Books / Inner Awakening Tamil merged

14. ஹரித்வாரின் புனிதக் கோயில்கள்

# ஹரித்வாரின் புனிதக் கோயில்கள்

ண்ண்

சத்ய யுகத்தில், சதிதேவியின் தந்தையான பிரஜாபதி ராஜா தக்ஷன் ஒரு மகா யாகத்தை நடத்தியபோது, அதற்கு ஈசனையும் சதிதேவியையும் அழைக்கவில்லை. அழையா விருந்தாளியாக சதிதேவி அங்கு சென்றபோது யாகத்திற்கு வந்திருந்த எல்லோர் முன்னிலையிலும் ஈசனை இழிவாகப் பேசினார், பிரஜாபதி தக்ஷன். அதைக்கேட்ட சதிதேவி கோபம் மேலிட தன் கணவனுக்கு நேர்ந்த அவமானத்திற்கு பழிவாங்கும் விதமாக தம் யோக அக்னியால் தீக்குளித்தார். நடந்ததை அறிந்த ஈசன், வீரபத்ரர் உருவத்தில் தக்ஷனின் முன்னே தோன்றி அவரைச் சி ரச்சேதம் செய்தார். பின்னர், தக்ஷனின் மனைவியாகிய பிரசுதியின் வேண்டுகோளுக்கிணங்க ஆட்டின் தலையைக்கொண்டு அவரை உயிர்ப்பித்தார். இந்த கதையைப்பெருமைப்படுத்தும் வகையில் பிரஜாபதி தக்ஷன் யாகம் செய்த இடத்தில் ஒரு கோயில் கட்டப்பட்டது. இதே இடத்தில் தான் தக்ஷனை உயிர்ப்பித்து ஈசன் அவனுக்கு அருள்பாலித்தார்; அதன் பின்னர் தக்ஷன் ஈசனின் மாபெரும் பக்தனாக மாறினார்.