145. ஆனந்தம் செல்வத்தை ஈர்க்கும்
# ஆனந்தம் செல்வத்தை ஈர்க்கும்
Bliss attracts wealth
செல்வத்தை ஈர்க்கும் என்பதை ஆனந்தம் நேரடியாக, முறையாகப்புரிந்து கொள்வோமானால் ஆனந்தம் செல்வத்தை ஈர்க்கும்.
நமக்குள் ஆழ்ந்து பார்த்தால் மட்டுமே புரிந்துகொள்ள முடிகின்ற சத்தியம் இது. பதஞ்சலி முனிவர் இயற்றிய யோக சூத்திரத்திற்குச் சுவாமி விவேகானந்தா் உரை எழுதியுள்ளார். அதில், "நமது நாட்டில் இந்திய கலாச்சாரத்தில் மட்டும்தான் ஒருவா எதையாவது செய்வதற்கு முன் செய்யும் முதல் வேலை, கண்களை முடி அமாந்து தனக்குள் சில ச க்தி மாற்றங்களை முதலில் ஏற்படுத்திக்கொள்வது."
மற்ற நாடுகளில் எதையாவது சாதிக்க வேண்டும் என மனிதன் நினைத்தால், அவர்

செய்கின்ற முதல்வேலை அதை சாதிப்பதற்கான தொழிலைத் தொடங்கி, அந்தத் துறையில் கல்வி கற்க ஆரம்பிப்பார். அந்தத் துறையில் ஏற்கெனவே அனுபவம் இருக்கின்ற முதியவர்களுடன் பழகத் தொடங்குவார்.
ஆனால் நமது நாட்டில் எந்தத் துறையில் முன்னேற வேண்டும் என்றாலும் முதலில் நாம் செய்கின்ற வேலை, கண்களை மூடி அமர்ந்து இறைவனைத் தியானித்தல், பூஜை செய்தல். எந்தத் துறையாக இருந்தாலும், எந்த வேலையாக இருந்தாலும், நாம் செய்கின்ற முதல் வேலை இதுதான்.
நடக்கும் சக்கி மாற்றங்களை நாம் தெளிவாக்கும் பொழுதே. சுற்றி இருக்கும் இயற்கையின் சக்கி மாற்றமும் தானாகவே கெளிவாகிறது.
புதுமனை புகுவிழாவானாலும், இல்லறத்தில் நுழைவதாக இருந்தாலும் அல்லது புதிய வியாபாரத்தைத் துவங்குவதாக இருந்தாலும், எதைச் செய்தாலும் மக்கள் செய்யும் முதல் வேலை கண்களை மூடி அமர்ந்து தனக்குள் சில சக்தி மாற்றங்களை ஏற்படுத்துவதுதான்.
காலப்போக்கில்தான் அவை சடங்குகளாக மாறிவிட்டன. எந்தச் செயலை செய்வதற்கு முன்பும் நாம் செய்கின்ற முதன்மையான விஷயம், நன்றாக அமாந்து நமக்குள் ஒரு புதிய சக்தியை உருவாக்குவதுதான்.
தியானத்தின் மூலமாகவோ புதிய சக்தியை உருவாக்குகிறோம்.
'தனக்குள் ஏற்படுகின்ற சக்தி மாற்றம் வெளியில் நடைபெறும் நிகழ்ச்சிகளையும் பாதிக்கும் என்பது தெரிந்ததால்தான், இந்திய நாட்டின் கலாச்சாரத்தில் முதல் வேலையாக எதைச் செய்யத் துவங்கும் முன்பும் தங்களுக்குள் சக்தி மாற்றத்தைத் உருவாக்குகிறார்கள்,'' என விவேகானந்தா் சொல்கிறார்.
செல்வத்தை ஈர்க்கும் யுக்கி-2
யானம் செய்தால் மழைவருமா? Bliss attracts wealth
டுரு அழகான ஜென் நொனியின் கதை.
ஒருநாட்டில் நீண்ட காலமாக மழை பெய்யவில்லை. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேல் மழை பெய்யாத ஒரு இடம். அப்போது பக்கத்து நாட்டில் வசிக்கின்ற ஒரு, ஜென் ஞானியைப் பற்றிய செய்தி அந்த நாட்டிற்குள் பரவியது.
அந்த ஞானி இங்கு வந்தால் மழை பொழியும் என்கின்ற கருத்து பரவியது.
மக்கள் எல்லோரும் அரசரிடம் சென்ற பக்கத்து நாட்டில் இருக்கும் ஞானியை அழைத்துவர வேண்டினர்.
அரசரும் பக்கத்து நாட்டிற்குச் சென்று ஞானியை அழைத்தார். ஞானியும் அழைப்பை
ஏற்று வர ஒப்புக்கொண்டார். ஞானி அந்த ஊருக்குள் வந்து ஒரு அரைமணி நேரம் தியானம் செய்தார். தியானம் செய்து முடிந்தவுடன் மழை பொழிய ஆரம்பித்தது.
மழை ஊரையே நிரப்பியது. நன்றி வெள்ளத்தில் மக்கள் அந்த ஞானியை சூழ்ந்து கொண்டு எப்படி மழையை வரவழைத்தீர்கள் ? என்ன மந்திரம் செய்தீர்கள் ? என்ன மாயம் செய்தீர்கள்? உங்களால் எப்படி மழையை வரவழைக்க முடிந்தது? இயற்கையையே ஆளும் கடவுளா நீங்கள்?'' என்றெல்லாம் கேட்க துவங்கினார்கள்.
ஞானி மிக அமகாகச் சொன்னார்.
''இயற்கையை
ஆளும் கடவுள்
நான் அல்ல.
மழையை வரவமைக்கவோ, செல்ல வைக்கவோ எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்த விஷயம் ஒன்றே ஒன்று மட்டும்தான். எனக்குள் நடக்கும் சக்தி ஒட்டத்தை என்னால் சமச்சீராக்க முடியும்.
எனக்குள் நடக்கும் சக்தி ஓட்டத்தை என்னால் முழுமையாக்க முடியும். நான் இயற்கையை கட்டுப்படுத்தும் கடவுள் அல்ல. எனக்குள் நடக்கும் சக்தி மாற்றங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் குானி.
எனக்குள் நடக்கும் சக்தி மாற்றங்களை நான் தெளிவாக்கும் போதே சுற்றி இருக்கும் இயற்கையின் சக்தி மாற்றமும் தானாகவே தெளிவாகிறது,' என்று பதில் சொன்னார். நாம் ஒரு தனித்தீவு அல்ல. நமக்குள் ஏற்படும் ஒவ்வொரு மாற்றமும் நேரடியாகப் பிரபஞ்சத்தைப் பாதிக்கிறது. நேரடியாகப் பிரபஞ்சத்தில் மாற்றத்தை உண்டாக்குகிறது.
அதனால்தான் அந்த ஜென் ஞானி தமக்குள் இருக்கும் சக்தியை சமச்சீராக்கும் பொழுது, இயற்கையான இந்தப் பிரபஞ்ச சக்தியும் சமச்சீராகி இயற்கையிலேயே இந்த வானம் பொழியத் துவங்குகிறது. ஆகாயம் பூமியை வாழ்த்தத் துவங்கிவிட்டது.
அந்த ஜென் ஞானி இன்னும் ஆழமாக விளக்குகிறார்.
''இந்த இடத்தில் வந்து அமர்ந்தவுடன் என் மனத்திற்குள் ஏற்பட்ட எண்ணங் களையும் எண்ண ஓட்டங்களையும் அமைதியாக்கி, ஆழ்ந்த அமைதிக்குள் எடுத்துச்சென்று உடலுக்கும் எனக்கும் நடுவில் ஒரு இனிமையான, அன்பான, ஆரு தொடர்பை ஏற்படுத்தினேன்.
அவ்வாறு ஏற்படுத்திய அந்த இனிமையான உணர்வு, ஆனந்தமான உணர்வு, உடலில் மட்டும் உடலோடு மட்டும் நின்று விடாமல் இந்தப் பிரபஞ்சத்தில் உலகத்திற்குள்ளும் பாய்ந்து இந்த இயற்கையையும் சமச்சீராக்கியது, '' என்றார்.
உணர்வுகளைச் சக்தியோட்டத்தை மாற்றுவதால் மழை வர வைப்பது மட்டுமல்ல, நாட்டை வளமாக்குவது மட்டுமல்ல உங்களையே வளமாக்குவது சாத்தியம்.
