Born to HealChapter 11 of 12
Chapter 11

பாகம் 2: பிறவியிலேயே குணப்படுத்தும் சக்தி

1 sections

பாகம் 2: பிறவியிலேயே குணப்படுத்தும் சக்தி

ஒரு நாள் மாலைப் பொழுதில் அங்கு வேறு அறையில் தங்கியிருந்த ஒருவர் "புலி புலி" என்று கூவி எச்சரிக்கை கொடுத்தபடியே வந்து கொண்டிருந்தார். அங்கே ஒரு புலி வந்து இருப்பதாக எல்லோரும் அவரவர் அறைக்குள் நுழைந்து தாளிட்டுக் கொண்டனர். அங்கே புலிகள் உலாவுவது சகஜம். பொழுது ஆறாவது வரை எவரும் புலிக்கு பயந்து வெளியே வர மாட்டார்கள். காலையில் ஒரே ஒரு நபரைக் காண வில்லை என்பது தெரியவந்தது. அவரது அறைக் கதவு பூட்ட ப்பட்டிருந்தது. கதவைத் தட்டிய போது உள்ளே இருந்து குரல் கேட்டது. நல்ல வேளை அந்த மனிதர் புலிக்கு இரையாகவில்லை.

அவரால் கதவைத் திறந்து கொண்டு வெளியே வரமுடியவில்லை. கதவுக்குத் தாழ்ப்பாள் இல்லை என்பதனால் அவர் கதவை சாத்த ஒரு வலுவான பொருளை அங்கே தூக்கி சாய்த்து விட்டார். புலிக்கு பயந்து அவர் தூக்கிய கற்களை புலி போனதற்குப் பிறகு நகர்த்த முடியவில்லை அது பெரிய கல் உரல். பின்னர் ஆறுபேர் சேர்ந்து அதை நகர்த்தினார்கள். நாம் நினைப்பதைவிட நமக்கு பலம் அதிகம் என்பதை THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM இந்த நிகழ்ச்சி பற்றிக் கூறுவதுண்டு.

வடக்கு ரயில்வே சாதுக்களிடம் டிக்கெட் கேட்பதில்லை, அவர்கள் எங்கு வேண்டுமானாலும் ஏறலாம், இறங்கலாம். ஸ்வாமிகளும் ஏதாவது ஒரு ரயிலில் ஏறுவார். மனதுக்குப் பிடித்தமான இடத்தில் இறங்கிக் கொள்வார். ஏதாவது ஒரு திசையில் பயணப்படுவார். நடந்தது களைத்துப் போனால் அடுத்த ரயிலில் ஏறி வேறு இடத்திற்குப் போவார். அது என்ன இடம் என்று கேட்டுக் கொண்டதுகூட இல்லை. ஜன்னலுக்கு வெளியே பார்ப்பார். இடம் பிடித்திருந்தால் இறங்கி விடுவார். அப்படிப் பயணப்பட்ட சமயத்தில் ஒரு முறை நர்மதை நதிக்கரைக்கு வந்து சேர்ந்தார். நர்மதை நதி குதூகலத்துடன் பாய்ந்து வருவதைப் பார்த்து மகிழ்ந்தார். சற்றும் கற்பனை செய்து பார்க்க முடியாத காட்சியை அவர் விந்தியமலைப் பள்ளத்தாக்கில் பார்த்தார். இரண்டு மலைகளுக்கிடையே இருந்த இருநூறு அடி நீளத்திற்கு ஒரு தேன்கூடு நீண்டு இருந்தது -ஒரு பாலம் போல. ஒவ்வொரு தேனீயும் உள்ளங்கை அகலத்திற்கு உருவத்தில் பெரியது.

அதேபோலவே காசி மயானத்தில் எங்கும் கண்டிராததொரு காட்சியைக் கண்டார். சடலங்கள் எரிந்து கொண்டிருந்தன. யோசித்துப் பார்த்தார். 'சாவது எப்படி இருக்கும்?' வலது புறமிருந்து ஒரு மாடத்தில் ஏறி அமர்ந்தார். சாவை அனுபவித்த பிறகுதான் இறங்குவது என்று முடிவு செய்தார். பத்மாசனம் போட்டு அமர்ந்தார்.

அவருக்குப் பசி, தூக்கம், எந்தப் பிரக்ஞையும் இல்லாமல் நாட்கள் அப்படியே நகர்ந்தன. அவர து தியானம் சாவைப் பற்றியது. பல நாட்களுக்குப் பிறகு தன் சாவைத் தரிசித்து அனுபவித்தது போல் உணர்ந்தார். தன் இறப்பதாகவும், தன்னுடன் தொடர்பு அறுந்து போவதாகவும் உணர்ந்தார். தன்னை பாரமற்றவராக உணர்ந்து கொண்டார்.

அதன் பிறகு சாவு பற்றிய அச்சமும் இல்லை. இயல்பான நிலைக்குத் திரும்ப இரண்டரை வருடம் ஆகியது. ஒரு உயர் தளத்தில் அவர் இருப்பது போல் உணர்ந்தார். அப்பொழுது காசி விஸ்வநாதருக்குத் தானே அபிஷேகம் செய்தது போன்ற ஒரு உணர்வு தோன்றியது.

அரிச்சந்திரனின் குடும்பத்தைச் சேர்ந்தவர் இந்த சந்நியாசி என்ற பேச்சு பரவ பலர் அங்கே வந்தனர். சிலர் உணவுப் பண்டங்களும் கொண்டு வந்தனர். அது ஞான ஒளி.

சுயத்துடன் இரண்டறக் கலப்பதற்காக அவர் தவத்தின் போது வெவ்வேறு உத்திகளைக் கையாண்டார். ஆனால் வெற்றி பெறவில்லை. பரம ஞானம் கடந்த ஆத்மாக்கள் தமக்கு எதிராகச் சதி செய்வதாக நினைத்தார். அது ஒரு பிரமை.

அப்போது ராஜசேகரன் மரித்தார்.

பரமான ஒளி பெற்ற பிறகு ஸ்தூல உடலியல் தம்மை விட்டு அகன்றதாக அவர் உணர்ந்தார். இந்த உணர்வு கடந்த நிலையிலிருந்து விடுபடுவதற்கே இவருக்குப் பல பிரார்த்தனைகள் ஆயின. அவர் மரத்தடிகளிலும் அமைதியாகவும் தியானம் செய்து ஆன்மசுத்தி செய்தார்.

ஒரு பகலும் அவர் அச்சரப்பாக்கத்தில் கள்ளர் கூட்டத்திற்கு நடுவே என்ன நடக்கிறது என்பது தெரியாமலேயே பல நாட்களைக் கழித்தார். தீவிர தியானத்தில் ஆழ்ந்திருந்தவருக்குத் தன்னைச் சுற்றி சப்தம் கேட்பது கூடத் தெரியவில்லை. இந்த சந்நியாசி யாரிடமும் பேசுவதில்லை என்று எல்லோரும் பேசிக் கொண்டார்கள். அவர், உண்மையைத் தேடுபவர் என்பதையும் அறிய மக்கள் தயங்கினார்கள்.

பல வருடங்களாகப் பேய் பிடித்திருந்ததாகச் சொல்லப்பட்ட ஒரு இருபது வயதுப் பெண்ணை சிலர் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM-இடம் அழைத்து வந்தார்கள். அதுவரையில் அந்தப் பெண்ணின் பெற்றோர் என்னென்னவெல்லாமோ செய்து பார்த்து விட்டார்கள்.

தன்னுடைய சக்தியை அறியாத இவரோ - இதற்கு நாம் என்ன செய்வது என்று நினைத்தார். அவர்

மனக்கண்ணில் ஸ்ரீ ராமானுஜர் தோன்றினார். அவர் சொன்னார்: "ஒரு பிரம்மஞானிதான் இதைச் செய்ய முடியும். அந்தப் பேய் இவரிடம் ஜீவன் முக்தி தீட்சை கேட்டது. தனக்கான இறுதிச் சடங்குகளை இவர் செய்தால் போய்விடுவதாகச் சொன்னது. ஸ்வாமிகள் சென்னைக்குச் சென்று கடற்கரையில் சடங்குகளைச் செய்தார்.

அந்தப் பெண்ணைப் பிடித்திருந்த பேய் அத்துடன் அகன்றது. ஞான ஒளி பெற்ற பத்து மாதங்களுக்குப் பிறகு அவர் நிகழ்த்திய அற்புதம் அது.

அவர் பழனி அருகே, பெருங்கரணி என்ற இடத்தில் சில காலம் ஒரு குகையில் வாழ்ந்தார். எல்லா நாட்களிலுமே அவர் உற்சாகத்துடன் இருந்தார். உணவு உண்ணாத பொழுதிலும், மௌன விரதம் காத்தார். சரியான உடைகளை உடுத்திக் கொள்ளவில்லை.

ஆனால் அவரிடம் ஒரு ஒளி ஜ்வலித்துக் கொண்டே இருந்தது. கண்களிலும் தனி ஒளி தெரிந்தது. தினமும் உள்ளூர்க்காரரான பத்மனாப ரெட்டியார் அவருக்குக் கஞ்சி கொண்டுவந்து தருவார். அதுவே அவரது ஆகாரம்.

பின்னர் ஸ்வாமிகள் சேலத்தில் வசிக்கத் தொடங்கினார். அங்கிருந்து ஈரோடு மற்றும் சுற்றுப்புற ஊர்களுக்குச் சென்றார். பலருக்கு ஞான உபதேசம் செய்தார். பலரை குணப்படுத்தினார்.

இப்பொழுது அவர் பிடாமயில் உள்ள தியான பீடத்திற்கும் பெங்களூர் நகருக்கும் அடிக்கடி சென்று வருகிறார். பெங்களூரிலிருந்து பிடாடி கிட்டதட்ட இருபத்தி ஏழு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது.

கொடிய நோய்களிலிருந்து நிவாரணம் பெற பலர் அவரைத் தேடி வந்த வண்ணம் இருக்கிறார்கள். தியானத்தைக் கற்பித்தல் மற்றும் உலக அமைதியை உருவாக்குதல் ஆகியவற்றிலேயே அவரது காலமெல்லாம் லயித்திருக்கிறது.

அவர் ஆன்மீகப் பாதையைப் பலருக்குக் காட்ட முயற்சி செய்து வருகிறார். தியானம் எப்படி ஒருவரின் வாழ்க்கைப் போக்கினை மாற்றுகிறது என்பதை உலகறியச் செய்ய விழைகிறார்.

தியானத்தின் மூலமாக உடல், மன நோய்களிலிருந்து விடுபடலாம் என்று அவர் போதிக்கிறார். சாதாரணமாகத் தோன்றும் அவர் ஆச்சரியமான மாமனிதர்.

மனதையும் மறுப்பதிலிருந்து உயரமுடியும் என்றும் அதை நீ நம்பவேண்டும். இந்த மறுப்பை உணரும்பொழுது நீங்கள் விடுதலை பெறுவீர்கள்.