Born to HealChapter 10 of 12
Chapter 10

ஒளியைத் தேடி

1 sections

ஒளியைத் தேடி

சொற்களிலிருந்து சொல்லின்மை என்ற நிலைக்குக் கரைந்து போக காலம் என்ற கட்டிலிருந்து காலமின்மை என்ற வெளிக்கு வர பிரகிருதியிலிருந்து சக்தி பெற . . . - ஓ, அதுதான் தெய்வானுபவம் என்பது.

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM.

அவ்வப்போது பாரதத்தாய் பல முனிவர்களைப் பெற்றெடுக்கிறாள். அப்படிப் பட்டவர்களில் ஒருவரான THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அக ஒளியைக் கண்டுகொண்ட ஒரு ஆன்மீக மகான்.

அவர் திருவண்ணாமலையில் ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்தவர். மகாவிஷ்ணுவுக்கும் பிரம்மாவுக்கும் சச்சரவு ஏற்பட்ட காலத்தில் சிவபெருமான் தன் விஸ்வரூபத்தைக் காட்டியது அந்தத் திருத்தலத்தில்தான்.

இந்த நூற்றாண்டில் வாழும் ஒரு ஆன்மஞான முனிவர் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM. சமுதாயத்தில் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்துவரும் அடக்கப்பட்ட பெண்மணிகளுக்குக் குரல்கொடுக்கும் மகான். சிக்கலில்லாத முறையில் தியானம் கற்றுத்தரும் குருநாதர் அவர். மனமும் உடலும் ஒருங்கிணைந்து இசையப்பட ஏழுசக்கரங்களையும் சீராக இயக்கும் வல்லமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று போதிப்பவர். அதற்கு உதவுபவர்.

இங்கே காலவரிசைப்படி நிகழ்ச்சிகள் துறிப்பிடப்படவில்லை. ஏனென்றால் பல பிறவிகள் கண்டவரை, பலவித திறமைகள் விசாண்ட ஒரு மகானைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்வது எப்படி? பலசமயங்களில் ஊனக் கண் காணாதது ஒன்று; ஞானக்கண் உணர்த்துவது வேறு.

இந்தத் திருவுடலில் புகுந்து கொள்வதற்கு முன்பும், புகுந்த பொழுதும் அவருக்கு யாவுமே நினைவில் நின்றிருந்தன.

"இந்த பூமி இருளால் குழப்பட்டிருந்தது. நாற்று மண்டலமும் அமைதியாக இருந்தது. ஒளிமிகு நட்சத்திரத்தைப் பார்த்தேன். உடன் ஒளியும் வெளிப்பட்டது. அப்போது நான் இந்த பூமியில் புகுந்தபடி பிறப்பெடுத்தேன்."

அடுத்து அவர் அவர் கண்டகாட்சி திருவண்ணாமலைக் குன்றில் ஸ்தூல உடலில் புகுந்து கொண்ட பிறகும் அவர் தன் ஞானக் கண்ணால் கண்ட காட்சி அது.

தன் பிறப்பையோ வயதையோ அவர் பொருட்படுத்தவில்லை. காலத்தில் கூட்டுப்படாத ஆன்மா. காலத்துக்குள் காலம் இல்லாதவன் என்று தன்னைப்பற்றி அவர் சொல்லிக் கொள்கிறார்.

அவர் 1978-ஆம் வருடம் ஜனவரி முதல் தேதி, நள்ளிரவு கடந்த சில நொடிகளில் அஷ்டமி திதியில் அருணாசலம் லோக நாயகி தம்பதியருக்கு மூன்று மகன்களில் இரண்டாமவராகப் பிறந்தார். அவருக்கு இடப்பட்ட பெயர் ராஜசேகரன்.

குடும்ப வழக்கப்படி, அவர் பிறந்த பத்தாம் நாள் ஜாதகம் கணிக்கப்படுவதற்காக குடும்ப ஜோசியர் அழைக்கப்பட்டார். அவரது ஜன்ம திதியில் நக்ஷத்திரங்களின் போக்கினைக் கருத்தூன்றி கவனித்த ஜோசியர் கன்யா ராசி, கன்யாலக்னத்தில் பிறந்த இவர் ஒரு நாள் உலக வாழ்க்கையைத் துறந்து ஒரு ராஜ ரிஷியாகி விடுவார் என்று சொன்னார்.

தன் பிள்ளை சந்நியாசியாகிவிடுவான் என்று சொல்லப்பட்ட போதிலேயே மனமுடைந்து போனார்கள் பெற்றோர்.

"இதற்கு ஏதாவது பரிகாரம் உண்டா?" என்று அவர்கள் ஜோசியரைக் கேட்டார்கள். எதுவுமே மாற்றப்படுவதற்கில்லை. தன் ஜாதகம் பற்றி அவருக்குத் தெரியவராவிட்டால் அவர் சந்நியாசியாவது சற்றே தாமதப்படும்; அவ்வளவுதான் என்றார்.

அவர் ஒரு மகத்தான ஜோசியர். "இதுவே நான் கணிக்கும் கடைசி ஜாதகம். இன்னும் 21 நாட்களில் நான் இறப்பேன்" என்றார். அப்படியே இறந்து போனார்.

தன்போக்கில் இவர் செயல்படுவதை, ஞானம் தேடி அலைந்ததைப் பெற்றோர் தடுக்கவில்லை. நள்ளிரவு தாண்டி வீட்டுக்குத் திரும்பியபோதும் கோபப்பட்டு, சலிப்புற்று எந்த வார்த்தையும் சொன்னதில்லை.

அவர்களது சகிப்புத் தன்மையையும் புரிதல் உணர்வையும் ஆழ்ந்த நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறார் அவர்.

அவரது பாட்டி தனகோடி அம்மாள் கோயில் வாசல் அருகே இருந்த கடையிலிருந்து ஒரு கடவுள் விக்ரகத்தை வாங்கி வருகிறார். சிறுவனாக இருந்த பொழுது அவர் களிமண்ணால் கடவுள் திருவுருவங்களை மகிழ்வுடன் செய்து வந்தார்.

கோயிலில் பார்த்தபடி தான் செய்த விச்ரகங்களை அலங்கரித்தார். பாட்டி தன் நகைப் பெட்டியைத் திறந்த பொழுதெல்லாம் எந்த நகையும் அவரைக் கவரவில்லை. அவரை ஈர்த்தது ருத்ராக்ஷமே. பாலபருவத்தில் பொன்னும் மணியும் அவரை அசைத்துவிடவில்லை என்பது ஒரு விசித்திரமே.

கடவுளிடம் உங்கள் பிரச்சினைகள் பெரிதென்று சொல்லாதீர்கள். உங்கள் பிரச்சினைகளிடம் சொல்லுங்கள் கடவுள் பெரியவர் என்று.

உரிய வயதில் ராஜசேகரன் பள்ளிக் கூடத்தில் சேர்க்கப்பட்டார். ஒரு சாதாரண மாணவனாகக் கல்வி கற்று வந்தார். ஒரு நாள் தாமதமாக வந்த காரணத்தினால் ஆசிரியரின் அனுமதி வேண்டி வகுப்புக்கு வெளியே நிற்க வேண்டியதாயிற்று. அந்த வகுப்பில் அவரது கணித ஆசிரியர் கோவிந்தராஜ் மேஜையில் குனிந்தபடி ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். திடீரென்று ஏதோ மாயக் காட்சியைக் கண்டது போல் உணர்ந்து ராஜசேகரன் பக்கம் ஆசிரியர் திரும்பிப் பார்த்து வணக்கம் தெரிவித்தார். வகுப்புகள் முடிந்த பிறகு அவர் ராஜசேகரனைத் தன் வீட்டிற்குச் சாப்பிட அழைத்தார். அது சாதாரண நிகழ்ச்சிதான். சபரிமலை செல்ல மாலைபோட்டுக் கொண்டிருப்பவர்களை உணவருந்த தங்கள் வீட்டுக்கு அழைப்பது ஒரு சம்ப்ரதாயம்.

மாணவன் ராஜசேகரன் தன் வீட்டில் நுழைந்ததும் ஆசிரியர் அவர் காலில் விழுந்து "நீங்கள் எங்கள் குருநாதர்," என்றார். ராஜசேகரனிடம் சுவாமி ஐயப்பனைக் கண்டார் ஆசிரியர் கோவிந்தராஜ். "என்றும் நான் தங்கள் சிஷ்யன்" என்றும் சொல்லிவிட்டார். அன்றிலிருந்து ஆசிரியர் ராஜசேகரன் வகுப்புக்கு வெளியே ரிஷியாக வந்தாலும் கண்டுகொள்ளாமல் இருந்தார். இதனால் வகுப்பறைக்கு வெளியே ஞானம் தேட ராஜசேகரனுக்கு நிறைய அவகாசம் கிடைத்தது. பள்ளிக்கு ஒழுங்காகச் செல்லாவிட்டாலும் 75 சதவீத மதிப்பெண்களைப் பெற்றார் அவர்.

தன்னை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு அழைத்துச் சென்று அங்கே கண்ணப்பர், மார்க்கண்டேயன், பிரகலாதன் போன்ற மகான்களின் கதைகளைச் சொல்லிய தாய் வழிப்பாட்டனாரையும் அவர் நினைவுகூர்கிறார். அதுமட்டுமல்ல அன்னை அபிதகுஜாம்பாள் சந்நிதியை அடுத்த அஷ்டலக்ஷ்மி மண்டபத்தில் இருந்த கல் தூண் சிற்பங்கள், ஓவியங்கள் இலைபற்றியெல்லாம் பாட்டனார் விளக்கம் தெரிந்துவைத்திருக்கிறார்.

அவரது பாலபருவத்தில் இவையெல்லாம் சிறந்த சரியான இறையியல் போதனைகள் ஆயின. அதனால் பெரிதும் கவரப்பட்ட அவர் வீட்டுக்குச் சென்றதும் பள்ளிக் கூட நோட்டுப் புத்தகத்தில் "என்று நான் ஒரு மார்க்கண்டனாவேன்? என்று நான் ஒரு கண்ணப்பன் ஆவேன்?" என்று எழுதி வைத்தார். வெகு வித்தியாசமாக ராஜசேகரனுக்கு பால பருவத்திலேயே சந்நியாசிகளின் பழக்கம் கிடைத்தது. அவர்களுடன் ஒரு இணக்க பாவம் உருவானது. வீட்டில் அரிசி, புளி, மிளகாய், உப்பு ஏதாவது காணாமல் போனால் சந்நியாசிகளுக்காக அவற்றை எடுத்துச் சென்றது ராஜசேகரன் என்பது குடும்பத்தாருக்குப் புரிந்தது. சந்நியாசிகள் சமைத்துச் சாப்பிடுவதற்காக அவற்றைக் கொடுப்பது ராஜசேகரனின் வழக்கம். சில நாட்கள் அவரே காணாமல் போனபொழுதும் சந்நியாசிகளுடன் சென்றிருப்பார் என்பதை வீட்டில் புரிந்து கொண்டார்கள். உங்களுக்குத் தெரியாமலேயே உங்களை வந்தடையும் அருளுக்கு நன்றி செலுத்துங்கள்.

நம்பிக்கை என்றால் என்ன?

  1. அச்சம் வழித்தல்.

  2. கோபம், துன்பம் அறுத்தல்

  3. கற்றுக் கொள்ளல், கடவுளைத் தொழுதல்

  4. கடவுளை நம்புதல்

  5. பிணி தீர்த்தல்

வீட்டில் புறக்கடைக் கொட்டகையில் அவர் பொழுதைக் கழித்தார். நேரம் போவது தெரியாமல் இறைவனுக்கு பூஜைகள் செய்து வந்தார். மணியடித்து, கற்பூரமேற்றி பூஜை செய்தபொழுது குடும்பத்தார் அதில் கலந்து கொள்ள வேண்டும் என்று பணித்தார். எல்லோரும் அவர் போக்கின்படியே நடந்து கொண்டார்கள். அவரது பால பருவம் கூட்டுக் குடும்பத்தில் கழிந்ததனால் அங்கே அமைதியும் சண்டை சச்சரவுகளும் உண்டு.

பத்து வயது முதல் பதினாறு வயது வரையிலான துடிப்பான பருவத்தில் அவர் சொல்லையற்ற சக்தியுடனும் மன உறுதியுடனும் இருந்தார். அப்பொழுது மரப்பாதுகைகளை அணிந்து நடப்பதற்குப் பிரியப்பட்டார். நடந்தார், கடுங்கோபக்காரராக இருந்தார். அண்ணன் தம்பிகள் மீது கண்களில் பட்ட பொருட்களை வீசியெறிந்தார். அவர்களும் பதிலுக்கு எறிய வரும்போது பருவத்தின் மேற்புறம் காயம் ஏற்பட்டது. அதன் வடுவை இன்றும் காணலாம். இதனால் குடும்பத்தின் அமைதி கெட்டுப்போனது. "ராமகிருஷ்ணர் ஒரு சிறு பையன்; பிசாசு, அத்துடன் வரு பைத்தியமும்கூட இந்த மூவரும் சேர்ந்த ஒரு பிறவி. இந்த மூவரின் மனப்பாங்கை, விஷயல்பாட்டை ஊகிக்க முடியுமோ?" என்று சொல்லும் ஸ்வாமிகள் இந்த மூன்றும் சேர்ந்து நல்லபடியாக மாறியதையும் குறிப்பிடுகிறார்.

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் சீடர்களில் ஒருவரான அண்ணாமலை ஸ்வாமிகள் ஒருமுறை சில வெளிநாட்டவர்களுக்கு ஏதோ உபதேசம் செய்து கொண்டிருந்தார். பக்கத்தில் இருந்த ராஜசேகரன் அதைக் கேட்க நேர்ந்தது. அண்ணாமலை ஸ்வாமிகள் சொன்னார்: 'நான் சரீரமல்ல. ஆத்மா."

ராஜசேகரன் அதுபற்றியே அதிகம் சிந்தித்தார். உடனே அவருக்கு ஒரு எண்ணம் தோன்றியது. "நான் சரீரமல்ல, ஆத்மா" என்றால் என்னை நான் வெட்டிக் கொண்டால் வலிக்காது அல்லவா?" என்று சிந்தித்த ராஜசேகரன் கத்தியால் தொடையை வெட்டிக் கொள்ள காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. வலியை உணர்ந்தார். வலியைப் பொறுத்துக் கொண்டது போக, தாயார் திட்டியதையும் சேர்த்துத் தாங்கிக் கொள்ள வேண்டியதாயிற்று. இதனால் ஏமாற்றமடைந்து மனம் நொந்துபோய் அத்திரத்துடன் அண்ணாமலை ஸ்வாமிகளைச் சந்தித்து அவரிடம் தன் காயத்தைக் காண்பித்தார். அவர் சொன்னது உண்மையல்ல என்று வாதிட்டார். யோகி விளக்கமளித்தார். ஆனால் அது போதுமானதாக இல்லை. எனினும் ராஜசேகரனுக்கு ஒன்று புரிந்தது. அதாவது தன்னால் புரிந்து கொள்வதற்கும் மேலாக ஏதோ இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டார். தானே தன்னுள்ளேயே தேடிக் கண்டுகொள்ள வேண்டும் என்பதும் தெளிவாகியது. அதுதான் அவரது ஆன்ம நாட்டத்தின் முதல்படி எனலாம். அதன் பின்னர் அவர் முழுமையாகவே ஆன்மீகத்தில் திளைக்க ஆரம்பித்துவிட்டார்.

அப்பொழுதிலிருந்து அவர் வெகுநேரம் கோவில்களிலும் கோவில்களுக்கு வெளியேயும் சென்று வந்தார். அப்பொழுது பர்மாவைச் சேர்ந்த ரகுபதி யோகி என்பவர் அவருக்கு அறிமுகமானார். ரகுபதி யோகி ராஜசேகரனை அழைத்து, தினமும் கோயிலுக்கு வந்து தன்னிடம் "போகர்" கற்றுக் கொள்ளச் சொன்னார். கற்றுக் கொடுத்தார். ராஜசேகரன் பின்னாளில் ஒரு பெரிய துறவியாவார் என்று ஆருடம் சொன்னார்.

"சங்கு எப்படி வந்தது?" என்று ராஜசேகரன் கேட்க, யோகி கையைத் தட்டினார் - வெறுங்கையிலிருந்து ஒரு சங்கு வந்தது. அதை ராஜசேகரனுக்கு ஆசிர்வதித்துக் கொடுத்து விட்டுச் சொன்னார்: "இதோ பார், இதை நான் உனக்காகவே உருவாக்கினேன்," என்றார். ராஜசேகரன் அந்தச் சங்கில் பதியப் பட்டிருந்த தேதியைப் பார்த்து விட்டுச் சொன்னார்: "இது எனக்காக உருவாக்கப்பட்டது என்றீர்கள். ஆனால் இதில் நேற்றைய தேதி அல்லவா இருக்கிறது?" என்று கேட்டார். "நீ சொல்வது சரிதான். ஆனால் இதை நான் வீட்டிலிருந்தல்லவா இங்கே கொண்டு செய்தேன்," என்றார். அது ராஜசேகரனுக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாயிற்று. பஞ்ச பூதங்களுக்கு அப்பாலும் உலகில் சில விஷயங்கள் உள்ளன என்பதை ரகுபதி யோகி ராஜசேகரனுக்கு எடுத்துச் சொன்னார்.

ஒருமுறை ரகுபதி யோகி ஒரு புகைப்படக் கலைஞரை அழைத்து இளம் ராஜசேகரன் ஒரு மான் தோலின் மீது அமர்ந்திருப்பது போலப் புகைப்படம் எடுத்துத் தரச் சொன்னார். புகைப்படமெடுத்து ஆசான் யோகா சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும் போது ராஜசேகரன் கேட்டார்: "ஏன் அப்படிச் செய்தீர்கள்?"

"நாம் பறக்கலாமே என்றுதான்" என்று சொன்னார். அதிர்ந்துபோனார் ராஜசேகரன். எனினும் மான் தோலின் மீது அமர்ந்திருந்த யோகி அந்த ஆசனத்துடன் அரையடி மேலே எழும்பி இருந்தார் சில கணங்கள். ராஜ சேகரனுக்கு நம்பிக்கை வருவதற்காக யோகி அதைச் செய்தார். யோகி வலுவான, காத்திரமான மனிதர். மார்பைச் சுற்றி இரும்புக் கம்பியைக் கட்டினால் அவர் மூச்சை இழுத்து வெளியிடுவதன் மூலமே கம்பியை அறுத்தெறிந்து விடுவார். சில சமயங்களில் ஒரு குழாயையோ, அல்லது பச்சைப் பாம்பையோ மூக்கில் நுழைத்து வாய்வழியாக வெளியே எடுப்பார். சுற்றியிருந்து பார்ப்பவர்கள் அவற்றைப் பைத்தியக்காரத்தனம் என்றாலும், அவை மந்திரமல்ல, தந்திரமல்ல அவரது சாமர்த்தியமான செயல்பாடே. இது ராஜசேகரனுக்கு நன்றாகப் புரிந்தது. அதனால் மேலும் அவரிடம் பாடம் கேட்டுக் கொண்டார்.

சாதாரணமாக அப்போது பத்து வயது மாணவர்கள் திருவண்ணாமலை கோயிலுக்குச் செல்லும் பொழுது சின்ன நந்திக்கு எதிரே உள்ள சந்நிதியில் அமர்ந்திருக்கும் யோகி ராம் சூரத் குமார் அவர்களை வணங்கி, "சாமி, நான் இந்தப் பரீட்சையிலே தேறி விடுவேனா?" என்று கேட்பது வழக்கம். கையில் தேர்வு எழுதும் அட்டைகளுடன் அப்போது அங்கே மாணவர்களைப் பார்க்கலாம். யோகி ராம் சூரத்குமார் சில சமயம் ஏதாவது சொல்வார். அது காதில் விழாது, விழுந்தாலும் புரியாது. சில சமயங்களில் ராம், ராம் என்பார். வேறு சில வேளைகளில் "போய், வா" என்பார். ஒருமுறை ராஜசேகரன் வணங்கியபொழுது யோகி சொன்னார்: "நீ வாழ்க்கைப் பரீட்சையில் தேறிவிடுவாய்."

அந்தக் காலகட்டத்தில் ராஜசேகரனுக்கு அந்த வாசகத்தின்பொருள் பிடிபட வில்லை. ராஜசேகரன் விளக்கம் கேட்டார். யோகி சொன்னார்: போ, போ, இப்போதைக்கு இது புரியாது; போகப் போக இந்த வார்த்தைகளை மறக்க மாட்டாய்," என்றார். THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM இன்றளவும் அந்த வார்த்தைகளை நினைவில் வைத்திருக்கிறார்.

யோக சாதனை செய்வதில் கோடை விடுமுறையை ராஜசேகரன் கழித்தார். சில சமயங்களில் அவர் சுடுகாட்டிலும் தியானம் செய்தார். அதைப் பார்த்த சிலர் இரவில் சுடுகாட்டுப் பக்கம் அவர் தென்பட்டதாகப் பெற்றோரிடம் சொல்லியிருக்கிறார்கள். அவர் வீடு திரும்பியபோது பெற்றோர் கேள்விகள் எதுவும் கேட்டதில்லை. "நான் தியானம் செய்து கொண்டிருந்தேன், என்று அவராகச் சொல்வார்.

அவர்கள் கேட்டுக் கொள்வார்கள். ஏன் தியானம்? எங்கே தியானம்?" என்று ஒருநாளும் கேட்டதில்லை. அது அவர்கள் இயல்பு. "சரி இவருக்கு நாம் வெறும் காப்பாளர்கள் மட்டும்தான்," என்று நினைத்திருக்கலாம். ஒரு வேளை அன்று அவர்கள் ராஜசேகரனைத் தடுத்திருந்தால் இன்று ஆயிரக் கணக்கானவர்கள் ஒரு நல்ல வழிகாட்டியை இழந்திருக்கக்கூடும்.

ஒருமுறை, 1994-அம் வருடத்தில் அவர் குளித்துக் கொண்டிருந்த பொழுது யாரோ கதவைத் தட்டும் சப்தம் கேட்டது. அடுத்துக் கேட்ட குரல் "உனக்குத் தெரியுமா, இன்று உன் பதினோறாவது பிறந்த நாள்." அதைக் கேட்ட மாத்திரத்தில் அவர் திகிலில் உறைந்து போனார். ஆம் தன் பதினாறாவது வயதில் மார்க்கண்டேயன் போலாக வேண்டும் என்று உறுதிபூண்டிருந்தாரே, அது என்னவாயிற்று?" குளியலறைக்குள் அவரது கண்ணீர் ஆறாகப் பெருகியது. மன உளைச்சல் தொடங்கியது. மார்க்கண்டேயன் கதை மனதை விட்டு அகலவில்லை.

ஞான ஒளித்தேடல் மீண்டும் தொடங்கியது. அந்தக் காலகட்டத்தில் அவரது தந்தை வழிப்பாட்டியின் தோழி குப்பம்மா அவருக்கு ஆதர்சமாக விளங்கினார் என்று சொல்ல வேண்டும். ஒருமுறை அவர் ராஜேஸ்வரி தேவியாகவே காட்சி தந்தார். அவரை ஒரு சமயப்

பற்றாளர் என்று சொல்லமுடியாது. எனினும் ஆவி மீ கவாதி எனலாம். கோயில்களுக்கும் சடங்குகளுக்கும் அப்பால் இருக்கிறது ஞானப்பாதை ர்து என்பதைக் குப்பம்மா உணர்த்தினார். கோயிலுக்குச் செல்வது மூடத்தனம் என்று முதன் முதலாக ஒருவர் சொல்லிக் கேட்டது அப்பொழுதுதான். ஆண்டவன் நெஞ்சக் கோயில்களில் உறைகிறார் என்றார் அவர். நாம் நடமாடும் கோயில்களிலே அண்டவனைத் தேடவேண்டும் என்று அறிவுறுத்தினார் அவர். முதலில் இவை புதிர்கள் போலத் தோன்றினாலும் அந்த அம்மையார் விளக்கம் அளிக்க அளிக்க ராஜசேகரன் அவற்றைப் புரிந்துகொள்ளலானார்.

பதினான்கு வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமியர் வேதாந்தத்தை எளிதாக அறிந்து கொள்ள முடியும் என்று விவேகாநந்தர் சொன்னதை, ஞான மார்க்கத்தை, இந்தத் தருணத்தில் சொன்னார் அவர்.

ஸ்வாமிகள் சொல்கிறார்கள், சிரவணம், மனனம், நிதித்தியாசனம், நித்யானந்தம். உண்மையைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் முதலில் நாம் கேள்விகள் கேட்க வேண்டும். பிறகு பதில்களை கவனத்துடன் கேட்டுக்கொள்ள வேண்டும். பின்பு அதிலேயே ஆழ்ந்துவிட வேண்டும். அதைப் புரிந்து கொண்டோமானால் நம் செயல்பாட்டில் அது வெளிப்படும்.

இதை ஸ்வாமி விவேகாநந்தர் மேலும் எளிமையாகச் சொல்கிறார். பதினான்கு வயதுக்குட்பட்டவர்கள் ஒரு சத்குருவிடமிருந்து போதனைகள் பெறவேண்டும். அவர்கள் தியானம் செய்ய வேண்டிய அவசியமில்லை. நேரடியாக அவர்களை நித்யானந்த நிலைக்கே சென்று விடலாம். ஏனென்றால் பதினான்கு வயது வரையிலும் குழந்தைகளுக்கு ஒரு அருள் இருக்கிறது. அவர்கள் வேறு உலகத்து மலர்கள்; இன்னும் இங்கே கொய்யப்படவில்லை. அவர்கள் காயாக, கனியாக இன்னமும் காலம் இருக்கிறது. ஆனால் பதினான்கு வயதுக்குப் பிறகு சிறுவன் வாலிபனாகிவிடுகிறான். முதிர்ச்சி படியத் தொடங்குகிறது. அதுதான் அப்பொழுது ராஜசேகரனுக்கு ஏற்பட ஆரம்பித்தது. குப்பம்மா ஞான உபதேசங்களைச் சொல்லச் சொல்ல ராஜசேகரன் அவற்றில் ஆழ்ந்து போனார். ஆழ, ஆழ மேலும் மேலும் தேட வேண்டும் என்ற வேட்கை உண்டாயிற்று.

இந்தக் கால கட்டத்தில்தான் அவர் கடவுள், மனிதர்கள், உண்மைகள் என்பது பற்றியெல்லாம் சிந்திக்கலானார். முன்னைய முனிவர்கள் சொன்ன தெல்லாம் சரியே; அவர்கள் தங்கள் வாழ்க்கையை வீணடிக்கவில்லை என்பது அவருக்குப் புரிந்தது. பாரதத்தின் ஆதாரமே ஆன்மீகம் தான் என்பதையும் உணர்ந்து கொண்டார்.

அந்தக் கால கட்டத்தில் அவர் மலையில் அமர்ந்துதான் தியானம் செய்து கொண்டிருந்தார். பறவைகள், பருவகாலங்கள், மிருகங்கள் சகிதமாவற்றுடன் இயைந்த தியான வாழ்க்கை வாழ்ந்தார். ஒருமுறை ஒரு பாறையின் மீது அமர்ந்திருந்தபோது "நான் யார்?" என்று தன்னைத் தானே கேட்டுக்கொண்டார். அது தன் சுய விசாரணை கூ நிலை. அப்பொழுது அவர் ஞான விழித்தலின் வசப்பட்டார். 'நான்' என்பதன் விசாரணை அப்பொழுது அவருக்குப் புலப்பட்டது. பல மைல் கணக்கில் நடந்து சென்ற பிறகு குளிர்ந்த ஏரியில் குளிப்பது போன்ற அனுபவமாக அது அமைந்தது.

குளிர்ந்த நீரின் தன்மைக்குத் தயாராகாத கால்களால் முதலில் ஒரு சிலிர்ப்பு ஏற்படுகிறது. அது உடம்பையும் தூக்குகிறது. ஆனால் நேரம் செல்லச் செல்ல சிலிர்ப்பு, தன்னெஞ்சீ ரின் வண்ணம், அமைதி, காற்றின் சலசலப்பு இவற்றையெல்லாம் உணரும்பொழுது வேறு ஒரு கிரகத்தில் மிதப்பது போல உணரலாம்.

இந்த முதல் அனுபவம் அவருக்கு ஒரு கார்த்திகை மாதப் பௌர்ணமியன்று சித்தித்தது. அன்று விசாக நக்ஷத்திரம். அந்த அனுபவம் பற்றி அவர் சொல்கிறார்: "என்னைச் சுற்றி என்னையே சுற்றிப் பார்த்தேன். கிரகங்களில், மலைகளில். மரத்தில், மிருகங்களில். என் உடல் நெடுக என்னை நான் பார்த்துக் கொண்டேன். எங்கும் என் பிம்பங்கள் தென்பட்டன. என்னைச் சுற்றி,

எனக்குப் பின்னாலும் என் பிம்பங்களை நான் பார்த்தேன். மேலே, கீழே, இடது புறம், வலது புறம் எங்கும், எங்கும் என் பிம்பங்கள்."

அந்த க்ஷணத்தில் அதற்கும் ஆழமாக நான் என்பதை அறிந்து கொள்ள முடியாது என்பதை உணர்ந்து கொண்டார். இந்த உணர்வு கலைந்ததும் அவர் அசைவின்றி அமர்ந்து கொண்டார். மூன்று நாட்கள் அனந்தம் ஒரு ஜூரம் போல அவரிடம் விரவிப் பரவியது. பின்னர் இந்த உவகையும் கலைந்தது. சிறிது சிறிதாக அச்சம் நுழைந்தது.

அவர் அதுவரை அனுபவித்திராத அச்சம் அது. அந்த அனுபவத்தை அவர் எதிர்பார்க்க வில்லை. மலையிலிருந்து வேகமாக இறங்கி குப்பம்மாவைத் தேடிப் போனார். தன்னை ஆட்கொண்ட உணர்வு பற்றிச் சொன்னார். மீண்டும் அந்தப் பாறைக்குப் போகப் போவதில்லை; சென்றால் அதே உணர்வு தன்னை ஆட்கொள்ளக்கூடும் என்றார். குப்பம்மா அவர் கைகளைப் பிடித்தபடி அச்சங்களை அகற்றினார். அவரை எந்த துர்சக்தியும் பீடிக்கவில்லை, அவரை அப்போது ஆட்கொண்டது கடவுளே என்பதை விளக்கினார்.

அவர் மீது அன்பும் இரக்கமும் கொண்ட குப்பம்மா, மீண்டும் அவர் எதற்கும் பயந்துவிடலாகாது என்ற எண்ணத்தில் மூன்று

நாட்கள் தானே சமைத்து உணவளித்தார். ஆனால் அந்த அனுபவத்தை அவர் மறக்கவில்லை. அந்து பாறையை நினைத்தால் பயப்படலானார். ஒரு நாள் அவரைப் பாறையில் அமர்த்தி ஜே ஜே எடுத்தார் குப்பம்மா. அவருக்காக அங்கே ஒரு ஆசிரமம் அமைத்துக் கொடுத்தார். ஆசிரமத்தையும் படத்தையும் அவரிடம் ஒப்படைத்த குப்பம்மா, "ஒரு நாள் இதைப் புரிந்து கொள்வாய்; இதன் மதிப்பை உணர்ந்து கொள்வாய்," என்றார். இன்று தியான பீடத்தின் அந்த திரையாக இயங்குகிறது அந்த ஆசிரமம்.

அந்த சிலிர்ப்பான அனுபவம் பற்றிய அவர் நினைவு இன்னமும் தெள்ளத் தெளிவாக இருக்கிறது. வழக்கம்போல் அலைந்து திரிந்து மாலையில் ஓய்வு எடுக்கும் காலத்தில் ராஜசேகரன் அந்த பாறையின் மீது அமர்ந்து கொண்டார். காலம் காலமாக இருந்துவரும் அந்தப் பாறையில் ஒருவர் அமர்வதற்கு ஆசனம் வடித்ததுபோல் ஒரு பிளவு இருந்தது அதன் மீது அமர்ந்து அவர் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். இயற்கை அழகை ரசித்தபடி தூய்மையான காற்றைச் சுவாசித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது வெளிச்சம் கொஞ்சம் மங்கியிருந்தது. ஒரு முதியவர் அவரை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார். தனியாக இங்கே இந்த மனிதர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? ராஜசேகரன் யோசித்துப் பார்த்தார். அடுத்த சில நிமிடங்களில் அந்த

மனிதர் பத்தடி தொலைவிற்குள் வந்து விட்டார். அப்போது ராஜசேகரன் பாறையிலிருந்து கீழே குதித்து அவர் எதிரே நின்றார். "இங்கே என்ன செய்கிறீர்கள்? என்று கேட்க நினைத்தார். ஆனால் குதித்த பின்பு கால்கள் தரையில் பட்டதும்தான் எதிரே நின்ற உருவத்தை தீர்க்கமாகப் பார்த்தார். அவருக்கு மூச்சே நின்றுபோனது போல் ஆயிற்று.

ஆம், எதிரே நின்றது ஒரு கரடி இரண்டு கால்களில் நின்று கொண்டிருந்தது. வியர்வையில் உடல் நனைந்தது. கொஞ்சம் பின்னே நகர்ந்தார். ஒரடி தொலைவில் அந்தப் பாறை முட்டுவது போல் இருந்தது. கரடி குனிந்து நான்கு கால்களால் நகர்ந்தது. ராஜசேகரன் யோசித்தார் - "சரி இன்று நான் இந்தக் கரடிக்கு உணவாகப் போகிறேன்" என்று. கரடி நேராக அவரது கண்களையே பார்த்தது. இடதுபக்கம் திரும்பியது. பிறகு வலதுபக்கம் திரும்பியது. அதன் பின்னர் மெதுவாகத் திரும்பி நடந்தது. இந்த இளைஞர் ஒரு இலட்சியத்திற்காக வாழ்கிறார் என்பது அந்தப் கரடிக்குப் புரிந்ததோ என்னவோ? அல்லது அந்தக் கரடிக்குப் பசிக்கவில்லையோ, என்னவோ, தெரியாது.

திருவண்ணாமலையை வழக்கமாக அவர் நடந்தே சுற்றிவருவதுண்டு. ஒருநாள் ஒரு புத்தகத்தில் இருந்த கவிதைகளில் லயித்தபடியே

நடந்து கொண்டிருந்தார். ஏதோ சரியில்லை என்பது அவரது உள்ளுணர்வு உணர்த்தியது. அந்த ஐந்து கொடிய புலிகள் ஒன்றாக வந்து பிளிற ஆரம்பித்தன. கண்களை அகலத் திறந்தபடி. நடுங்கிப் போனார் ராஜசேகரன். பொதுவாக அப்புலிகள் கொலைகார மிருகங்கள். அவர் ஸ்தம்பித்து போனார். பேச்சு வரவில்லை. சத்தம் போட்டுக் கத்தினாலும் அதைக் கேட்டு உதவிக்கு எவரும் வருவார்கள் என்று சொல்ல முடியாத சூழ்நிலை. வேறு எதுவும் தோன்றாததனால் அசையாமல் கால் அழுந்த நின்றார்.

அவர் உள்ளத்திலிருந்து வெளிப்பட்டது "அருணாச்சலா" என்ற வார்த்தை. எங்கிருந்தோ ஒரு உரத்த குரல் கேட்டது. ஒரு முதியவர் கையில் விளக்கைக் எடுத்துக் கொண்டு அந்த மிருகங்களை எரிச் டினார். அவை பயந்து ஓடின. வாழ்ந்து வழிகாட்ட வேண்டும் என்பதற்காக இந்த இளைஞர்கள் அப்போது காப்பாற்றப்பட்டாரோ என்னவோ?

தியானம் செய்ய அடிக்கடி ராஜசேகரன் மாலைப்பகுதிக்குப் போவார். அங்கே உள்ள அமைதி, இயற்கைச் சூழல், நீலவானம், எல்லாமே அவருக்குப் பிடிக்கும். உடலைத் தாண்டி மனம் லயிக்க உதவும் இடம் அது. தொடர்ந்து சில நாட்கள் மலைப்பகுதிக்குச் சென்று தியானம் செய்து வந்தாலும் வேண்டியபடி அவர் ஞானம் பெற முடியவில்லை. கோபத்தில் இனி மிகவும் கடுமையான தவத்தை மேற்கொள்வது என்று முடிவு செய்தார். தன்னைச் சுற்றித் தீ வளர்த்துக் கொண்டு தலைக்கு மேலும் ஒரு தீச்சட்டியை வைத்துக் கொண்டார். சுற்றியுள்ள தீ அணைந்து விடாமல் இருக்க, தீ வளர்க்க, சில சிறுவர்களை அங்கே அமர்த்திக் கொண்டார். சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை இவ்வா று செய்தார். இப்படிச் செய்தாக வேண்டுமா என்று சிலர் கேட்டார்கள். வெளித் தீ சுடுகிறது என்றாலும் ஞானத்தால் நாட்டம் கொண்ட அகத் தீ என்னை மேலும் அதிகமாகச் சுடுகிறது என்று பதில் சொன்னார். ஆனால் இந்த முறை தன்னால் மனத்தைக் கட்டுப்படுத்தமுடியும் என்பதை உணர்ந்து கொண்டார். அது ஒரு ஆன்ம நாட்ட வளர்ச்சி என்பது புரிந்தது. தன் உடலை அவர் ஒரு வாளாக பாவித்துக் கொண்டார். ஆன்மப் புரிதலுக்கு உகந்த உத்தி அது. திருஷ்டி என்பது தீர்க்கப்பார்வை. சிருஷ்டி என்பது கடவுளின் படைப்பு இவையெல்லாம் என்ன என்பதும் புரிந்தது. "என் படைப்புகள் நெடுக என் கனவுகள், கனவும் நனவு, இச்சா சக்திக்கும், கிரியாசக்திக்கும் இடைவெளி இல்லை, இடையில் எதுவும் இல்லை என்பதும் புரிந்தது." என்றார் அவர்.

தமிழ் நாட்டில் குடியாத்தம் நகரில் ஒரு தொழிற்பள்ளியில் - பாலிடெக்னிக்கில் படித்த ராஜசேகரன் அதிக மதிப்பெண்கள் பெற்றுத்

தேறினார். அப்போது அவர் மாணவர் விடுதியில் தங்கினார். மற்ற மாணவர்களுடன் அவரால் இயல்பாகப் பழக முடியவில்லை. உணர்வுகள் மழுங்கடிக்கப் பட்டிருந்தது. பார்த்தால் ஒரு சமூகவிரோதி போல் தெரிந்தார். அடிக்கடி தியானத்தில் ஆழ்ந்து போவார். அதைப் பலர் விமரிசனம் செய்த துள்ளடு. சிலர் கேலி செய்திருக்கிறார்கள், "ஏன் எங்களுடன் வெளியே வரமாட்டேன் என்கிறாய்? அப்படியெல்லாம் தியானம் செய்து என்ன பலன் கண்டாய்?" என்று சக மாணவர்கள் கிண்டல் செய்திருக்கிறார்கள். கோபத்தில் அவர் ஒரு நாள் சொன்னார்: "இதனால் ஏதோ வரும். ஒருநாள் என்னிடம் ஆசிர்வாதம் வாங்க நீங்கள் வரிசையில் நிற்கப்போகிறீர்கள்." அது ஏதோ உத்வேகத்தில் சொன்ன வார்த்தையே ஒழிய, தான் இப்படி வரப்போகிறோம் என்று அவர் அப்போது எதிர்பார்த்ததில்லை. ஆனால் அந்த வார்த்தைகள் உண்மையாயின. அதே மாணவர்கள் அவரிடம் ஆசிர்வாதம் வாங்கினார்.

தான் பதினேழாம் வயதில் ஞான வேட்கையாய் வீட்டைத் துறந்து செல்வதாக அவர் அறிவித்த போது ஆறுதல் சொல்லப்பட முடியாத அன்புடன் அவரது தாயார் அழுதார். வருந்தினார்களே ஒழிய அவரது பெற்றோர் அவரைத் தடுக்கவில்லை. ராமகிருஷ்ண மடத்து விதிப்படி இந்த இளைஞர் இனி வீடு திரும்ப மாட்டார் என்பதை அவரும் அவரது பெற்றோரும் உத்தரவாதமாக எழுதிக் கொடுக்க வேண்டும். அப்படிச் செய்தார்கள். ராமகிருஷ்ண மடத்தில் ராஜசேகரன் சாஸ்திரங்களைப் படித்தார். படிப்பில் பெருத்த ஈடுபாடு கொண்டார். ஒருமுறை இடைவிடாமல் பத்துமணி நேரம் படித்து 600 பக்கப் புத்தகத்தை முடித்தார். ராமகிருஷ்ண ஜயந்தி முடிந்த மூன்று நாட்களில் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸரும் ஸ்ரீமதி சாரதா தேவியும் அவர் சிரசில் கைவைத்து ஆசிர்வாதம் செய்தது போல் உணர்ந்தார்.

எப்போதும் அவர் மடத்தின் விதிகளைப் பின்பற்றியதாகத் தெரியவில்லை. அவரது சுதந்திர உணர்வு ஏற்கெனவே சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தது. முக்தியடைந்த ஜீவன்களுடன் சஞ்சரிக்க எந்த தண்டனையையும் ஏற்கலாம் என்று தோன்றியது. திஷ் நட் ஹன் என்ற ஒரு புத்த பிட்சு ஜென் வழியில் நடந்து வருவதாகவும், அவர் அருகில் இருக்கிறார் என்பது தெரியவந்தவுடன் யாருக்கும் தெரியாமல் அவரைப் பார்க்க வெளியே சென்றார். அந்த புத்தபிட்சு அடையாறில் பிரம்ம ஞான சபையின் விருந்தினராக வந்திருந்தார். ஸ்வாமிகள் அந்த புத்த பிட்சுவின் பாதங்களில் பணிந்ததும் அவர் எழுந்து நின்று, இவரைத் தூக்கி நிறுத்தி அணைத்துக் கொண்டார். பிற சந்நியாசிகளுடன் அவரையும் அமர்த்த விரும்பிய புத்த பிட்சு,

அவரை அந்த வரிசையில் எந்த இடத்தில் அமர்க் துவது என்பதைத் தெரிந்து கொள்ள எத்தனை வருடங்கள் சந்நியாசியாக இருந்திருக்கிறார் என்று கேட்டார். அதன்படி அமர்த்தினார்.

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸரைத் தவிர ராஜசேகரனைப் பார்த்தவர்கள் ஸ்வாமி சிவானந்தரும் ரமண மகரிஷியும்.

பாரதம் நெடுக ஸ்வாமிகள் பயணம் செய்திருக்கிறார். கங்கோத்ரியில் உற்பத்தியாகும் கங்கை நதியிலிருந்து ராமேஸ்வரம் வரை இவர் பயணம் செய்திருக்கிறார். எத்தனையோ இடங்களைப் பார்த்திருக்கிறார். கௌமுகி, (கங்கை உற்பத்தியாகும் இடம் - பசுவின் முகம் போன்று இருக்கும்) நோய்களை குணப்படுத்தும் நீர்வீழ்ச்சிகள், ரிஷிகேஷ், சமர்சட தபோவன் கடல் மட்டத்திலிருந்து உயரத்தில் உள்ள யமுனோத்ரி, யமுனை நதி உற்பத்தியாகும் இடம், பார்வதி தேவி உறையும் இடமாக நம்பப்படும் மானஸ்ரோவர் (இந்த ஏரியில் குளித்தால் மறுபிறவி இல்லை என்பது ஐதீகம்) தவபூமியாகக் கருதப்படும் பத்ரிநாத், பாரத - சீன எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கேதார்நாத், (இங்கே சிவன் உறை பனிலிங்கமாகக் காட்சி தருகிறார்) காசி (கங்கையுடன் வருணா, அசி ஆகிய நதிகள் சங்கமமாகும் இடம்)

இதுதான் அண்டத்தின் மையப் பகுதி என்று நம்பப்படுகிறது. காசி என்பது வரலாற்றை விட முத்தது, மரபை விட மூத்தது என்கிறார் மார்க் ட்வெய்ன் என்ற எழுத்தாளர்) பூரி (ஜகந்தாதர் உறையும் இடம்) அலாஹாபாத் (கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் சங்கமமாகும் புனிதத்தலம்) ஹரித்வார் (இமய மலையிலிருந்து வரும் கங்கை சமதளத்தைத் தொடும் இடம்) சுவாமி விவேகானந்தர் தியானம் செய்த அல்மோரா ஆகிய இடங்களுக்கெல்லாம் ஸ்வாமிகள் சென்று வந்திருக்கிறார்.

சிவபெருமான் கேதார்நாத்தில் ஸ்வாமி களுக்குக் காட்சி தந்திருக்கிறார். தபோவனத்தி லிருந்து திரும்பும் பொழுது ஸ்வாமிகள் ஒரு ராணுவ லாரியில் பயணப் பட்டிருக்கிறார். லாரியில் வசதியான இருக்கைகள் இல்லை. மரப்பலகைகளே ஆசனங்கள். திடீரென ஒரு பள்ளத்தில் லாரி ஏறி இறங்கியதில் ஸ்வாமிகளின் முதுகெலும்பில் ஒரு விரிசல் விழுந்தது. அந்த முகாமிலிருந்து ஒரு மருத்துவர் மாவுக்கட்டு போட்டுவிடுவதாகச் சொன்னார். ஸ்வாமிகள் அதை ஏற்கவில்லை. உள்ளங்கையால் தடவிவிட்ட படியே அவர் தன்னைத் தானே குணப்படுத்திக் கொண்டார். ஹரித்வார் சென்றதும் ராம கிருஷ்ணமட மருத்துவ மனையில் எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. மருத்துவர் எக்ஸ்ரேயைப் பார்த்துத் திகைத்துப் போனார்.