1. சுந்தரர்
1. சுந்தரர்
க்ரியை: பிரபஞ்ச பேரருளான, அகண்ட சச்சிதானந்த பரம்பொருளான சதாசி வனோடு பக்தியில் சங்கமித்து, பக்தியால் பொங்கும் ஆனந்தத்தை அனுபவித்து, சிவஞானத்தால் பொங்கிப் பெருகும் சிவபோதத்தில் சிந்தை கரைந்து நிறைந்து உறைந்து கிடந்து வாழும் வாழ்க்கைமுறைதான் க்ரியை.
சுந்தரமூர்த்திப் பெருமானைப்போல க்ரியையின் சக்தியை, பக்தியின் சக்தியை வெளிப்படுத்திய வேறொரு பக்தரை, ஞானபுருஷரை சைவம் மட்டுமல்ல
வேறு எந்த சம்பிரதாயமும் காட்ட முடியாது.
பகவான் பக்தனுக்காக இறங்கிவந்து சேவை செய்திருப்பது பல சம்பிரதாயங்களிலும் நிகழ்ந்திருக்கின்றது. கிருஷ்ணனே வந்து அர்ஜுனனுக்குத் தேரோட்டியாய் இருந்ததும், பெருமாட்டியே நேரடியாய் வந்து வள்ளலாருக்கு சோறு சுமந்ததும் நிகழ்ந்திருக்கின்றன.
ஆனால் சுந்தரர் வாழ்க்கையில் பெருமான் வந்து பக்தனுக்காக செய்த சேவைகள் ஒரு சிறப்புடையவை.
காரணம் என்னவென்றால் ... கிருஷ்ண பரமாத்மா அர்ஜுனனைப் பார்த்து, ''என்னிடம் சரணடைந்து, எல்லாவற்றையும் என்னிடம் ஒப்படைத்துவிட்டு, போர் செய்,' என்று சொன்னவுடன், அந்தக் கட்டளைக்கு அர்ஜுனன் அடிபணிந்தான். அவருக்கு அர்ஜுனன் உண்மையாக இருந்ததனால், ஜீவன் ஜீவாத்மா பரமாத்மாவிற்கு உண்மையோடு இருப்பதனால், பரமாத்மா ஜீவாத்மாவிற்கு சேவை செய்தது உண்மை.
ஜீவன் சிவனுக்குப் பொய்த்தாலும், சிவன் ஜீவனுக்குப் பொய்ப்பதில்லை
ஆனால் இங்கு, தம்பிரான்தோழர் வன்தொண்டர் அவருடைய வாழ்க்கையைப் பார்க்கோமானால், மோகத்தில்தான் பெருமானோடான அவர் காதலே துவங்குது. முதலில் பெருமானைப் பார்த்தவுடன் அவர் சொன்ன வார்த்தையே 'பித்தா .. '
பெருமானே சொல்கிறார், "வன்மையான வார்த்தைகளை என்னை நோக்கிச் சொன்னதனால், நீ 'வன்தொண்டன்' எனப்படுவாய் என்று.
தம்பிரான்தோழர் பெருமானுக்கு தோழனாய் இருந்து, பல இடங்களிலே பெருமானுடைய உபதேசமான ஆகமத்தை வாழவேண்டிய ஆதிசைவ குலத்தில் பிறந்தும், ஆகமத்திற்கு அப்பாற்பட்டு, ஜீவன் சிவனுக்குப் பொய்த்தாலும், சிவன் ஜீவனுக்குப் பொய்க்காமல் இருக்கின்ற சத்தியத்தை, பக்தியின் சக்தியை சுந்தரமூர்த்தி சுவாமிகளின் வாழ்க்கையில் மாத்திரம்தான் பார்க்க முடியும்.
சைவத்தால் மட்டும்தான் பக்தியின் சக்தியை இத்துணை அழகாக விளக்க இயலும். சைவம் அன்றி வேறொரு சம்பிரதாயத்தினாலும், சமயத்தினாலும் இதைச் சொல்ல இயலுமா என்று நிச்சயம் நாம் நினைக்க முடியாது. ஏனென்றால் வேறு ஒரு இடத்திலும் காணாத ஒன்றை சைவத்தில் நாம் கண்டோம்.
சுந்தரப்பெருமான், பெருமானுக்கே கைக்கலகு தாங்கும் திருப்பணி செய்பவர். கைக்கலகு தாங்கும் சேவையென்றால் 24 மணிநேரம் கூடவே இருந்தாக வேண்டும். ஏனென்றால் எழுந்தவுடன் திருநீற பூசிக்கொள்வார் பெருமான். வருபவர்களுக்கெல்லாம் அளிப்பார். தூங்கும்முன் பூசிக்கொள்வார், தூங்கி யெழுந்தவுடன் பூசிக்கொள்வார், அதனால் வாசலிலேயே நிற்க வேண்டும், எப்போதும் உடனிருக்க வேண்டும்.
இறைவனுக்கு அருகாமையில் 'திருநீற்று ஆலயம்' என்று சொல்லப்படும் திருநீற்று பெட்டகமான கைக்கலகு தாங்கும் திருப்பணி செய்து வரும் சாமீப்ய முக்தி பெற்ற அடியார், சுந்தரப்பெருமான்.
நான்கு நிலை முக்தி நிலை :
சாலோக்ய முக்தி - திருக்கயிலாயத்திலே இடம் கிடைத்து அங்கே வாழ்வது. சாமீப்ய முக்தி - அருகாமையில் இருந்து பணி செய்கின்ற புண்ணியம். சாரூப்ப முக்தி - அவருடைய ரூபத்திலேயே வாழ்ந்து அவருடைய நிலையிலேயே இருப்பவர்கள். ஏகாதச ருத்ரா்கள், அஷ்ட பைரவர்கள் -
இவர்களெல்லாம் சாரூப்ப முக்தி பெற்றவர்கள். கோவிலில் இருக்கும் துவார பாலகர்கள் பெருமானைப்போலவே சடா மகுடந்தாங்கி, நான்கு கரங்களோடு மான் மழுவேந்தி இருப்பார்கள்.
சாயுஜ்யம் - பெருமானோடேயே இரண்டறக் கலந்து முக்தியடையும் நிலை. மாணிக்கவாசகப் பெருமானும், திருஞானசம்பந்தப் பெருமானும் சாயுஜ்ய முக்தர்கள்.
இந்த நான்கு நிலை முக்தியிலே, சாமீப்ய முக்தி நிலையில், அருகாமையில் இருந்து, சுந்தரமூர்த்திபெருமான்.
சாயுஜ்யமான 'ஜீவன் முக்தி' அமையும் வரை, எது வேண்டுமானாலும் நம்மைக் கீழ் இறக்கலாம்
ஒரு நாள் காலை, பெருமான் திருமுடியிலே மலர் சூட்டுவதற்காக, கைலாயத்தின் நந்தவனத்திலே மலர் பறிக்கச்சென்றார். சென்ற இடத்தில், மலர் பறிக்க வந்திருந்த தேவியாரின் இரண்டு சேடிமார்கள் அழகில் இவர் மயங்கினார், இவருடைய அழகில் அவர்கள் மயங்கினார்கள்.
நாதனின் சந்நிதிக்கு வந்த பொழுது, அவர் பறித்து வந்த மலரிலேயே சுந்தரனின் எண்ணக்கையும் கண்டார் எம்பெருமான். கொடும் பொருளில் தொட்டவுடன் எண்ணமும் ஒட்டியிருக்கும். மலரைக் கண்டதும், அதில் மலர்ந்த இரண்டு மங்கையரின் முகத்தையும் கண்டார் எம்பெருமான்.
கண்டதும் கேட்டார், சுந்தரா 'இருவரையும் கண்டாயா ?'
நாணி குறுகி வெட்கத்தோடு தலை கவிழ்ந்து தம்பிரான் தோழன் நிற்க, கைலை நாதனோ, ''அஞ்சாதே அப்பனே! செல்வாய் பூவுலகிற்கு, சிறப்பொடு இருபெண்ணோடு வாழ்ந்து, கொண்ட மோகம் தணிந்த பின் மீண்டும் வருவாய்,'' என்றார்.
கேட்டதும், உளமெலாம் நடுநடுங்கினார் சுந்தரர். 'ஐயகோ, ஒரு பெண்ணின் மோகம், பெண்ணின் எண்ணம், சாமீப்ய முக்தியிலிருக்கும் என்னைத் தள்ளி வைக்கும் சக்தி வாய்ந்ததா ? '
இரண்டற இறைவனோடு ஒன்றிவிடும் சாயுஜ்யமான 'ஜீவன் முக்தி' அமையும்
வரை, எது வேண்டுமானாலும் நம்மைக் கீழ் இறக்கலாம் என்பதற்கு சாட்சி, இந்த நிகழ்வு.
எப்படியானாலும் சரி, ஒரு வினாடி மயங்கினார் என்பது உண்மைதான், ஆனால், உளம் முழுவதும் இறைவன் பாகமல்லவா? அதனால், நடுநடுங்கினாலும், வரமொன்று கேட்கிறார், ''அப்பனே! பிறவாமை வேண்டியே வந்தேன்; பிறந்தாலும், உன்னை மறவாமை வேண்டும். அங்கு செல்லும் பொழுதும், ஆபத்தில் நீயே வந்து, நானே மறுத்தாலும் ... நீயே வந்து என்னை தடுத்தாட்கொண்டிடல் வேண்டும், '' என்ற வரம் கேட்டு வாங்கிக்கொள்கிறார்.
திருநாவுக்கரசா்கூட ''பிறவாமை, பிறந்தாலும் உனை மறவாமை வேண்டும்'' - என்றுதான் கேட்டாரே தவிர, சுந்தரமூர்த்திப் பெருமான், நான் உனை மறந்தாலும், அதுமட்டுமல்ல மறுத்தாலும் எனைத் தடுத்தாட்கொள்ள வேண்டும் என்ற வரம் கொடு என்ற வரம் கேட்டுப் பெற்றுக்கொள்கிறார்.
இதுதான் பெரு வரம்!
நான் உனை மறந்தாலும் எனை ஆட்கொள்ள வேண்டும் என்று கேட்டால் அது திருவரம், நான் உனை மறுத்தாலும் எனை ஆட்கொள்ள வேண்டும் என்று கேட்டால் அது பெருவரம்.
அப்பனும், ''ஆகட்டும் அப்படியே,'' என்று அருளி விடுகின்றார். தம்பிரான் தோழனல்லவா ? பக்கத்தில் இருந்து பணிவிடை செய்தவர், அவன் கருணையின் ஆழம் தெரிந்தவர். பெருமான் கருணையின் ஆழம் தெரிந்தவர்களுக்கே தவறு செய்யும் தைரியம் வந்துவிடுகின்றது. எல்லா இடத்திலும் நடக்கின்ற ஒரு நிகழ்ச்சி. ஏனென்றால் எப்படியும் அவன் ஏற்றுக்கொள்வான் என்ற நம்பிக்கை.
என்னிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுள் இதுவும் ஒன்று: இறைவனையே நேரில் தரிசித்த சுந்தரர் ஏன் சாதாரண ஆசைகளில் வீழ்ந்தார் ?
வலி சுகத்தில் உழல்கின்ற மனம் பக்தியை எடை போடுவது சாத்தியமற்றது
தா்க்க ரீதியான கேள்வி, ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், சுந்தரரை போன்றதொரு இறைவனோடேயே விளையாடித்திரியும் ஒருவருடைய வாழ்க்கையை, நம்முடைய சாதாரண மிகவும் தாழ்ந்த மனத்தைக் கொண்டு. அது சொல்லுகின்ற சரி, தவறுகளை வைத்துக்கொண்டு, எடை போடுவது சாத்தியம் இல்லை, அப்படிச் செய்வது சரியானதும் அல்ல. அவர் இருக்கின்ற உணர்வு நிலை வேறு, நாம் இருக்கின்ற உணர்வு நிலை வேறு.
கருத்துச் சுதந்திரம் என்ற பெயராலேயே ஒரு சில முட்டாள்கள், ஞான சம்பந்தப்பெருந்தகையை மிகுந்த அவதூறு செய்து எழுதியிருக்கும் சில நாவல்கள், புத்தகங்கள், கட்டுரைகள் அவரவர்கள் மனத்திலிருக்கும் வக்கிரத்தை வெளிப்படுத்தியிருக்கின்றனவே தவிர, ஞானசம்பந்தர் போன்றதொரு பெரிய மகானை நம்முடைய சாதாரண மனம் சார்ந்து மதிப்பிடவோ, ஒப்பிடவோ இயலவே இயலாது.
அதே போல், சுந்தரமூர்த்தி பெருமானின் வாழ்க்கையையும் சாதாரண லாப நஷ்டங்களில், நன்மை தீமைகளில், கொடுக்கல் வாங்கலில், வலி சுகத்தில், துக்கம் ஆனந்தத்தில் உழல்கின்ற மனம் எடை போட இயலாது. சாத்தியமும் இல்லாதது.
விதா்க்கத்தால், ஏற்கெனவே பக்தி இருப்பதனால், சந்தேகம் மட்டும் தெளிய வேண்டும் என்ற அன்பர்களுக்கான பதில் இது: நம்முடைய சாதாரண மனம் கொண்டு அவருடைய செயல்களை எடை போட இயலாது. எடை போட வேண்டாம்.
அடுத்து, குதர்க்கத்தால் வரும் சில கேள்விகள் - இந்த குதர்க்கவாதிகளுடைய பெரிய பிரச்சினையே என்னவென்றால், அவர்கள் கேள்விகள் கேட்பதில்லை, அவர்களுடைய முடிவை நம் மீது திணிப்பார்கள்.
Part 2
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள் - குதர்க்கவாதிகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. தேவையும் இல்லை. ஆனால் உங்கள் எல்லோருக்கும் சில விஷயங்களை, சில சத்தியங்களை சொல்லவும், வெளிப்படுத்தவும் கடமைப்பட்டிருக்கிறேன், விரும்புகிறேன்.
நான் நினைக்கிறேன் - மடமையை ஒழிக்காத, மடங்களினுடைய தலைமையை மட்டும் பிடித்த சில பேருடைய சீடர்கள் அல்லது கை தொண்டர்கள் என்று சொல்ல முடியாது, குண்டர்களாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். அந்த கேள்விகளே எப்படி இருக்கிறதென்றால், நாம் சுந்தரரை அவமானப்படுத்தி விட்டதாகவும் அவமரியாதை செய்து விட்டதாகவும் இகழ்ந்து உரைத்து விட்டதாகவும்தான் கேள்வியையே கேட்கிறார்கள்.
துக்கத்திலும், சுகத்திலும், இன்பத்திலும் துன்பத்திலும், நல்லதிலும் கெட்டதிலும் அலைகின்ற மனம் சார்ந்து இவர்களை எடைபோடுவது சாத்தியமில்லை. ஆனால் தம்பிரான் தோழரான சுந்தரரும் தம்பிரானும் இருக்கின்ற, எம்பெருமான் ஈசபைம் இருக்கின்ற உணர்வு நிலையை என் வாழ்க்கையில் உணர்ந்ததனால். எந்த உணர்வு நிலையில் இந்த மொத்த நிகழ்ச்சியும் நடந்தது என்று நடந்ததை நடந்தவாறு, நடந்த நிலையிலிருந்து பார்த்து உங்களுக்கு சொல்லவேண்டிய கடமை எனக்குள்ளது.
இப்பொழுது, ஈசனான தம்பிரானுக்கும் தம்பிரான் தோழனுக்கும் இடையிலே நடந்த பக்தியின் லீலையை, பக்தியின் விளையாட்டைப் பார்ப்போம்.
சாமீப்ய முக்தி பெற உள்ளுக்குள் திரும்பி ஒருமுறை அவனது பாதத்தைப் பிடித்துவிடுங்கள்
சுந்தரமூர்த்தி பெருமான், மிக உயர்ந்த ஆதிசைவர் குலத்திலே அவதரிக்கிறார். அரசனாலே வளர்க்கப்படுகின்றார். ஆதிசைவா குலத்திலே அவதரித்தாலும், நாட்டு அரசன் அவருடைய தேஜ்ஸைக்கண்டு, 'நான் இவரை அரசிளங்குமரனாக மாற்றுகின்றேன் என்று வலிந்து சென்று அரண்மனையிலே வளர்க்கின்றார்.
திருமணப்பருவம் வந்ததும், தந்தையார் பெண் பார்க்கின்றார். அருகாமையில் ஆதிசைவா் குலத்திலே பெண் பார்த்து திருமணமும் நிச்சயிக்கிறார்கள். அரசிளங்குமரனாக வளர்ந்ததனாலே, அரசனே திருமணத்திற்கு வருகின்றார்.
எல்லாச் சடங்குகளுக்கும் தேவையான எல்லாப் பொருட்களும் தயாராக இருக்கின்றன. இரவு நடைபெறவேண்டிய சடங்குகள் நிறைந்து, மறுநாள் திருமணத்திற்கான சடங்குகள் துவங்குகின்ற நேரம்.
சுந்தரமூர்த்தி பெருமான், அரசு உடையுடன் வேதியர் உடையும் - அரசனுக்கு உரிய உடையும் ஆபரணங்களும், வேதியருக்கு உரிய திருநீறும் தாங்கி ஆதிசைவ அரசன்போலவே வருகின்றார்.
திருமணம் ஆரம்பிக்கும் முன் திடீரென்று வயதான ஒரு அந்தணர், எந்த நிமிடமும் வளைந்து, முன்றாவது கால் ஊன்றி மட்டுமே நடக்க முடியும் என்கின்ற நிலையிலே இருக்கின்ற வயதான அந்தணர் சபைக்குள் நுழைகின்றார்.
நுழைந்தவுடனேயே, 'நிறுத்துங்கள் திருமணத்தை!' என்று உரத்த குரலில் சத்தம் கொடுக்கின்றார். மூன்றாவது கால் என்றால் கோல், கைத்தடி. மூன்றாவது கண் திறக்கலாம், மூன்றாவது காது கேட்கலாம், ஆனால் மூன்றாவது கால் தேவைப்படக்கூடாது.
நீங்கள் யார்? ஏன் நிறுத்த வேண்டும் திருமணத்தை ? என எல்லோரும் வின வ, அதற்கு அந்தணர் சொல்கிறார்... ''திருமண கோலத்தில் இருக்கின்ற இந்த சுந்தரன் என்னுடைய அடிமை. இவன் எனக்கு ஊழியம் செய்ய வேண்டியவன். இவன் திருமணம் செய்து கொள்ளலாமா? வேண்டாமா? என்று முடிவு செய்ய வேண்டியது நான். என்னைக் கேட்காமல் இவன் எப்படித் திருமணம் முடிக்கலாம் ?' என்று உரத்த குரலில் உரைக்க, அங்கிருந்த ஆதிசைவர்கள் எல்லாம் அரண்டு போனார்கள்.
ஏனென்றால், அந்தணர் அந்தணர்க்கு அடிமை ஆதல் என்பது உலகத்திலே இல்லாத மரபு.
''அது எப்படிச் சாத்தியம்?' என எல்லோரும் கேட்க, சுந்தரரோ இரண்டு கையையும் இடுப்பில் வைத்துக்கொண்டு, ''நன்று நன்று,'' என்று இகழ்ச்சியான புன்னகையோடு பார்க்கிறார்.
ஒடுவதும் பிடிப்பதும் ஒட்டத்தின் வேகம் சார்ந்தது அல்ல
புதிய அந்தணர் ஒரு ஒலையை எடுத்துக் காட்டி, ''இதுதான் சாட்சி, சுந்தரனுடைய முப்பாட்டன் எனக்கு எழுதி கொடுத்த ஓலை,'' என்கிறார். சுந்தரர் படுவேகமாக ஒடி அந்த ஓலையைப் பறிக்க முயற்சிக்கின்றார். கிழவனாக வந்ததோ ஈசன் எம்பெருமானே!
அவரும் ஓடுகிறார், இவரும் ஓடுகிறார். ஒருவர் ஓடும்போது பிடிக்க வேண்டுமானால், வேகம் தேவை இல்லை, அவருடைய ஓட்டத்தினுடைய போக்கைத் தெரிந்து கொள்ள வேண்டும். பாம்பு விரட்டும் பொழுது, நாம் நேராக ஓட வேண்டும், ஏனென்றால், பாம்பின் போக்கு வளைந்து வளைந்து செல்லும் வகையிலே இருப்பதால், அதிலேயே அதிக நேரம் செலவு ஆயிடும். யானை விரட்டும் பொது வளைந்து வளைந்துதான் ஓட வேண்டும், ஏனென்றால், யானையின் ஒட்டம் நேராகத்தான் இருக்கும்.
ஒடுவதும் பிடிப்பதும் ஒட்டத்தின் வேகம் சார்ந்தது அல்ல, ஓடுபவர் பிடிப்பவர் தன்மையைச் சார்ந்தது. வேகம் சார்ந்ததாக இருந்தால், பெருமானை ஒருவர் பிடிக்க முடியுமா ?
நம் எல்லோர் உள்ளத்திற்கு உள்ளேயும் அமர்ந்து கொண்டு, நாம் திரும்பிப்பார்க்கின்ற ஒரு கணம்கூட, நம் கண்ணில் சிக்காமல் எங்கோ ஓடி ஒளிந்து மறைந்து கொண்டு இருக்கின்றவனை, முப்புரம் எரித்தவனை, அயனும் மாலும் - பிரமனும் விஷ்ணுவும் தேடியே காணாத பாதத்தை பிடிக்க முடியுமா?
சாத்தியமே இல்லை !
ஆனால் பிடித்தோமேயானால், வெளியில் அவன் ஓடினாலும் பிடிப்பது சாத்தியம்.
சுந்தரர் ஏற்கெனவே ஒரு முறையாவது பிடித்து இருக்கிறார் என்பதனால், வெளியிலே ஓடிய அந்தணரைப் பிடித்து விட்டார். உள்ளுக்குள் அவனை ஒரு முறையாவது அவனைத் தேடி பிடித்து இருந்தால்தான், சாமீப்ய முக்தி வரை செல்ல முடியும்.
உள்ளே பிடித்தவர் என்பதனால், ஓடுபவருடைய ஓடும் முறை தெரிந்து அந்தணரைப் பிடித்து விடுகின்றார், அவரிடமிருந்த அந்த ஓலையைப் பறித்துக் கிழித்தெறிந்து விடுகிறார்.
மறந்தாலும் மறுத்தாலும் ஆட்கொள்ளும் அருட்பெருங் கருணையாளன்
ஒடும் முறையை சுந்தரர் கற்றாரே தவிர, பெருமான் உள்ளத்து முறையைக் கற்கவில்லை. அதனால்தான் அந்த ஒலையைக் கிழித்துப் போட்ட உடனேயே அந்தணர், ''மூல ஓலை தனியாக இருக்கிறது. இது 'படி ஓலை'தான் அப்பனே,'' என்கிறார்.
முதியவராக வந்த பெருமான் ''என்னுடைய சொந்த ஊரான திருவெண்ணெய் நல்லூரில் 'மூல ஓலை' பக்குவமாக பாதுகாப்போடு இருக்கிறது, சுந்தரர் கிழித்துப்போட்டது படி ஒலைதான். அங்கே சென்று மூல ஒலையை உங்கள் எல்லோருக்கும் காட்டுகிறேன், வாருங்கள்,'' என்று வழக்குக்கு அழைக்கிறார்.
ஊராரெல்லாம், 'இந்த வழக்கு என்ன ஆகுமோ?' என்ற கவலையுடன் சுந்தரரோடு செல்கிறார்கள் சென்றவுடன், திருவெண்ணெய் நல்லூரிலே, சான் றார் சபையிலே அந்தணர் ஒரு நிபந்தனையை சொல்கிறார், படி ஓலையை கிமித்த இவன் மூல ஒலையையும் கிழிக்க மாட்டான் என்ற சபையோர் உறுதிகொடுத்தால், ஒலை காட்டுகிறேன்!''
உறுதி அளிக்க, மூல ஒலையை எடுத்துக் காட்டுகிறார். சுந்தரருடைய முப்பாட்டனார் எழுதிக் கொடுத்த மூல ஓலை தெளிவாகச் சொல்கிறது, ''வழி வழியாக திருவெண்ணெய் நல்லூர் சித்தருக்கு, பித்தன் என்கிற பெயருடைய சி த்தருக்கு நாங்கள் அடிமைசெய்யக் கடவது. ''
முப்பாட்டன் கையெழுத்தும் இருக்கின்றது. அதற்கு, மூவா் சாட்சி கையெழுத்து இட்டும் இருக்கிறார்கள்.
அக்கையெழுத்துகளை, சான்றோர் சபை தீர ஆய்ந்து அறிந்து, ''சுந்தரா நீ இவருக்கு அடிமை," என்று தீா்ப்பு அளிக்கிறார்கள். சுந்தரரும் வேறு வழி இல்லாமல், 'இவருக்கு அடிமைதான்' என்று அவர் பின்னாலேயே செல்கிறார்.
திடீரென்று ஒரு சந்தேகம். ''நீங்கள் திருவெண்ணெய் நல்லூரைச் சேர்ந்தவர் என்று ஓலையில் போட்டு இருக்கிறதே. நாங்கள் இதற்குமுன் உங்களை இவ் வூரில் பார்த்ததே இல்லேயே! உங்கள் வீடு எது ? எங்கு வாழ்கிறீர்கள்?'' என்று தீர்ப்பிற்குப் பிறகும் ஆராய்ச்சி நோக்குடன் கேள்வி கேட்க, சிரித்துக்கொண்டே, "வா, காட்டுகிறேன்," என்று சென்று, 'பித்தன்' என்கின்ற பெயரிலே வந்த முதியவர் ஆலயத்திற்குள் சென்று, கருவறைத் திருமேனிக்குள் இரண்டறக் கலந்தார்.
சுந்தரனுக்கு சுளீரென்று உரைத்தது.
நாளமிலா சுரப்பிகளை மனத்தினால் கட்டுங்கள்
உடலெல்லாம் நடுங்க விதிர் விதிர்த்துப் போய், ''இறைவா! நீயே நேரில் வந்து செய்த இந்த லீலையின் காரணம் என்ன? திருமணத்தைத் தடுத்து நிறுத்த வேண்டிய காரணம் என்ன?'' என்று கேட்க, பெருமான் ரிஷபாரூடராய் அன்னையாரோடு தோன்றி, "சுந்தரா வந்த வேலை சொந்த வேலை எந்த வேலையோ, அந்த வேலை மறந்தாயா? மனித உடல் தாங்கியதும் கைலாய நினைவெல்லாம் போனதா? இந்தக் காலைப் பற்றவே இந்த வேலை கொண்டு வந்தோம் என்பதை மறந்தாயா? என் கைக்கலகு தாங்கும் சாமீப்ய முக்தி பெற்ற ஆலால சுந்தரன் நீ.
ஆலகால் விஷத்தைக் கண்டவுடன் பிரம்மா, விஷ்ணுவுடன் எல்லோரும் அஞ்சி நடுங்கி ஒட, 'அதை நான் பருகி உலகத்தைக் காக்கவேண்டும், அதை இங்குக் கொணா்' என்று நான் கட்டளை இட, தைரியத்தோடு சென்று அந்த விஷத்தையே உருட்டி ஒரு குடத்திலிட்டு வந்ததனால், 'ஆலாலசுந்தரன்' என்று பெயர் பெற்ற சுந்தரன் நீ!
மறந்தாயோ உன் நிஜ நிலையை? இரு பெண் மீது கொண்ட காமத்தால் நீ பூவுலகம் வந்தாய், வந்தாலும் உன்னை நான் தடுத்தாட்கொள்ள வேண்டும் என்று வரம் வாங்கி வந்தாயே!'' என்று அவருடைய பூர்வ திருக்கயிலாய வாச நிலையை நினைவூட்டுகிறார்.
சொன்னவுடன் சுய நினைவுக்கு வந்தார் சுந்தரர். அரச வாழ்க்கை வாழ்ந்த உடனேயே கைலாய எண்ணம் மறைந்ததும், வந்த நோக்கம் மறந்ததும் சுந்தரருக்குப் புரிந்து விட்டது.
புரிந்ததும் விழித்துக்கொள்கின்றார் சுந்தரமூர்த்திப் பெருமான். விழித்து, '' ஆஹா பெருமானே! நானே மறுத்தாலும், எனை தடுத்தாட்கொள்ள வேண்டும் என்ற என்னுடைய வேண்டுதலை நிறைவேற்ற வந்தாயோ, வந்த நோக்கத்தைக் காட்டியதற்கு நன்றி. இனி நான் தவ நிலையில் இருந்து வந்த நோக்கத்தை நிறைவேற்றி, உன்னுடைய பாதத்தைப்பற்றிட வேண்டும், தவநிலை அருளுக, '' என்று உளம் எலாம் உருகி, நெஞ்சு பஞ்சாய்க் கரைய, தன்னுடைய சுய நிலையை உணர்ந்து, திருமணத்தை மறுத்து, பெருமானிடம் தவ வாழ்க்கை வரம் கேட்க, சுந்தரமூர்த்திப்பெருமானுக்கு பெருமான் தம்பிரான் அவ்வாறே தவ நிலை அருளுகிறார்.
இந்த முதல் நிகழ்ச்சி மிக அருமையான நிகழ்ச்சி. நம்முள் உள்ள நாளமிலா சுரப்பிகள் மனத்தாலே கட்டுப்படுத்தபடுவதனால், உடலோடு எந்த நாள இணைப்பும் இல்லாதது. அதனால்தான் அதற்கு 'நாளமிலா சுரப்பிகள்' என்று பெயர்.
உங்களுடைய உணவு, உங்களுடைய உடலினுடைய இயற்கையான எந்த ஒரு விஷயத்தாலும் இந்த நாளமிலா சுரப்பிகள் கட்டுப்படுத்தப்படுவதில்லை. மன ரீதியாக மட்டும்தான் அதை இயக்கவும் கட்டுப்படுத்தவும் முடியும்.
இந்த சத்தியத்தை நன்றாக ஆழ்ந்து கேளுங்கள், ஒருமுறை நாளமிலா சுரப்பிகள் சுரந்து விட்டால், அதன் இயக்கத்தை அதற்கு பிறகு மனம்கூட கட்டுப்படுத்த முடியாது. அதாவது இது ஒன்றோடு ஒன்று ஆழமாக இணைந்தது.
முதலிலிருந்தே மனம் கட்டுப்பாட்டுடன் இருந்தால், இந்த நாளமிலா சு ரப்பிகளின் போக்கையும், இயக்கத்தையும் நீங்கள் கட்டுப்படுத்திவிடலாம். அதற்கான மார்க்கம் - இறைவனுடைய 64 லீலைகளையும் அறுபத்துமூவா கதைகளையும் நீங்கள் உள்வாங்குது.
அப்படியில்லையென்றால், அந்த நாளமிலா சுரப்பிகள் தானாகவே இயங்கத் தொடங்கிவிடும், அதற்குப் பிறகு மனத்தால்கூட அதைக் கட்டுப்படுத்த (மடியாது.
ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், அண்ணீரகச் சுரப்பி (Adrenal gland) பயம் சார்ந்தது. உங்கள் மனம் கட்டுப்பாட்டோடு, பயம் இல்லாமல் இருக்குமானால் நல்லது. ஒரு முறை பயந்து, அண்ணீரகச் சுரப்பி நீர் உடம்பு முழுக்கப் பரவ அனுமதித்தீர்களானால், அதற்குப் பிறகு நீங்கள் மனதைக் கட்டுப்படுத்தினாலும்கூட, பயத்தால் வருகின்ற பக்க விளைவுகளான நடுக்கம், விதிர்விதிர்ப்பு, நரம்பு தளர்ச்சி இதை எல்லாம் கட்டுப்படுத்த முடியாது.
இந்த நாளமிலா சுரப்பிகளின் கட்டுப்பாட்டுக்குள் விழுந்தீர்களானால் போய்விட்டது. ஒருவர் விழக்கூடாத இடம் அதுதான். அங்கு விழுந்தால் கடவுளாலும், கடவுளின் அவதாரமான குருவாலும் மட்டும்தான் உங்களைத் தூக்கி விட முடியும்.
வரம் கொடுத்தல் - வரம் வாங்கல் சூட்சுமத்தைப் புரிந்துகொண்டவர்களே பெரும் பண்ணியவான்கள்
ஆனால் பிரச்சினை என்னவென்றால், அங்கு விழுந்தால், பிறகு கடவுளையோ கடவுளின் அவதாரமான குருவையோ கூட 'தூக்கி விடுங்கள்' என்று கேட்க கூடத் தெரியாது. அதனால்தான் விழுவதற்கு முன்பு, ''அப்பனே! ஒருவேளை நான் விழுந்தாலும், நான் வேண்டாம் என்று சொன்னாலும், என்னத் தூக்கி விட் டுவிடு,'' என்று கேட்டுவிடுவதே நல்லது.
'சில வினாடிகள் மாத்திரம்தான் அந்த உணர்ச்சித்க் கொந்தளிப்பில் விழுந்தேன், அதற்காக மானுட ஜென்மம் வந்ததே. சரி நடந்தது நடந்ததுவிட்டது, இதற்கு மேலாவது இந்த மானுட ஜென்மம் அடுத்தடுத்த ஜென்மங்களுக்கும் தொடராமல் இருப்பதற்கான பாதுகாப்பு உறுதியையாவது கேட்டு வாங்கிக்கொள்ளலாம்' என்றுதான் பெருமானிடம் கேட்டு வாங்கிக்கொள்கிறார். சுந்தரர் கேட்ட வரம் சரியான வரம்.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், இந்த வரம் கொடுத்தல் - வரம் வாங்கல் என் பதன் மொத்த தாத்பரியமும் புரிந்தால்தான், சுந்தரா எந்தத் தெளிவில் இருந்து இந்த வரத்தை வாங்கி இருக்கிறார் என்று புரியும்.
எத்துணை வரம் நான் கொடுத்தாலும், நீங்கள் அதை வேண்டாம் என்று சொல்லிவிட்டீர்கள் என்றால், அதை நிறைவேற்ற வேண்டும் என்ற கட்டுப்பாடு எனக்கு இல்லை. நீங்கள், 'வேண்டாம்' என்று சொல்லாத வரைதான், அந்தக் கட்டுப்பாட்டிற்குக் கட்டுப்பட்டு இருக்க வேண்டிய தேவை இருக்கிறது.
ஏனென்றால், தனி சிந்தனை சுதந்திரத்திற்கு மிக பெரிய சக்தி உண்டு. முக்தியே வேண்டும் என்று நீங்க கேட்டு மூவாயிரம் ஆண்டு தவம் கிடந்து, ஏதோ ஒரு நாள், ''இல்லையப்பா வேண்டாம்,' என்று பெருமானிடம் சொல்லிவிட்டீர்களென்றால், உங்களுக்கு முக்தி கொடுக்க வேண்டும் என்கின்ற அவசியம் அவருக்கு இல்லாமல் போய்விடுகிறது. அது தனி சுதந்திரத்தின் ச க்தி.
பொதுவாக பெருமான் சோதனை செய்யும்பொமுது, அந்தத் தனி சுதந்திரத்தின் சக்தியைத்தான் கிளறிவிடுவார். கிளறி விட்டு, நம்முடைய வாயாலேயே வேண்டாம் என்ற சொல்ல வைத்துவிடுவார். அதற்குத்தான் எல்லா விளையாட்டும் செய்வார்.
காரணம் என்னவென்றால் எந்த வரம் கொடுத்தாலும் அதிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கான வழி இருக்கும் என்பது அவருக்குத் தெரியும்.
ஆனால் அவரே காரணம் சொல்லித் தப்பித்துகொள்ள முடியாத ஒரு வரத்தைக் கேட்டுப் பெறுவதற்கு பக்கத்திலேயே இருந்து பார்த்தவரால் மட்டும்தான் முடியும். சுந்தரர் பக்கத்திலேயே இருந்து பார்த்தவர்தானே, எல்லாமே தெரியுமல்லவா ?
எப்பொழுதாவது உங்கள் வாழ்க்கையில், தன்னை மறந்து, கரைந்து, இறைவனோடு இணைந்து இருக்கின்ற தரிசனமோ, அனுபவமோ வந்தால், இந்த ஒரு வரத்தை - நானே மறந்தாலும் எனை நீ மறவாது தடுத்து ஆட்கொள்ள வேண்டும், நானே மறுத்தாலும் நீ என்னை மறுதலிக்காது தடுத்து ஆட்கொள்ள வேண்டும், நானே எதிர்த்தாலும் நீ எனை எரிக்காது ஆட்கொள்ள வேண்டும் - என்ற இந்த ஒரு வரத்தை மறக்காமல் வாங்கி விடுங்கள்.
இந்த ஒரு வரத்தை வாங்கி விட்டீர்களானால், சுந்தரர் செய்ததுபோல என்ன செய்தாலும் வேறு வழி இல்லை, அவர் காப்பாற்றியே ஆக வேண்டும்.
இந்த ஒரு வரம் பெற்றவன் திருவரம் பெற்றவன். பக்கத்திலேயே இருந்து பார்க்கின்றவர்களுக்கு பெருமான் எந்தத் தாமத்தை சார்ந்து இயங்குகிறார் என்கின்ற அவருடைய தர்மம் புரியும்.
சில நிஜமாகும், எந்த வரம் நிஜம் ஆகாது என்கிற குட்சுமத்தை எப்படி நாங்கள் கெரிந்துகொள்வது. புரிந்துகொள்வது ?
என் பக்கத்தில் கைக்கலகு தாங்குகிறவர்கள் கண்களைப் பார்த்தீர்களென்றால் புரிந்துவிடும். இது ஆறுதலா? அருளா? வரமா? மறமா? அல்லது மறுதலிக்கவைக்கும் திறமா ?
வியாதி என்று ஒருவர் வந்தால், ''சரியாகும், போங்க சாமி பாத்துக்கறேன்,'' என்று சொன்னால் அதற்கு ஒரு அர்த்தம்.
''கட்டாயம் சரி பண்றேன் கவலைப்படாதீங்க போங்க, மாங்கல்யம் நிரந்தரமா இருக்கும்,'' என்று சொன்னால் அதற்கு ஒரு அர்த்தம்.
''ஒழுங்கா இருந்துருக்கலாமேப்பா, திருநீறு பூசிக்கோ, கஷ்டம் குறையும்,'' என்று சொன்னால் அதற்கு ஒரு அர்த்தம்.
''கோவில்ல போய் பிரார்த்தனை பண்ணிட்டு போ,'' என்று சொன்னால் அதற்கு ஒரு அர்த்தம்.
''தைர்யமா இரு' என்று சொன்னால் அதுக்கு ஒரு அர்த்தம்.
''ஆனந்தமா இரு,'' என்று சொன்னால் அதுக்கு ஒரு அர்த்தம்.
'முடியலேன்ன ஜாலியா இரு,'' என்று சொன்னால் அதற்கு ஒரு அர்த்தம்.
கைக்கலகு தாங்கும் அனுக்க தொண்டர்களுக்குத்தான் இந்த ஒவ்வொரு வார்த்தைக்கும் என்ன அர்த்தம் இது அருளா? மறுமா? திறமா? இதன் பக்க விளைவு என்ன? எதிர் விளைவு என்ன? அடுத்த விளைவு என்ன? என்று புரியும்.
த்வைத, அத்வைத, விசிஷ்டாத்வைத வட்டங்களுக்குள் அடங்கா சைவம்
தன்னுடைய சுய நிலையான சாமீப்ய முக்த நிலையை அனுபூதியாக உணர்ந்து, தான் வந்த நோக்கத்தைப் புரிந்துகொண்டு வாழத்துவங்கிய சுந்தரர், திருவாரூர் கோவிலுக்குப் போகிறார், கோவிலில் பரவை நாச்சியாரைப் பார்க்கிறார்.
திருவெற்றியூர் திருக்கோயில்
பார்த்தவுடனேயே தன் வாழ்க்கையின் நோக்கத்திலே, நாம் வாழ்ந்து அனுபவிக்க வேண்டிய பெண் இவள் என்று புரிகின்றது. தன்னை மறந்தார், பரவை நாச்சி வயப்பட்டார்.
உடனே அவர் பரவை நாச்சியாரிடம் சென்று தன் காதலைச் சொல்லவில்லை. பெருமானிடம் சென்று, ஆரூரன் தியாகராஜப் பெருமானிடம் சென்று, புற்றிடம்கொண்ட நாதா, வன்மீகநாதா் பெருமானைப் பார்த்து, ''நீயே பொறுப்பு,'' என்கிறார்.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், ஆதிசைவம் என்பது வெறும் த்வைத, அத்வைத, விசிஷ்டாத்வைத என்கின்ற தத்துவ கோட்பாடு வட்டங்களுக்குள் அடக்கிவிட முடியாத பெரும் ஞானத் தத்துவம்.
'உயா்ந்த ஆன்மிகத் தேவைகளுக்காக மட்டுமே, பக்திக்காக மட்டுமே பகவானிடம் செல்' என்று சொல்வது த்வைதம்.
'ஞான அனுபவத்திற்காக மட்டுமே பகவானிடம் செல்' என்று சொல்வது விசிஷ்டாத்வைதம்.
'முக்கிக்காக மட்டுமே இறைவனை நாடு' என்று சொல்வது அத்வைதம்.
முக்தியானாலும் சரி, மூக்குத்தியானாலும்சரி பெருமானிடம் போ' என்று சொல்வது சைவம்.
வேறு எந்தப் பாரம்பரியத்திலும், 'மண் வேண்டும், பெண் வேண்டும், பொன் வேண்டும்' என்று ஒரு த்வைத குருவிடம் சென்று கேட்டீர்களானால், ''அதெல்லாம் பகவானுக்குத்தான் சொந்தமப்பா, அவரையே பிடி, போதுமப்பா,'' என்பார்.
ஒரு விசிஷ்டாத்வைத குருவிடம் சென்று கேட்டீர்களானால், ''அதையெல்லாம் வைத்து என்னப்பா பண்ணப்போற, காலம் வீணாகப்போகும், பெருமானை நினைப்பா," என்று சொல்வார்.
ஒரு அத்வைத குருவிடம் சென்று கேட்டீர்களானால், மாயையப்பா விடப்பா, ஞானத்தை அடைப்பா,'' என்று சொல்வார்.
ஒரு சைவ குருவிடம் சென்று கேட்டால் மட்டும்தான், இரப்பா, எவ்வளவு வேணும், எப்பவேணும்னு சொல்லப்பா பொருமானிடம் கேட்டு வாங்கித் தருகிறேன்,'' என்பார்.
ஒரு பெண்ணைப் பார்த்தேன், திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று நினைக்கின்றேன், திருமணத்தை நடத்திவையுங்கள்,' என்று பெருமானை நேரடியாகக் கேட்கின்றார்.
ஐயனும், "ஆகட்டும் செய்கிறேன் அப்பா!' என்று சொல்லிவிட்டு, அன்று இரவே பரவை நாச்சியாருடைய குடும்பத்தார் கனவிலும், தம்பிரான் தோழரின் உற்றத்தார் குடும்பத்தார் கனவிலும் சென்று, ''இருவருக்கும் திருமணம் நடத்திவையுங்கள்!' என்று ஆணையிடுகின்றார்.
உடனடியாக ஏற்பாடுகள் செய்து திருமணம்செய்து வைக்கப்படுகிறது. இனிமையோடு திருவாரூரில் பரவை நாச்சியாரோடு வாழ்ந்துவருகின்றார்.
சில காலம் கழித்து, எல்லா சிவத்தலங்களையும் சென்று பார்க்க வேண்டும் என்று கிளம்புகிறார். வழியெல்லாம் பல்வேறு விதமான அத்புதங்களை நிகழ்த்தி, எத்துணை எத்துணையோ இறைவனின் வீலைகளை விளையாடல்களை மக்களுக்குக் காட்டி, பெருமானைக் கசிந்துருகி ஸ்தோத்திரங்கள் செய்து, பாடல்கள்செய்து, சைவம் பரப்பி திருத்தலம் திருத்தலமாக தம்பிரான்தோழர் யாத்திரை செய்து திருவெற்றியூர் வருகின்றார்.