Born to HealChapter 5 of 12
Chapter 5

நன்றியுடன் இருங்கள்

1 sections

நன்றியுடன் இருங்கள்

இனந்தோறும் நன்றியுடன் இருங்கள் ஒவ்வொரு நாளும் புதிய நாள் அது புதிய தொடக்கம்.

கதிரவன் உங்களை முத்தமிட்டு எழுப்பும் பொழுது நீங்கள் படுத்திருந்தாலும்கூட அன்றைய தினம் நன்றி செலுத்துங்கள் உயிருடன் இருப்பதற்காக ஏனெனில் நேற்றிருந்து இன்றில்லாதவர் பலர்

என்ன செய்ய வேண்டுமென்று எண்ணும் போது வேலைகள் முன்னே முண்டியடித்தும் வரும்போது உங்களுக்கு வேலைகள் இருப்பதற்காக நன்றி செலுத்துங்கள் ஏனெனில் பலருக்கு எந்த வேலையும் இருப்பதில்லை.

காலைப் பொழுதின் தேவைகள் பலப்பலவாயினும் எண்ணற்ற வேலைகள் எதிர்ப்பட்டாலும் உங்களுக்குக் குடும்பம் இருப்பதற்கு நன்றி செலுத்துங்கள் பலர் தனியர்களாகத் தெருவில் அலைகிறார்கள்.

அதிகப்படியான வேலைகள் சோர்வு தந்தாலும் ஒய்வெடுக்க நேரமில்லாவிட்டாலும் இலட்சியத்தை எட்ட முடிவதற்காக நன்றி செலுத்துங்கள் எத்தனையோ போர்க்கு அந்தக் கொடுப்பினை இல்லை.

சோர்ந்து ஒய்ந்து தூங்கச் செல்லும் முன் விளக்குதலை அணைக்கத்தூ சக்தி இல்லாத போதிலும் நீங்கள் நிம்மதியாக இருப்பதற்காக நன்றி செலுத்துங்கள் பலர் உறக்கமில்லாமலேயே இரவுகளைக் கழிக்கிறார்கள்.