Books / Living Enlightenment (Gospel of Paramahamsa Nithyananda) Tamil merged

107. ஒவ்வொரு எண்ணத்தையும் தனித்தனியாக எதிர்கொள்ளுங்கள்

# ஒவ்வொரு எண்ணத்தையும் தனித்தனியாக எதிர்கொள்ளுங்கள்

Encounter each thought individually

டத்து ஆண்டுகளுக்கு முன்பு தலையில் வந்த வலியும், எட்டு ஆண்டுகளுக்கு முன்பு வந்த வலியும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வந்த வலியும், நேற்று வந்த வலியும் தனித்தனியான அனுபவங்கள்.ஆனால், நாம் எப்போது எனக்குப் பன்னிரெண்டு

ஞானத்தை வாழ்தல்

வருடமாகத் தலைவலி இருக்கிறது என்று மனத்தில் நினைத்து விடுகிறோமோ, அப்போதே என்ன ஆகிவிடுகிறது?

அது மனத்தில் ஒரு பூதாகரமான துக்கமாக மாறிவிடுகிறது. நம்மால் ஜெயிக்க முடியாத துக்கமாக ஆகிவிடுகிறது.

இந்த ஒரு யூனிட் உணர்வால் ஒரு யூனிட் துக்கத்தை அழித்துவிட முடியும்.

ஒவ்வொரு எண்ணக்கையும் கனித்தனியாக எதிர்கொள்ளுங்கள். ஜீவன் முக்தியை வாழும் ஜீவன் முக்தர்களாவீர்கள்.

இந்த வினாடி மட்டும் உங்களுடைய உடல் எப்படி இருக்கிறது என்பதைப் பாருங்கள்.

உங்களுடைய மனம் எப்படி இருக்கிறது என்று நேரடியாகப் பாருங்கள். தனித்தனியாகப் பார்த்தீர்களானால், வாழ்க்கை துக்கமாகவே இருக்காது. ஏதேர ஒரு துக்கமோ, வலியோ வந்தாலும் கூட, இந்த வினாடி உங்களுக்குள் இருக்கின்ற உணர்வின் மூலமாக, இந்த வினாடி வருகின்ற துக்கத்தை அழிக்க முடியும்.

இந்த வினாடி உங்களுக்குள்ளே உள்ள உணர்வு ஒரு யூனிட் என்றால், உங்களுக்கு வருகின்ற துக்கமும் ஒரு யூனிட்டாகத்தான் இருக்க முடியும்.

இந்த ஒரு யூனிட் உணர்வால், ஒரு யூனிட் துக்கத்தை அமித்துவிட முடியும். ஆனால், ரீங்கள் கடந்த கால துக்கம் மொத்தத்தையும் எடுத்துவந்து, ஒரு இருபது யூனிட்டை எடுத்து வந்து, உங்களுடைய ஒரு யூனிட் உணர்விற்கு முன்பு நிறுத்தினீர்கள் என்றால் என்னாகும் ?

வேறு வழியில்லாமல், உங்களைத் துக்கம் ஜெயித்து விடுகிறது.

ஒரு போர்வீரனைக் கொண்டு, இருபது போர்வீரர்களை அழிக்கமுடியாது. ஒரு வீரனைக் கொண்டு, ஒரு வீரனைத்தான் அழிக்க முடியும்.

அழகான ஜென் கதை ....

ஒரு கோட்டைக்குள்ளே அரசன் ஒருவன் தனியாக மாட்டிக்கொண்டான். கோட்டைக்கு வெளியே நாட்டு போர்வீரர்கள் ஒரு லட்சம் போர் காத்துக்கொண்டிருக்கிறார்கள். இவன் தன் இராஜகுருவை நினைத்து வழிபடுகிறான், "குருவே வழிகாட்டுங்கள். நான் எப்படித் தப்பிப்பேன் ?' என்று.

அந்தக் குரு, ஒரு அசரீரியாகச் சொல்கிறார், ''கவலைப்படாகே. வாசலை திறந்துவை. ஒவ்வொரு உள்ளே வரட்டும். ஒருவன் மட்டும் உள்ளே வருகின்ற மாதிரி வாசல் கதவை திறந்து வை.

ஒவ்வொருத்தராக வர வர வெட்டி அழித்துக்கொண்டே இரு. " இந்த எளிமையான நுட்பத்தைச் செய்து, அரசன் ஜெயித்தே விட்டான்.

அதே மாதிரிதான் நம் மனமும். நீங்கள் தனியாக உங்களுடைய உடம்பிற்குள் மாட்டிக்கொண்டு இருக்கிறீர்கள். வெளியில் ஒரு இலட்சம் போர்வீரர்கள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

ஒவ்வொரு எண்ணமாக உங்களை விடுபடுத்திக் கொள்ளுங்கள். எதிரியை பலவீனப்படுத்துதல்.

இலட்சம் துக்ககரமான எண்ணங்கள் காத்துக்கொண்டு ஒரு இருக்கின்றன.

மிகப் பெரிய மனம் உங்களை அழிப்பதற்காகக் காத்துக்கொண்டு இருக்கிறது. தப்பிப்பதற்கான ஒரே வழி, அதையும் ஏற்கெனவே யோசித்து யோசித்துக் கடவுளே வழியும் கண்டுபிடித்து இருக்கிறார்.

உங்களுடைய மனமெனும் கோட்டைக் கதவானது, ஒவ்வொரு வினாடியும் ஒவ்வொரு எண்ணம் மட்டும் வருகின்ற மாதிரிதான் இருக்கிறது. நன்றாக யோசித்துப் பாருங்கள், உங்களுக்கு ஒரு வினாடியில் ஒரு எண்ணத்திற்கு மேல் வரமுடியுமா? முடியாது. ஒரு எண்ணம் போனபிறகுதான், இன்னொரு எண்ணம் வரமுடியும். அந்த எண்ணம் போனபிறகுதான், மூன்றாவது எண்ணம் வரமுடியும்.

ஒவ்வொரு எண்ணமாக அழியுங்கள். ஒவ்வொரு எண்ணமாகத் unclutch செய்து உங்களை மனத்திடமிருந்து விடுபடுத்திக்கொள்ளுங்கள். மனம் எனும் எதிரியைப் பலவீனப்படுத்துங்கள். ஒவ்வொரு எண்ணமாக எதிர்கொண்டால், எதிரி பலமிழப்பான். அசுரனாய்க் தெரியும் மனம் வலுவிழந்து, பலமிமந்துவிடும்.

நிர்விகல்பத்திற்கான முதல் நுட்பம்-5