105. துன்பத்தண்டு, இன்பத்தண்டு இரண்டும் மாயங்களே !
# துன்பத்தண்டு, இன்பத்தண்டு இரண்டும் மாயங்களே !
Joy shaft, pain shaft - both are illusions


நமக்குள் எழும் எண்ணங்களை துக்க எண்ணங்கள் என்றும், மகிழ்ச்சி எண்ணங்கள் என்றும் ஒன்றும் ஒன்று தொடர்புபடுத்தி தனித்தனியான எண்ணங்களைக் கோர்த்துப்பார்த்தல்.

ுனக்குள், தன்னால் அமர முடியாமைதான் நரகம்.
உலகத்தில் இருக்கின்ற எல்லோருக்கும் நாம் நேரத்தை ஒதுக்குவோம், நேரத்தை வழங்கிவிடுவோம். ஆனால் நாம் நமக்காக நேரத்தை ஒதுக்குவதே இல்லை. துக்கத்தை எல்லாம் கோர்த்துப் பார்க்கும் மனம் ஒடிக்கொண்டே இருக்கிறது. அது, இல்லாத ஒரு தண்டை உருவாக்கிக் கொண்டே, இருக்கிறது.
இதைத்தான் (pain shaft) துன்பத் தண்டு என்று சொல்கிறோம்.
தன்னையும் அறியாமல் துன்பத் தண்டிலிருந்து துக்கமயமாகத் தொடார்த்து, எண்ணங்கள் வந்துகொண்டே இருக்கிறது.
அதைத் தொடர்பு செய்து, தொடர்பு செய்து கடந்த காலத்தோடு ஒப்பிட்டுக்கொண்டே இருக்கும்.
நமக்குள்ளே பொங்குகின்ற வேதனை, அளவிற்கு இருப்பதனால்தான், நாம் நமக்குள்ளே உட்கார்வதற்குப் பயப்படுகிறோம். வேறு யாருடனாவது உட்கார்ந்துகொண்டே இருப்போம்.
மற்றவர்களுடைய துணையை மேம்படுத்திக் கொண்டு இருப்போமே தவிர, நம்மோடு இருக்கவே மாட்டோம். காரணம், கோர்த்துக் கொள்கின்ற மன அமைப்பு. இதிலிருந்து விடுபடுத்திக் கொள்வதுதான் நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்.
விடுபடுவதற்கான சில முக்கியமான சத்தியங்கள்.
சத்தியம் 1:
இன்பத்தை செய்யும் முயற்சிகளின் தொகுப்புதான் மொத்த மனித வாழ்வு.
சத்தியம் 2:
இன்பத்தை நீட்டிக்கவோ, துன்பத்தைக் குறைக்கவோ யாராலும் முடியாது! எவ்வளவு முயன்றாலும் அது இன்னும் ஆழமான துக்கத்திற்கே இழுத்துச் செல்லும்.

சத்தியம் 3:
ஒவ்வொரு நொடியிலும், ஒன்று எதையோ நீட்டிக்க முயற்சிக்கிறீர்கள். இல்லை, எதையோ குறைக்க முயற்சிக்கிறீர்கள். நீட்டிக்கவோ, குறைக்கவோ செலவிடும் செயலை மட்டும் நிறுத்தினால் போதும். ஒவ்வொரு நொடியிலும் இதற்காகவே வீணாகும் சக்தியும், புத்தியும் மிச்சமாகிவிடும்.
இப்படி ஒவ்வொரு நொடியிலும் சக்தி பொங்க, புத்தி பொங்க வாழ்பவர் ஜீவன் முக்தா. துன்பத்தண்டு, இன்பத் தண்டு என்ற இரண்டு மாயங்களுக்குள்ளும் சிக்கித் தவிப்பவா் மனிதர்.
நிர்விகல்பத்திற்கான முதல் நுட்பம்-1
"சும்மாயிரு சொல்லற!" - நேரழயாக மனத்தை அணுகுங்கள் Just be! Encounter the mind directly
சில நேரங்களில் தங்களுடைய வாழ்க்கையில் நடந்த இன்பமயமான, சந்தோஷமான நிமிடங்களைக் கோர்த்துக் கொண்டு ஒரு (Shaft-ஐ) இன்பத்தண்டை உருவாக்கிக்கொள்வார்கள். மனத்தில் இன்பத் தண்டையோ, துன்பத் தண்டையோ உருவாக்கிக் கொண்டே இருப்போம். ஆனால், நிஜ வாழ்வு இன்பமயமானதும் அல்ல; துன்பமயமானதும் அல்ல. அது ஆனந்தமயமானது.
வாழ்க்கையில் நாம் எல்லோரும் செய்யும் இந்த ஒரு முயற்சி தொடர் நம் தோல்வியிலேயே முடிவடைகிறது.
தொடர்ந்து துக்கத்தைக் குறைக்கவும், இன்பத்தை நீட்டிக்கவும் செய்யும் முயற்சியிலிருந்து விடுபடாதவரை சுதந்திரம் இல்லை. இந்த இரண்டை சுற்றிச் சுற்றியே இயங்கும் வாழ்க்கைச் குழலிருந்து விடுபட ஒரே வழி கோர்த்துப் பார்க்கும் எண்ணங்களில் இருந்து விடுபடுவதுதான்.

அருணகிரிநாதர் மிக அழகாகச் சொல்கிறார்... ''சும்மா இரு,'' என்று சொல்கிறார்.
உங்களுக்குள்ளேயே, உங்களால் சும்மா இருக்க முடிந்ததென்றால், அதுதான் மொத்த ஆன்மீக வாழ்க்கையினுடைய சாரம்.
ஆனால், நமக்குள் நம்மால் உட்காாமடிவகே இல்லை.
சற்றுமுன் முயற்சித்துப் பார்த்தீர்கள். 'என்னதான் நடக்கிறது பார்க்கலாமே' என்று ஐந்தே ஐந்து நிமிடம்தான் உட்கார்ந்தீர்கள். ஆனால், அவ்வளவு நேரம் இல்லாத இடுப்பு வலி அப்போதுதான் வந்திருக்கும்.
அவ்வளவு நேரம் இல்லாத கால் வலி அப்போதுதான்வரும். அவ்வளவு நேரம் இல்லாத அலைக்கழிக்கின்ற எண்ணங்கள், அப்போதுதான் வரும்.
இல்லாத எல்லா எண்ணங்களும் வரும். அமைதியாக இருப்பதைத்தவிர, நம்முடைய மனம் ஒடி ஒடி ஒடியே பழகிவிட்டது.
ஒரு சின்ன சோதனையை இப்போதே செய்யலாம்.
இந்த நுட்பத்தை பயிற்சி செய்து பாருங்கள். என்ன எண்ணம் வந்தாலும் கோர்த்துப் பார்க்காமல் இருங்கள்.
உதாரணத்திற்கு ... கண்ணை மூடிய உடனேயே முதலில் என்ன எண்ணம் வரும் ? 'போரடிக்குதப்பா! எவ்வளவு நேரம் சும்மா உட்கார்ந்திருப்பது?' என்று வரும்.
பத்து வருடத்திற்கு முன்பு நீங்கள் போரடிக்கிறது என்று உணர்ந்த உணர்வு வேறு. எட்டு வருடத்திற்கு முன்பு உணர்ந்த உணர்வு வேறு. இப்போது வந்திருக்கின்ற உணர்வு வேறு.
ஆனால், இப்போது வந்திருக்கின்ற உணர்வை அப்போது வந்திருந்த உணர்வோடு பார்ப்பீர்கள். அதனால்தான் சலிப்பு வருகிறது. உங்களின் சலிப்பு, இந்த ஒரு நிகழ்வின் சலிப்பல்ல .
பத்துவருட சலிப்புகளின் தொகுப்புதான், பெரிய சலிப்பாக சட்டென வந்து விடுகிறது.
உங்கள் கடந்த காலத்தைப் பற்றி நீங்கள் எப்படிச் சிந்திக்கிறீர்களோ, அந்த அறிவை மாற்றுங்கள். அவற்றிலிருந்து உங்களை விடுபடுத்திக் கொள்ளுங்கள். உங்கள் கடந்த காலத்தைப்பற்றிச் சிந்தனை அறிவு மாறினால் மட்டும்தான், எதிர்காலம் மாற்றி அமைக்கப்படுவதற்கான வழி பிறக்கும்.
உங்களுடைய வாழ்க்கையைப் பாத்தீா்களென்றால், ஒரு மிகப் பெரிய pain shaft ஆகத்தான் மதிப்பிட்டு இருப்பீர்கள். இப்பொழுது உங்களுடைய மனது பார்த்ததைப் பார்த்திருக்கலாம், ஒரு ஐந்து நிமிடம் உட்காருவதற்குள்ளே உடலில் எத்தனை ஆட்டம் ஆடுகிறது என்று.