Born to HealChapter 4 of 12
Chapter 4

அருள் புரிவீர், அருணாசலரோ

1 sections

அருள் புரிவீர், அருணாசலரோ

ஒ, அருணாசலரே, மேன்மை என்பது தாங்களே. என் இதயத் தாமரை மலர்ந்து ஆனந்தத்தில் ஆழ தாங்களே என் அருட்கதிரவனாக இருந்து எனக்கு அருள் புரியுங்கள்.

அருணாசலரே, ஓ, ஒளிமலையே முனிவர்களையெல்லாம் அருட்தாமரைகளாக ஈர்த்தீர், முகிழ்வித்தீர், ஒளிர்வித்தீர் இருளையும் சோகத்தையும் விரட்டி அடித்தீர்

அருணாசலம் என்னும் தொன்மை மலையே அருளை அங்கே ஊட்டினிர் ஒளி சிதறும் மாணிக்கமாக அங்கே ஒரு தெய்வீகப் பிறவி உதித்தது.

பச்சிளம் வயது பனிரெண்டில் அவர் முனிவரென அழைக்கப்பட்டார் இந்தத் திருநாடு நெடுகத் திரிந்தார் கல்லிலும் மண்ணிலும் காதங்கள் நடந்தார்.

வெள்ளப் பெருக்கில் நா்மதை நதி மகிழ்ந்து உவந்து களிநடனமாட எதிரே விந்தியமலைப் பள்ளத்தாக்கில் தேன்கூட்டுப் பாலத்தைச் தரிசிக்க

புலிகள் உலாவும் அல்மோராக் குன்றுகளில் பொதிந்துள்ள இராமகிருஷ்ண மடமே வீடாக பூலோக சுவர்க்கம் அதுவே என்று சிவனுறை வனத்தை அவர் போற்றிப் புகழ

புலிக்கு அஞ்சிய அவரது தோழர் பீதியில் தன்னிலும் பன்மடங்கு எடையிலான கல்லை ஒரு கணத்தே தூக்க, விடிந்தபொழுதில் அறுவர் அதைத் தூக்க முயன்று தோற்க

அலுப்பில் துவளாத பாதங்கள் எங்கும் உலாவ மனமது கடந்த நிலையில் அவர் துயில மாதங்கள் ஒன்பது கடந்தன, ஒருபோதும் அவர் இரவறியார், பகலறியாார்.

புலர்காலைப் பொழுதில் ஒருநாள் கண்மலர மனம் ஒன்று, இரண்டு, மூன்று என்பதற்குள் அவரது மணிப்புரச் சக்கரம் ஒளிவீச இந்நிலை எய்தினார் அருந்தவப் பொழுதில்.

ஆனந்தம், ஆனந்தம் என ஒலிக்கக் கேட்டார் அறிவொளியை அழைத்து வந்தன இச்சொற்கள் தொடர் அருந்தவ முனைவு தன் முகட்டைத்தொட இறைஞ்சுகிறோம் இன்று நாம் அவர் அருள்வேண்டி

மணம், ஆன்மா வாழ்வு அணைத்தையுமே தன் முறுவலால் கூகப்படுத்தும் உள்ளங்கவர் முனிவர் அவர்: அனைவருக்கும் சக்தி தர அழைக்கின்றார் அவர் நம் விடியலின் குரலாக.

நம்பிக்கை - நோய்களை அகற்றவும் பிரச்சினைகளைத் தீர்க்கவும் அதுவே ஒரே வழி. THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM