டுமோ அத்துணையும் உங்களுக்குள் வளரத் துவங்குகிறது.
உள்ளுகை செல்வம் அதிகரிக்கும்போது நடக்கும் முதல் விஷயம் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் செல்வத்தை ஈர்க்கவும் அனுபவிக்கவும் உடலும், மனமும் தயாராகிறது.
இரண்டாவது உங்களுக்குள் உருவாகின்ற ஆனந்த சக்தி. அது படர்க்கையிலும், தன்மையிலும், முன்னிலையிலும் எதிரொலிக்கும் பொழுது, உங்களின் உடலும், மனமும் தயாராகிறது.
படர்க்கையில் அது பரவும் பொழுது உங்கள் வாழ்க்கையில் எதுவெல்லாம் வேண்டுமென்று நினைக்கிறீர்களோ, அதே மாதிரியான நிகழ்ச்சிகளையும் அதற்கு ஏற்றார்போல் நபர்களையும் உங்களை நோக்கி ஈர்க்கும். இதைதான் ஆனந்தம் செல்வத்தை ஈர்க்கும் என்று சொல்கிறோம்.
நங்கள் செய்ய வேண்டியதெல்லாம் வங்கியில் பண்த்தைச் சேமித்து வைப்பதுபோல மனத்தில், உணர்வில் சக்தியைச் சேமிக்க வேண்டும். அனந்தத்தை உள்ளுலக செல்வத்தை ஏதாவது ஒரு வகையில் அதிகரித்தால், வெளியுலக செல்வம் தன்னால் ஈர்க்கப்படும் .
இது ஏதோ ஒரு கருத்து என்று நினைத்து விட்டுவிடாதீர்கள். என் வாழ்க்கையில் நான் கண்ட அனுபவம் ...
ஆனந்தம் செல்வத்தை ஈர்க்கும். உங்களின் துக்கம்தான் நஷ்டத்தை ஈர்க்கும்.
துக்கத்தை, ஆனந்தமாக்கினாலே செல்வத்தை அது ஈர்க்கும்.
எனவேதான் சொல்வோம், பணத்தைக்கூட இழக்கலாம், ஆனால் ஆனந்தத்தை எக்காரணம் முன்னிட்டும் இழக்கக்கூடாது.
