அதிசயம் என்பது என்ன?
அதிசயம் என்பது என்ன?
ஒரு நாள் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM பிடாடி அசிரமத்திற்குப் போக வேண்டும் என்றார்கள். அன்று மழை பெய்தது. வானத்தில் மேகமூட்டம் இருந்தது. எது அந்தப் பயணத்தைத் தூண்டியது என்பது தெரியாது. எதை எதிர்கொள்ளப் போகிறோம் என்றும் தெரியாது.
வாகனத்திலிருந்து நாங்கள் இறங்கி நடந்து கொண்டிருந்தபொழுது மேய்ச்சலுக்குச் சென்ற ஒரு பசு எழு முடியாத சகதிப் பகுதியில் மாட்டிக் கொண்டிருந்ததைப் பார்த்தோம். ஒரு காலத்தில் அந்தப் பகுதி ஒரு ஏரியாக இருந்திருக்கலாம். எழ முயன்ற பொழுதெல்லாம் பசு மேலும் ஆழமாக உள்ளே போய்க் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் அதனால் நகரவே முடியவில்லை.
சுமார் நாற்பது கிராமவாசிகள் திரண்டனர். சினையுற்றிருந்த அந்த மாட்டைக் கயிற்றைக் கட்டி இழுத்துக் காப்பாற்ற அவர்கள் படாதபாடு பட்டார்கள். சோர்ந்து விட்ட பசு சற்றும் அசைந்து கொடுக்கவில்லை. பசு இருந்த இடத்திலிருந்து இருபது அடி தூரம் தள்ளி நின்றிருந்த THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM கிராமவாசிகளைப் பார்த்து, பசுவை சிரமப்படுத்த வேண்டாம் என்றார். நேருக்கு நேர் பசுவின் கண்களைப் பார்த்தார். கைகளைத் தட்டினார், 'வா' என்று பசுவிடம் சைகை காட்டினார். அது எழும் பொழுது இரண்டுபேர் மட்டும் தாங்கிப் பிடித்துக் கொள்ளுங்கள், போதும் என்றார். பிறகு திரும்பிப் பார்க்காமல் ஆசிரமம் நோக்கிப் புறப்பட்டார். என்னதான் நடக்கிறது என்பதைப் பார்க்கும் ஆவலுடன் நாங்கள் அங்கேயே தங்கிவிட்டோம்.
பசு மெள்ள எழுந்தது. இரு கிராமவாசிகள் தாங்கிப் பிடித்தார்கள். ஒன்றுமே நடக்காதது போல் பசு நடந்து போய் விட்டது. மயிர்க்கால்கள் தோறும் வியப்பு சிலிர்த்திட நாங்கள் ஓடிப்போய் ஸ்வாமிகளிடம் கேட்டோம் - இது எப்படி சாத்தியமாயிற்று? மிகவும் தெளிவாக ஸ்வாமிகள் சொன்னார்கள்: "நான் அதிசயம் எதையும் நிகழ்த்திவிடவில்லை. பசுவின் புத்திசாலித்தனம் மழுங்கிப் போயிருந்தது. அத்தனைபேர் கூடி இழுத்த காரணத்தினால் தானாக எதுவும் செய்ய முடியாது என்று பசு நினைத்திருந்த வேளையில் நான் அதன் சக்தியைத் தட்டி எழுப்பினேன். அதற்கு தன்னம்பிக்கை ஊட்டினேன். தன் முயற்சியினாலேயே அது சகதியிலிருந்து வெளியேறியது. அவ்வளவுதான்".
அதைத்தான் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM மனிதர்களிடம் செய்கிறார் தொல்லைகளிலிருந்து விடுபட வழிகாட்டுகிறார்.