உள்ளத்தை நம்பி
உள்ளத்தை நம்பி
அதிசயமொன்று நிகழப்போகிறது என்று உளமார நம்புங்கள். வாழ்க்கையை நேசியுங்கள் உங்கள் சக்தியை நம்புங்கள் உங்கள் உள்ளார்ந்த நற்குணங்களை நம்புங்கள் உயிர்ப்புடன் புத்துணர்ச்சியுடன் எழுங்கள் உலகின் அபாரமான, அற்புதமான அழகைக் கண்டு கொள்ளுங்கள் உங்கள் தனித் தன்மையை நீங்களே கண்டு கொள்ளுங்கள். உங்களை நீங்கள் வியப்பிலாழ்த்துங்கள் முழுமையான நிறைவு உங்களிடம் இல்லை என்பதை ஒப்புக் கொள்ளத் தயங்காதீர்கள் மனிதகுலமே அப்படித்தான் உங்களை நேசிப்பவர்கள் உங்களுக்கு உதவட்டும் நம்ப வேண்டிய அளவுக்கு நம்புங்கள்
இன்றைய பொழுது என்பது நம்முடன் இருப்பது உண்மை என்று உணருங்கள்
உங்கள் வானவில்களை நீங்களே உருவாக்கிக் கொள்ளுங்கள் முடிந்தனவற்றையெல்லாம் செய்து பாருங்கள் அவை அற்புதங்களாயினும் சரி.
அற்புதங்களை எப்போதும் நம்புங்கள் தெய்வீகத்தை அறிந்து கொள்ள விரும்பினால் முகத்தில் காற்றை உணருங்கள் வெப்பக் கதிர்களைக் கையில் உணருங்கள்