106. தொடர்ந்து உள்ளே பாருங்கள் - எதிர்காலத்தை மாற்றியமைத்து விடலாம்
# தொடர்ந்து உள்ளே பாருங்கள் - எதிர்காலத்தை மாற்றியமைத்து விடலாம்
Look in continously. The future can be redesigned
க்கு மனிதனுக்கு மிகப் பெரிய இழப்பு என்னவென்றால், தனக்குள் ஒரு ஐந்து நிமிடம், அமைதியாக உட்கார முடியாமல் இருப்பதுதான். பாருங்கள், நீங்கள் உங்களோடு உட்காருவது என்கின்ற பழக்கமே இல்லாமல் போய்விட்டது.
ஏதாவது ஒய்வு வந்ததென்றால், உடனே வீட்டில் போய் படுக்கையில் சாய்கிறீர்கள். படுக்கையில் விமுந்த உடனே, முதலில் செய்கின்ற வேலை என்னவென்றால், ரிமோட்டைத் தட்டுவது. அந்த ரிமோட்டைத் தேடி எடுத்துகொண்டுதான் படுக்கையிலேயே உட்காருகிறோம்.
என்ன நடந்தாலும் சரி, கோர்த்துப் பார்க்காமல் முழுமையாக ஏற்றுக்கொள்ளும் தன்மையோடு இருங்கள்.
ஒருவேளை கரண்ட் இல்லாமல் தொலைக்காட்சி பார்க்க முடியவில்லையென்றால், என்ன செய்வோம்..? பழைய செய்தித்தாள்களை எடுத்து வைத்துக்கொண்டு, முதல் வரியிலிருந்து கடைசி வரிவரை, அதையே புரட்டிப் பார்த்துக் கொண்டிருப்போம். எடிட்டர் கூட அப்படிப் படித்து இருக்க மாட்டார்கள்.. அப்படிப் படிப்போம்; கோர்த்துப் பார்ப்போம்.
கோர்த்துப் பார்ப்பதை விட்டுவிட்டு எந்த எண்ணம் வந்தாலும், கடந்த கால அனுபவத்தோடு கோர்த்துப் பார்க்காமல், அப்படியே தளர்வாகப் பாருங்கள்.
போரடிக்குதா ?
சரி அடிக்கட்டும்.
வேறு என்ன செய்ய முடியும் ?''
'இப்போது இப்படித்தான் இருக்கும்' என்று எந்த எண்ணம் வந்தாலும் கோர்த்துப் பார்க்காமல் முழுமையாக ஏற்றுக்கொள்ளும் தன்மையோடு இருங்கள். என்ன நடந்தாவும் சரி. நன்கு ஆழமாகப் புரிந்து கொள்ளுங்கள். இப்பொழுது உங்களுக்குள்ளே வலி இருந்தாலும், ஒருவித மந்தத்தன்மை இருந்தாலும், வேறு ஏதாவது துக்கம் இருந்தாலும், என்ன இருந்தாலும் சரி, உங்களுடைய உடல்ரீதியான, மனரீதியான பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் சரி.
உதாரணத்திற்கு ...
முட்டி வலி என்றால், இப்போது வலி இருக்கும் இடத்தில் என்ன நடக்கிறது என்று

ஆழ்ந்து பாருங்கள். நேற்று இருந்த முட்டிவலி வேறு, நேற்று முன் தினம் இருந்த முட்டி வலி வேறு, அதற்கு முன்பு இருந்த முட்டி வலி வேறு. இதெல்லாம் தனித்தனியான அனுபவங்கள். அதைக் கோர்த்துப் பார்த்து இப்பொழுது இருக்கின்ற என்று நினைக்காதீர்கள்.
நேற்று முன்தினம் இருந்த முட்டிவலி வேறு, அதற்கு முன்பு இருந்த முட்டிவலி வேறு. இதெல்லாம் குணித்தனியான அனுபவங்கள்.
இப்போது முட்டியில் என்ன நடக்கிறது என்று பாருங்கள்.
ஒரு சின்னக் குழந்தைக்கு ஒரு ரோஜாப்பூ கிடைத்தால் எப்படிப் பார்க்கும், புதிதாக மலர்ந்து பார்க்கும். அதுபோல் புதுமையோடு பாருங்கள். வலி இருக்கின்ற இடத்தைப் பாருங்கள். உடல் வலியாக இருந்தாலும், மனவலியாக இருந்தாலும், புதிதாகப் பாருங்கள்.
அந்த எண்ணத்தைக் கோர்த்துப் பார்க்காமல் ''என்ன நடக்கிறது?''என்று உற்றுப் பாருங்கள்.
ஒரு சின்ன நுட்பம்.
இது ஒரு அருமையான நுட்பம்.
இப்போதே, ஒரு ஐந்து நிமிடம் உட்கார்ந்து பாருங்கள். மனத்திற்குள்ளே எந்த எண்ணம் வந்தாலும், வலியோ, வேதனையோ, துக்கமோ, சந்தோஷமோ, சாந்தமோ என்ன வந்தாலும், 'என்னதான் நடக்கிறது?' என்று அமைதியாகப் பாருங்கள்.
கண்களை மூடி நிமிர்ந்து அமருங்கள்!
எவ்வளவு நேரம் முடிகின்றதோ, அவ்வளவு நேரம் முயன்று பாருங்கள் ....
இந்தச் சிறிய செயலைத் தொடர்ந்து செய்வதினாலேயே, அந்த அசுர மனத்தை எளிதில் மாய்த்து விடலாம். ஜீவன் முக்தியைத் தொட்டு விடலாம். எண்ணங்களைக் கோர்த்துப் பார்க்காமல் வாழ்வதுதான், ஜீவன் முக்த நிலை.
நிர்விகல்பத்திற்கான முதல் நுட்பம்-3
எண்ணங்களைக் கோர்த்துப் பார்ப்பதை நிறுத்துங்கள் Stop connecting the thoughts
அடரோக்கியத்தைத் திறக்கும் சாவி! ஆழ்ந்து இந்தத்தியானத்தைப் புரிந்துகொள்ளுங்கள். அன்கிளட்ச் என்பது என்ன என்று ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள்.
வருகின்ற எல்லா எண்ணத்தையுமே சாட்சியாகப் பார்த்தல். எண்ணங்கள் பொங்கப்
பொங்க, அதைத் தொடர்பு செய்து, தொடர்பு செய்து முக்கியத்துவம் கொடுக்காமல், அன்கிளட்ச் செய்துகொண்டு ஒய்வாக இருப்பது.
ஒரு அருமையான வழி.
எண்ணம் பொங்கும்போதே, வரும் பொழுதே "அன்கிளட்ச்," என்று சொல்லுங்கள். ''அன்கிளட்ச் செய்கிறேன்,'' என்று சொல்லுங்கள்,
இல்லை 'அன்கிளட்ச்' என்ற வார்த்தையை மட்டும் பிரயோகியுங்கள்.
உடனே எண்ணம் இல்லாமல் இரண்டு அமைதியாக இருப்பீர்கள்.
அந்த இரண்டு விளாடிகளுக்குப் பிறகு ஒரு எண்ணம் வரும், 'அட! எண்ணம் இல்லாமல் இருக்கிறதே!' என்கின்ற எண்ணமும் வரும். அதிலிருந்தும் அன்கிளட்ச் செய்யுங்கள்.
திரும்பவும் இரண்டு, மூன்று வினாடிகள் அமைதியாக இருப்பீர்கள். அதன்பிறகு மீண்டும் ஏதாவது எண்ணம் வரும். மீண்டும் அன்கிளட்ச் செய்கிறேன் என்று சொல்லுங்கள், தொடர்ந்து உங்களுக்குள் அன்கிளட்ச் செய்கிறேன் என்கின்ற எண்ணத்தை உருவாக்கினாலே போதுமானது.
''அன்கிளட்ச் செய்கிறேன் என்று மனத்திற்குள் சொல்வதும் இன்னொரு எண்ணம் தானே?''என்று நீங்கள் கேட்கலாம்.
அன்கிளட்ச் செய்கிறேன் என்ற எண்ணம் தானாகவே அழிந்துவிடும்.
கிராமங்களில் பிணத்தை எரிக்கும்போது பார்த்தீர்களென்றால், ஒரு கோலை வைத்து பிணத்தைத் தட்டித் தட்டிவிட்டு எரிப்பார்கள்.
பிணம் சுடு தடி என்று சொல்வார்கள்.
பிணம் எரிந்து முடிந்த உடனே அந்தக் கோலையும் நெருப்பிலேயே போட்டு விடுவார்கள். அதுபோன்றே அன்கிளட்ச் என்கின்ற எண்ணங்களையும் எரிக்கின்ற கோல் மாதிரி, மற்ற எல்லா எண்ணமும் எரிந்தபிறகு, அந்த நெருப்பிலேயே இந்த எண்ணமும் எரிந்து போய்விடும். அழிந்துபோகும்.
அதனால் எந்த எண்ணம் ஏற்பட்டாலும் அன்கிளட்ச் செய்து கொண்டே இருங்கள். அன்கிளட்ச் செய்கிறேன் என்ற நினைவை வைத்துக் கொண்டு இருந்தாலும் போதும். திடீரென்று நீங்களே அந்த எண்ணத்திற்கு வலிமை இல்லாமல் போய்விடுவதைக் காண்பீர்கள்.
எந்த எண்ணம் தோன்றினாலும் அன்கிளட்ச் செய்வது, துக்கமாக இருந்தாலும் சரி, சு கமாக இருந்தாலும் சரி, எதுவாக இருந்தாலும் சரி அன்கிளட்ச் செய்வது.
இந்தச் சிறிய எளிமையான முறையை நடைமுறைப்படுத்தி பார்க்கும் பொமுதுகான் இதனுடைய பலன் தெரியும்.
ஒருவர் என்னிடம் கேட்டார், 'மிக எளிமையான நுட்பமாக இருக்கிறதே இதைக் கண்டுபிடிப்பதற்காகவா நீங்கள் இருபது வருடம் ஆராய்ச்சி செய்தீர்கள் ?''

நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள், சாவி சி ன்னதாகத்தான் இருக்கும். அதைப் போட்டுத் திறந்தீர்களென்றால்தான் தெரியும், எவ்வளவு பெரிய பொக்கிஷம் இருக்கும் கதவுகளைத் கிறக்கிறது என்று !
பொக்கிஷம் இருக்கும் கதவுகளைத் திறப்பதற்கு முன்பு. முட்டாள். இப்போது கொடுத்திருக்கின்ற தியான முறை முறை சாவி மாதிரி. இதை உங்களுக்குள்ளே உபயோகம்
எந்த எண்ணம் பொங்கினாலும், கோர்த்துக் கோர்த்துப் பார்க்காமல், அமைதியோடு கவனியுங்கள். அர்த்தம் கொடுத்துக் கொண்டிருக்காமல், அமைதியோடு அதைப் பாருங்கள்
செய்தீர்களானால்தான் தெரியும், அது நம்முடைய ஆனந்த பொக்கிஷத்தையே திறக்கிறது.
எந்த எண்ணம் பொங்கினாலும், கோர்த்துக் கோர்த்துப்பார்க்காமல், அமைதியோடு கவனியுங்கள். அர்த்தம் கொடுத்துக் கொண்டிருக்காமல், அமைதியோடு அதைப் பாருங்கள். அந்தச் சப்தம் எங்கிருந்து வருகிறது? அதாவது எண்ணங்கள் எங்கிருந்து உருவாகிறது? என்ன நடக்கிறது? என்று அமைதியோடு பாருங்கள். அதுதான் இந்த அன்கிளட்ச் நுட்பத்தின், நிர்விகல்ப கலையின் சாரம். இந்த ஞானக்கலையை இன்னும் சுருங்கச் சொல்ல வேண்டுமானால்... எண்ணங்கள் உங்களின் உங்களுக்குள்ளே உருவாக்கும் சப்தங்களை, மாற்றங்களை, தாக்கங்களை மட்டும் பாருங்கள்.
அதே எண்ணங்கள் உங்களுக்குள்ளே அர்த்தங்களையோ, வேறு எண்ணங்களையோ, ஏக்கங்களையோ உருவாக்குமளவுக்கு அதற்கு ஒத்துழைப்பு தராதீர்கள்.
அதைத்தான் ரத்தினச் சுருக்கமாக ... சப்தத்தைப் பாருங்கள். அர்த்தத்தைப் பார்க்காதீர்கள். பரவசத்திலேயே இருப்பீர்கள் என்று சொல்வோம்.
நிர்விகல்பத்திற்கான முதல் நுட்பம்-4