11. மனஊனத்தை நிறைவுசெய்யுங்கள்
# மனஊனத்தை நிறைவுசெய்யுங்கள்
நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியதெல்லாம் 'சாத்தியமில்லை'என்று நினைக்கும் எல்லாவற்றுடனும் நிறைவு செய்து, 'அனைத்தும் சாத்தியம்' என்ற உணர்வினை உங்களக்குள் உருவாக்க வேண்டும் என்பதுதான். நீங்கள் ஒரு உணர்வினை உருவாக்கும்போது எழுகின்ற எல்லா இயலாமைகளையும் சந்தேங்களையும் மீண்டும் மீண்டும் பூரணத்துவம் செய்யுங்கள். வாழ்வில் எதையும் பெறுவீர்கள்.

நான் துபாயில் இருக்கிறேன். வாரணாசியில் 2014 வருடம் மே மாதம் நடைபெறும் அகவிழிப்புணர்வு தியான முகாமில் கலந்துகொள்ள வேண்டுமென்று முடிவு செய்திருந்தேன். துபாயில் இருப்பதால், தியான முகாமில் கலந்துகொள்வதற்கு தேவையான முன்னேற்பாடுகளை எல்லாம் செய்துகொண்டிருந்தே தன். தியான முகாமில் கலந்துகொள்வதற்கு சில நாட்களுக்கு முன்பாக என் வேலையை இழந்தேன். அதை அதிர்ச்சியாக பார்க்காமல், தியான முகாமில் கலந்துகொள்வதற்கு கிடைத்த ஒரு வாய்ப்பாகவும், ஒரு அழைப்பாகவும் பார்த்தேன். அப்பாடா, விடுமுறை பிரச்சினை இல்லை என்று நிம்மதியானேன். என் பயணத்திற்கான ஏற்பாடுகளை திட்டமிட்டபடி செய்தேன். 21 நாட்கள் தியான முகாமை வெற்றிகரமாக முடித்துவிட்டு நான் துபாய்க்கு திரும்பினேன். அடுத்த வேலைக்காக பார்த்து கொண்டிருந்தேன். வேலை இல்லை எனும் பாரம் இல்லாமல் சுலபமாக அதை பார்த்து பக்குவமாக அணுகுவதற்கு அகவிழிப்பு முகாமிலிருந்து கற்றுக் கொண்ட பாடங்களும், பெற்றுக் கொண்ட தீட்சைகளும் மிகவும் உதவின. துபாயிலிருக்கும் சங்கத்தில் இணைந்து சேவை செய்துவந்தேன்.
சங்கத்துடன் சேர்ந்து செய்த என்னுடைய வாராந்திர சத்சங்க நடவடிக்கைகளும், யோகப் பயிற்சி களும் என் ஆன்மீகப்பயண வெற்றிகளுக்கு மிகவும் உதவின. அந்த நேரத்தில், துபாய் சத்சங்க மையத்தில் ஒரு கல்பதரு வகுப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இருமுனை காணொளி வழியாக ஸ்வாமிஜியை தரிசித்து, 'எனக்கு ஒரு வேலை அமைய வேண்டும்' என வரமளிக்குமாறு கேட்டுக் கொண்டேன். அவரும் அதற்காக ஆசீர்வதித்து, 'அடுத்த 31 நாட்களுக்குள்ளாகவே விரும்பியது அமையும்' என்றார். 31 நாட்களில், முதல் 10 நாட்களுக்குள்ளாகவே ஒரு நல்ல வேலை கிடைத்தது.
நான் அந்த வேலையை ஏற்றுக்கொண்ட பிறகுதான் அது மிகுந்த பண்பாடற்ற தொழில் குழு எனத் தெரிந்தது. இந்த உண்மை தெரிந்ததும் அந்த வேலையை உடனே விட்டுவிட்டேன். வேறு ஒரு இடத்தில் மீண்டும் ஒரு நல்ல வேலை கிடைத்தது. இந்த புதிய வேலையில், அதிகப் பொறுப்புகளை எடுத்துக் கொண்டிருக்கிறேன். நான் அவற்றை என் அக விழிப்பு முகாமுக்கு முன்பு நிகழ்ந்திருந்தால் என்னால் இத்தகைய கூடுகல் பொறுப்புகளை எடுத்து செய்ய
முடிந்திருக்காது. அதிக சம்பளம், நல்ல வேலையும் சிறப்பாக அமைந்தது. இதற்கு, அகவிழிப்பு முகாம் எனக்குள் ஏற்படுத்திய உள்ளுணர்வு மாற்றமே காரணம். அதற்காக நான் சுவாமிஜிக்கும், அவருடைய சங்க அமைப்புக்கும் நன்றி கூறுகிறேன். இது எனக்கு நிகழ உதவிய ஸ்வாமிஜிக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
-சோனிராஜ், துபாய்.
நான் உண்மையிலேயே கடவுளின் சாந்நித்யத்தை உணர்ந்தேன்.
வார்த்தைகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஓர் உணர்வு அது. பிரபஞ்சமே என்னை தழுவியதாக உணர்ந்தேன். சக்தி தரிசனத்திற்குப் பிறகு, என்னுடைய பல துக்கங்கள் என் உள்ளுணர்வு தளத்திலிருந்தே களையப்பட்டன. என்னுடைய குண்டலினி விழிப்படைந்ததை அறிந்து கொண்டேன். எப்படிப்பட்ட ஒரு வியப்பான வாய்ப்பு, எப்படிப்பட்ட ஒரு விடுதலையளிக்கும் உணர்வுருமாற்றம்!. முழு அனுபவமும் வியப்பூட்டுவதாக இருந்தது. வார்த்தைகளால் விளக்கமுடியவில்லை.
-(கும்கும் ஸ்ரீவாஸ்தவன்-கலிபோர்னியா, அமெரிக்கா
ஜூலை 2013-ல், என்றுடைய மகப்பேறு மருத்துவர் என் கருப்பையை முழுவதுமாக நீக்கிவிட அறிவுறுத்தினார். அந்தக் கருப்பைக்குள் 3 சென்டிமீட்டர் அளவுள்ள ஒரு பைஃப்ராய்டுகட்டி வளர்ந்திருந்தது. அறுவை சிகிச்சை செய்யாமல்விட்டால் சில மருத்துவ சம்பந்தமான பிரச்னைகளை எதிர்நோக்கும் சூழ்நிலை வரும் எனத் தெரிந்தும் அறுவை சிகிச்சை செய்துகொள்ள மிகவும் தயங்கினேன். கட்டிகளை கரைப்பதற்காக சில சீன மருந்துகளை எடுத்துக் கொண்டேன். மருந்து அவ்வளவாக பலனளிக்கவில்லை. மே 2014ல் அகவிழிப்பு தியான முகாமில் கலந்துகொண்டேன். ஒருநாள் எனக்கு கட்டிருந்த இடத்தில் வலி இருந்து கொண்டிருந்தது. அதனால் அன்றைய சக்தி தரிசனத்தின்போது, டாக்டரின் அறிவுரைப்படி என் கருப்பை முழுவதையுமே நீக்கிவிட வேண்டுமா என்று ஸ்வாமிஜியைக் கேட்டேன். அவர் செய்துவிடுங்கள் என்று கூறினார். சுவாமிஜியிடம் ஆசிபெற்று வந்தமர்ந்தேன். வலி நீங்கியிருந்தது. அகவிழிப்பு தியான முகாமிலிருந்து வீடு திரும்பியவுடன், நான் அடுத்த வாரம் என்னுடைய மருத்துவரை அணுகி, எனக்கு அறுவை சிகிச்சைக்காக ஒரு தேதி குறித்து வரலாம் என்று சென்றேன். என்னை கவனிக்கும் மருத்துவ உதவியாளர் தன்னுடைய மகப்பேற்றுக்காக விடுப்பில்

ண்ண்

சென்றிருக்கவே, அவருடைய உதவியாளர் 'அல்ட்ரா சவுண்டு' ஒளியலை சோதனை செய்தார். அப்போது கணிணித்திரையில் பார்த்தபொழுது, நாங்களிருவருமே ஆச்சரியமடைந்தோம், ஏனெனில் கருப்பையில் எவ்வித வளர்ச்சியையும் காண முடியவில்லை ! அதன் பின் 2 வாரம் கழித்து வாருங்கள், மீண்டும் ஒரு முழுமையான சோதனை செய்துபார்த்து உறுதி செய்யலாம் என்று கூறினார். பின்பு குறித்த தேதியில் சென்று அந்த முழுமையான சோதனை செய்துகொண்டே டன். அந்த பைஃப்ராய்டுகட்டி இறுகி விட்டதால், முன்பு கொடியத்தன்மை வாய்ந்ததாகக் கருதப்பட்ட வளர்ச்சியின் அடையாளமே அங்கு காணப்படவில்லை என்று என் மருத்துவர் சொன்னார். என்னுடைய முதன்மை மருத்துவர் இறுதியில் எனக்கு இனி எந்த அறுவை சிகிச்சையும் தேவைப்படாது என்பதை உறுதிப்படுத்தினார். என்னை குணப்படுத்தியதற்கு மிகவும் நன்றி ஸ்வாமிஜி !''
-லீ கிம் ஹார்
அகவிழிப்பு தியான முகாமில் மிக
முக்கியமானது என்னவென்றால், ஒவ்வொருவருடைய மூலமனப்பாங்குகளையும் வெளிப்படுத்தி, அவற்றைப் புரிந்துகொள்ள உதவுவது. என் வாழ்வில் சில குறிப்பிட்ட நிகழ்வுகள் ஏன் மீண்டும், மீண்டும் நடைபெறுகிறது என்பதை நான் அறிந்துகொள்ள அது மிகவும் உதவியது. என்னுடைய சந்தா்ப்பங்கள், சுழல் புதியதாக இருந்தாலும், என்னை நிகழ்காலததில் என்னை ஆனந்தமாகவே இருக்கவிடாமல் என்னுடைய கடந்தகாலக் குறையுணர்வுகள் தடுத்துவருகின்றன என்பதை புரிந்துகொண்டேன். இந்த குறைவுணர்வை அடிப்படையாகக் கொண்டே இந்த உலகைப் பற்றிய உணர்வுகளையும் உருவாக்கி வாழ்ந்திருக்கிறேன் என்பது புரிந்தது. மேலும் அகவிழிப்பு தியான முகாமின் சக்திவாய்ந்த சூழல், என்னுடைய ஆழமான வலிகளிலிருந்து விடுவித்து, என்னுள் தளர்வான உணர்வுகளையும் ஆனந்தத்தையும் பதியவைக்க உதவியது.
-முக்தா ஷர்மா
என்றுடனும் மற்றவர்களுடனும் பூரணத்துவம் செய்வதற்கும், என்னுடைய உறவுகளைக் கையாள்வதற்கும் தேவையான திறமை வாய்க்கப் பெற்றிருக்கிறேன். என் சுய-சந்தேகத்திலிருந்து வெளிவந்து, மிக்க சக்தியுள்ளவளாக உணரத் துவங்கியிருக்கிறேன். பூரணத்துவத்தில் இருப்பது பொறுப்பெடுக்கும் திறனையும், மற்றவர்களுடைய நிஜத்தை உருவாக்க அவர்களுக்கு உதவும் திறனையும் எனக்குத் தந்தது. என்னுடைய கால்பிடிப்புகள், சளி தொந்தரவு, தலைவலிகள், மாதவிலக்கு வலிகள் ஆகியவை மறைந்து விட்டன. இனிமேலும் மன அழுத்தத்துடன் என்னை சேர்த்து நினைக்க முடியாது. அகவிழிப்பு தியான முகாம், என்னுடைய மனப்பாங்குகளையெல்லாம் நானே கண்டுபிடிப்பதையும், அவற்றை விட்டுவிடுவதையும் மிகச் சுலபமாக்கிவிட்டது.
-பெனாஸிர் பாத்திமா
என்னுடைய குணத்தைப் புரிந்து கொண்டு என்னுடைய எதிர்மறை உணர்ச்சிகளை (கவலை, அச்சம், மனக்குமுறல்கள்,
கோபம் ) என்னால் விட்டுவிட முடிகிறது. வகுப்புகள் நடக்கும்போது ஆழ்ந்த அமைதியை அனுபவித்தேன். என்னுடைய வாழ்க்கையின் நோக்கத்தையும் கண்டுபிடித்தேன். முன்பு எனக்கு பால் சார்ந்த பொருளால் ஒவ்வாமை இருந்தது. ஆனால் இப்பொழுதெல்லாம் பால் குடித்த பின்பு எவ்வித ஒவ்வாமையும் இருப்பதில்லை. நான் எப்போதும் நிறைய கவலையும் பயமும் கொண்டிருப்பேன். ஆனால் என்னுடைய மூலமனப்பாங்குகளையெல்லாம் பூரணத்துவம் செய்துவிட்ட பிறகு, மிகுந்த நிம்மதியை உணர்கிறேன்''.
-தியாகோ லஸ்வோ ரோசா
என்னுடைய மூலமனப்பாங்குகளை எவ்வாறு இனம் கண்டுபிடிப்பதென்பதையும், அவற்றை எவ்வாறு பூரணத்துவம் செய்வது என்பதையும் கற்றுக் கொண்டேன். கற்றுக்கொண்டதை மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டு வாழ்கிறேன். வாழ்க்கையை அனுபவித்து வாழ்வதற்கு மனத்தளவில் தயாராயுள்ளேன். இந்த அகவிழிப்புக்கு முன்பு மிகவும் சக்தியற்றவளாக உணர்ந்திருந்தேன். இப்போது நான் கவலையை எதிர்க்கவும் கூடாது,

ண்ண்
ஏற்கவும் கூடாது என்னும் கருத்தை பரிந்து கொண்டேன். நான் 'என்னுடைய' நிஜத்தை 'உண்மையாகவே உள்ள' நிஜத்திலிருந்து பிரித்துப் பார்ப்பதற்கு இப்போது கற்றுக் கொண்டுவிட்டேன். எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? என்று கேட்பதை விட, என்னால் என்ன செய்யக்கூடும் என்றுதான் என்னை நானே கேட்டுக்கொள்கிறேன். சன்யாசிகள் பங்கேற்பாளர்கள் மீது மிகுந்த அன்பு காட்டினார்கள்.
-ஜெஸிண்டா கிளார்க்
இந்த முகாமுக்குப் பிறகு நான் அனுபவித்த மிகப்பெரிய மாற்றம் - எல்லா விஷயங்களையும் சரியான விதத்தில் பார்க்கத் துவங்கியதே. கடந்த காலத்தில் என்னால் செய்ய முடியாத சில விஷயங்கள், தியான முகாமிற்கு பிறகு பார்க்கும்போது அவை அப்படி ஒன்றும் கடினமானவையாகத் தெரியவில்லை. என்னிடமிருந்த நிறைய கெட்ட பழக்கங்கள் எல்லாம் நான் எவ்வித முயற்சியும் செய்யாமலேயே என்னிடமிருந்து கரைந்து மறைந்து போயின. என்னைச் சுற்றியிருக்கும் சூழலும் மனிதர்களும் அப்படியேதான் இருக்கிறார்கள் : ஆனால், நான் மாறியிருப்பதால் நான் அவர்களோடு பழகுவது மாறியிருக்கிறது. -விக்கி
Section 2
ஒய்வும், போதிய தூக்கமில்லாமையினாலும் ஏற்பட்ட மன அழுத்தத்தால் மருந்துகள் எடுத்துக் கொண்டிருந்தேன். என்
சிகிச்சையாளர்கள் என்னிடம் தோல்வியைதான் கண்டார்கள். ஏனெனில் என் மனதைப் பாதுகாப்பதற்காக நானே மூடியிருந்த கதவை உடைக்க அவர்களால் முடியவில்லை. தூக்கத்திற்கு மாத்திரைகளையே நம்பியிருந்தேன்.
பிரச்னைக்கு நிரந்தர தீர்வு மாத்திரைகள் அல்ல என்பதால், அவற்றை நிறுத்திவிட முடிவு செய்தேன். என்னுடைய மனைவி என் நிலைமையைக் கண்டு கவலைப்பட்டாள். அவள் எனக்காக ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க ஆர்வமாக இருந்தாள். அவள் தன்னுடைய சகோதரியிடமிருந்து இந்த அகவிழிப்பு முகாமைப் பற்றிக் கேள்விப்பட்டாள். அவள், ஆகஸ்டு ஆகஸ்டு தேதியில் நடக்கவிருந்த அகவிழிப்பு முகாமைப் பற்றிய ஒரு அறிமுக வகுப்பில் கலந்துகொள்ள என்னை சம்மதிக்க வைப்பதில் (அது அவளுக்கு அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை) வெற்றியடைந்தாள். அதை
ஆரிஸ், தியோஹா என்னும் இருவர் நடக்கினர். அந்த வகுப்பின்போது, உண்மையிலேயே ஒரு நம்பிக்கையை உணர்ந்தேன். அதனால், வேறெந்த யோசனையுமின்றி, உடனே அகவிழிப்பு முகாமுக்காக என் பெயரை பதிவு செய்துவிட்டேன். இருவழி காணொளி தொலைக்காட்சி மூலமாக முதல்நிலையில் கலந்துகொண்டேன். இதன் மூலம், இந்தியா செல்லாமலேயே, இந்த முகாமில் பயிற்சியாளர்கள் கலந்துகொள்ள முடிந்தது. இந்த நான்கு நாட் களில், (முழுமையான முகாம் - 21 நாட்கள்) பயிற்சியாளர்களெல்லோரும் ஒரு மிக உயர்ந்த நிலைப்புரிதலைப் பெற்றார்கள்.
மூன்றாவது நாளே என்னுடைய வாழ்க்கையில் நான் சேர்த்து வைத்திருந்த நிறைய எதிர்மறை உணர்ச்சி களையெல்லாம் களைந்து, சுத்தம் செய்ய முடிந்தது. நான் அமைதியையும் தளர்வையும் நிம்மதியையும் உணரத்துவங்கினேன். அதன் பயனாக, முழு முகாமையும் முடித்து, முழுழுப்பயனையும் அடைவதற்கு முடிவு செய்தேன். என்னுடைய இந்த முடிவுக்கு, என் குடும்பத்தினா் மிகுந்த ஒத்துழைப்பு கந்தார்கள்.
-ஃபெலிக்ஸ் செள, ஹாங்காங்.
தியான முகாமில் கலந்துகொண்டு டெரொண்டோவுக்குத் திரும்பி செல்ல பெங்களூர் விமான நிலையம் சென்றேன்.
பயணத்தின்போது நம்முடன் 44 கிலோ பயணப் பொருட்களைக் கொண்டு செல்ல முடியும் என்று நினைத்திருந்தேன். ஆனால், அங்குக் கேட்டுப் பார்த்ததில் 30 கிலோ அளவுக்கே அனுமதி உண்டு என்று அறிந்தேன். அதனால் நான் ஒன்றும் தளர்ந்து விடவில்லை. என்னுடைய சாமான்கள் அதிகமாயிருந்தால் அதற்கான கட்டணம் செலுத்திவிட்டுப் போகலாம் என்று நினைத்துக் கொண்டேன். சாமான்களை எடை போட்டபோது, அது 40 கிலோவாக இருந்தது. அதற்கான சீட்டை எழுதி முடித்துவிட்டு, நான் எங்கிருந்து வந்திருக்கிறேன் என்பதை அலுவலர் கவனித்தார். அதில் 'நித்யானந்த தியானபீடம்' என்றிருந்ததைக் கண்டார். உடனே அவர் முகம் பிரகாசமடைந்தது. 'ஒ, நித்யானந்த ஆஸ்ரமம்' என்று சிறிது ச த்தமாகச் சொன்னார் ! அதன்பின், அவர் அதிக சுமைக்காக என்னை பணம் செலுத்தக் கேட்கவும் இல்லை. என்னிடம் அதிக சுமை இருந்ததைக் குறிப்பிடவுமில்லை ! நான் திகைத்து நின்றுவிட்டேன். அவர் என்னுடைய மற்ற பயண விவரங்களை முடித்த பிறகு, அவர் 'நித்யானந்தாவுக்கு ஜே' என்று சிறிது
சத்தமாகவே சொன்னார். என் கண்களில் கண்ணீரே வந்து விட்டது. என் பயணம் முழுவதும் எனக்குள், 'நித்யானந்தாவுக்கு ஜே' என்று பாடிக்கொண்டு வந்தேன். டொரண்டோவிற்கு திரும்பி வந்தபின்பு, பெரிய தடைகல் என்று நினைத்திருந்த விஷயங்களெல்லாம், இப்போது மாறாக நல்லவிதமாக நடந்தேறுவதைக் காண்கிறேன். ஸ்வாமிஜி சொன்ன சத்தியங்களை நினைவுகூர்ந்து, அவற்றை விழிப்புணர்வோடு உணர்ந்து வாழவேண்டும் என்று முடிவெடுத்தேன். நான் பூரணத்துவத்தில் முழுமையாக இருக்கிறேன். வாவ்! நான் எதற்காக வந்தேனோ, அதைப் பெற்றுவிட்டேன்.
-மா நித்ய ஹேமானந்தா, டொரண்டோ
இந்த 2014 ஜனவரியில், ஹரித்வாரில் அகவிழிப்பு தியான முகாமில் பங்கேற்றேன். அது
என்னுடைய கடந்த காலத்தோல்விகளினால் ஏற்பட்ட காயங்களிலிருந்து என்னுடைய முழு இருப்புணர்வையும் குணமாக்கியது. என்னை மன அழுத்தத்தில் விழ வைத்ததாக நான் நினைத்துக் கொண்டிருந்த பல நல்ல, கெட்ட நிகழ்ச்சிகள் அனைத்தையும் கடந்துவர முடிந்தது. இது அக விழிப்பு முகாமினால் நடக்கும் ஒரு அதிசயமே தவிர வேறென்ன ! என்னுள் நிகழ்ந்த பூரணத்துவம்தான் அந்த குணமளிப்பே தவிர வேறென்னவாக இருக்க முடியும் ! இது அக விழிப்பு தியான முகாமினாலே நிகழ்ந்திருக்கிறது.
ஸ்வாமிஜி,
நீங்கள் இந்த வடிவத்திலுள்ள கடவுள்தானே தவிர வேறு யாருமில்லை. தாங்கள் எல்லா ஆன்மாக்களையும் குணமளிப்பதற்காக வந்திருக்கும் அவதாரம். தாங்கள் தெய்வீகக் குணமளிப்பவர். நீங்கள் எனக்கு தெய்வீகத்தை அள்ளி வழங்கும் தாய், குரு. தாங்கள்தான் எல்லாமே! -நந்தினி சண்முகசாமி
சுவாமிஜியின் கருணை மிகுந்த ஓளிவீசும் கண்களைப் பார்த்தபோது, எல்லையற்ற பரம்பொருளை, அதன் மௌனத்தை
அனுபவித்தேன். காலம் நின்றுவிட்டது. எல்லா நினைவுகளும் என்னை விட்டு அகன்றன. ஒலி ஓய்ந்து நின்று விட்டது. அவர் சக்தி தரிசனத்தின் போது, என் தலைமீது கையை வைத்தபொழுது, ஞானசக்தியால் என் உள்ளுணர்வு முழுவதையும் நிறைத்தது. அகவிழிப்பு முகாமில் ஸ்வாமிஜி தரும் சக்தி தரிசனத்தில் கிடைக்கும் சக்தியை இந்த உலகத்தில் வேறெந்த சக்தியுடனும் ஒப்பிட முடியாது!

- மா ஒவியானந்தா
ண்ண்
மூன்றாம் கண் விழிப்புணர்வின்
முன்றாவது கண் - உங்கள் உணர்வு இருக்கும் இடம்:
ஒவ்வொரு மனிதருக்குள்ளும் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் ஆற்றல், சக்தி வீற்றிருக்கும் இடம் - மூன்றாவது கண்.
எல்லா ஆன்மீகப் பாரம்பரியங்களும் இந்த மூன்றாவது கண்ணை விழிப்பிப்பதற்காக தொடர்ந்து செயலாற்றி வருகின்றன. மூன்றாவது கண்-வேத பாரம்பரியத்திற்கே உரிய சிறப்பாகும். அதனால்தான் எல்லா இந்துக் கடவுள்களும் மூன்றாவது கண்களுடனே வா்ணிக்கப்படுவார்கள்.
அதற்கு அர்த்தம், உங்கள் மூன்றாம் கண் திறக்கப்பட்டால்தான் நீங்களும் கடவுளாக முடியும். வேறெதனாலும் அல்ல. அந்த மூன்றாம் கண்ணை இயங்க வைக்க, இந்துக்கள் எவ்வளவோ நுட்பங்களை வகுத்து தந்துள்ளார்கள். தொடர்ந்து குங்குமப்பொட்டு வைத்து வருவதுகூட மூன்றாம் கண்ணை விழிக்க வைப்பதற்கு உதவும் ஓர் நுட்பம் என்பதை கண்டறிந்துள்ளனர்.
மூன்றாம் கண்ணை விழிக்க வைப்பது மூளையின் சூட்சும சக்திகளையும் விழிக்க வைக்கும். அப்போது புலன்களின் தொடர்பின்றி தன் எண்ணங்களை செயல்படுத்துதல் ( டெலிபதி), திடப்பொருட்களை காட்சிப்படுத்துதல் (மெட்டிரியலைசேஷன்) எவ்வித உதவியுமின்றி பொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல் (டெலிபோர்ட்டிங்) இன்னும் பல அதிக சக்திகளை உங்களுடைய அனுபவமாக்குகிறது. மூன்றாவது கண், பொருள் உலகத்திற்கும் ஆன்ம சக்திக்கும் பிரபஞ்ச வெளிக்கும் இடையில் ஒரு பாலமாக விளங்குகிறது. அது ஒரு 'இணையமையம்' போன்றது. பிரபஞ்சத்திற்கு வழிகாட்டும் ஒரு கதவாக இருக்கிறது. விழிப்படைந்த இந்த மூன்றாவது கண்ணின் வழியாக பிரபஞ்சத்தில் உங்களால் எதையும் பெறவும் முடியும், தரவும் முடியும். நீங்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு சக்திகள் விழிப்படையும்.
நீங்கள் இந்த உடலைவிட்டுச் செல்லும்போது, உங்கள் விழிப்புணர்வு இந்த மூன்றாம் கண்ணின் மீது இருந்தால், நீங்கள் ஞானம் அடைந்து விட முடியும் : அவ்வளவு சிறப்பு வாய்ந்தது மூன்றாம் கண்ணின் சக்தி. புனிதமான இந்த காசியில், அதன் கங்கை நதிக்கரையில், யார் உயிர் நீத்தாலும், அவர்கள் முக்தி பெறுவார்கள் என்பதும் உண்மையே. சம்ஸ்கிருதத்தில் வாரணாசி என்பதற்கு பொருள், வாரணம் - கண் புருவங்களுக்கு இடையில் , நாசி - மூக்கு சந்திக்கும் இடம் என்பதே ஆகும். நீங்கள் வாழும் ஓர் அவதாரத்தின் முன்னிலையில் இருக்கும்பொழுது, விழிப்பிக்கப்பட்ட ஒரு மூன்றாவது கண்ணின் எண்ணற்ற வெளிப்பாடுகளை காண்பீர்கள். உங்களுடைய மூன்றாவது கண் விழிப்படைவதற்கான நுட்பங்களும் இன்னர் அவேகனிங் தியான முகாமில் பயிற்றுவிக்கப்படுகின்றன.

உங்கள் வாக்கினை
உடலில் இருக்கும் இதயம், நுரையீரல், கல்லீரல் என இன்னும் பல உறுப்புகளைப் போன்று 'வாக்கு' என்ற ஒன்று ஒவ்வொருவரிடமும் இருக்கிறது. இது, தொண்டைக்கும் இதயத்திற்கும் இடையிலிருக்கும் பகுதியில், உங்கள் உடலும், மனமும் சந்திக்குமிடத்தில் அமைந்துள்ளது. இதன் துல்லியமான அமைப்பு ஒவ்வொரு மனிதருக்கும் வேறுபடும். வாக்கின் மூலப்பொருள் உங்கள் மனதிலிருந்து எடுக்கப்படுகிறது. ஆனால் அதன் இயக்கம் உடலின் களத்திலிருந்துதான் நிகழ்கிறது.
இதயம், நுரையீரல் போன்ற உறுப்புகள் சதை, தோல், தசை போன்ற ஸ்தூல பொருட்களாலேயே (Physical Matter) செய்யப்பட்டிருக்கின்றன. அதனால்தான் மேற்கு மருந்துகளினால் நோய்க்கான காரணத்தை சோதித்து இனம் கண்டறிய முடிகிறது. ஆனால் வாக்கு என்பது குட்சும பொருளான மனதை மூலபொருளாக கொண்டது. வாக்கை போன்று பல வகையான உறுப்புகள் மனதை மூலபொருளாக கொண்டு இருக்கின்றன. அதனால்தான் மேற்கு மருந்துகளினால் மனதை மூலபொருளாக கொண்ட நோய்க்கான காரணத்தை கண்டறிய முடிவதில்லை.
ஆழ்ந்து கேளுங்கள், அதில் முக்கியமான ஒன்றுதான் 'வாக்கு'. இது மனோதத்துவமோ கற்பனையோ அல்லது ஒரு மாயக்காட்சியோ அல்ல.
வாக்கு என்பதும் ஓர் முக்கியமான உறுப்பு. அதுவே நீங்கள் உதிர்க்கும் எல்லா வார்த்தைகளுக்கும் பொறுப்பாக இருக்கிறது. நீங்கள் உதிர்க்கின்ற ஒவ்வொரு சிரத்தையற்ற வார்த்தையும் உங்கள் வாக்கினை மாசுபடுத்துகிறது. நல்ல செய்தி என்னவென்றால், பொய்யால் வாக்கு உடனே மாசுபடுத்தப்பட்டாலும், பூரணத்துவம் செய்து அதை உடனே சுத்தமும் செய்துவிட முடியும்.
உங்கள் வாக்கு மாசுபட, ஒரே ஒரு பொய் போதும். ஆனாலும் அந்தப் பொய்யைப் பூரணத்துவம் செய்தால், வாக்கு உடனே குணமாகிடும். அது உடனே விடுதலை ஆகிவிடும் ! ஏனெனில், வார்த்தைகளே வாக்கு சக்தியை கொடுக்கின்றன, வார்த்தைகளே அந்த வாக்கிற்கு சக்தியை கொடுக்கின்றன.
Section 3
உடலில் தவறான சுவாசிக்கும் முறைகளால் உருவான வியாதிகளை குணப்படுத்த சரியான சுவாசிப்பு முறையை பயன்படுத்தி சரிசெய்கிறோம். தவறான ஆஸனங்களால் உருவான உடல் வலிகளை, சரியான ஆஸனங்கள் செய்து சரிசெய்கிறோம். அதைபோலவே எதிர்மறையான கெடுதல் விளைவிக்கும் வார்த்தைகளால் உருவாகும் உடல் நோய்களை சரியான வார்த்தைகளை கொண்டு சரிசெய்துவிட முடியும்.
ஆனால், ஒருங்குவித்தல் என்னும் ஆன்மீக சத்தியத்தைப் புரிந்துகொண்டு பயின்று வந்தால், வாக்கு தூய்மைப்படுத்தப்படும். உங்களை நோக்கியும், மற்றவர்களை நோக்கியும் சரியான வார்த்தைகளையே பயன்படுத்துவதாலும், எதிர்மரையான வார்க்கைகளை உபயோகிக்கதால் உருவான வியாகிகளை குணமாக்க முடியும். நன்கு புரிந்துகொள்ளுங்கள், உங்கள்
வாக்கினை நீங்கள் எவ்வளவுதான் மாசு செய்திருந்தாலும், அவற்றை தூய்மை செய்துவிட முடியும். அவற்றை இப்போதே பூரணத்துவம் செய்துவிட முடியும் ! ஏனெனில், கங்கை நதியில் எவ்வளவுதான் நீங்கள் குப்பைகளை கொட்டினாலும், தொடர்ந்து கங்கை ஓடிகொண்டே இருப்பதால், அந்த நீரோட்டத்தின் போக்கிலேயே எல்லாம் அடித்துச் செல்லப்பட்டு தூய்மையாகிவிடும். கங்கை ஒரு செயலால் மட்டும் மாசுப்படவில்லை. மேலும் மேலும் தொடர்ந்து மாசுபடுத்துவதால்தான் கங்கை மாசுபட்டதாவே இருக்கிறது என்பதைப் பரிந்துகொள்ளுளுங்கள்.
கங்கை ஒடிக்கொண்டே இருக்கிறது! கங்கையை தூய்மையாக்க நீங்கள் தொடர்ந்து மாசுப்படுத்திக் கொண்டிருப்பதை நிறுத்த வேண்டும். நாம் தொடர்ந்து மாசுப்படுத்திக் கொண்டேயிருப்பதனால்தான் கங்கை மாசுப்பட்டிருக்கிறது.
அதுபோல, இதுவரை மாசுபடுத்தப்பட்ட வாக்கினை தூய்மை செய்யமுடியும். உங்களுக்கு நீங்களே தரும் வார்த்தைகளையும் வாக்குறுதிகளையும், மற்றவர்களுக்கு தரும் வார்த்தைகளையும் வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வாழ்வதை ஒருங்குவித்தலில் வாழ்வது என்று சொல்வோம். தொடர்ந்து ஒருங்குவித்தலை கடைபிடித்தாலே போதும், வாக்கு சக்தி சித்திக்கும். இதிலிருந்துதான் 'வாக்கு சித்தி' என அழைக்கப்படும் விஞ்ஞானம் நிறுவப்பட்டுள்ளது. 'சித்தி' என்பது ஆன்மீகப் பயிற்சிகளால் அடையப்படும் ஒரு அசாதாரணமான சக்தி. உதாரணத்திற்கு, பொதுவாக நம்முடைய வாழ்க்கை முறையில் சுகாரத்திற்கு நாம் முக்கியத்துவம் தருகிறோம். ஒருநாளைக்கு இருவேளை வாய்த்துலக்குவது என்பது எப்படி ஒரு பழக்கமாக நாளடைவில் மாறியதோ அதேபோன்று சொல்லும் வார்த்தைகளிலும் சுத்தத்தை ஒரு பழக்கமாக எடுத்துவர நம்மால் இயலும். ஒருங்குவித்தலோடு நீங்கள் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் சொல்கின்ற வார்த்தைகளை நிறைவேற்றுங்கள். சொல்லும் எல்லா வார்த்தைகளையும் விழிப்போடு பாருங்கள். அதுதான் எதிர்மறை வார்த்தைகளை தூய்மைப்படுத்தும் நுட்பம்.
ஒருங்குவித்தலின் மூலமாக வார்த்தைகளின் சக்தி, வாக்கு சித்தி விழிப்பிக்கப்படுகிறது. தெய்வீக சத்தியத்தின் குரல்தான் வாக்குசித்தி. அது உங்கள் வார்த்தைகளை நிஜமாக்கும் திறனையும் உங்களுக்குக் கொடுத்து, மற்றவர்கள் பேசும் முன்னரே அவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள் என்பதை அறிந்துகொள்வதற்கான திறனையும் கொடுத்துவிடும். உங்களின் வார்த்தைகளின் மீதும், மற்றவர்கள் உங்களிடம் என்ன சொல்ல வேண்டும் என்பதின் மீதும் உங்களுக்கு ஒரு கட்டுப்பாடு கிடைக்கும். அதன்மூலம் உலகத்தின் மேல் ஒரு நேர்மறையான தாக்கத்தை உருவாக்குவதற்கான திறன் உங்களுக்குக் கிடைத்துவிடும். உங்கள் வார்த்தைகளுக்கு மிக்க முக்கியத்துவம் அளியுங்கள். அதைப்போலவே மற்றவர்களின் வார்த்தைகளுக்கும் மிக்க மதிப்பளியுங்கள் ! அகவிழிப்புணர்வு தியான முகாமில், பரமஹம்ஸரிடமிருந்து 'வாக்குசித்தி தீகைஷ பெற்றுக்கொள்ளுங்கள் !



புரிந்துகொள்ளுங்கள், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் விரும்பும் எதுவும், வாழ்க்கையில் உணரும் எதுவும் உங்கள் வாழ்க்கையில் பெற்றிருக்கும் எதுவும் ஒரு எண்ணத்திலிருந்தே துவங்குகிறது. ஒவ்வொன்றுமே உங்கள் எண்ணங்களில் இருந்துதான் துவங்குகிறது !
இன்று நீங்கள் விரும்பியது உங்களுக்குக் கிடைத்தால் அல்லது நீங்கள் விரும்பியதற்கு முற்றிலும் மாறாகக் கிடைத்தால், இவை அனைத்திற்கும் உங்கள் எண்ணங்களே பொறுப்பு.
அதை இவ்விதமாகப் பாருங்கள், உங்கள் எண்ணங்களை விதையாகவும், உங்கள் எண்ணும் விதத்தை மரமாகவும், உங்களுக்குக் கிடைக்கும் நிஜத்தை (பலனை) பழமாகவும் எண்ணிப் பாருங்கள். உங்கள் எண்ணங்களை மாற்றிக் கொண்டால் உங்கள் எண்ணும் விதத்தை மாற்ற முடியும். பழத்தின் பண்புகளையும், நிஜத்தையும் மாற்ற முடியும். நரகத்தைப் போன்றதொரு நிஜத்தை
நீங்கள் கொண்டிருப்பதாக நினைத்தால், அதுவும் நீங்கள் உருவாக்கியதுதான்.
இதற்கு மாறாக, நீங்கள் விரும்புகின்ற நிஜத்தை உருவாக்குங்கள். அதற்கான சக்தி உங்களிடமே இருக்கிறது.
உங்கள் வாழ்க்கையை சுற்றிலும் இருக்கும் குழப்பங்களுக்கு நீங்களே பொறுப்பு. ஆனால் அந்தக் குழப்பங்களையும் உருவாக்கியது நீங்கள்தான் என்பதால், நீங்கள் அதை எளிதில் மாற்றிவிட முடியும். நீங்கள் விரும்பியதை பெற்றிருந்தாலும், நீங்கள் விரும்பியது உங்களிடம் இல்லையென்றாலும் அனைத்துக்கும் உங்கள் எண்ணங்களே பொறுப்பு. உங்கள் எண்ணும் விதத்தை ஒருமுறை மாற்றினால், இயற்கையாகவே, நீங்கள் உருவாக்குகின்ற நிஜம் மாறும்.
மக்கள் அவர்கள் வாழ்க்கையில் அவர்களுடைய மனப்பாங்குகள் பயனளிக்கக் கூடியதாக இல்லாவிட்டாலும் கூட, அவர்கள் உருவாக்கிய அந்தப் பழைய மனப்பாங்குகளுடனே தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். தனியாக முயற்சி செய்து அந்த பழைய மனப்பாங்குகளை விட்டுவிடுவதற்கு நீண்ட காலமாகும். வாழும் குருவின் வழிநடத்துதல்படி நீங்களே உங்கள் எதிர்காலத்தை மாற்றியெழுதும் போதுதான், அந்தப் பழைய மனப்பாங்குகள், உங்கள் எதிர்காலத்தை விட்டு உடனடியாக அகலும்.
ஆழ்ந்து கேளுங்கள் ! உங்கள் எதிர்காலம் காலியாக இருக்க முடியாது. ஒன்று நீங்கள் உங்கள் எதிர்காலத்தை உங்கள் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் அல்லது ஏற்கனவே எழுதிய எதிர்காலம் வந்து நிறைத்துவிடும்.
நீங்கள் விழித்துக்கொண்டு, புதிய எதிர்காலத்தை எழுதி, கட்டி முடித்து, அதை மேம்படுத்தி உங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவில்லையென்றால், உங்கள் கடந்த காலம் தானாகவே அந்த இடத்தை ஆக்ரமித்துக் கொண்டு, நீங்கள் உருவாக்கிய அந்தக் குழப்பங்களை மேலும் மேலும் பெருக்கிக் கொண்டே போகும்.
இந்த உண்மைக்கு விழித்துக்கொண்டு, உங்கள் வாழ்க்கையை உங்கள் கட்டுப்பாட்டின் கீழ் எடுத்து வருவதைத்தான் அகவிழிப்பு என்று அழைக்கிறோம். உங்கள் எதிர்காலத்தை திருத்தி எழுதுவது உங்கள் கை களில்தான் இருக்கிறது. 21 நாட்களிலேயே அதை எப்படிச் செய்வது என்பதை நீங்கள் கற்றுக்கொள்ள முடியும். எதை எழுதுவது ? எப்படி நிஜமாக்குவது என்பதை கற்றுக்கொள்ளுங்கள். எல்லா குழப்பங்களையும் உங்களால் நிரந்தரமாக சுத்தம் செய்து விட முடியும் 1


தெய்வீகம் உங்களின் கூட்டுப்படைப்பாளர் ஆவதற்கு அனுமதியுங்கள்
கெய்வீகம் உங்கள அனுமதிக்காக காத்திருக்கிறது !
இன்னர் அவேக்கனிங் (IA) செய்ய நீங்கள் முடிவெடுத்து, விண்ணப்பப் படிவத்தில் கையெழுத்திட்டவுடனேயே உணர்வுறவு (Entanglement) தொடங்கிவிடுகிறது. நிகழ்ச்சி க்கு வருகை தந்து பதிவு செய்தவுடன், பயிற்சியானது (Entrainment) தொடங்கிவிடுகிறது. அதன்பின், என்னை காணும் முதல் நாளிலிருந்து, தருணத்திலிருந்து ஜீவன் முக்தி (Enlightenment) தொடங்குகிறது!
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்களின் எண்ணங்கள் ஒன்றுபடும்போது என்டான்ங்கிள்மென்ட் எனும் உணர்வு தொடர்பு உண்டாகிறது. இரண்டு போ் ஒரே கருத்திற்காக ஒருங்கிணைவது என்ட்ரைன்மென்ட் எனும் பயிற்சி. இரண்டு போர் தம்முடைய கருத்துகளை கடந்து ஒருங்கிணைவது ஜீவன் முக்தி. நாம் எண்ண ஒட்டமில்லாத நிலையில் இருக்கும்பொழுது, ஜீவன் முக்தரோடு உணர்வால் ஒருங்கிணைந்து இருப்போம்.
புரிந்துகொள்ளுங்கள், இன்னர் அவேக்கனிங் தியான முகாமில் கலந்துகொள்ளவேண்டும் என நீங்கள் முடிவெடுக்கும்போதே உங்கள் உணர்வோடு தொடர்பு இணைக்கப்படுகிறது-அக்கணமே இணைப்பு துவங்குகிறது. அதன்பிறகு அந்த விருப்பத்தை உண்மையாக்குவது எனது கடமை. தமிழில் அழகான பாடல் ஒன்றுள்ளது-'அவனருளாலே அவன் தாள் வணங்கி' என்பதே அது. அவரது அருள் இல்லையென்றால் நீங்கள் அவருடனான தொடர்பை, இணைப்பை உணர முடியாது. அருள் இல்லையென்றால் இன்னர் அவேக்கனிங் செய்யும் எண்ணமே உங்களுக்கு தோன்றி இருக்காது. அதனால்,
இன்னர் அவகேனிங் செய்யும் எண்ணம் தோன்றிய அக்கணமே என் ஆசிகள் உங்களுக்கு உரித்தாகிவிட்டது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
விருப்பப்படிவம் பூர்த்தி செய்து தந்தவுடன், உங்கள் வாழ்க்கையில் நுழைவதற்கும், உங்கள் உணர்வு நிலையை மாற்றியமைப்பதற்கும், தடைகளை விலக்குவதற்கும், இன்னர் அவகேனிங் செய்வதற்கு அனுகூலமான எல்லா வாய்ப்புகளை திறப்பதற்கும் எனக்கு நீங்கள் ஆதாரபூர்வமாக அனுமதி தருகிறீர்கள். விருப்பப்படிவம் அதற்கான அனுமதியை எனக்கு கொடுக்கிறது.
எனது அருள் எப்போதும் எல்லா திசைகளிலும் பாய்ந்து கொண்டு இருக்கிறது. ஆனால் அருள் எப்போதுமே நுழைவதற்கு வெட்கப்படும். அது, 'நான் உள்ளே நுழையலாமா ? நான் தொல்லை தருவதாக அவர் நினைப்பாரா ? அவர் தனிமையை அவமதித்ததாக நினைப்பாரா? ? என்று தயங்கும்.
தயவு செய்து புரிந்துகொள்ளுளுங்கள், நிறைய தருணத்தில் கடவுள் உதவிசெய்ய தயாராக உள்ளார். ஆனால் நீ ங்கள், 'நீ எப்படி உள்ளே நுழையலாம், எதற்காக உள்ளே நுழைந்தாய் ?' என திட்டுவீர்களோ என அஞ்சுகிறார். பலமுறை இதுபோன்று நிகழும்போது, நீங்கள் அவரிடம் 'செத்தாலும் சாவேனே ஒழிய உன் உதவியை ஏற்றுக்கொள்ள மாட்டேன் ' என்று கூறி இருக்கிறீர்கள்.
அதனால் அவர் காத்திருக்கிறார். நடுநடுவே, 'நான் உள்ளே

Section 4
உள்ளே வரலாமா?' எனக்கேட்கிறார். விருப்பப்படிவத்தில் நீங்கள் கையெழுத்திடும்போது, நீங்கள் குருவின் அருள் உள்ளே வர அனுமதி கொடுக்கிறீர்கள்! முடிவாக, அருள் பிரவாகமாக உருவெடுத்து உள்ளே வர முடிந்ததால், நிலைமையை மாற்றி அமைத்து, எல்லா ஏற்பாடுகளையும் செய்து, எல்லா வழிகளையும் அவரால் திறந்து விட முடிகிறது.
அவேகனிங் சாத்தியமாவதற்கு நான் இணைந்து உதவிசெய்ய தயாராக இருக்கிறேன். இன்னர் அவேகனிங் எனக்கு அவசியம் என முடிவு செய்து விருப்பப்படிவத்தை நிரப்பினீர்களேயானால், நீங்கள் இன்னா் அவேகனிங் தியான முகாமில் கலந்துகொள்வதற்கு உதவும் ஒரு கூட்டு படைப்பாளராக இருப்பேன்.
ஆன்மீக மனமாற்றத்தை தள்ளிப்போடாதீர்கள். அந்த முடிவு இப்போதே எடுக்கப்பட வேண்டும்.
விருப்பப்படிவத்தை நிரப்புங்கள். உங்கள் இன்னர்

நான் சிலநாட்களுக்கு முன் ஒரு பிரசித்திபெற்ற சிவன் கோயிலுக்கு சென்றிருந்தபோது பெற்ற எனது அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விழைகின்றேன். நீலகண்ட மகாதேவ் (இந்தியாவிலுள்ள ரிஷிகேஷ் பக்கத்தில் உள்ள)ஆலயத்திற்கு, எங்கு மகாதேவன் ஆலகால விஷத்தை உண்டு இந்த அண்டவெளியைக்காப்பாற்றினாரோ, அந்த ஆலயத்திற்குச் சென்றோம். ஈரோமு உலகத்தைக்காக்க அவர் ஆலகால விஷத்தை தானே உண்டார். அது மிகப்பெரிய கோயில் என்பதால் அந்த நகரம் அக்கோயிலைச்சுற்றி அமைந்துள்ளது.
கோயிலை பார்த்தபோது, ' இவ்வளவு பெரிய கோயிலின் விக்ரகம் ஏன் இவ்வளவு சிறியதாக இருக்கிறது ? வேண்டுமென்றே இப்படி அமைத்திருக்கிறார்களா ? என நான் யோசிக்க ஆரம்பித்தேன். அந்நகரமே நீலகண்டம் என அழைக்கப்படுகிறது. ஈசனின் விக்ரகம் ஆறிலிருந்து ஒன்பதே அங்குல அளவுள்ளது. ஆனால் அந்த அமைப்பு தனித்துவத்தோடு இருந்தது. பக்தியை பலப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது! சிவராத்திரி போன்ற விசேஷ நாட்களில் ஐந்து லக்ஷம் பக்தர்கள் ஈசனை தரிசிக்க வருகிறார்கள்.
யோசித்துப்பார்த்து ஆச்சரியமடைந்தேன். மிகப்பெரிய கோயில்களில் எல்லாம் மிகச்சிறிய மூர்த்தியை வைப்பதன் மூலம் நம் முன்னோர்கள் என்ன தகவலைக் கூற நினைத்தார்கள் ? என்ன தகவலைத்தர நினைத்தார்கள் ?
தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள், நீங்கள் கோயிலைச்சென்று அடையும் முன், உங்களுக்குள் பிரார்த்தனை உணர்வு உண்டாகும், உங்களில் பக்திப் பிரவாகமாகும், உங்களுக்குள் அன்பான உணர்ச்சி கள் தோன்றும் மற்றும் உங்களுக்குள் நிறைவுத்தன்மை உணர்வாக பெருகும். உங்களுக்குள் உருவாகும் உணர்விற்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. உங்களுக்குள் உயிர்ப்போடு உருவாகும் உணர்வே 'மூர்த்தி' (கடவுள் விக்ரகம்). இதைதான் நம்மிடம் நம் முன்னோர்கள் உணர்த்த விரும்புகிறார்கள். இதன்மூலம் அவர்கள் தெளிவுறுத்த விரும்புவது என்னவென்றால், 'வெளியில் பெரிதாக எதையும் எதிர்பாராதீர்கள். வெளியில் இருப்பதை பார்க்கும்பொழுது நீங்கள் உங்களுக்குள் திரும்பி உள்ளுக்குள் இருக்கும் உணர்வை பாருங்கள் என்று ஞாபகப்படுத்துகிறார்கள். '
மூர்த்தி மிகப்பெரியதாக இருந்தால், அந்த வெளித்தோற்றத்தை மட்டுமே கூர்ந்து கவனிப்பீர்கள். உங்கள் முழுக்கவனமும் அந்த மூர்த்தியின் மீதுதான் இருக்கும். விக்ரகம் மிகச்சிறியதாக, ஒரு வடிவுமில்லாமல் அதே சமயம் கணக்கிலடங்கா நகை, கண்களை ஈர்க்கும் துணிமணிகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கும்போது, இந்த வடிவமைப்பு மூலம் இதைத்தாண்டிய ஒன்றையே நம்மிடமிருந்து கேட்கிறார்கள் என்பது இயல்பாக புரியவரும்.
நீலகண்ட மகாதேவர் ஆலய மூலவர் விக்ரகத்தை முழுமையாக ஒரு கையால் மூடி விட முடியும். எங்கே இருக்கிறது விக்ரகம் என்று உங்களால் கண்டு பிடிக்க இயலாது. பின் அது என்ன ? எதற்காக நாம் புராதன பெரிய கோயில்களுக்கு பயணம் செல்கிறோம் ? புரிந்துகொள்ளுங்கள், நீங்கள் அங்கே சென்றடையும்போது,
உங்கள் மனதிற்குள் உருவாகும் உணர்வே 'விக்ரகம்'. அது கான் கடவுள் !
உலகம் முழுவதிலும் இருக்கும் எல்லா மனிதர்களும் ஒரே மாதிரியானவர்கள்தான் என்பதை முடிவாக அந்த நாளின் முடிவில் புரிந்துகொண்டேன். எல்லாமே விழிப்புணர்வின் உருவகங்கள். அந்த உணர்வே மனித உடலாகி, அதை பயன்படுத்திக்கொள்கிறது. நாம் ஆசைப்பட்டதை உருவாக்கும் திறன் நம் உணர்விற்கு உண்டு. நீங்கள் தற்பொழுது சோர்வாக உணர்ந்தாலோ, ஒய்வு பெற்றாலோ, வயதாகிவிட்டாலோ, இளமை மிகுந்தாலோ , வாழ்க்கையில் அடியெடுத்து வைக்க ஆயத்தமாய் இருந்தாலோ, நீங்கள்தான் அண்டவெளியில் இருக்கும் பிரம்மாண்டம் என்ற சக்தியின், அந்த உணர்வின் உருவம்.
தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள், நிகழ்வுகளைப்பற்றிய நினைவு மறந்து போவதானால் அந்த உண்மையை உங்களிடமிருந்து பிரித்தெடுத்துச் செல்ல முடியாது. நீங்கள் எல்லையற்ற பரம்பொருளுடன் இரண்டற கலந்ததை மறந்துபோனதால், ஒர்மை நிலை உங்களிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டது என அர்த்தமில்லை. நீங்கள் அதை மறந்ததால் அந்த மறதியிலேயே வாழவிடப்படுகிறீர்கள்-நீங்கள் தான் அதை உருவாக்கியது.
எந்த ஜாதி, இனம், ஆண்/பெண் பாகுபாடு, மாநிலம், தேசம், பூர்வீகம் அல்லது கல்வியறிவு உள்ளவராக இருந்தாலும் உங்களின் உள் மனது உள்ளுணர்வுடன் அத்வைத நிலையில், நீங்கள் விரும்பியதை அடையும் வல்லமை பொருந்தியதாக உள்ளது. உங்கள் உள்வுணர்விற்கு நீங்கள் விரும்பியதை செய்து முடிக்கும் வலிமையும் அறியும் உள்ளது.
தைரியமாக இருங்கள், பலமடையுங்கள்! வலிமையான உணர்வை உங்களுக்குள் உருவாக்கிக்கொண்டே இருங்கள். உங்களுக்குள் நீங்கள் உருவாக்கும் வலிமையான உணர்வுதான் உங்கள் பலம். உணர்வு தான் சொத்து. சரியான, வலிமை வாய்ந்த உணர்வை எந்த துறையில் நீங்கள் உருவாக்கினாலும் அந்த உணர்வுதான் உங்கள் வாழ்க்கையின் உண்மையான சொத்து என்பதை மறவாதீர்கள்.
பரமஹம்ஸர் நீலகண்ட மகாதேவருக்கு ஆரத்தி காண்பித்தபோது எடுத்தது


ஹரித்வாரின் மகிமை
ஹரித்வார் - மகாதேவரை காணும் நுழைவாசல். இந்த நகரத்தை கங்காத்வார் மற்றும் ஹரித்வார் என்றும் அழைப்பர்.
நம்முடைய பாரதத்தில் ரிஷிகள் முற்றும் துறந்தவர்களாக, ஆசைகளுக்கு அப்பாற்பட்டு இருந்ததால் நம்மிடம் முன்பும் இப்போதும் எப்போதும் மிக நல்லவைகளே இருந்தன. அரசாங்கத்திடமோ, படைபட்டாளத்திடமோ மற்றும் பண வங்கிகளிடமோ எந்த விதமான தொடர்பும் அவர்களுக்கு இருந்ததில்லை. அவர்கள் வைஷ்யா்களும் இல்லை; க்ஷத்ரியர்களும் இல்லை. இந்த அடையாளத்தன்மைகள் பிறந்த குலத்தினால் அவர்களுக்கு வரவில்லை. குணத்தால் வந்தது, அவர்களது மனநிலையாலும் முன் செய்த நல்வினைகளாலும் வந்ததே. அவர்கள் வைஷ்யர்களோ, க்ஷத்ரியர்களோ, குத்திரர்களோ இல்லை; அவர்கள் குணத்தால்-உணர்வால் சுத்த பிராமணர்களே! அவர்கள் ஜீவன் முக்தா்கள், முக்தியில் வாழும் ஜீவன்கள். அவர்கள் மிக உயர்ந்த ஜீவன் முக்த உள்ளுணர்தலை வாழ்ந்து கொண்டிருந்தனர்.
இந்த ரிஷிகள்தான் ஹிந்து தா்மத்தின் மூலக்கூறாக இருந்தவர்கள். அவர்களைச்சுற்றி அடுக்கடுக்காக நாகரீகம் வளர்ந்தது. அவர்கள் மகாதேவரிடம் செல்லும் வாசல் என்றழைக்கப்படும் ஹரித்துவாரின் மூலக்கூறாக விளங்கினார்கள்- சரியாக இந்த இடத்தில் தான் ஞானமடைவதற்கான இடமும் மூலக்கூறும் உருவாக்கப்பட்டது.
ூபால சன்யாச பரம்பரையும்


ஹரித்வாரில் பாலசன்யாச பாரம்பரியம் உள்ளது. பாலக பருவத்தினருக்கு கிரம பிராம்மச்சரியம் எனப்படும் பயிற்சி பாய கொடுப்படுவது போன்றதல்ல இது. ரியம் விரஜா வேராமிம் செய்து சேனியாச்சேமே ரப கொடுக்கப்படுகிறது. ஹரித்வார் ஹிந்து சமயத்தின் தலை நகரமாகும். சன்யாச தீட்சை தரும் ஹிந்து நகரம் இது. எல்லா அகாடாவிலும் பாலசன்யாசிகள் உள்ளனர். முக்கியமான பெரிய 55 ஆசிரிமங்களிலும் பர்ல சீன்யாசிகள் உள்ளனர். ஆனால் அவாகள் கிரம் பிரமச்சீரியம், தைஷ்டியூரினா பிரமச்ச்சரிய பயிற்சிக்கு பிறகு சன்யாசம் தருவதில்லை; நேரடியாக சன்யாசமே கொடுத்து விடுகிறார்கள்! நான் பிரீலி சீனீயாசி களின் மனநிலை பற்றி ஆய்வு நடத்தினேன். ஐந்து, திறுவியதில் சன்யாசம் மேற்கொண்ட சில் குழந்தைகளைப்பற்றி ஆய்வு பால மேற்கொண்டு வருகிறேன். அவர்களுக்கு தற்பொழுது டீனேஜ் என்று கருதப்படும் விபிதுதிரன் ஆகும். அவாகளில் எவரும் தான் சன்யாசி ஆனதைப் பற்றிய வருத்தம் ஏதும் இருப்பதாகத் தெரிவிக்கவில்லை. அவர்கள் சந்தோஷ்மான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்! அவர்களின் உள் மனதை ஆராய்ந்தபோது, அவர்கள் அனைவிருமே வெற்றிகரமான சன்யாசிகளாக இருப்பதை உணர் முடிந்தது. சிறு வயதிலேயே சன்யாசம் மேற்கொள்ளும்போது, சன்யாச உணர்வுநிலையில் வாழும்போது, வெற்றிகரமான சந்நியாசி ஆகி விடுகிறார்கள்! வயதிலேயே சனயாரிம்ஹ்மீஸ் நிதயானந்தா அ சன்யாச உணர்வுநிலை வெற்றிகரமான சந்நியாசி ஆகி விடுகிறார்கள் பரமஹம்ஸ நிக்யானந்து

இந்தியாவின் முக்கிய நதிகளில் ஒன்றான கங்கை, தொன்று தொட்டு ஒடிக்கொண்டும், மிகப்பழமையான பூகோள, சரித்திர மற்றும் சமய முக்கியத்துவத்தை தன்னகத்தே கொண்டும் இருக்கிறது. இந்த பிரதேசத்திலுள்ள மக்களுக்கு வெறும் நதியாக மட்டுமின்றி, மக்களின் வாழ்க்கை ஆதாரமாகவும் உள்ளது. கங்கையைச்சுற்றி வாழ்பவர்கள் அவளை கங்கா மையா (கங்கை அம்மா) என பாசத்துடன் அழைத்து, போற்றி, புகழ்ந்து வணங்கி வருகிறார்கள். உத்தராகண்டத்தில் கங்காதேவியை உபாசிக்க கோயில்கள் பலவுள்ளன. கங்கையின் புனிதத்தன்மையுள்ள நீரை (கங்கா ஜலம்) தொட்டவுடனே ஆன்மீகத்தேடல் உள்ளவர்கள் பூரணத்தவமடைந்து, தங்களது பாவங்களைக்கழுவி முழுமைத்தன்மையடைந்து விடுகிறார்கள்.
கங்கையின் அவதாரனம்:
பூகோள ரீதியாகபார்த்தால், கங்கோத்ரி பனிமலையிலிருந்து கங்கை உருவாகிறது. கங்கோத்ரியில் கோமுகம் (பசுவின்
முகம்) எனும் இடத்திலிருந்து கங்கை தன் ஓட்டத்தை துவங்குகிறாள். கங்கை பர்வத ராஜா-ஹிமவத்தின் மகள்.
Section 5
ராஜா சாகராவின் மகன்கள் கபில மகரிஷியின் தவத்திற்கு இடையூறு விளைவித்ததால் அவர்கள் சாம்பலாகிப்போனார்கள். தன் மகன்களின் பாவத்தைபோக்க கங்கையின் நீரால் அவர்களது சாம்பலை கழுவ ராஜா சாகரா விரும்பினார். ராஜா சாகராவின் ஏழாவது வழித்தோன்றலான ராஜா பகீரதன் கங்கையை பூமிக்கு கொண்டுவர தீவிரமாக தவம் செய்தான். அதன் பலனாக கங்கை அன்னை பூமிக்கு வர முடிவெடுத்தாள். ஆனால், துடிப்புமிக்க கங்கையின் வேகம் உலகத்தையே அழித்துவிடும் அபாயம் இருந்தது. எனவே, எல்லாம் வல்ல இறைவனான ஈசன் கீழே இறங்கி ஓடிய கங்கையை தன் ஜடாமுடியில் தாங்கிப்பிடித்தார். பூமி தாங்கும் கே வகத்தில் செல்லும் வகையில் மெதுவாக அமைதியான நதியாக ஆக்கினார்.