13. ஹரித்வார்... ஹிந்து த்ர்மத்தின்
# ஹரித்வார்... ஹிந்து த்ர்மத்தின்
உத்தராகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள ஹரித்வார், இந்தியாவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாகும். ஹரித்வாரில்தான் கங்கை சமவெளியில் பாயத்துவங்குகிறாள். அதுவரை மலைப்பகுதிகளில் பாய்ந்துவந்த கங்கை இவ்விடத்திலிருந்து சமவெளியில் நுழைவதால் கங்காத்வாரா (கங்கையின் நுழைவு வாயில்) எனவும் இவ்விடம் புகழ் பெற்றது. ஹரித்வார், வருடா வருடம் கோடிக்கணக்கான ஹிந்து பக்தர்களை கவர்ந்திழுக்கும் இந்தியாவின் புண்ணிய நகரங்களில் ஒன்று. கணக்கற்ற ஆலயங்களையும் ஆசிரமங்களையும் தன்னகத்தே கொண்டது
இந்நகரம். இந்நகரத்தின் வருவாய், மத யாத்திரிகர்களின் மூலமாகவும், மத நிகழ்வுகளை மையமாகக்கொண்ட கலாச்சாரப் பெருமை வாய்ந்த திருவிழாக்கள் மூலமாகவும் கிடைக்கப்பெறுகிறது.
கங்கை நதி, ரிஷிகேஷ்:
ரிஷிகேஷ் சட்டப்படி ஒரு ஹிந்து நகரம்; இது எதைக்குறிக்கிறது என்றால், மற்ற மத கோட்பாடுகளைக்குறிக்கும் எந்த விதமான கட்டிடங்கள், நினைவுசின்னங்களை நிறுவுவதற்கு இங்கு சட்டப்படி அனுமதி இல்லை.

சதிதேவி, சிவபெருமானை மணந்துகொள்ளும் முன்னர், ஹரித்வாரில் இருந்த தனது தந்தை பிரஜாபதி தக்ஷனது மாளிகையில் வசித்து வந்ததால், இது சாக்ஷாத் ஆதிசக்தியின் அவதாரமும், சிவபெருமானின் துணைவியுமான சதிதேவியின் தாய் வீடு என்ற பெருமை வாய்ந்தது.
சிவபெருமான், சதி தேவியை மண முடிந்ததை கடுமையாக எதிர்த்த பிரஜாபதி தக்ஷன், சிவபெருமானுக்கும், சதி தேவிக்கும் அழைப்பு விடுக்காமல் ஒரு மகாயாகத்தை நடத்தினார். இதனால் சினமடைந்த சதிதேவி தனது கணவருக்கு
இழைக்கப்பட்ட அவமானத்தை பொறுக்க இயலாமல் தன்னைத்தானே வேள்வித்தீயில் எரித்துக்கொண்டார். துக்கம் தாளாமல், சதி தேவியின் பூத உடலை கரமேந்தி ஈசன் அண்டவெளியை வலம் வந்தார். சதி தேவியின் இறந்த உடலை மகாவிஷ்ணு தனது சுதா்சன சக்கிரத்தால் ஐம்பத்தொரு பிண்டமாக ஆக்கினார். சதிதேவியின் இருதயமும், நாபியும் இங்கு விழுந்ததால், ஹரித்வார் மிக முக்கியமான சக்தி ஸ்தலமாக விளங்குகிறது. இன்றும், அந்த இடத்தில் மாயாதேவி கோயில் இருப்பதைக் காணமுடிகிறது.

ஹரித்வார் தொன்று தொட்டு ஆயுர்வேத ஒளஷதங்களின் கருவூலமாக இருந்து மூலிகை மருந்துகளை அளித்து வருகிறது. கங்கைக்கரையில் தோன்றிய மிகப்புராதன நகரங்களில் ஒன்றான ஹரித்வார், இன்றும் பச்சைபசேலென்று மரங்களும், காடுகளும் நிறைந்து செழுமையுடன் காணப்படுகிறது. ஆயுர்வேத பாடசாலையாக விளங்கும் இந்நகரம் ஆயுர்வேத மருத்துவத்தை பேணிகாக்கும் கருவூலமாகவும் விளங்குகிறது. பரங்கியரின் ஆட்சிக்காலத்தில், ஆயுர்வேத மருத்துவம் பின்னுக்குத்தள்ளப்பட்டு, அலோபதி எனப்படும் மேலை நாட்டு மருத்துவ மோகம் பாரதத்தில் மேலோங்கியது. ஆயுர்வேதமுறை இரண்டாம் பட்சமாக்கப்பட்டது. மேலும், ஆயுர்வேதம் ஏழைகளின் மற்றும் படிப்பறிவில்லாதவரின் மருத்துவமாகக் கருதப்பட்டு, பாரதத்தின் கலாச்சாரபழக்க வழக்கங்களில் இருந்து ஒழிக்கப்பட்டது. ஹரித்வாரில் வாழ்ந்த சந்நியாசிகள் இதற்கு புத்துயிரூட்டி, வேத காலத்து அறிவாற்றலையும் விஞ்ஞானத்தையும் அளித்து நிலைநிறுத்தினர்.
மானசா தேவி கோயில்-
ஷிவாலிக் மலைத்தொடரில் உள்ள வில்வ பா்வதம் என்னும் மலை உச்சியில் உள்ள இக்கோயில் பக்தா்களின் ஆசை, அபிலாஷைகளை நிறைவேற்றும் மானசா தேவிக்காக உருவாக்கப்பட்டது. மாயா தேவி கோயில்- இது சித்த பீடங்களில் ஒன்று. சதி தேவியின் இருதயமும், நாபியும் விழுந்த இடம் இது. மாயா தேவி இவ்விடத்தில் அதிஷ்தாத்ரி தேவியாக வழிபடப்படுகிறாள்.
கீதை கோயில்- கிருஷ்ண பகவான் தனது கையால் எழுதிய பகவத் கீதையின் மூலப்பிரதியான மிகப்பழைய பிரதி இன்று வரை இங்கு பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. இரண்டாயிரம் முதல் மூவாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது இந்தப் பிரதி என்பதை மட்டும் தீர்மானமாகச்
சொல்ல மூடியும். இந்தப் பிரதி தற்போது மகாநிர்வாணி அகாடாவின் பொறுப்பில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. இந்த கைப்பிரதியில் இருந்து தான் பகவத் கீதையின் முதல் அச்சுப் பிரதி அச்சிடப்பட்டது. மிக அழகான கீதை கோயிலொன்றை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இந்த மிகப்பெரிய கோயிலின் உள்ளே பகவத் கீதை முழுவதும் கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. -பரமஹம்ஸ நித்யானந்தர்