Books / Inner Awakening Tamil merged

7. ரா படித்துறை

# ரா படித்துறை

சூர்ய குலத்தில் செங்கோல் ஓச்சிய ராஜா ஹரிச்சந்திரனின் நினைவாக இந்த ஸ்தலம் பெயரிடப்பட்டுள்ளது. அவர் எப்போதும் கொடுத்த வாக்கை காப்பாற்றும் குணம் உள்ளவர், நடுநிலை வழுவாதவர். ஒருநாள், முனிவர் விஸ்வாமித்ரர், ராஜா ஹரிச்சந்திரனின் அரசவைக்கு வருகை தந்தார். அவர் ஹரிச்சந்திரனிடம், 'நீ என் கனவில் தோன்றி உன் நாடு முழுவதையும் எனக்கு தானமாக கொடுத்தாய்' என்று கூறினார். இதைக்கேட்ட ராஜா ஹரிச்சந்திரன் தாம் கனவில் தந்த வாக்கை காப்பாற்றிட, தம் நாடு முழுவதையும் விஸ்வாமித்ர முனிவருக்கு தானமாக கொடுத்தார்; தானம் பெற்ற விஸ்வாமித்ரா் அடுத்தாக தட்சிணை கேட்டார். ராஜா ஹரிச்சந்திரன் தன் மனைவியையும் மகனையும் ஒரு பிராமணனுக்கு விற்று

விஸ்வாமித்ரருக்கு தட்சிணை கொடுத்தார். தட்சிணை தொகை போதாது என்று விஸ்வாமித்ரர் சொன்னார். தானமாக ராஜ்யத்தை தந்தபிறகு, அங்கிருந்து எதையும் எடுக்கக்கூடாது என்ற தா்மத்திற்கு கட்டுப்பட்டு தன்னை காசியின் மயானத்தை காக்கும் ஒரு பாதுகாவலனுக்கு - வெட்டியானுக்கு அடிமையாக விற்று, அதை விஸ்வாமித்ரருக்குக் கொடுத்தார்.

இவ்வாறு நாட்கள் சென்றது.

ஒரு சமயம், ஹரிச்சந்திரனின் மகன் ரோஹிதஷ்வனை பாம்பு கடித்தது. விஷம் ஏறி உடனே இறந்துவிட்டான். ஹரிச்சந்திரனின் மனைவி தன் மகன் ரோஹிதஷ்வனின் பூதஉடலை மயானத்திற்கு எரியூட்ட எடுத்து வந்தார்.

உடலை எரியூட்ட வரி கட்ட வேண்டும். ஆனால் அவரிடம் பணம் இல்லை. அவரால் அங்கு வெட்டியானுக்கு வேலையாளாக இருந்த தன் கணவனை, ஹரிச்சந்திரனை அடையாளம் காண முடிந்தது. இறந்தது தன் மகன்தான் என்பதை அறிந்திருந்தாலும், கடமையால் கட்டுண்ட ஹரிச்சந்திரன் எரியூட்டுவதற்கான வரி கட்டாமல் சி தை நியதிகளைச் செய்ய இயலாது என மறுத்துவிட்டார். அப்போது அவரது மனைவி, 'என்னிடம் இருக்கும் ஒரே உடைமை நான் அணிந்திருக்கும் இந்த சேலைதான். இந்த சேலையின் பாதியை வரியாக அளிக்கிறேன். தயவு செய்த இதைப்பெற்றுக்கொண்டு என் மகனின் இறுதி சடங்குகளை செய்யுங்கள்' என்று சொல்லி பாதி சேலையை தர முன்வந்தார். ராஜா ஹரிச்சந்திரனது ஈடு இணையில்லா

சத்தியத்தை பார்த்து மகிழ்ந்த தேவர்களும், விசுவாமித்திர முனிவரும் அவரது முன்னே தோன்றி அவரது மகனை உயிர்ப்பிக்க வைத்தனர். ராஜா ஹரிச்சந்திரனுக்கும் அவரது மனைவி மற்றும் குடிமக்களுக்கும் சொர்க்கத்தில் இடமளித்தனர். அந்த நிகழ்வு நடந்த இடம்தான் ராஜா ஹரிச்சந்திர படித்துறை. இப்படித்துறையில்தான் ராஜா ஹரிச்சந்திரன் ஒரு வெட்டியாளனாக இருந்தார். வணங்கி போற்றத்தக்க புனிதமான இவ்விடத்தில் எரியூட்டப்படும் எல்லோருக்கும் சிவபெருமான் மோட்சத்தை அளிக்கிறார். சிதையில் வைப்பதற்கு முன் முக்திப் பெற்ற அந்த ஆத்மாக்களின் பூதவுடல்களுக்கு சம்பிரதாயப்படி சடங்குகள் செய்யப்படுகின்றன.

ன் என்ப பிடப்படு இரு இடத்தில் இருக்கு இருக்கும் குறிப்புகள் குறிப்புகள் இருக்கும் குறுக்கும் குறுக்கும் குறுக்கும் குறுக்கும் குறுக்கும் குறுக்கும் குறுக்கும் குறுக்கும் குற

கங்கை அன்னைக்கு ஆரத்தி, தஷஸ்வமேத படித்துறை ம

தஷஸ்வமேத படித்துறை

விஸ்வநாதர் கோயிலின் அருகே உள்ள தஷ்ஸ்வமேத படித்துறையும் மிகப்பழையான படித்துறைகளில் ஒன்று. ஈசனை வரவேற்பதற்காக பிரம்மதேவனால் உருவாக்கப்பட்டது. மிகவும் பெயர் பெற்ற பழமையான இந்த படித்துறை ஜன நெருக்கடி மிக்கது. காசி மாநகரின் அரச னான திவோதச ராஜா, இங்கு பிரம்மதேவனின் உதவியுடன் பத்து குதிரைகளை பலி தந்து தச அஸ்வமேத யாகத்தை நடத்தினார். புராணங்களில் பர சிவ நாகர்கள் இங்கு பலி கொடுத்ததாகக் குறிப்பு உள்ளது. இத்தலபெருமை கூறும் பல பாடல்கள், 'காசி கந்த' குறிப்பேடுகளில் உள்ளன. இந்தத்துறையில் செய்யப்படும் புகழ் பெற்ற சக்திவாய்ந்த அக்னி பூஜையானது, ஈசன், கங்காதேவி, சூர்யதேவன், அக்னிதேவன் ஆகியோருக்கும் மற்றும் அண்டசராசரங்களுக்கும் அர்ப்பணிக்கப்படுகிறது.

கங்கையை - பார்த்தாலும், பெயரை உச்சரித்தாலும், ஸ்பரிசத்தாலும் போதும் ... பாவங்கள் போய்விடும். புண்ணிய கங்கையில் நீராடுபவர்களுக்கு மிகப்பெரிய ஆசிகள் வழங்கப்படுகின்றன. நாரத புராணத்தில் நாரதரால் சொல்லப்படும் தீர்க்க தரிசனங்களுள் குறிப்பிடத்தக்கது -கர்மங்கள் நீங்க செய்யப்படும் புண்ணிய யாத்திரை. நாரதா் கலியுகத்தில் கங்கைக்கு தீர்த்த யாத்திரை செல்வது மிக மிக முக்கியமானது என்று தெரிவித்துள்ளார்.

துளசி படித்துறை ;

பதினாறாம் நூற்றாண்டில் இங்கு தங்கி, 'ராம்சரிதமனஸ்' எனும் நூலை எழுதிய கவி கோஸ்வாமி துளசிதாஸ் அவர்கள் பெயரால் நிறுவப்பட்டது. இந்த இதிகாச காவியம் புனித நூலான ராமாயணத்தின் நிகழ்வுகளை நினைவுகூர்வதாக உள்ளது. ஒருமுறை இவர் எழுதிவை த்த ஒலைச்சுவடிகள் கங்கை ஆற்றின் வெள்ளத்தால் அடித்துச்செல்லப்பட்டுவிட்டன. ஆனால் அதில் மூழ்காமல் மேலெழுந்து மிதந்து கரை சேர்ந்தன.

காலபைரவர் புலித்தோலை உடுத்தி, கபால மாலை அணிந்து காசியின் காவலனாக விளங்குகிறார். ஈசனின் வேறுபட்ட அவதாரங்களில் ஒன்றான காலத்தின் அதிபதியான இவர்தான் அனைத்தும் தோன்றுவதற்கு மூலகாரணமானவர்.

விசாலாட்சி ஆலயம்;

சக்திப்பீடங்களில் (தேவியின் சக்தி ஸ்தலங்கள்) ஒன்றான விசாலாட்சி ஆலயம், காசி விஸ்வநாதா் ஆலயத்தின் பின்புறம் அமைந்துள்ளது. சதிதேவி தன் தந்தையான தக்ஷன், கணவன் ஈசனை அவமதித்ததால் மனமொடிந்து தீக்குளித்து உடலைத் துறந்தார். சிவபெருமான் அவரது உடலை இமாலயத்திற்கு சுமந்துசென்றார். செல்லும் வழியில், பூமியில் மொத்தம் ஐம்பத்தியொரு இடங்களில் சதிதேவியின் உடற்கூறுகள் விழுந்தன. ஈசன் அந்த ஐம்பத்தியொரு இடங்களிலும் சக்தி பீடங்களை நிறுவினார். சதிதேவியின் காதணி விழுந்த இடம் இதுவே. அங்குதான் வாரணாசியின் ராணி என அன்பாக அழைக்கப்படும் அன்னபூரணி தேவி தங்கக்குடத்துடனும் அகப்பையுடனும் ஒரு பாசமிக்க அன்னையாக காட்சியளிக்கிறார்.

எல்லோருக்கும் உணவளித்து பசிப்பிணியைப் போக்குகிறார்.

அசி துறை ;

இது வாரணாசியின் ஒரு முக்கிய படித்துறை. அசி-காசி நகரத்தின் தென் எல்லையைக் குறிக்கிறது. மச்சபுராணம், கூர்மபுராணம், பத்மபுராணம் மற்றும் காசி கந்த புராணங்களில் இந்த துறையைப்பற்றிய அரிய குறிப்புகளை காணலாம். அசி துறை முக்கியமான தீர்த்த ஸ்தலங்களில் ஒன்று.

மகாநிர்வாணி துறை:

நிர்வாணி துறையின் வடக்கு எல்லையில் இது அமைந்துள்ளது. நாகா சாதுக்களின் ஒரு பிரிவினரான மகாநிர்வாணி பிரிவினரை குறிக்கும் வகையில் இத்துறை பெயரிடப்பட்டுள்ளது. நேபாள மன்னரால் ஈசனுக்காக கட்டப்பட்ட நான்கு கோயில்கள் இங்குள்ளன. ஆச்சார்ய கபில முனிவர் இங்கு வசித்ததார். புத்தா இங்கு புனிதநீ ராடினார்.

பஞ்ச கங்கா துறை:

இது ஐந்து மிகப்புனித ஆற்றுத்தலங்களில் ஒன்று. கங்கை, யமுனை, சரஸ்வதி மற்றும் மறைந்து போன கிரனா, துதபாபா என்ற இரண்டு நதிகளின் சங்கமத்துறை இது. பதினோராம் நூற்றாண்டின் குறிப்பேடுகளிலும் காசி கந்தாவிலும் இத்துறையின் புகழும் பெருமையும் போற்றப்பட்டுள்ளன. ஆன்மீக புரட்சிபுலவர் கபீர் அவர்களின் குருவான ஸ்ரீராமானந்தர் வாழ்ந்த இடம் இந்த பஞ்சகங்கா துறை.

கால்பைரவர் கோயில் ;

பல நூற்றாண்டுகளாக, மகாயோகிகளான கபாலிகளுக்கும் அகோரிகளுக்குமான ஒரு ஆன்மீக தலமாக இக்கால பைரவா கோயில் திகழ்கிறது. கருப்பு நாய் -பைரவருடன் காவல் தெய்வமாக இருக்கிறார். நிறைக்க சூடப்படும் பூமாலைகளுக்கும் அழகான பட்டாடைகளுக்கும் நடுவே தன்னை மாயமாய் மறைத்து, பேரொளி மின்னும் முகத்தை மாத்திரம் காட்டி காலபைரவர் அருள்பாலிக்கிறார். எண்ணற்ற பக்தர்கள் தினந்தோறும் வந்து மஹாகாலபைரவரை தரிசிக்கிறார்கள்.

சங்கட மோட்ச ஹனுமான் கோயில்:

இது, ராமசரிதமனஸ் எனும் அற்புத காவியம் படைத்த கோஸ்வாமி துளசிதாஸ் அவர்களால் பகவான் ஹனுமானுக்காக கட்டப்பட்ட பழமையான கோயில். கோஸ்வாமி துளசிதாஸுக்கு எங்கு கடவுளின் தெய்வீக காட்சி கிடைத்ததோ, அதே இடத்தில் இந்த கோயில் கட்டப்பட்டது. இப்போது உள்ள கட்டிடம் பண்டிட் மதன் மோகன் மாளவியா அவர்களால் கட்டப்பட்டதாகும். சங்கட மோட்சன் என்றால் எல்லா சங்கடங்களையும் போக்க வல்லவன் என்று பொருள். இந்தக் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு எல்லாவிதமான ஆசீர்வாதமும் கிடைக்கும்.

வாரணாசியின் படித்த

இக்கோயிலின் உள்ளே ஞான வாபி எனப்படும் சிறிய கிணறு உள்ளது. ஜோதிர்லிங்கத்தை எதிரிகளிடமிருந்து காப்பற்றுவதற்காக பிரதான அர்ச்சகர் சிவலிங்கத்தை அணைத்துக்கொண்டு இந்த கிணற்றிற்குள் குதித்து, ஜலசமாதியடைந்து அந்த ஜோதிர்லிங்கத்தைக் காப்பாற்றினார்.