Books / Living Enlightenment (Gospel of Paramahamsa Nithyananda) Tamil merged

142. விழிப்பு மிகு மரணம்

# விழிப்பு மிகு மரணம்

Conscious death

■ மீனங்கடந்த, எண்ணங்களற்ற நிலையில் இருக்கும் ஒருவருக்குத்தான் க்ஷணத்தையே முடிவு செய்யும் ஆற்றல் இருக்கும்.

இல்லாவிட்டால் பிறப்பும் இறப்பும் கோமாவிலேயே நிகழ்ந்துகொண் டிருக்கும். பொதுவாக விழிப்புணர்வு குறைந்தவர்களுக்கு க்ஷணம் மிக குறுகியதாக இருப்பதால், உயிர் உடலை விட்ட உடனே உடனடியாகத் தன்னை வேறு ஒரு உடலுக்குள் நுழைத்துக் கொள்ளும்.

அதனால்தான் நொடிக்குள் நான்கைந்து குழந்தைகள் பிறந்து கொண்டே ஒரு இருக்கிறார்கள்.

ஆனால் ஞானிகள், தங்கள் மரணத்தையே விழிப்பு மிகு மரணமாகத் தேவைப்படும்போது, தேவைப்படும் நேரத்தில் நிகழ்த்துவார்கள். அதேபோல் தேர்ந்தேடுத்து அவதரிப்பாா்கள்.

ஞானமடைந்தபின், மனங்கடந்த நிலையில் இருப்பதால், எண்ணங்களே அவா்களிடம் இருக்காது.

உலகில் சில நல்ல காரியங்களை செய்ய மட்டும் நூலளவு மனத்தை ஞானிகள் அனுமதிப்பார்கள். அப்போது எண்ணங்கள் என்பதும் அவர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால் க்ஷணம் என்பது அவர்களுக்கு வருடக் கணக்கில் இருக்கும். அந்தக் காலகட்டத்தையும் அவர்கள் நிர்ணயிக்க முடியும்.

மனிதர்களுக்கு ஒரு க்ஷணம் என்பது ஒரு நொடியாக இருக்கலாம். ஞானிகளுக்கு ஒரு க்ஷணம் என்பது 100 வருடங்களாகவோ 1000 வருடங்களாகவோ, அவா்களின் முடிவுப்படி அமையும்.

அப்போதுதான் மிகச் சரியாக அடுத்த பிறவியைப் பற்றித் திட்டமிட முடியும்.

எப்போது பிறக்கலாம், எந்த இடத்தில் பிறக்கலாம், எந்தப் பெற்றோரைத் தேர்ந்தெடுக்கலாம், எந்தச் சூழ்நிலையில் எந்த இடத்தில் பிறக்கலாம் என்று மொத்த வாழ்க்கையையும் ஆற அமர வடிவமைத்துப் பிறப்பார்கள்.

உட்கார்ந்திருக்கும் காரைவிட்டு விட்டு மிக எளிதாக வெளியே வருவதுபோல, உடலை விட்டுவிட்டு, மிக எளிதாக வரும் அளவிற்குச் சம்ஸ்காரங்கள் மற்றும் அவற்றின் பிடிப்புகள் இல்லாமல், உயர்ந்த விழிப்புணர்வு நிலையிலேயே, மிகவும் இயல்பாக நடைபெறும் ஒரு ஜீவன்முக்தரின் மரணத்தைத்தான் Conscious death என்கிறோம்.