1. மகத்துவத்திற்கான அழைப்பு
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
தீரர்களே,
விவேகானந்தர் ஒரு சொற்பொழிவில் அவருடைய பக்தர்களை தீரர்களே! என்று அழைத்தார். 'தீரர்கள்' என்றால் தைரியசாலிகள் என்று பொருள். ஆம், தியான சிகிச்சையாளராக (Spiritual Healer) தீட்சை எடுத்துக் கொள்ள இருக்கும் நீங்கள் ஒவ்வொருவரும் தைரியசாலிகளே!
ASP-ல் கலந்து கொள்வதும் Energy Dharshan-க்கு வருவதும், தொடர்ந்து பக்தராக மட்டுமே தொடர்வதுமே எளிதான விஷயம். தியான சிகிச்சையாளராக மாறுவது ஒரு படி மேல். சாதாரணமாக மக்களுக்கு கடினமான விஷயம். தீரர்களுக்கு எளிமையான விஷயம்.
| ASP is just like a love affiar | | :--- | | You can break any time - But | | To be a healer is more like a marriage | | It is a life long commitment |
தியான சிகிச்சையாளராக மாறுவதற்கு அதிக சிரத்தையும், பொறுப்புணர்ச்சியும் தேவை. முழு உலகமும் துயரத்தாலும், வலியாலும் பாதிக்கப் பட்டிருக்கிறது. ஞான சக்தியின் தொடுதலுக்காக ஒவ்வொரு உயிரும் ஏங்கிக் கொண்டிருக்கிறது.
சுவாமியின் கருணை வெளிப்பாடுதான் தியான சிகிச்சை. தியான சிகிச்சை மூலம் ஞான சக்தியை மனித குலத்திற்கு கொடுத்து - மக்களை அவர்களின் கர்மத்தில் இருந்து மீட்க முடியும். அவர்களின் நோய்களை குணப்படுத்த முடியும். அவர்களை குழப்பத்திலிருந்து விடுவிக்க முடியும். அவர்கள் வாழ்வில் ஆனந்தம் என்னும் அற்புத மலரை மலர வைக்க முடியும்.