Books / Inner Awakening Tamil merged

8. காசி விஸ்வநாதா் ஆலயம், வார்ணாசி

# காசி விஸ்வநாதா் ஆலயம், வார்ணாசி

பிரபஞ்ச மண்டலத்தின் மையம் காசி நகரம். காசி நகரத்தின் மையம் காசி விஸ்வநாதர் ஆலயம். காசி நகரம் பூமியின் நடுமத்தியில் - மையத்தில் அமைந்திருப்பதை இந்து வானவியல் துறை உறுதி செய்துள்ளது.இந்த முக்கியமான தீர்த்த யாத்திரை ஸ்தலத்தில், இயற்கை எய்தியவர்களின் சாம்பலை கங்கையில் கரைத்து, அவர்களுடைய ஆன்மா முக்தியடைய வேண்டி பிரார்த்தனை செய்கிறார்கள். இதை இந்துக்கள் தவறாமல் கடைப்பிடித்து வருகிறார்கள்.

கங்கையின் மேற்கு கரையோரமாக இருக்கும் இந்த கோயில் பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்களுள் ஒன்றைத் தன்னகத்தே கொண்டுள்ளதால் புனித சிவ தலங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது. ஜோதிர்லிங்கங்கள் ஈசனின் புனித வழிபாட்டுத் தலங்களாக வழிபட்டு வரப்படுகின்றன. ஈசன் ஒளிப்பிழம்பாக தோன்றி ஜோதிர்லிங்கமாக உருப்பெற்று என்றென்றும் தெய்வீக அருள் பாலித்து வருகிறார். அதனால் ஈசனே ஜோதிர்லிங்கமாக தோன்றியதால், இந்த ஸ்தலங்கள் என்றென்றும் மக்கள் ஆராதனைக்கேற்ற புனித இடங்களாக வழிபடப்படுகின்றன. இத்தலங்களில் மூலவரை விஸ்வநாதா் எனவும் விச்வேஸ்வரா் எனவும் அழைப்போம். இப்பெயரின் பொருள் - அண்டசராசரங்களின் அரசர் என்பதாகும்.

காசி கோயில் நகரம் 3500 வருட பாரம்பரியமிக்கது. உலகிலேயே மிகப்பழமையானது. காசியின் வரலாறை படிப்பதே புண்ணியம் என பிரசித்தி பெற்ற வரலாறு காசிக்கு உண்டு.

காசி விஸ்வநாதர் ஆலயம்:

இந்த ஆலயத்தின் கோபுரம் 15.5M உயரமாகும். கோபுரம் தங்கத்தகட்டால் வேயப்பட்டுள்ளதனால் தங்ககோயில் எனவும் அழைக்கப்படுகிறது. கோயில் வளாகம் எண்ணற்ற சிறு சிறு சந்நிதிகளாக அமைக்கப்பட்டுள்ளது. விஸ்வநாத கலி எனப்படும் இடத்தில் விஸ்வநாதர் வீற்றிருக்கிறார். மூலவர் 60 செ.மீ உயரமும் 90 செ.மீ சுற்றளவும் கொண்ட வெள்ளி பீடத்தில் அமாந்து ஆசி வழங்குகிறார்.காலபைரவர், தண்டபாணி, அவிமுக்தேஸ்வரா், விஷ்ணு, விநாயகர், சனீஸ்வரர், விருபாக்ஷர், விருபாக்ஷா கௌரி ஆகியோருக்கும் சந்நிதிகள் இங்கு தனத்தனியாக உண்டு. இக்கோயிலில் ஞான வாபி கிணறு உள்ளது. முகலாய அரசன் ஒளரங்கசேப் 1669ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இரண்டாம் நாள் படையெடுத்தபோது கோயிலின் தலைமை குருக்கள் ஜோதிர்லிங்கத்தை எதிரியிடமிருந்து காப்பாற்றுவதற்காக லிங்கத்தோடு கிணற்றில் குதித்து ஜல சமாதியில் இருந்தார். அந்த ஜோதிர்லிங்கம் பல நூற்றாண்டுகளுக்கு பின்னர் கண்டெடுக்கப்பட்டது. அப்பொழுது, அதன் மாடத்தில் விளக்கும் எரிந்து கொண்டிருந்தது, பூக்களும் வாடாமல் புத்தம் புதியதாக இருந்தன.

12ம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து அடுத்த 500 ஆண்டுகள் வரை, முகமதியர்களின் படையெடுப்பினால் வாரணாசி தனது புகழின் சரிவைக் காண ஆரம்பித்தது. வாரணாசி விக்ரக வழிபாட்டு முறையை தன்னகத்தே கொண்டிருந்தது. புத்தமதமும், ஜைனமதமும் உயர்நிலையிலிருந்த இந்து மதத்தோடு சேர்ந்து வளர்ந்து வந்தது. முஸ்லீம் மன்னர்கள் இதை அழிக்க விரும்பினார்கள்.

1194 ஆம் ஆண்டில், டில்லியில் சுல்தான் ஆட்சி நிறுவப்பட்ட பின்னர் வாரணாசிக்கு உச்சக்கட்ட பிரச்சனைகள் ஏற்படத் தொடங்கின. ஆயிரக்கணக்கான கோயில்களை இடித்து தரைமட்டமாக்கிவிட்டு அதன் மீது மசுதிகளை கட்டினார்கள். கோயில்களில் இருந்த தங்க ஆபரணங்கள், வைர வைடூரியங்கள், வெள்ளி பொருட்கள் என விலையுயர்ந்த பொருட்கள் அனைத்தையும் 1400 ஒட்டகங்களில் கொள்ளையடித்துச் சென்றார்கள். இதனால் நகரத்தின் பொருளாதார நிலை வீழ்ச்சியடைந்தது. கோயில் கலாச்சாரம் அழிந்தது. ஆனால் ஆன்மிகத்தின் மீது மக்களுக்கிருந்த ஈடுபாட்டை அவர்களால் சிறிதும் நீர்க்கச் செய்ய முடியவில்லை. பல கோயில்கள் மீண்டும் கட்டப்பட்டன. காசி மாநகரத்தில் மீண்டும் தங்களுடைய தினசரி பூஜைக் கிரமங்களை தொடர ஆரம்பித்தனர்.

1490ல் ஆட்சிக்கு வந்த சுல்தான் சிக்கந்தா் லோடி, வாரணாசியில் இருந்த அனைத்துக் கோயில்களையும் மீண்டும் இடித்தான், அவற்றின் மீது மசுதிகளைக் கட்டும்படி தனது படை தளபதிகளுக்கு உத்தரவிட்டான். அவ்வாறே அவனது ஆணை நிறைவேற்றப்பட்டு 'மொஹம்மதாபாத்' என்று பெயரும் இடப்பட்டது. மொஹலாய மக்கள் இந்து மதப்படுகொலைகளிலும், கோயில்களை இடிப்பதிலும் ஈடுபட்டிருந்தனர்.

பின்னர் அக்பர் ஆட்சிக்கு வந்தார். மத நல்லிணக்கத்திற்கு புதிய உதாரணமாகத் திகழ்ந்தார். இந்துக்கள் தனது மதத்தைப் பின்பற்றவும் தண்டனைப் பற்றிய பயமின்றி கோயில்களைக் கட்டிக் கொள்ளவும் அனுமதித்தார். இந்த காலத்தில் தான் வாரணாசியில் விஸ்வேஷ்வரர் ஆலயமும் பிந்து மஹாதேவர் கோவிலும் கட்டப்பட்டன.

ஒளரங்கசீப் அக்பருக்குப் பிறகு அரியணை ஏறினான். இஸ்லாத்தை துணைக்கண்டத்தில் நிறுவுவதற்காக அக்பரின் இந்து சமத்துவ கொள்கைகளுக்கு மாறாக பின்பற்றினான்.

ஒளரங்கசீப்பின் அளவு கடந்த கொள்கைப்பிடிப்பினால் சாம்ராஜ்யத்தில் அரசியல் கலவரங்களுக்கும், மதக்கலவரங்களுக்கும் அத்துமீறி நடந்தது.

1659 ஆம் ஆண்டில் க்ருத்திவாசவரா கோயில் ஒளரங்கசீப்பின் நேரடி உத்திரவின்படி இடிக்கப்பட்டு அந்த இடத்தில் பெரிய மசூதிகள் கட்டினர். இந்து சமயக் கோயில்களை இடிக்க உத்தரவிட்டதன் மூலம் அக்பர் காலத்தில் கிடைத்த நற்பெயரையும் இழந்தான்.

முஸ்லீம் மன்னர்கள் வாரணாசியில் பல இந்து கோயில்களை இடிப்பதில் வெற்றி பெற்றார்கள். ஆனால் அவர்களால் நகரின் தன்மையையோ ஆன்மீக தாபத்தையோ அழிக்க முடியவில்லை. நகரின் புனிதத்தன்மையை களங்கப்படுத்த முடியவில்லை. காசி கல்லாலும், செங்கல்லாலும் மட்டும் கட்டப்படவில்லை. மக்களின் பக்திப்பெருக்கில் உருவானது. அதனால்தான் தொடர்ந்து சோதனையான காலக்கட்டங்களிலும் கூட புனித யாத்திரை ஸ்தலமாகவும், இந்து அறிவியலை கற்கும் இடமாகவும் வெற்றிகரமாக நீடித்துக் கொண்டிருந்தது. இத்தனை தொடர்ச்சியான படையெடுப்புகளுக்குப் பிறகும் வாராணாசியில் பிறந்த சிறந்த ராம பக்தரான கோஸ்வாமி துளசி தாசர் 'ராமசரித்ரமனஸ்' என்னும் ராம காவியத்தை ஹிந்தியில் மொழிபெயர்த்து கொடுத்தார். நாராயணபட் என்பவர் மஹாராஷ்டிராவிலிருந்து புலம்பெயர்ந்து சென்று வாரணாசியில் காசி விஷ்வேஸ்வரர் கோயிலை மறுநிர்மாணம் செய்தார். காசி, ப்ரயாக், கயா ஆகிய மூன்று இடங்களையும் இணைக்கும் முக்கியமான ஒருங்கிணைக்கும் வேலையை இவர்தான் செய்தார்.

ஒளரங்கசீப்பிற்கு பிறகு காசி மஹாராஜா பல்வந்த்சி ங் என்ற மன்னரின் ஆளுகைக்குள் காசி நகரம் வந்தது. முகலாயர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு இந்து ஆட்சியாளர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தோன்ற ஆரம்பித்தார்கள். வாரணாசியும் பல்வேறு ஆன்மீக செயல்பாடுகளில் மறுமலர்ச்சியைப் பார்த்தது. இராஜ புத்திரா்களும், மராட்டிய பிரபுக்களும் பக்கபலமாக இருந்தார்கள். பழமை இருந்த இடங்களில் புதிதாக கோயில்கள் கட்டப்பட்டன. இந்து மதம் மறுமலர்ச்சி அடைந்தது. குறிப்புகள் : http://www.hinduwebsite.com/ hinduism/cokasi.asp