Books / Inner Awakening Tamil merged

9. காசி பக்தியால் கட்டப்பட்டது

# காசி பக்தியால் கட்டப்பட்டது

ஈசனால் உருவாக்கப்பட்ட நகரம் காசி. காசியை இயக்கும் சக்திக்கு 'காசி தேவி' என்று பெயர். 'காசி தேவி' - சுதந்திரமான, புத்திசாலித்தனமான இயல்பினள். ஈசன் காசி தேவியை படைத்தபிறகு, காசிதேவி ஈசனிடம் ஒரு வரம் கேட்டாள். ' இந்த நகருக்குள் நுழையும் ஒவ்வொருவரும் முக்தி அடைய வேண்டும் என ஆசீர்வதியுங்கள்' என்று.

மஹாதேவர் மூன்று வரங்களை கொடுத்தார்.

முதலாவது வரம்: இந்த நகருக்குள் வந்து, புனிதமான கங்கை நதியில் நீராடும் பக்தர்கள் தங்களுடைய பாவங்கள் நீங்கப் பெறுவார்கள்.

இரண்டாவது வரம்: காசியில் உடலை விடும் மனிதா்கள் மூக்தி அடைவார்கள்.

காசிக்கு அளிக்கப்பட்ட வரங்கள்

ண்ண் மூன்றாவது வரம்: உடலை விட்டவர்களின் சீரேம் இங்குள்ள மணிகா்னிகாகாட் அல்லது ஹரிசந்த்ராகாட் இவற்றில் எரியூட்டப்படுமானால் அவர்களும் முக்தி அடைவார்கள்.'

இந்த மூன்று வரங்களால் காசிதேவி மிகுந்த மகிழ்ச்சி கொண்டாள். மூன்று வரங்கள் கிடைத்ததல்லவா ! ஆனால், பார்வதி தேவி குறுக்கிட்டு, "ஐயனே, முக்தி அடைவதை தாங்கள் இவ்வளவு மலிவாக்கிவிட்டீர்களே. இதை தாங்கள் உணரவில்லையா? ஞானமடைதலை இத்தனை எளிமையாக்கி விட்டீர்களே. யார் வேண்டுமானாலும் பெற மடியமே." என்று கேட்டார்.

மஹாதேவர் பார்வதிதேவியிடம் சொன்னார், ''கவலைப்படாதே, வா என்னோடு. உன்னை காசிக்கு அழைத்துச் சென்று காட்டுகிறேன்."

இதற்கிடையே மஹாதேவா் காசிதேவிக்கு கொடுத்த வரங்கள் எல்லா இடங்களிலும் மிகப் பிரபலமாகிவிட்டன. அடுத்த சில நாட்களில் மொத்த உலகமும் கங்கையில் நீராடுவதற்காக ஒன்று திரண்டது.

மஹாதேவரும் தேவி பார்வதியும் காசி வந்து சேர்ந்தனர். மஹாதேவர் தேவியைப் பார்த்து சொன்னார், ''நாம் இருவரும் சாதாரண மனித உடல் எடுப்போம். நான் உனது இறந்து விட்ட கணவரைப் போல படுத்துக் கொண்டு விடுகிறேன். நீ கணவனை இழந்த கைம்பெண்ணைப்போல அருகே அமாந்து அழுதுகொண்டிரு. யாராவது கேட்டால், 'பாவம் இல்லாத எந்த ஒரு மனிதர் தொட்டாலும் என் கணவர் உயிர் பிழைத்து விடுவார். ஆனால் அதே சமயம் பிழைக்க வைக்கும் நோக்கத்தில் யாராவது பாவத்தோடு தொட்டுவிட்டால் அவர்கள் இறக்க நேரிடும்' என்று சொல்," எனச் சொல்லிவிட்டு மஹாதேவர் இறந்துவிட்ட பிணத்தைப்போல படுத்துக்கொண்டார்.

பார்வதிதேவி ஈசனின் உடலின் அருகே அமர்ந்து சத்தம் போட்டுக் கதறி அழ ஆரம்பித்தார். கங்கையில் குளிக்க வந்த மொத்த மக்களும் அங்கு வந்து தேவியைப் பார்த்து, ''பெண்ணே உளக்கு என்ன ஆயிற்று? ஏன் அழுது கொண்டு இருக்கிறீர்கள்? இவ்வளவு அழகான ஒரு பெண், இத்தளை அழகு பொருந்திய ஆடவரின் முன் அமர்ந்து ஏன் அழ வேண்டும் ?' எனக் கேட்டனர்.

தேவி அவர்களைப் பார்த்து சொன்னார், "இவர் என்னுடைய கணவர். இவ்வளவு இளம் வயதிலேயே இறந்துவிட்டார். உங்களில் யாராவது பாவம் இல்லாதவர்கள் என் கணவரின் உடலைத் தொட்டால் என் கணவர் உயிர் பிழைத்துவிடுவார். ஒருவேளை நீங்கள் யாராவது சிறிது பாவம் செய்திருந்தாலும், அவரைத் தொட்டீர்களானால் உங்கள் மண்டை வெடித்து சிதறிவிடும். நீங்கள் இறந்து விடுவீர்கள்," என்று சொன்னார்.

காலை முதல் இரவு வரை லட்சக்கணக்கான மக்கள் கங்கையில் நீராடிச் சென்றாலும் ஒரு மனிதர்கூட, அந்த உடலைத் தொடுவதற்கு முன்வரவில்லை.

இரவு வந்தது. நேரம் கடந்து கொண்டே இருந்தது. ஒரு குடிகாரன் அந்த வழியில் வந்தான். அவனும் மற்றவர்களைப்போல ''என்ன ஆயிற்று,'' என்று கேட்டான். தேவியும் தொடர்ந்தார், "எவரொருவர் எந்த பாவமும் செய்யாதவரோ அவர் என் கணவரைத் தொட்டால் அவர் உயிர்பிழைப்பார். ஆனால் அதே சமயம் பாவத்தோடு தொட்டுவிட்டால் அவர் இறக்க நேரிடும்." என்றார்.

இந்த குடிகாரனும் இதற்கு முன் வந்தவர்களைப் போலவே விஷயத்தை கேட்ட மாத்திரத்தில் ஓடி விடுவான் என்றே நினைத்தார். ஆனால் அந்த குடிகாரனோ தேவியைப் பார்த்து, ''இரு ... இரு... இரு... இரு.. ஈசன் வரம் கொடுத்திருப்பதாக கேள்விப்பட்டேன், " என்றவாறே கங்கை நதியை நோக்கி சென்றான். கங்கைக்குள் மூழ்கிக் குளித்து வெளியே வந்தான். பின் தேவியைப் பார்த்து, "நான் எல்லாவிதப் பாவங்களையும் செய்திருக்கிறேன். ஆனால், இப்போது கங்கை நதியில் நீராடிவிட்டு வருவதால் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுபட்டுவிட்டேன். ஏனென்றால் அந்த வரத்தை தந்தது ஈசன் அல்லவா, " என்று சொல்லியவாறு அந்த உயிரில்லாத உடலைத் தொட்டார். ஈசன் உயிரோடு எழுந்தமாந்தார். அவருக்கு தரிசனம் கொடுத்து முக்தி அடையச் செய்தார். மஹாதேவர் தேவியைப் பார்த்து, ''இப்போது பார்த்தாயா ? இலட்சக்கணக்கானவர்கள் வேண்டுமானால் குளிக்கலாம். ஆனால் அவர்கள் எந்த நோக்கத்திற்காக குளிக்கிறோம் என்பதை உணர்ந்தார்களா?'' என்று தேவியிடம் கேட்டார்.

ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள், எந்த ஒரு அரிய பெரிய செயல்கள் நிறைவேறுவதற்கும் பூர்ணத்துவத்தின் சக்தி மட்டுமே சரியான சந்தர்ப்பத்தை உருவாக்கித் தருகிறது. நீங்கள் கங்கையில் குளிக்கப் போகும்போது இயல்பாக உங்களின் சுய-சந்தேகம் வெளியே வரும். நீ ங்கள் நினைப்பீர்கள்... 'உண்மையிலேயே ஈசன் கங்கையை ஆசீர்வதித்திருக்கிறாரா ? நிஜமாகவே

இந்த வரம் பலிக்குமா? எனக்கெல்லாம் இது போல ஆசீர்வாதங்களைப் பெற என்ன தகுதி இருக்கிறது?' என நினைத்தோன்றும். இதுபோன்ற எல்லா சுய-சந்தேகங்களையும் களைந்து முழுமைப் பெறுங்கள். இந்த சந்தேகங்களைக் களைந்துவிட்டு, விதர்க்கத்தோடு கங்கையில் மூழ்குங்கள். உங்களின் பாவங்கள் துடைத்தெறியப்பட்டு சுத்தமான ஆன்மாவாக வெளியே வருவீர்கள்.

இதன்பிறகுகூட உங்களுக்கு சந்தேகம் இருக்கலாம். ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள், இரண்டாவது மற்றும் மூன்றாவது வரங்களும் முழுமையான வரங்கள். அவையும் பலிக்கின்றன. வாரணாசியில் இறப்பவர்கள் முக்தி அடைகிறார்கள். மேலும் இறந்த ஒவ்வொருவரின் உடல் இங்கு மணிகர்ணிகா படித்துறையிலோ, ஹரிச்சந்திரா படித்துறையிலோ எரிக்கப்படும்பொழுது, அவர்கள் முக்தி அடைகிறார்கள். இந்த இரண்டு வரங்களும் இன்னும் பலிக்கின்றன, என்றும் பலிக்கும். எவ்வாறு நிகழ்கிறது ? ஏனென்றால் நீங்கள் இறந்த பிறகு குறையுணர்வை உருவாக்கும் வழிமுறையை மனம் பெற்றிருப்பதில்லை. அதன் பலனாகவே இந்த இரண்டு வரங்களும் முழுமையான வரமளிக்கும் வரங்களாக இருக்கின்றன. நீங்கள் முக்தியடைய வேண்டும் என்ற நோக்கத்தை உருவாக்குகிறீர்களோ இல்லையோ இந்த வரங்கள் தங்கள் வேலையை செவ்வனே செய்கின்றன. ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் உயிரோடு

இருக்கும் பொழுது எந்த பெரிய விஷயங்களும் அதற்கான வழி முறைகளை உருவாக்கும் போதுதான் சாத்தியமாகின்றன.

சரியான உருவாக்க வழிமுறை என்பது எப்பொழுதும் முழுமைத்தன்மையில் வாழ்வதுதான். பூரணத்துவ மெய்ஞான விஞ்ஞானம் பெறுவதே உண்மையான விடுதலையாகும். அகவிழிப்பு தியான முகாமில் இதை நீங்கள் பெறுகிறீர்கள்.