Books / Inner Awakening Tamil merged

12. ண்ண் கங்கா

# ண்ண் கங்கா

தான் இறங்கி வந்த உத்தேசத்தை பூர்த்திசெய்வதற்காக, கங்கையானவள் பகீரனது மூதாதையர்களின் சாம்பலை கழுவி அவர்களின் பாவத்தை போக்கினாள். அதனால், அவளை பாகீரதி என ராஜா பகீரதனின் நினைவாக பெயரிட்டனர். அன்றிலிருந்து இன்று வரை தொடர்ந்து அவளிடம் அடைக்கலம் அடைபவர்களை புனிதப்படுத்தி தானும் மகாதேவரின் காலைத்தமுவி மனித குலத்தினிடமிருந்து ஏற்ற பாவங்களைக்கழுவி புனிதமடைகிறாள்.

எல்லாம் வல்ல கங்கை, தனது கரையில் அமைந்துள்ள ஹரித்வார், வாரணாசி மூதலிய எண்ணற்ற ஆன்மீகதலங்களை வளப்படுத்திக்கொண்டிருக்கிறாள். கங்கை அவளது நீண்ட கரையின் ஒவ்வொரு பாகத்திலும் பூஜைக்குரியவளாக இருக்கிறாள் என்பதில் ஐயமில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, கங்கை, இந்திய கண்டத்தின் மனம் கவர்ந்த நதியாக, கோடிக்கணக்கான மக்களை தொன்று தொட்டு அவளது கரைக்கு ஈர்த்து வாழ வைப்பவளாகத் திகழ்கிறாள்.

கங்கை ஆரத்தி: கங்கைத்தாய்க்கு ஆராதனை

கங்கை ஆரத்தி உலகத்திலேயே மிகப்பழமையான பதிவு செய்யப்பட்ட சாங்கியம். பூஜாரிகள் சாங்கியத்தை நிறைவு செய்து பதிவேட்டில் கையெழுத்திட்டால் அவருக்குக் கிடைக்கும் கூலிக்கு 'மானியம்' என்று பெயர். மானியம் என்பது பதிவேட்டின் பெயர். எல்லா ஹிந்து கோயில்களிலும் அந்த மானியத்தை ஆதாரமாக வைத்துத்தான் அதன் புராதனத்தைக் கணிக்கிறார்கள். பூஜாரிகள் சாங்கியங்களை நிறைவேற்றி, அதை எந்த பதிவேட்டில் பதிவு செய்து கையொப்பமிட்டு தனது சம்பளத்தை வாங்கிகொண்டாரோ, அந்த பதிவேடு அக்கோயிலின் வயதைக்கணிப்பதற்கும், தடையில்லாமல் நடந்த தெய்வப்பணிகளுக்கும் ஆதாரமாகக்கொள்ளப்படுகிறது. கங்கை ஆரத்தி தடையில்லாமல் 12,000 வருடங்கள் நடந்ததற்கான ஆதாரப்பதிவேடுகள் உள்ளன!

சாட்டவிமோசனம் தரும்

ண்ண்

ஹரித்வாரின் முக்கிய ஈர்ப்பு மையம் - கங்கையும் ஹர் கி பௌரி படித்துறையும்தான்.

ஹர் கி பௌரி ஹரித்வாரில் மிகப்புனிதமானது; இந்த இடத்தில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி தங்கள் பாவங்களைக் கழுவிச் செல்கின்றனர். ஹர் கி பௌரி என்ற வார்த்தையை கடவுளின் அடிச்சுவடு என மொழிபெயர்க்கலாம். ராஜா பகீரதன், சத்ய யுகத்தில் பற்பல ஆண்டுகள் கடுந்தவம் புரிந்து ஸ்வர்க்க லோகத்திலிருந்து கங்கையை பூமிக்கு கொண்டு

வந்தார். தன் மூதாதையர்களை விமோசனம் அடையச்செய்து அதன் மூலம் தன்னையும் கபில மகரிஷியின் சாபத்திலிருந்து காப்பற்றிகொண்டார். இறந்து போன சுற்றத்தினரின் அஸ்தியை இங்கு கரைத்து ஹா் கி பௌரியில் மூழ்கிக் குளிப்பதனால் மூதாதையர்களின் விமோசனத்திற்கு வழிகோல முடியும்; அதன் மூலம் ராஜா பகீரதனால் துவங்கி வைக்கப்பட்ட இந்த வழக்கத்தைத் தொடரமுடியும்.

72

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஹரித்வாரில் பிரசித்தி பெற்ற கும்பமேளா கொண்டாடப்படுகிறது. பல லட்சக்கணக்கான மக்கள் மாபெரும் கூட்டமாக ஒன்றுகூடி இவ்விழாவை கொண்டாடுகிறார்கள். ஆறு ஆண்டுகளுக்கொருமுறை நடக்கும் அர்த்த கும்பமேளா ஹரித்வாரில் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு கும்பமேளா நடக்குபோதும் லட்சக்கணக்கான பக்தர்கள் கங்கை நதியில் புளித ஸ்னான் செய்வதற்காகவே ஹரித்வாருக்கு வருகிறார்கள். கடைசியாக ஹரித்வார் நகரில் 2010 ஆம் வருடம் கும்ப மேளா நடந்தது.