143. விழிப்பு மிகு ஜனனம்
# விழிப்பு மிகு ஜனனம்
Conscious birth
ULI IT ராவது உங்களிடம், காட்சியை நினைத்துப் பாருங்கள்," என்று சொன்னால் உங்களால் சொல்லமுடியாது. காரணம் அது நினைவிலிருக்காது.
ஏனென்றால் சாதாரண பிறப்பில் ஒரு உயிர் அதன் தாயினுடைய காப்பத்தினுள்ளே நுழையும்போது, பழைய நினைவெல்லாம் துண்டிக்கப்பட்டுவிடும். ஆனால் எனக்கு அது நடக்கவில்லை விழிப்புடன் பிறக்கும்போது, வலியோ, வேதனையோ, மறுப்போ எதுவும் இல்லாமல் பிறப்பு நிகழ்ந்திருக்கிறது.
தூக்கத்திலிருந்து அப்படியே எழுந்து வெளியே வந்தால், கனவெல்லாம் துண்டிக்கப் பட்டுவிடுகிறதா? இல்லையே!
உள்ளார்ந்த ரகசியம்
விமிப்படன் பிறக்கும்போது வலியோ வேதனையோ மறுப்போ எதுவும் இருக்காது.
முதல்நாள் இல்லையே! அகே மாதிரி நினைவு மறக்காமல், எந்தவிதமான மறதியும் ஏற்படாமல், முழுவிழிப்புணர்வுடன் அனைத்தும் நிகழ்ந்தது.
இப்படி முழுவிழிப்புணர்வோடு, எப்படி ஒரு காருக்குள் நீங்கள் நுழைவீர் களோ, அப்படி உங்களால் தேர்வு செய்யப் பட்ட ஒரு உடலுக்குள் நுழைவதுதான் Conscious birth, விழிப்புமிகு
ஜனனம்.
என்னுடைய ஜனனத்தை விழிப்புணர்வோடு படிப்படியாகப் பார்த்தேன்
என்னடைய அம்மாவின் நினைவின்படி, அன்று ஜனவரி மாதம் 1ம் தேதி, வருடம் 1978 வருடம் பிறந்தேன்.
திருவண்ணாமலையில், எப்போதுமே வருடப்பிற்குக் கோவிலுக்குச் செல்வார்கள். அண்ணாமலையாரை தரிசிக்க கோவிலுக்குச் சென்று அங்கிருந்து பிரசாதம் வாங்கிக் கொண்டு வந்து கொடுப்பாார்கள்.
அந்தப் பிரசாதத்தைச் சாப்பிட்டவுடனேயே அம்மாவுக்குப் பிரசவலி ஏற்பட்டு இருக்கிறது.
அண்ணாமலை கோயில் பிரசாதம் உள்ளே உள்ளே வெசன்றவுடனேயே பிரசவவலி ஏற்பட்டிருக்கிறது.
அம்மாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். ஒரு வலியும் இல்லாமல், எந்தப் பிரச்சினையும் இல்லாமல் ஒரு அரை மணி நேரத்திற்குள் பிறந்தேன் என்று அம்மா சொல்வார்கள். அவர்கள் சொன்ன உண்மை இது.
அம்மாவின் கருத்துப்படி ஏறத்தாழ இரவு 12.32 மணியளவில் பிறந்தேன் என்று சொல்கிறார்கள்.
இதில் ஒரு முக்கியமான விஷயம்.
என்னுடைய கணக்குப் படி அன்று இரவு 11.45 மணியளவில் உடலுக்குள் நுழைந்தேன்.
ஆனால் குழந்தையாகப் பிறந்த நேரம் 12.32 மணி.
இந்த உடலுக்குள் சக்தியாகச் சென்று, சமநிலையடைந்து, சம நிலை சரியாகி வெளியே வருவதற்கு, நாற்பத்தி ஏழு நிமிடங்கள் ஆகியிருக்கிறது.
நன்கு புரிந்து கொள்ளுங்கள். தூங்கி எழுந்தது போன்றதுதான் இந்த விழிப்புமிகு ஜனனமும்.
ஜனனத்தின்போது மூன்று காட்சியையும் பார்த்தேன்.
முதல் காட்சி :

இருளை இருள் கவ்வியமாதிரியான உலகம் தெரிந்தது.
இரண்டாவது காட்சி:
திருவண்ணாமலையையும் இந்த தீபத்தையும் பார்த்தேன். அது தெரிந்த நேரம்,இரவு 11.45 மணி.
மூன்றாவது காட்சி :
திருவண்ணாமலை தீபத்தைப் பார்த்த வினாடியில்தான் உடலுக்குள் நுழைந்திருக்கிறேன். இப்போதிருக்கும் உலகிற்குள் நுழைந்து விட்டேன்.
பின் குழந்தையாகி பிரசவம் நடந்தபோது இவர்கள் பார்த்த நேரம் 12.32.மணி. ஏறத்தாழ 47 நிமிடங்கள் இடைவேளை.
அப்படியென்றால் பிறப்பதற்குமுன் ஒரு க்ஷணம் முழுவதும் மனம் அமைதியாக இருந்திருக்கிறது.
47 நிமிடங்களுக்கு மனம் சாந்தமாக இருந்திருக்கிறது. அடுத்த எண்ணம் வராமல் சாந்தமாக இருந்திருக்கிறது.
இந்த உடல்தான் நம் உடல் என்று தேர்வு செய்து, நம் விருப்பப்படி வாழ்வை வடிவமைப்பதுதான் Conscious birth என்று சொல்கிறோம். இது எல்லோருக்கும் சாத்தியமான ஒன்றுதான்.
