Born to HealChapter 7 of 12
Chapter 7

சக்தியும் நாமும்

1 sections

சக்தியும் நாமும்

சக்தியை நம் உடல் ஒரு உறுப்பிலிருந்து இன்னொரு உறுப்பிற்கு எப்படிக் கொண்டு ிசல்கிறது?

நம் புற உடலில் தோலுக்கு அடியில் 3,40,000 நாடிகள் அல்லது பாதைகள் இருக்கின்றன. அவையெல்லாம் சக்தி சஞ்சாரம் செய்யும் பாதைகள். நரம்புகள், ரத்த நாளங்கள் இவை யாவும் சக்தியின் வழித்தடங்களே. குட்சும உடலில் 74,000 நாடிகள் உள்ளன. ஆதார நாடிகள் பதினான்கு. அந்த நாடிகள் ஏழு சக்கரங்களையும் இணைக்கிண்றன.

உடலில் சக்தி எப்படி இயங்குகிறது?

சக்தி சீராக இயங்க வேண்டும். ஓட்டம் நிதானமாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் உள்ளொளி பிறக்கிறது. அது மேம்படுகிறது. ஆன்மச்க்தி ஓங்குகிறது.

சக்தியின் பிரவாகம் குறைந்து போனால். . . ?

சக்தி ஓட்டம் குறைந்தால் உள்ளொளி மங்கும். மாறு சக்தி பிறக்கும், பாக்டீரியா கிருமிகளால் உடல் நோய்வாய்ப்படும். சக்தியின் ஒட்டம் சீராக, சமமாக இல்லை யென்றால் என்ன விளைவுகள் ஏற்படும்?

சக்தியின் ஓட்டம் சீராக இல்லையென்றால் பிரவாகம் குறைந்து உடலின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. புற்றுநோய் வருகிறது அல்லது கட்டிகள் உருவாகின்றன.

சக்தியின் ஓட்டம் பாதிக்கப்பட என்ன காரணங்கள்? உணர்ச்சி வசப்படுதல், உடல் அழற்சி, ஆரோக்கியமில்லாத பழக்க வழக்கங்கள், ஒத்துவராத உணவு.

இந்த நோய்களை குணப்படுத்துவது எப்படி?

சக்கரங்களுக்கு சக்தி கொடுத்து அவற்றை நிதானத்தில் நிலைநிறுத்த வேண்டும்.