முகவுரை :
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
முடிவு புரிந்து கொள்ளப்படுவதற்கல்ல... உணர்ந்து கொள்ளப்படுவதற்கு.
உண்மையிலேயே நாம் காணும் உலகம் இருக்கின்றதா? இல்லையா? இது கனவா? நினைவா? என்று உங்களுக்குள் ஆழ்ந்து பட்டிமன்றம் நடத்துங்கள்.
இதன் தீர்ப்பினைத் தெரிந்து கொள்வதற்காக அல்ல. இதன் 'தீர்ப்பினை நம்மால் தெரிந்து கொள்ள முடியாது! உணர்ந்து கொள்ள மட்டுமே முடியும்!' என்பதைத் தெரிந்து கொள்வதற்காக.
இந்தக் கருத்துக்கள் நமக்குள் மூழ்கும் போது, ஏற்கனவே ஆழமாக வேரூன்றியிருக்கும் அஞ்ஞானக் கருத்துக்களின் ஆணிவேர் அசையத் துவங்கும். அப்போது துன்பத்தைத் தரும் மன அமைப்பு நம் மையத்தைவிட்டே மறைந்து விடும். துன்ப எண்ணங்களின் பிறப்பிடத்தையே காணாமல் செய்துவிடும்.
பாஸ்பரஸை ஒரு மரப்பெட்டியில் வைத்தால் அது அந்த மரப்பெட்டியையும் எரித்து விடும். கற்பூரம், பஞ்சு ஆகியவற்றையும் அதன் அருகில் வைத்தால் எரித்து விடும். பாஸ்பரஸை எந்த இடத்தில் வைத்தாலும், அதைச் சுற்றி இருக்கும் அனைத்தையும் பாஸ்பரஸ் எரித்து விடும்!
அதைப்போன்று தான், இந்த ஞானக்கருத்துக்கள் நமக்குள் வைத்து பூட்டப்படும் போது, நம்மைச்சுற்றி இருக்கும் அஞ்ஞான அழுக்குகளை எல்லாம் எரித்து விடும்! சிரத்தையுடன் படிப்பதோடு நிறுத்த விடாமல் இ ந் த ஞா ன க் க ரு த் து க் க ளை நடைமுறைப்படுத்துங்கள். வாழ்வே பொன்னாகும்.
நித்யம், தியானம், ஆனந்தம் என்று மூன்று படிகள் இருக்கின்றன.
இப்போது நீங்கள் இருக்கின்ற சாதாரண மன நிலையை விட அப்பாற்பட்ட ஒரு ஆனந்தமான நிலை உண்டு. நீங்கள் அதை அடைய முடியும் என்ற தேடுதலை உருவாக்குவது தான் முதல் படி. அதைத்தான் நித்யம் செய்கின்றது.
தந்திர சாஸ்திரத்தின் சூத்திரங்களையும், மொழிபெயர்ப்புகளையும் நாம் தெரிந்து கொள்ளத் துவங்குவதற்கு முன், ஒரு சிறிய விஷயம். இவைகள் உபதேசங்கள் அல்ல!
உலகத்திலேயே அனைவரும் செய்ய விரும்புவதும், யாருமே வாங்க விரும்பாதது என்பதும் உபதேசம் ஒன்றுதான். ஆனால், இவைகள் தந்திரங்கள் (Techniques), யுக்திகள், நுட்ப முறைகள்!
இந்தக் கருத்துக்களை சாதாரணமாகக் கேட்டு அவைகளை உங்களுக்குள் வைத்து வாதப்பிரதிவாதங்கள் செய்தால் அதுவே போதுமானது! வேறு ஒன்றும் தேவையில்லை.
இந்த சூத்திரத்தில் நாம் நம் மன அமைப்பு எவ்வாறு இயங்குகின்றது என்று காணப்போகின்றோம்.
நாமே இந்தச் சூழ்நிலைகளை வாழ்க்கையில் சந்தித்திருப்போம்.
சில நேரங்களில், யாராவது நம்முடைய நெருங்கிய நண்பர்களோ, உறவினர்களோ மரணம் அடைந்து விட்டால் நமக்கும் வாழ்க்கை மீது வெறுப்பு வந்து விடும்! ஐயோ! என்றைக்காவது ஒரு நாள் நமக்கும் இப்படித்தானே ஆகப்போகிறது! வாழ்க்கையே இவ்வளவுதானே! என்ற ஒரு வெறுமை தோன்றி விடும். ஆனால் அந்த வெறுமை எவ்வளவு நேரம் நீடிக்கும் என்றால், அதிகபட்சமாக அவருடைய ஈமக்கிரியைக்கள் முடிந்து நாம் தலைக்குக் குளிக்கின்ற வரை தான்! அதற்கு மேல் ஒன்றும் கிடையாது.
"ஊரெல்லாம் கூடி உரக்க அழுதிட்டு
பேரினை நீக்கிப் பிணமென்று பெயரிட்டு
சூரையங் காட்டிடை கொண்டுபோய் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந்தனரே!"
என்று திருமூலர் மிக அழகாகக் கூறியுள்ளார்.
ஊரில் இருப்பவர் அனைவரும் கூடி உரக்க அழுவார்கள். பெயரை நீக்கிப் பிணம் என்று பெயரிடுவார்கள். சுடுகாட்டிற்குக் கொண்டு சென்று சுட்டிடுவார்கள். பின் நீரில் தலை மூழ்கி நினைவை அழித்து விடுவார்கள்.
குளத்தில் மூழ்கிக் குளித்து எழுந்தவுடன் அந்த நினைப்பு ஒழிந்து போய்விடும். அதன் பின் அந்த வெறுமை மறைந்து போகும். மறுபடியும் நாம், நம் வாழ்க்கையில் இயங்க ஆரம்பித்து விடுகின்றோம்!
சில நேரங்களில் இந்த மரணத்தினால் ஏற்படுகின்ற வெறுமை நமக்குள் ஒரு தெளிவினை உருவாக்கும் வாய்ப்பு உண்டு. துக்கம் கூட நமக்கு வாழ்க்கைப் பாடத்தைக் கற்பிக்கும் குருவாக, ஆசிரியனாக மாற முடியும்! தெளிந்த மன அமைப்பு இருந்தால், துக்கம் கூட ஒரு தெளிவான மன அமைப்பாக மாற முடியும்!
சண்டி ஹோம மந்திரத்தில், "அஸைய ஸ்வர்யாய நமஹ" என்ற மந்திரம் உள்ளது. "அஸைய ஸ்வர்யம்" என்றால் ஏழ்மையை வழிபடுகின்றேன் என்று அர்த்தம். ஐஸ்வர்யத்தை வழிபட்டால் நல்லது. ஏன் ஏழ்மையை வழிபட வேண்டும்?
சில நேரங்களில், ஏழ்மை கூட மீண்டும், மீண்டும் நம்மை இறைவனை நினைக்கத் தூண்டி, நம்மை ஞானத்தெளிவை நோக்கி அழைத்துச்செல்லும்.
"உங்களைத் துன்புறுத்துவதற்கு வெளிநபர் என்று ஒருவர் தனியாகத் தேவையே இல்லை. துக்கத்தை உருவாக்கும் மன அமைப்பு உங்களுக்குள் இருக்குமானால் அது ஒன்றே போதும். அந்த மன அமைப்பை மாற்றினால் வெளியிலிருந்து ஒருவர் துன்பத்தைத் தந்தாலும், அதைத் துன்பமாக எடுத்துக்கொள்ளாமல் அதையே இன்பமாகப் பார்க்கும் மனத்தெளிவைப் பெறுவீர்கள்."
உதாரணத்திற்கு...
நாம் காண்பதெல்லாம் உண்மையா? இல்லையா? என்ற சந்தேகம் ஏற்பட்டாலே போதும்! இந்த உலகம் கனவா? அல்லது நினைவா? என்ற தெளிவான முடிவிற்குக்கூட வராமல் சந்தேகம் தோன்றினாலே போதுமானது! அந்த சந்தேகத்தை ஆதரிக்கின்ற விவாதம் அனைத்தும் நம் மனதில் வர ஆரம்பித்துவிடும்!
ஆசிரமத்தில் நான் இருக்கும் போது ஒருவர் என்னைப் பார்க்க வந்திருந்தார். "ஆசிரமத்தில் நான்கு நாட்கள் நான் தங்கிக் கொள்ளட்டுமா?" என்று என்னிடம் கேட்டார்.
"சரி, தங்கிக்கொள்ளுங்கள்" என்று கூறினேன்.
அடுத்த வினாடியே, "இல்லை சுவாமி! எனக்கு வீட்டில் வேலை இருக்கின்றது. நான் அங்கே போக வேண்டும்! இங்கே போக வேண்டும்! அந்த இடத்தில் நிறைய வேலை உள்ளது!" என்று அவர் கிளம்பிச்செல்வதற்கான விவாதங்களையெல்லாம் கூற ஆரம்பித்தார்.
"அப்படியா ஐயா? சரி, பரவாயில்லை! நீங்கள் கிளம்பலாம்," என்று நான் தெரிவித்தேன்.
"நீங்கள் கிளம்பலாம்," என்று நான் சொன்ன அடுத்த விநாடியிலேயே, "இல்லை. இல்லை சுவாமி! எனக்கு இங்கு தங்கினால்தான் மிகவும் நன்றாய் இருக்கும் போல் தெரிகிறது! உங்களிடம் ஹீலிங் கூட வாங்கிக்கொள்ளலாம். எனவே நான்கைந்து சொன்னார். அப்போது "நல்லது! உங்கள் விருப்பப்படியே தாராளமாகத் தங்கிக் கொள்ளுங்கள்" என்று நான் கூறியவுடன் மறுபடியும், "இல்லை சுவாமி! எனக்கு வீட்டில் வேலை இருக்கின்றது" என்று கூற ஆரம்பித்தார்.
இதைப்போல்தான் நாம் என்ன சொல்கின்றோமோ அதற்கு எதிரான எல்லா விவாதத்தையும் நம் மனம் தயார் செய்துவிடும். ஆரம்பத்தில், அவர் தங்க வேண்டாம் என்று உறுதியான முடிவு எடுத்திருந்தால் என்னிடம் கேட்கவே மாட்டார். "சுவாமி! நான் சென்று வருகிறேன்" என்று சொல்லிவிட்டுச் சென்றிருப்பார். ஆனால், அவர் குழப்பத்தில் இருப்பதால்தான் என்னிடம் இது போன்ற கேள்விகளைக் கேட்கின்றார்! நான் எந்த முடிவு கூறினாலும் அதற்கு உரிய எதிர் முடிவிற்கான விவாதங்களை எடுத்து வைக்கின்றார்.
எப்போதுமே ஒரு முடிவு உங்களுக்கு அளிக்கப்பட்டால், அதற்கு எதிரான அனைத்து விவாதங்களையும் எடுத்து வைப்பது தான் நம்முடைய மன அமைப்பு.
“இக்கரைக்கு, அக்கரை பச்சை”
இது நம் இயற்கையான சுபாவம். அதனால்தான் எந்த ஞானக்கருத்துக்களுமே ஒரு முடிவாக உங்களுக்கு வழங்கப்பட்டால், அதற்குண்டான எதிர்தரப்பு விவாதம் அனைத்தையும் ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்து விடுவீர்கள்!
அதனால்தான் அதை ஒரு முடிவாக வழங்காமல் உங்களுக்குள் நீங்களே ஆராயும் ஒரு ஆராய்ச்சிக் கருத்தாகக் கொடுத்தேன்!
இந்தக் கருத்துக்கள் உங்களுக்குள் ஊடுருவுவதற்கு அனுமதியுங்கள். இருதரப்பு வாதங்களும் உங்களுக்குள் மீண்டும், மீண்டும் நடைபெறட்டும். இந்த இரு தரப்பு வாதங்கள் ஏற்பட்டு, சந்தேகம் கிளம்பும் போதே, நமக்குள் இயற்கையிலேயே ஒரு ஆழ்ந்த தேடுதல் உருவாகும். அந்தத் தேடுதலை உருவாக்குவது தான் இதயத்தின் பணியாகும்!
அதே போல், வியாதி கூட இறைவனை நினைக்கச்செய்து நம்மை ஞானத்தெளிவிற்குக் கொண்டு செல்லும்.
ஒரு பக்தர், அவருக்கிருந்த தோல் வியாதிக்காக (சொரியாஸிஸ்) என்னைப்பார்க்க வந்திருந்தார். நான்கைந்து நாட்கள், நான் அவருக்கு ஹீலிங் செய்தேன். அவருக்கு குணமாகிக்கொண்டே வந்தது. இதற்கிடையில் நம்முடைய தியான முகாம் ஒன்றில் அவர் கலந்து கொண்டார். அதன் பின்னர் அவர் என்னிடம் வந்து, "சுவாமி! எனக்கிருக்கும் இந்த வியாதி சரியாக வேண்டும் என்ற அவசியம் இல்லை! எனக்கு இந்த வியாதி வராமலிருந்திருந்தால், ஒரு வேளை நான் உங்களைத் தவறவிட்டிருப்பேன்! வியாதி இருந்ததால்தான் உங்களைத் தேடி வந்தேன்! அதனால் ஒரு விதத்தில் இந்த வியாதி எனக்கு நல்லது தான் செய்துள்ளது!" என்று தெரிவித்தார்.
எனவே ஒரு விதத்தில் நம் ஏழ்மையும், வியாதியும், துக்கமும் கூட நமக்கு சரியான விஷயத்தைக் கற்றுத்தரும்!
வாழ்க்கையில் நடைபெறும் அனைத்து விஷயங்களையும் குருவாகவும், இறைவனின் தூதுவனாகவும் ஏற்றுக்கொண்டு, நம்மை நாமே வளர்த்துக்கொண்டால் அனைத்து நிகழ்ச்சிகளையும் நாம் எதிரியாகவே நினைத்து, அதை எதிர்த்துச் சண்டையிட்டு நம்முடைய சக்தியையெல்லாம் இழக்காமல், நம் வாழ்வை நமக்குள் ஒரு பெரிய அமைதியையும் மாற்றத்தையும் ஏற்படுத்தித் தரும் வாய்ப்பாகக் கொள்ளலாம். இதற்கு மேல் நம்மை வருத்தி, வாழ்க்கையை அழிக்க வேண்டிய அவசியமில்லை. நமக்குத் தேவையான அளவிற்கு உழைப்போம்! உழைத்து வருவதை வைத்து ஆனந்தமாக வாழ்வோம்!!
இதைச் செய்தே ஆக வேண்டும், அதைச் செய்தே ஆக வேண்டும் என்ற அநாவசியமான தூக்கச் சுமையை, மன அழுத்தத்தை, மன உளைச்சலை நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவசியம் இல்லை என்ற தெளிவும் சில நேரத்தில் நம்மிடையே ஏற்படும். அந்தத் தெளிவு வரும் போதே, அது அப்படியே நமக்குள் இருந்து விட்டால் நல்லது.
ஆனால் மனம் இருப்பதில்லை. உடனே நம் மனம் என்ன செய்யும் என்றால், இப்படியெல்லாம் நினைத்து சும்மா இருந்தால் பக்கத்து வீட்டுக்காரர் போன்று கார் வாங்க முடியாது என்று நினைக்க ஆரம்பித்து விடும்.
எப்போது, இது போல் பக்கத்து வீட்டுக்காரர் போன்று கார் வாங்க முடியாதே! என்ற எண்ணம் வந்ததோ, உடனே அந்தப் பழைய வேகம் நமக்குள் ஆரம்பித்து விடும். இவ்வளவு நேரம் நடந்த வேதாந்த விசாரமும் காணாமல் போய்விடும்!
இன்னும் சில நேரங்களில் நமக்குள்ளே ஒரு அமைதியும், ஆனந்தமும், ஒரு ஆழமும், இனிமையும் வர ஆரம்பிக்கும்! ஆனால் நம் மனம் அந்த அமைதியையும், ஆனந்தத்தையும் நிலைத்திருக்க விடுவதில்லை! ஏதாவது ஒரு எண்ணம் தோன்றி உடனே அதிலிருந்து நம்மை வெளியே எடுத்து விட்டுவிடும்.
இதைத்தான் நாமே நரகமாக்கிக் கொள்வது என்கின்றோம்.
நம் வாழ்வில் நல்ல நிகழ்ச்சி, கெட்ட நிகழ்ச்சி என்பது நம் அனைவருக்கும் நடை பெறக்கூடியதுதான். யாராயிருந்தாலும் இதில் நடக்காதது என்று எதுவுமே கிடையாது. ஆனால், அந்த நிகழ்ச்சியிலிருந்து கற்றுக்கொண்டு, நம் வாழ்க்கையை மேம்படுத்தி, ஆனந்த மயமாக்கி ஒரு சொர்க்க நிலையைினை, ஞான நிலையினை அடைவதா? அல்லது அதையே நாம் நரகமாக்கிக் கொள்வதா? அதே நிகழ்ச்சியை நாம் எதிரியாகக் கருதி, வாழ்க்கையின் போக்கினையும் எதிரியாகக் கருதி மீண்டும், மீண்டும் அதை எதிர்த்து, நம் வாழ்க்கையினைத் துக்கமயமாக ஆக்கிக் கொள்வதா?
வாழ்க்கையை எதிர்கொண்டு, ஒவ்வொரு நிகழ்ச்சியில் இருந்தும் கற்றுக்கொண்டு, நம் வாழ்க்கையினை மேம்படுத்தும் மன அமைப்புதான் "நித்யம்" என்பதாகும்.
எது நிலையானது? எது நிலையற்றது?
சில நேரங்களில் மரணத்தைப்பற்றி நமக்கே ஒரு எண்ணம் வரலாம். இந்த உலகம் நிலையற்றது என்ற ஒரு தெளிவு வரலாம். மொத்தமும் அழியப்போன்றது. மொத்தமும் உண்மை இல்லை. நமக்கு உள்ளே செல்லும் சுவாசம் வெளியில் வரவில்லையெனில், எதற்காகவெல்லாம் நாம் ஓடியாடி வாழ்க்கையை நரகமாக்கிக் கொண்டோமோ அது அனைத்துமே இல்லாமல் போய்விடும். வாழ்க்கையே ஒன்றும்
நம் வாழ்வில் நல்ல நிகழ்ச்சி, கெட்ட நிகழ்ச்சி என்பது நம் அனைவருக்குமே நடைபெறக்கூடியது தான். இதில் நடக்காதது என்று எதுவுமே கிடையாது. ஆனால், அந்த நிகழ்ச்சியிலிருந்து கற்றுக்கொண்டு, நம் வாழ்க்கையை மேம்படுத்தி, ஆனந்த மயமாக்கி ஒரு சொர்க்க நிலையினை, ஞான நிலையினை அடைவதா அல்லது அதையே நாம் நரகமாக்கிக் கொள்வதா, அதே நிகழ்ச்சியை நாம் எதிரியாகக் கருதி, வாழ்க்கையின் போக்கினையும் எதிரியாகக் கருதி மீண்டும், மீண்டும் அதை எதிர்த்து நம் வாழ்க்கையினை துக்கமயமாக ஆக்கிக் கொள்வதா? நிலையில்லாதது தான் என்ற எண்ணங்களெல்லாம் நம்மில் தோன்றும். இந்த எண்ணம் தோன்றும் போது, நாம் எவ்வாறு அதை அணுகுகின்றோம் என்பது முக்கியப் பங்கு வகக்கின்றது. அனுபவம் என்ற வார்த்தைக்கு அழகான விளக்கம் உண்டு.
எத்தனை நிகழ்ச்சிகள் நம் வாழ்க்கையில்
நடைபெற்றுள்ளது என்பதை வைத்து நீங்கள்
அனுபவசாலி என்று கூற முடியாது! அந்த
நிகழ்ச்சிகளில் இருந்து நாம் எவ்வளவு
கற்றுக்கொண்டோம் என்பதை வைத்துத்தான்
"அனுபவ சாலி" என்று கூற முடியும்!
வாழ்க்கையை, குருவாக ஏற்றவர்கள்தான் அனுபவசாலிகள்,
"சமஸ் சத்ரௌச மித்ரேஸ
ஸமோ மானாவ மான யோகஹாஹா
ப்ரஹ்மன ப்ரிவிரஹி
தத்வத் இதி ஞானாத்ப சுகீபவே!"
இது அற்புதமான சூத்திரம்.
வாழ்க்கையை, குருவாக
ஏற்றவர்கள்தான்
அனுபவசாலிகள்
நண்பனிடமும், எதிரியிடமும், துக்கத்திலும், சுகத்திலும் சமமாக இருத்தல்! மிகவும் ஆழமான கருத்து. மேலோட்டமாகப் பார்த்தால் புரியாது. சமமாக இருத்தல் என்ற கருத்தினை நாம் தவறாகப் புரிந்து கொள்கிறோம்!
மழை பெய்தாலும் சரி, வெயில் அடித்தாலும் சரி எருமை மாடு கூட சமமாகத்தான் இருக்கும். ஆனால் அதை சமத்துவம் என்று சொல்ல முடியாது. அது உணர்வின்மை (Insensitivity). முழு உணர்வினால் ஏற்படக்கூடிய சமத்துவம் தான் மிகவும் சரியானது.
ச த் வ ம் , ர ஜ ஸ் , த ம ஸ் எ ன் று
சமத்துவத்திற்கு மூன்று முக்கிய குணங்கள்
இருக்கின்றது. எதையும் செய்யாமல்
மந்தத்தன்மையாக, சோம்பேறித்தனமாக
இருப்பதுதான் தமஸ் எனப்படுகிறது.
இதைச் செய்வது, அதைச்செய்வது என்று ஓய்வில்லாமல் பரபரப்பாக, இங்கும் அங்குமாக இயங்கிக் கொண்டிருப்பது ரஜஸ் எனப்படுகிறது.
எல்லாவற்றையும் முழுமையாகச் செய்து
அதற்கிடையில் ஒரு சாந்நித்யத்தையும்,
அமைதியினையும் நமக்குள் வைத்திருப்பது
சத்வம் எனப்படுகிறது.
எந்தச் செயலானாலும், எந்த வேலையானாலும் பந்தப்படுத்தாமல் இருந்து, சோம்பேறித்தனம் எதுவும் இன்றி அனைத்துச் செயல்களிலும், அனைத்து வேலைகளிலும் முழுமையாக ஆழ்ந்து ஈடுபடுவதுதான் 'சத்வ குணம்' ஆகும்.
சத்வ குணமும், தமோகுணமும் ஒரே மாதிரி இருப்பது போல் தோன்றும். அதாவது மந்தத்தன்மையும், தியானத்தன்மையும் ஒரே மாதிரி தோற்றமளிக்கும்.
ஆனால் தியானத் தன்மையில் மனம் அமைதியாக இருக்கும், உடல் இயங்கும்.
மந்தத்தன்மையில் உடல் அமைதியாக இருக்கும். மனம் இயங்கிக் கொண்டிருக்கும்.
உணர்வின்மைக்கும் (Insensitivity), முழுஉணர்விற்கும் (Full Sensitivity) முழுமையான வித்தியாசம் இருக்கின்றது.
எந்த இடத்தில் நம் வாழ்க்கையின் அடிப்படையையே நாம் இழக்கின்றோமென்றால், நம் வாழ்க்கையில் எந்த நிகழ்ச்சியைப் பற்றியும் நமக்கென்று ஒரு எதிர்பார்ப்பினையும், ஒரு கருத்தினையும் உருவாக்கி வைத்து விடுகின்றோம்! அதாவது எந்த ஒரு நபரானாலும், சூழ்நிலையானாலும், நிகழ்ச்சியானாலும் நமக்குள் நாமே ஒரு கருத்தினை உருவாக்கிக்கொள்வோம்! அந்தக் கருத்திற்கு ஒத்து வந்தால் மட்டுமே அந்த நபரையும், சூழ்நிலையையும், நிகழ்ச்சியையும் நாம் ஏற்றுக்கொள்வோம். நாம் உருவாக்கி வைத்துள்ள கருத்துடன் ஒத்துவரவில்லை எனில் அந்த நிகழ்ச்சியையும், சூழ்நிலையையும், நபரையும் நாம் ஏற்றுக்கொள்வதில்லை! அவற்றை நம் மனதாலும் மதிப்பதில்லை!
நாம் எப்படி மற்றவர்களால் நடத்தப்படவேண்டும் என்று ஒரு வரையறையினை உருவாக்கிக்கொண்டு, அந்த வரையறையின்படி நாம் நடத்தப்படவேண்டும் என்று நினைக்கின்றோம்! எந்த இடத்திற்குச் சென்றாலும், நம் வரையறைக்கு மாறாக ஏதாவது ஒரு சுணக்கம் அல்லது பிணக்கு ஏற்பட்டால், உடனே நாம் மதிக்கப்படவில்லை, நாம் நினைத்தது போன்று நடக்கவில்லை என்று ஏதாவது ஒரு கருத்தினை நமக்குள் உருவாக்க ஆரம்பித்து விடுகின்றோம்.
"மரியாதை" என்ற அளவுகோலைக்கூட நாம் ஒரே அளவில் வைப்பதில்லை. இடத்திற்கேற்றாற்போல் நம் மரியாதையின் அளவுகோலை பெரிதாக்கிக்கொண்டே இருப்போம். ஒரு சில இடங்களில் ஓர் அளவு மரியாதையை எதிர்பார்ப்போம். நமக்கு அந்த அளவிற்கு மரியாதை கிடைத்து விட்டால் அடுத்த முறை இதைவிட அதிகமாக எதிர்பார்ப்போம். அதற்கடுத்த முறையில் அதைவிட அதிகமாக எதிர்பார்ப்போம்.
அதாவது, நமக்கு யாராவது முதல்முறை மரியாதை கொடுக்கும் போது தான் அதை மரியாதை என நினைப்போம்! இரண்டாவது முறையில் அந்த மரியாதையை நம்முடைய பிறப்புரிமை என்று நினைக்க ஆரம்பித்து விடுவோம். நம்முடைய பிறப்புரிமை என்று நினைக்க ஆரம்பித்தவுடன் அடுத்த முறை அதைவிட அதிகமாக எதிர்பார்ப்போம்!
முதல்மாதம் சம்பளம் வாங்கும் போது, அந்த வேலை கிடைத்த திருப்தி நம்மிடம் இருக்கும். ஆனால் இரண்டாவது மாத சம்பளம் வாங்கும் போதே அதை நம் பிறப்புரிமை என்று நினைத்து, இதை விட அதிகமாக கொடுக்க மாட்டார்களா? என்று எண்ணிக்கொண்டிருப்போம்.
நாம் எப்படி மற்றவர்களால் நடத்தப்படவேண்டும் என்று ஒரு வரையறையினை உருவாக்கிக்கொண்டு, அந்த வரையறையின்படி நாம் நடத்தப்படவேண்டும் என்று நினைக்கின்றோம்! எந்த இடத்திற்குச் சென்றாலும், நம் வரையறைக்கு மாறாக ஏதாவது ஒரு சுணக்கம் அல்லது பிணக்கு ஏற்பட்டால், உடனே நாம் மதிக்கப்படவில்லை, நாம் நினைத்தது போன்று நடக்கவில்லை என்று ஏதாவது ஒரு கருத்தினை நமக்குள் உருவாக்க ஆரம்பித்து விடுகின்றோம்!
மாதம் 2000 ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்து 10,000 ரூபாய் சம்பளம் வாங்கும் வேலைக்குச் சென்றாலும் கூட, அந்த மகிழ்ச்சியும், ஆனந்தமும் ஒரு மாதம் வரைதான் இருக்கும். அடுத்த மாதம் அதை நம் பிறப்புரிமை என்று எண்ண ஆரம்பித்து விடுவோம்!
"தத்க்கீம், தத்க்கீம், தத்க்கீம், தத்க்கீம்" என்று ஒரு அழகான ஸ்தோத்திரம்.
இதன் அர்த்தம் என்னவென்றால்,
அடுத்தென்ன, அடுத்தென்ன, அடுத்தென்ன, அடுத்தென்ன என்பதாகும்.
எது வந்தாலும், என்ன நடந்தாலும் நம் மனமானது அடுத்தது என்ன? அடுத்தது என்ன? என்றுதான் பார்த்துக் கொண்டிருக்கும்.
கையிலிருக்கும் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருப்போம். ஏதோ ஒரு நல்ல நேரம் அமைந்து ஒரு ஃபியட் கார் வாங்கிவிடுவோம்! அந்த பியட் காரில் உட்காரும் போதே, நம் மனம் மாருதி எஸ்டீம் பற்றி நினைக்கும், மாருதி எஸ்டீமில் உட்காரும் போது குவாலிஸைப் பற்றி நினைக்கும். குவாலிஸ் வந்ததென்றால் பென்ஸ் காரைப் பற்றி நினைக்க ஆரம்பித்து விடுவோம்!
அடுத்து என்ன! அடுத்து என்ன! என்று வளர்ந்து செல்வதில் தவறில்லைதான். ஆனால், இந்த வளரும் வேகத்தில், இருப்பதை அனுபவிக்க மறந்துவிடுவதுதான் பெரிய பிரச்சனை. இதனால் அனுபவிக்கும் தன்மை இல்லாது போய்விடுகின்றது. நமக்குள் வாழ்க்கையை அனுபவிக்கும் தன்மை அழிந்து போய்விடுகிறது.
முதலில் நாம் என்ன நினைக்கின்றோம்?
படிக்கும் காலத்தில் வேலை கிடைத்துவிட்டால் வாழ்க்கை ஆனந்தமாகிவிடும்! அதன் பின் அனுபவிக்கலாம்!
வேலை கிடைத்தவுடன், திருமணம் ஆகிவிட்டால் வாழ்க்கை ஆனந்தமாகி விடும்! அதன் பின் அனுபவிக்கலாம்!
திருமணம் ஆனவுடன், ஒரு வீட்டை கட்டிவிட்டால் வாழ்க்கை ஆனந்தமாகி விடும்! அதன் பின் அனுபவிக்கலாம்!
வீடு கட்டி முடித்தவுடன் ஒரு குழந்தை பிறந்துவிட்டால் வாழ்க்கை ஆனந்தமாகிவிடும்! அதன் பின் அனுபவிக்கலாம்!
குழந்தை பிறந்தவுடன், அவன் படித்து முடித்ததும் வாழ்க்கை ஆனந்தமாகிவிடும்! அதன் பின் அனுபவிக்கலாம்!
அவன் படித்து முடித்தவுடன், அவனுக்கு திருமணம் ஆனதும் வாழ்க்கை ஆனந்தமாகிவிடும்! அதன் பின் அனுபவிக்கலாம்!
அவனுக்குத் திருமணமானவுடன், அதன் பின் நம் வாழ்க்கையே ஆனந்தமாகிவிடும்! நன்றாக அனுபவிக்கலாம் என்று தான் நம் மனம் நினைத்துக்கொண்டே செல்லும்.
ஆனால், திருமணமாகி முடிக்கும் போது நம் வாழ்க்கையை அனுபவிக்கின்ற தன்மையே நமக்குள் இல்லாமல் போய்விடுகின்றது.
“அடுத்து என்ன! அடுத்து என்ன!” என்று வளர்ந்து செல்வதில் தவறில்லைதான். ஆனால், இந்த வளரும் வேகத்தில், இருப்பதை அனுபவிக்க மறந்துவிடுவதுதான் பெரிய பிரச்சினை. இதனால் அனுபவிக்கும் தன்மை இல்லாது போய்விடுகின்றது. நமக்குள் வாழ்க்கையை அனுபவிக்கும் தன்மை அழிந்து போய்விடுகிறது.
நாம் ஒரு மிகப்பெரிய நினைவுகளின் சுமையினை சுமந்து கொண்டு, நாம் வாழ்ந்த மன அமைப்பினை நமக்குள் வைத்துக் கொண்டிருக்கும் போது வெளியுலகில் கிடைக்கும் என்ற ஒன்றைத்தான் நாம் கவனித்திருப்போம்.
வெளி உலகத்தில் நாம் அனுபவிக்க வேண்டிய
நம் உடைமைகளையும், பொருட்களையும்
உருவாக்குவதில் தவறில்லை. ஆனால், அதை
உருவாக்குகின்ற வேகத்தில் அனுபவிக்கும்
தன்மையை நாம் இழந்து விடுகின்றோம்.
ஆயிரம் இனிப்பினை நம் முன்பு வைத்தாலும், ருசிக்கும் தன்மை நாக்கில் இல்லை என்றால் அதை அனுபவிக்க முடியாது! அதைப் போன்று நம் வாழ்க்கையில் எவ்வளவுதான் சொத்தும், சுகமும், ஆடம்பரமும் வந்தாலும் கூட, அதை அனுபவிக்கும் நிதானமும், அமைதியும், ஆனந்தமும் நம் மன அமைப்பில் இல்லை என்றால் அதை அனுபவிக்க முடியாது! ஏனெனில் நம் மனதை வைத்துதான் நம் வாழ்க்கையையும் அனுபவிக்க முடியும்.
ஆயிரம் இனிப்பினை நம் முன்பு வைத்தாலும், ருசிக்கும் தன்மை நாக்கில் இல்லை என்றால் அதை அனுபவிக்க முடியாது! அதைப் போன்று நம் வாழ்க்கையில் எவ்வளவுதான் சொத்தும், சுகமும், ஆடம்பரமும் வந்தாலும் கூட, அதை அனுபவிக்கும் நிதானமும், அமைதியும், ஆனந்தமும் நம் மன அமைப்பில் இல்லை என்றால் அதை அனுபவிக்க முடியாது!. ஏனெனில் நம் மனதை வைத்துதான் நம் வாழ்க்கையையும் அனுபவிக்க முடியும்.
நம் மனதின் பக்குவம்தான், நாம் அனுபவிக்கும் அனுபவத்தின் சாரம். பெரும்பாலான நேரங்களில் நாம் நம் கண்களை விற்றுத்தான் ஓவியத்தினை வாங்குகின்றோம். தூக்கத்தினை விற்றுத்தான் படுக்கையை வாங்குகிறோம்! கால்களை விற்றுத்தான் நாட்டியம் கற்றுக்கொள்கின்றோம்.
வெளி உலகிலிருந்து, நம் வாழ்விற்குத் தேவையான வீட்டையோ, வசதிகளையோ, பொருட்களையோ சம்பாதிப்பதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் சம்பாதிக்கும் போது நாம் வாழ்கின்ற எண்ண ஓட்டத்தில், மன அமைப்பில்தான் தவறு இருக்கின்றது. சரியான மன அமைப்பினை நாம் உருவாக்காமல் விடும்போதுதான் இயற்கையிலேயே வாழ்வினை அனுபவிக்கும் தன்மையினை நாம் இழந்துவிடுகின்றோம்!
இவ்வாறு வாழ்க்கையை அனுபவிக்கும் தன்மையை இழக்காமல், வாழ்க்கையை வளமாக்குவதைத்தான் "நித்யம்" என்று கூற விரும்புகின்றேன்!
ஒரு ஜென் கதை:
ஏதோ ஒரு வதந்தியினால், ஒரு தவறினால் ஜென் ஞானி ஒருவருக்கு, அந்த நாட்டின் அரசன், அந்த ஞானியைத் தூக்கிலிடுமாறு உத்தரவிடுகிறான். ஞானிகளைப் பற்றி வதந்தி பரப்புவது மிகவும் சுலபம். ஏனெனில் ஞானிகள் அதிகம் மறுத்துப் பேசமாட்டார்கள். இதன் காரணமாக ஏதோ ஒரு சூழ்நிலையில் அரசன் இவ்வாறு உத்தரவிட்டுவிட்டான்.
ஆனாலும், தினசரி வேலைகளை எந்தவித சலனமுமின்றி ஞானி செய்து கொண்டிருந்தார். சீடன் ஒருவன் ஞானியிடம் வந்து, "சுவாமி! அரசர் உங்களைத் தூக்கிலிட உத்தரவு போட்டுவிட்டாரே! நாளைக் காலையில் நீங்கள் சாகப்போகிறீர்களே! உங்களுக்குத் துக்கமாக இல்லையா?" என்று கேட்டான்.
அதற்கு ஞானி, "நான் இந்தக் கணத்தில், இந்த விநாடியில் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். அடுத்த விநாடி என்பதே எனக்கு மிகவும் அதிகம். 24 மணிநேரம் என்பது மிக மிக அதிகம். 24 மணி நேரம் தாண்டி யோசிக்கும் அளவு எனக்கு நேரமில்லை" என்று பதில் சொன்னார். ஆழ்ந்து நோக்கினால், இந்தக்கணம், இந்த விநாடி, இதை அனுபவிப்பதற்கே எனக்கு நேரமில்லை எனும் கூற்று மிகவும் அற்புதமானதாகத் தெரியும்.
பொதுவாகவே நாம், நாளை நன்றாயிருப்போம்! என்றே நம் மனத்தைத் தள்ளிப்போட்டுக் கொண்டே இருப்போம். இதைத்தான் ஆனந்தத்தைத் தள்ளிப்போடுதல் என்று சொல்வார்கள்.
ஆனந்தமும், அமைதியும் நம்முடைய கதவைத் தட்டிக் கொண்டேதான் இருக்கின்றது. ஆனால், நாம் கதவைத் திறக்காமல் தள்ளிப்போட்டுக் கொண்டே இருக்கின்றோம். ஏனெனில் நம் மன அமைப்பு அப்படி இருக்கிறது.
அமைதியைக் கொடுக்கின்ற, ஆனந்தத்தை கொடுக்கின்ற எந்த விஷயமாவது நடந்தால் நாம் என்ன செய்வோம்? ஓஹோ! இது இப்படித்தான் என்று சாதாரணமாக நினைத்துக்கொள்வோம். ஆனால், துக்கத்தைக் கொடுக்கின்ற விஷயம் நடைபெறும் போது மீண்டும், மீண்டும் அதை உருப்போட்டுக்கொண்டே இருப்போம்.
ஆனந்தமும், அமைதியும் நம்முடைய கதவைத் தட்டிக் கொண்டேதான் இருக்கின்றது. ஆனால், நாம் கதவைத் திறக்காமல் தள்ளிப்போட்டுக் கொண்டே இருக்கின்றோம். ஏனெனில் நம் மன அமைப்பு அப்படி இருக்கிறது.
யாராவது ஒருவர் நம்மைப் புகழ்ந்தாலோ அல்லது மரியாதை கொடுத்தாலோ மீண்டும், மீண்டும் அதை நாம் நினைப்பதில்லை! ஆனால் யாராவது ஒருவர் நம்மை அவமரியாதை செய்தாலோ, இகழ்ந்தாலோ அந்த வார்த்தைகள் நமக்குள் மூன்று நாட்களுக்குக் கூட ஓடிக்கொண்டே இருக்கும்.
அதாவது, நம் வீட்டு டி.வி.யை எந்த சேனலுக்கு ட்யூன் செய்கின்றோமோ, அந்தச் சேனலைத்தான் நாம் பார்ப்போம்! அது போல் நம் மன அமைப்பை எந்த உணர்விற்கு ஒத்திசைவு செய்கின்றோமோ, அந்த உணர்வைத்தான் நாம் திரும்பத்திரும்ப போட்டுப் பார்த்துக்கொண்டே இருப்போம்.
நம் வாழ்வில் துக்கமும், ஆனந்தமும், நல்ல நிகழ்ச்சிகளும், துக்க நிகழ்ச்சிகளும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது.
துக்கத்தை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தால் மீண்டும் மீண்டும் துக்கம் தான் நமக்குள் மலரும்!
ஆனந்தத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தால் ஆனந்தமான நிகழ்ச்சிகளைத்தான் மீண்டும் மீண்டும் ஈர்ப்போம்!
சிலர் பத்திரிகை வாங்கிப் படிப்பதில் கூட இந்த திகில், இரத்தம், இரத்தக்கறையுடன் கூடிய அட்டைப்படம் போட்ட பத்திரிகைகளை மட்டும் தான் வாங்கிப்படிப்பார்கள். துக்கத்தைத் தரக் கூடிய, வன்முறையைத் தூண்டக் கூடிய பத்திரிக்கைகளைத்தான் தேடிப்பிடித்து வாங்கிப்படிப்பார்கள். ஏற்கனவே துக்கம் நமக்குள் குறைவாகவா இருக்கின்றது ?
"ஆகார சுத்தி" என்று அழகான சூத்திரம் உபநிஷதத்தில் கூறப்பட்டுள்ளது.
ஆகார சுத்தியினால் மனம் சுத்தமாகும். ஆகார சுத்தி என்றால் உணவில் மட்டும் சுத்தம் என்பது கிடையாது.
நம் பஞ்ச இந்திரியங்கள் வழியாக, உள்ளே செல்லும் அனைத்துமே ஆகாரம்தான்! கண் வழியாக நாம் பார்க்கும் செய்திகளும் ஆகாரம். காது வழியாக நாம் கேட்கின்ற விஷயங்களும் ஆகாரம். வாய் வழியாக எடுத்துக்கொள்வது மட்டும் ஆகாரம் அல்ல. ஐந்து புலன்களின் வழியாக எடுத்துக்கொள்கின்ற அனைத்துமே ஆகாரம்தான்.
அதனால் தொலைக்காட்சி, திரைப்படம், பத்திரிக்கை போன்றவைகளின் மூலமாக நாம் பார்க்கும் நிகழ்ச்சிகள் அனைத்துமே ஆகாரம்தான். எனவே தயவுகூர்ந்து ஆனந்தத்தைக் கொடுக்கக்கூடிய நிகழ்ச்சிகளை மட்டுமே பாருங்கள். ஆனந்தத்தைத் தருகின்ற, மனதை எளிமையாக்குகின்ற, மனதை இலகுவாக்குகின்ற நிகழ்ச்சிகளை மட்டுமே படியுங்கள்.
அப்படியென்றால், "நாட்டு நடப்புகளை நாம் எப்படித் தெரிந்து கொள்வது?" என்று என்னிடம் ஒருவர் கேட்டார். நான் கூறினேன்.
நாட்டு நடப்பு என்னவென்று தெரியாதா?
இன்றைக்கு, பத்திரிக்கையில் பார்த்தால் என்ன இருக்கிறது? அதிலிருந்து என்ன தெரிந்து கொள்கின்றோம்? எங்காவது நடைபெற்ற கொலை, கொள்ளை, விபத்து, எந்த நாளுடையதாக இருந்தாலும் அதே தான். வேறு புதிதாக என்ன மாற்றம் இருக்கும்? ஊர் மாறி இருக்கும். பெயர் மாறி இருக்கும். இடம் மாறி இருக்கும்! இன்று கள்ளக்குறிச்சி. நாளை கடலூர். மூன்றாவது நாள் விழுப்புரம். அதன் பின் திருவண்ணாமலை என்று ஊரின் பெயர்தான் மாறியிருக்கும். திரும்பத்திரும்ப இதைத் தெரிந்து கொண்டு என்ன செய்யப்போகிறோம்?
துக்ககரமான விஷயங்களை ஈர்ப்பதில் நமக்குள் ஒரு சுவை, ரசனை வந்து விடுகின்றது. அதனால்தான் சிலர் பத்திரிகையைப் பிரித்தவுடன் 'காலமானார்' என்ற காலத்தைத்தான் முதலில் எடுத்துப்படிப்பார்கள்.
இவையெல்லாம் நமக்குள் ஆழமாகப் புதைந்து போய் இருக்கும் மனஅமைப்புகள், துக்ககரமான வார்த்தைகளை இழுப்பது.
துக்ககரமான செய்திகளைச் சேகரிப்பது, துக்ககரமான எண்ண ஓட்டங்களை அழைப்பது இவையெல்லாம் நமக்குள் இருக்கும் ஆழமான மன அமைப்பு.
ஒரு அமெரிக்க நாட்டு மருத்துவர் நம்முடைய இந்திய நாட்டின் சாஸ்திரங்களைப்பற்றி ஆராய்ச்சி செய்து "Synchrodestiny" என்று அழகான புத்தகமொன்று எழுதியுள்ளார்.
அதில், "நம்முடைய விபத்து, நோய் இவைகளையெல்லாம் 'விதி' என்று நாம் தான் அழைக்கின்றோம்! விபத்து என்ற ஒன்று கிடையவே கிடையாது" என்று கூறுகின்றார்!
அவர் கூறியுள்ளது உண்மை தான்!!
நம் விபத்தைக்கூட நாம்தான் உருவாக்குகின்றோம்! "நமக்கு நாமே விபத்தையும், வியாதியையும் அழைப்போமா? இது எப்படி உண்மையாக இருக்க முடியும்?" என்று நீங்கள் நினைக்கலாம்.
ஆனால்...
நம் மனஓட்டம், எண்ணஓட்டம் நம்மை மீறியே எதிர்மறையான விஷயங்களை மீண்டும் மீண்டும் இழுக்கின்றது. எதிர்மறையான செய்திகளைக் கேட்பதிலும், தெரிந்து கொள்வதிலும், அந்த வார்த்தைகளை அனுபவிப்பதிலும் நமக்கு ஏற்படுகின்ற சுகத்தினை, இரசனையினை அந்த எதிர்மறையான விஷயங்களுக்காகவே நம் சக்தி முழுவதையும் செலவிட்டு, இயற்கையிலேயே எதிர்மறையான நிகழ்ச்சிகளையே நம்முடைய வாழ்க்கையில் நாமே இழுக்கின்றோம்.
நீங்கள் உங்களது டி.வியை சன் டி.விக்கு ட்யூன் செய்தால், சாட்டிலைட்டிலிருந்து அலைகள் (waves) மூலமாக சன் டி.வி உங்களுக்குத் தெரியும். உங்களது டி.வி யை வேறு எந்த நிகழ்ச்சி வேண்டும் என்று ஒத்திசைவு செய்தாலும் உங்கள் டி.வி யில் அதே அலைவரியில் வரும் நிகழ்ச்சிகள் தெரியும். அதாவது எந்த நிகழ்ச்சிக்கு நாம் ஒத்திசைவு செய்கிறோமோ அந்த நிகழ்ச்சி தெரியும்.
பொதுவாகவே கெட்ட நிகழ்ச்சிகளுக்கும், கெட்ட விஷயங்களுக்கும் அளவிற்கு மீறிய கூட்டம் இருக்கும்.
ஒரு முறை வின்ஸ்டன் சர்ச்சில் ஒரு பெருங்கூட்டத்தில் சொற்பொழிவு செய்து கொண்டிருந்தார்.
ஒரு நிருபர் அவரிடம், "சார்! உங்கள் சொற்பொழிவைக் கேட்க இவ்வளவு பெரிய கூட்டம் கூடியிருக்கிறதே! இது உங்களுக்கு எவ்வளவு பெரிய பெருமை! மக்கள் உங்களை எவ்வளவு நேசிக்கின்றனர் பார்த்தீர்களா!" என்று கேட்பார்.
"இது என்ன பெரிய கூட்டம் ? நாளைக்கு என்னைத் தூக்கில் போடுவதாக அறிவித்து அதை ஒரு பொது நிகழ்ச்சியாக நடத்தினால் அதைப்பார்ப்பதற்கு, இதைவிட நான்கு மடங்கு கூட்டம் கூடும்!" என்று ஐஸ் பதில் கூறுகிறார்.
எனவே, எதிர்மறையான விஷயங்களுக்கு, Negative ஆன விஷயங்களுக்குத்தான் ஈர்ப்பு அதிகம்.
நம் மனஓட்டம், எண்ணஓட்டம் நம்மை மீறியே எதிர்மறையான விஷயங்களை மீண்டும், மீண்டும் இழுக்கின்றது. எதிர்மறையான செய்திகளைக் கேட்பதிலும், தெரிந்து கொள்வதிலும், அந்த வார்த்தைகளை அனுபவிப்பதிலும் நமக்கு ஏற்படுகின்ற சுகத்தினை, ரசனையினை அந்த எதிர்மறையான விஷயங்களுக்காகவே நம் சக்தி முழுவதையும் செலவிட்டு, இயற்கையிலேயே எதிர்மறையான நிகழ்ச்சிகளையே நம்முடைய வாழ்க்கையில் நாமே இழுக்கின்றோம்.
எதிர்மறையான விஷயங்களைத் தெரிந்து கொள்வதில்தான் சுவை அதிகம். அதனால் தான் வதந்திகளைப் பரப்புதல் என்பது நமக்குச் சுவையான விஷயமாக இருக்கின்றது.
சாப்பிட்டு முடித்ததும், திண்ணையில் அமர்ந்து காலை நீட்டிக்கொண்டு வெறுமனே வெற்றிலை பாக்கு போட்டால் நாக்கு இனிக்காது. பக்கத்து வீட்டுக்காரரின் தலையையும் சேர்த்து மென்றால்தான் இனிக்கும்!
திண்ணையில் காலை நீட்டிக் கொண்டு, நம் உடன் இருப்பவருடன், எதிர் வீட்டுக்காரி எவ்வளவு வரதட்சணை வாங்கி வந்தாள்? பக்கத்து வீட்டுக்காரர் என்ன ஆனார்? கோடி வீட்டில் யாரோ ஓடிப்போய் விட்டார்களாமே? அது என்னவாகியது? என்றெல்லாம் நான்கு வீட்டு விஷயங்களைப்பற்றிப் பேசும்போது தான் மிகவும் இனிமையாக இருக்கும்.
எப்போதுமே நம் தியான முகாமில் ஒரு சிறிய நிகழ்ச்சி மேற்கொள்வதுண்டு.
என்னவெனில் வந்திருக்கின்ற அனைவரையும் வட்டமாகச் சுற்றி உட்கார வைத்து ஒரு முனையில் இருப்பவரின் காதில் ஏதாவது ஒரு செய்தியை நான் கூறுவேன். அந்தச் செய்தி சத்தமாகக் கூறாமல் மற்றவர்களின் காது வழியாக மட்டுமே செல்ல வேண்டும். என் அருகில் அமர்ந்திருப்பவர் அவரது அருகில் அமர்ந்திருப்பவரின் காதில் கூறுவார்.
அவர், அவரது அருகிலுள்ளவரிடம் காதில் கூறுவார். இவ்வாறு காது வழியாக மட்டுமே அந்தச் செய்தி சென்று வரும். இதுவரையிலும் ஒரு முறை கூட நான் கூறியச் செய்தி அப்படியே என்னிடம் திரும்பி வந்ததில்லை. ஐம்பது, அறுபது நபர்கள்தான் இருப்பார்கள். அந்தச் செய்தியுடன் ஏதாவது கூடுதலாகச் சேர்த்துச் சேர்த்து இறுதியில் என்னிடம் வரும் போது, நான் என்ன செய்தி கூறி இருந்தேனோ அதைவிட இரண்டு மடங்கு சேர்ந்து பெரிய செய்தியாக மாறி வந்து சேரும்!
ஒரு சிறிய கதை:
ஒரு நாள் கணக்கு ஆசிரியர் பள்ளிக்கு வரவில்லை. ‘இன்றைக்குக் கணக்காசிரியர் பள்ளிக்கூடம் வரவில்லை உனக்கு தெரியுமா?’ என்று ஒரு மாணவன் கேட்டான். ‘அவர் தொடர்ந்து வந்து விடுவாரே! வரவில்லையென்றால் உடம்பு சரியில்லாமல் இருக்கும்’ என்று இரண்டாவது மாணவன் பதிலளித்தான். ‘கணக்காசிரியருக்கு உடம்பு சரி இல்லையாம்! அதனால் பள்ளி வரவில்லை’ என்று மூன்றாவது மாணவன் மற்றொரு மாணவனிடம் கூறினான். ‘உடம்பு சரியில்லாமல் இருந்தால் எல்லாம் வராமல் இருக்க மாட்டார்! அவருக்கு மிகவும் சீரியஸாக இருக்கும் போல் தெரிகிறது. அதனால் தான் வரவில்லை!’ என்று நான்காவது மாணவன் கூறினான்.
‘சீரியஸாக இருக்கின்றாராம் அப்படியென்றால்! எப்படியும் மருத்துவமனையில்தான் சேர்க்கப்பட்டிருப்பார்’ என்று ஐந்தாவது மாணவன் கூறினான். ‘கணக்காசிரியர் மருத்துவமனையில் இருக்கின்றார்’ இது ஆறாவது மாணவன், ‘டேய்! கணக்காசிரியர் ICU வில் இருக்கின்றாராம்’ என்று சொன்னான், ஏழாவது மாணவன், ‘சீரியஸாக இருக்கின்றாரென்றால் எப்படியும் இந்நேரம் போய்ச்சேர்ந்திருப்பார்’ என்றான் எட்டாவது மாணவன். அதோடு போய்ச்சேர்ந்திருந்தால் இந்நேரம் சடங்கு முடிந்திருக்கும் என்றான், அதைக் கேட்ட ஒன்பதாவது மாணவன், ‘கணக்காசிரியர் இறந்து போய் விட்டார் தெரியுமா?’ என்றாான் பத்தாவது மாணவன். ‘அவர் இறந்து விட்டார். எல்லாமுமே முடிந்து விட்டது. நான் இப்போதுதான் வந்தேன் தெரியுமா?
ஒரு விஷயத்தினை எதிர்மறையாக இழுப்பதும், உருவாக்குவதும், வெளிப்படுத்துவதும் ஆகிய அனைத்துமே நம் மன அமைப்பு தான். ஆனால், பத்து நிமிடம் கழித்து கணக்கு ஆசிரியர் அன்று தாமதமாக பள்ளி வந்தார். இவ்வளவுதான் மனித மனதின் சுபாவம்.
ஒரு விஷயத்தினை எதிர்மறையாக இழுப்பதும், உருவாக்குவதும், வெளிப்படுத்துவதும் ஆகிய அனைத்துமே நம் மனஅமைப்பு தான்.
விழிப்புணர்வற்ற மனஅமைப்பு (unconscious Mental Setup) என்று நான் கூறும் போது சிரிக்கின்றீர்கள். ஆனால் நம் வாழ்க்கையில் நாம் அதை எத்தனை முறை செய்கின்றோம் என்று யோசித்தால் தான் தெரியும்!
ஒரு சில கதைகளை நான் மீண்டும், மீண்டும் கூறுவதுண்டு. நம் தியான சத்சங்கங்களில் கலந்து கொண்டிருந்தவர்களுக்கு இது தெரியும்.
ஒருவர் என்னிடம் வந்து, “சுவாமி! சில நேரங்களில் நீங்கள் ஒரே கருத்தினை மீண்டும், மீண்டும் கூறுகின்றீர்களே!” என்று கேட்டார்.
புத்தரிடம் ஒரு சீடர் கேட்டார், “சுவாமி! நாற்பது வருடங்களாக நீங்கள் பேசிக்கொண்டிருக்கிறீர்களே! ஆனால் நீங்கள் நாற்பது வருடமாகப் பேசியதையும் தொகுத்து ஒரு சிறிய புத்தகமாக ‘தம்மபதம்’ என்று உருவாக்கி விட்டார்களே!” என்று.
புத்தரின் தம்மபதம் வெறும் 780 ஸ்லோகங்கள்தான். ஆனால் புத்தர் மீண்டும், மீண்டும் அதையே பேசி எவ்வளவுதூரம் போராடித்திருப்பார் என்ற எண்ணத்தில் அந்த சீடர் கேட்கிறார். அதற்கு புத்தர்,
“ஒரு முறையாவது, நான் கூறுவதை நீங்கள் முழுமையாகக் கேட்டிருந்தால் கூட இரண்டாவது முறை நான் பேசியிருக்க மாட்டேன். மீண்டும் மீண்டும் கூறும்போதுதான் அது உள்ளே செல்கின்றது!” என்று பதில் கூறுகிறார்.
எனவே தான் சில நல்ல கருத்துக்களை நானும் மீண்டும், மீண்டும் சொல்வதுண்டு.
முப்பத்தைந்து வயதுடைய ஒருவர் என்னிடம் வந்து, “சுவாமி! நான் விவாகரத்து செய்ய வேண்டும். அதற்கு நீங்கள் ஆசீர்வாதம் செய்ய வேண்டும்” என்று கேட்டார்.
“விவாகத்திற்குத்தான் ஆசீர்வாதம் செய்வேன், விவாகரத்திற்கெல்லாம் ஆசீர்வாதம் செய்ய மாட்டேன்” என்று சொன்னேன்.
“இல்லையில்லை சுவாமி! என்னால் முடியவில்லை! நீங்கள்தான் ஆசீர்வாதம் செய்யவேண்டும்” என்றார்.
“என்ன நடந்தது! எனக்கு முழுமையாகக் கூறுங்கள்” என்றேன்.
“சுவாமி! காலையில் என் மனைவி காபி எடுத்து வந்து டேபிளில் வைத்தாள். வைத்த வேகத்தில் காபியெல்லாம் என் வேட்டியில் சிந்தி சண்டை வந்துவிட்டது.”
“காபி கொட்டியது விவாகரத்திற்கு ஒரு காரணமா? ஏதாவது ஒரு ஸ்திரமான காரணம் இல்லையா? இது ஒரு பெரிய விஷயமா? அப்படியே காபி கொட்டி இருந்தால் கூட அந்த வேட்டியை உங்களது மனைவிதான் துவைக்கப்போகிறார்கள். அதற்குப்போய் ஏன் இவ்வளவு பெரிய சண்டை செய்தீர்கள்?” என்று கேட்டேன்.
“சுவாமி! உங்களுக்குத் தெரியாது. இன்றைக்கு, காபி ஊற்றுவாள். நான் சும்மாயிருந்தால் நாளைக்கு ஆசிட்டே (Acid) ஊற்றுவாள்!” என்றார் அவர்.
“என்னய்யா கூறுகிறீர்கள். காபிக்கும், ஆசிட்டுக்கும் சம்பந்தம் உள்ளதா? உங்களுக்கே புரியவில்லையா? காபி எங்கே! ஆசிட் எங்கே! வித்தியாசம் தெரியவில்லையா?”
"சுவாமி! பத்து வருடங்களாக நான் அவளிடம் என்ன பாடுபட்டேன் என்று உங்களுக்குத் தெரியுமா? எங்களது திருமணத்தின் போது குடத்தில் மோதிரம் போட்டு வைத்து, அதற்குள் இருவரும் கையை விட்டு எடுக்கும் போது அப்போதே இவள் நகத்தினால் எனது கையைக் கிழித்தாள்" என்று திருமணத்தின் போது நடந்த ஒரு உதாரணத்தையும் கூறினார்.
நம் எண்ண ஓட்டங்கள் ஓடிக்கொண்டிருக்கும் போது நாம் உணர்வுடன் அந்த எண்ண ஓட்டங்களைப் பார்ப்பதில்லை. எங்கேயோ ஒரு டி.வி தொடரிலும், சினிமாவிலும், புத்தகத்திலும் படித்த எண்ண ஓட்டங்கள்தான், அதே வார்த்தைகள் தான், அதே நிகழ்ச்சிகள்தான் நமக்குள் ஓடிக்கொண்டிருக்கின்றன.
இந்தச் சூழ்நிலைக்கு, இந்த எண்ண ஓட்டம் தேவையா? என்று நாம் பார்ப்பதில்லை. எந்தச் சூழ்நிலையினையும் நேரடியாக நாம் எதிர்கொள்வதில்லை. ஏற்கனவே நாம் பார்த்த, படித்த சூழ்நிலைகளை நமக்குள் கொண்டு வந்து அதனுடன் ஒப்பிட்டுப் பார்த்துதான் அதை எதிர்கொள்கின்றோம்.
நம் மன அமைப்பு மீண்டும், மீண்டும் துக்கத்தினைத் தரும் விஷயங்களை ஊதிப் பெரிதாக்குகின்றது.
எண்ணங்களுக்கு இருக்கும் ஆழமான சக்தி பற்றித் தெரிந்துகொள்ளுங்கள். நமது மன எண்ணத்தை வெறும் சாதாரண எண்ணம் என நினைக்காதீர்கள். நம் மனதின் எண்ணங்களுக்கு ஆழமான சக்தி உண்டு.
எந்த அளவிற்கு நம் எண்ணங்கள், சூழ்நிலையினையும், வெளி உலகத்தினையும் பாதிக்கின்றது என்று அமெரிக்காவில் ஒரு ஆராய்ச்சி நடைபெற்றது.
நமக்கு எடுக்கும் ECG [Electro Cardio Graph] போன்றே, மரங்களுக்கு ஏற்படும் அதிர்வுகளை, அதன் எண்ண ஓட்டங்களைப் பதிவு செய்யும் ஒரு இயந்திரத்தை வைத்து ஆராய்ச்சி மேற்கொண்டனர்.
ஒரு தோப்பிற்குள் உள்ள இருபது மரங்களிலும் தனித்தனியே இந்த இயந்திரங்களை வைத்து அந்த இருபது மரங்களின் அதிர்வு அலைகளைப் பதிவு செய்தார்கள். அதாவது, காற்றடிக்கும்போது அந்த மரங்களின் அதிர்வு எப்படி உள்ளது? தண்ணீர் ஊற்றும் போது எப்படி உள்ளது? சூரியன் வரும் போது எப்படி உள்ளது? என்று ஆராய்ச்சி செய்தார்கள்.
ஏதாவது ஒரு மரத்தினை வெட்டும்போது அதன் அதிர்வுகள் எப்படி இருக்கின்றன? என்பதை அறிந்து கொள்வதற்காக, ஒரு சோதனை செய்தார்கள். ஒரு குறிப்பிட்ட மரத்தினை வெட்டுவதற்காக ஒரு மரவெட்டியை வரவழைத்தார்கள். அவர் அந்த மரத்தினை வெட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் அந்தத் தோப்பிற்குள் நுழைந்த அடுத்த விநாடியே, அந்த குறிப்பிட்ட மரத்தின் அதிர்வு மட்டும் கண்டபடி துடிக்க ஆரம்பித்து விட்டது.
இது கதையல்ல! நடந்த ஆராய்ச்சி!
ஒரு வேளை யதேச்சையாக நடந்திருக்கக்கூடுமோ என்று விஞ்ஞானிகள் நினைத்து, மறுபடியும் அந்த மரவெட்டியை வரச்சொன்னார்கள். மறுபடியும் அதே மரம் அதே மாதிரி துடித்தது.
வேறு ஒரு மரவெட்டியை வரவழைத்து, வேறு ஒரு மரத்தை வெட்டக்கூறிய போதும் அந்த மரமும் அதேபோல் துடிக்க ஆரம்பித்தது!
நம் எண்ண ஓட்டங்கள் ஓடிக்கொண்டிருக்கும் போது நாம் உணர்வுடன் அந்த எண்ண ஓட்டங்களைப் பார்ப்பதில்லை. எங்கேயோ ஒரு டி.வி தொடரிலும், சினிமாவிலும், புத்தகத்திலும் படித்த எண்ண ஓட்டங்கள்தான், அதே வார்த்தைகள்தான், அதே நிகழ்ச்சிகள்தான் நமக்குள் ஓடிக்கொண்டிருக்கின்றன.
இந்தச் சூழ்நிலைக்கு, இந்த எண்ண ஓட்டம் தேவையா? என்று நாம் பார்ப்பதில்லை. எந்த சூழ்நிலையினையும் நேரடியாக நாம் எதிர் கொள்வதில்லை. ஏற்கனவே நாம் பார்த்த, படித்த சூழ்நிலைகளை நமக்குள் கொண்டு வந்து அதனுடன் ஒப்பிட்டுப் பார்த்துதான் அதை எதிர்கொள்கின்றோம்.
ஒரு முறை, இருமுறை அல்ல, இருபதிற்கும் மேற்பட்ட முறைகள் இந்த ஆராய்ச்சியை செய்யும் போது, சரியாக எந்த மரத்தினை வெட்ட வேண்டும் என்று நினைத்தார்களோ அந்த மரத்தின் உணர்வு மட்டும் அளவிற்கு மீறி மேலும், கீழும் துடிக்க ஆரம்பித்தது.
இது அறிவியல் பூர்வமான உண்மை. முடிவுகள் ஆராய்ச்சிக்குபின் வெளிப்பட்டது.
அதன்பின் மற்றொரு ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.
ஒரே மாதிரியான மூன்று ரோஜாச் செடிகளை தனித்தனியேேயான மூன்று அறைகளில் வைத்து, ஒரே மாதிரியான மண், உரம், தொட்டி, நீர், சூழ்நிலை, தட்பவெப்ப நிலைகளில் வைத்தார்கள். ஒருவர் தினசரி ஒவ்வொரு அறையாகச் செல்வார். முதல் அறையில் வைக்கப்பட்டிருந்த ரோஜாச்செடியினைப் பார்த்து, "நீ மிகவும் அழகாக இருக்கிறாய்! நன்றாக மலர்வாய்!" என்று நல்ல வார்த்தைகளையே பேசுவார்.
இரண்டாவது அறையிலுள்ள ரோஜாச் செடியிடம் சென்று, எதுவும் பேசாமல் இரண்டு நிமிடம் மௌனமாக அமர்ந்து விட்டு வெளியில் வந்து விடுவார்.
மூன்றாவது அறையிலுள்ள ரோஜாச்செடியிடம் சென்று, "நீ எதையும் செய்ய மாட்டாய்! நீ என்ன செய்தாலும் நடைபெறாது! உன்னால் பூக்க முடியாது! நீ வெறும் முட்புதர்தான்!" என்று இழித்துப் பழித்து, இகழ்ந்து பேசுவார்.
நாம் நினைக்கலாம். ரோஜாச் செடிக்கு தமிழ்மொழி புரியுமா என்று! அது பிரச்சினையில்லை. ஆனால் ஏதோ ஒரு மொழியில் இது போல் பேசியிருக்கிறார்.
இந்த ஆராய்ச்சியின் முடிவு ஆச்சரியமும், அதிர்ச்சியும் தரக்கூடியதாய் அமைந்தது.
எந்தச் செடியினைப் பார்த்து புகழ்ந்து பேசினாரோ அந்தச்செடி நன்றாக இரண்டு பங்கு வளர்ந்திருந்தது. எந்தச் செடியினைப்பார்த்து விட்டு அமைதியுடன் வந்து விடுவாரோ அந்தச்செடி ஓரளவே வளர்ந்திருந்தது.
ஆனால், இகழ்ந்து பேசப்பட்டிருந்த செடி இறந்தே விட்டது!
இந்த ஆராய்ச்சியும் ஏதோ யதேச்சையாக நடந்திருக்கலாம் என்று எண்ணினார்கள். அமெரிக்காவில் ஒரு முறை மட்டும் ஆராய்ச்சி மேற்கொண்டு எதையும்த்துக் கொள்ள மாட்டார்கள். மீண்டும், மீண்டும் இது போல் ஆராய்ச்சியினை மேற்கொண்டபிறகு தான் இந்த முடிவுகளை நிரூபித்துள்ளார்கள்!
நம் எண்ணங்களுக்கு மிகப்பெரிய சக்தி உண்டு. ஆழமான வலிமை உண்டு. நீங்கள் எந்த எண்ணங்களுடன் உங்கள் மன அமைப்பினை உருவாக்குகின்றீர்களோ அது போன்ற நிகழ்ச்சிகளைத்தான் உங்கள் வாழ்க்கையில் ஈர்ப்பீர்கள். Dish Antenna, Satellite Waves - ஐ எப்படித் தன்வசம் இழுக்கின்றதோ அதே போன்று உங்கள் மன அமைப்பு, உங்கள் வாழ்க்கை நிகழ்ச்சிகளை ஈர்க்கின்றது.
உங்கள் எண்ண ஓட்டம், உங்களைச் சுற்றியிருக்கும் உலகத்தைப் பாதிக்கின்றது. நமக்குள் இருக்கும் எண்ண ஓட்டமும், வார்த்தை ஓட்டமும் மற்றவர்களைப் பாதிப்பதில்லை என்று நினைக்காதீர்கள்! மற்றவர்களை பாதிப்பது மட்டும் இல்லாமல் உங்கள் வாழ்க்கையினையும் பாதிக்கின்றது.
பொதுவாகவே, நம்முடைய எண்ண ஓட்டத்திற்கு நாம் பெரிய முக்கியத்துவம் அளிப்பதில்லை. நாம் உள்ளே என்ன நினைக்கின்றோம் என்பது யாருக்குத் தெரியப்போகின்றது என எண்ணுகின்றோம்! அதனால் வாயிலே பேசும் போது மட்டும் நல்ல வார்த்தைகளாகப் பேசினால் போதும் என்று முடிவு செய்கின்றோம்!
ஒரு சிறிய கதை!
நான்கு நண்பர்கள் அமர்ந்து யாரோ ஒருவரைப் பற்றிப் பழித்துப்பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் எழுந்து சென்றவுடன், மற்ற மூவரும் எழுந்து சென்றவரைப் பற்றிப் பழித்துப் பேச ஆரம்பித்தார்கள். இரண்டாவது நபர் எழுந்து சென்றவுடன் மற்ற இருவரும் இப்போது எழுந்து சென்றவரைப்பற்றிப் பழித்துப் பேச ஆரம்பித்தனர். இந்த இரண்டு நபர்களில் ஒருவர் எழுந்து சென்றதும், பின்னால் இருப்பவர் இடித்துக் காண்பித்தாராம்! அது நம் மன அமைப்பு.
இல்லாதிருப்பவரைப் பற்றிப் பழிப்பதால் அவருக்குத்தெரியாது என்று நாம் நினைக்கின்றோம். நம் முன்பு இருக்கும் போது இனிமையாகப் பேசுதல், அவர் நகர்ந்தவுடன் வன்மையாகப் பேசுதல்.
வன்மையாகப்பேசினால் அவருக்குத் தெரியாது! அதனால் ஒன்றுமில்லை என்றுதான் பேசுகிறோம்!
வன்மையாகப் பேசுதல் என்பது மற்றவர்களுக்குக் கெடுதல் விளைவிக்கின்றதோ இல்லையோ நமக்குக் கெடுதல் என்பதை நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் நமக்கு ஒரே ஒரு மனம்தான் இருக்கின்றது. அந்த ஒரு மனத்தையும் கத்தி போல் வைத்து, மற்றவர்களை குத்துவதற்கு உபயோகம் செய்தால், அதே மனத்தினை வைத்து நம்மை நாமே குத்திக்கொள்வோம்! இதைத்தான் Double Edged Sword என்று கூறுவார்கள்.
அதாவது, எந்த வார்த்தைகளை நீங்கள் மற்றவர்களை நோக்கி உபயோகப்படுத்துகின்றீர்களோ, அந்த வார்த்தைகளையே தான் நீங்கள் உங்களை நோக்கியும் உபயோகப்படுத்திக் கொள்கின்றீர்கள்!
நம் எண்ண ஓட்டமும், வார்த்தை ஓட்டமும் நம் வாழ்வில் மிகப்பெரும் பங்கு வகிக்கின்றது. நமக்கு மரியாதை (Honour) அளிக்கப்பட்டது அல்லது அவமரியாதை (Dishonour) செய்யப்பட்டது என்பன அனைத்துமே நம் வார்த்தையின், எண்ணத்தின் ஓட்டம் தான்.
சிலர் எங்கு சென்றாலும், நான் யார் தெரியுமா?.. நான் யார் தெரியுமா?.. என்று காட்டுவதற்காகவே அவர்களது விசிட்டிங் கார்டை எடுத்துச் செல்வார்கள்.
விசிட்டிங் கார்டு சிறிய அளவில்தான் இருக்கும். ஆனால் அதில் Ex-President of some Society, Present secretary of some Society, அதில் நிர்வாகி, இதன் உரிமையாளர், இதில் இவர், அதில் இவர் என்று இருபத்தைந்து போஸ்ட்டுகளை பிரிண்ட் செய்திருப்பார்கள்.
உண்மையில் அது விசிட்டிங் கார்டு கிடையாது. கையிலேயே எடுத்துச் செல்லும் கட் அவுட் அட்டை என்றால் சிறியதாகத்தான் இருக்கும். ஆனால் அதில் எழுதியிருக்கும் விஷயங்கள், நான் யார் தெரியுமா? நான் யார் தெரியுமா?
வன்மையாகப் பேசுதல் என்பது மற்றவர்களுக்குக் கெடுதல் விளைவிக்கின்றதோ இல்லையோ நமக்குக் கெடுதல் என்பதை நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் நமக்கு ஒரே ஒரு மனம் தான் இருக்கின்றது. அந்த ஒரு மனத்தையும் கத்தி போல் வைத்து, மற்றவர்களைக் குத்துவதற்கு உபயோகம் செய்தால், அதே மனத்தினை வைத்து நம்மை நாமே குத்திக்கொள்வோம்! இதைத்தான் Double Edged Sword என்று கூறுவார்கள்.
அதாவது, எந்த வார்த்தைகளை நீங்கள் மற்றவர்களை நோக்கி உபயோகப் படுத்துகின்றீர்களோ, அந்த வார்த்தைகளையேதான் நீங்கள் உங்களை நோக்கியும் உபயோகப்படுத்திக் கொள்கின்றீர்கள்! என்று கேட்பது போல் கட் அவுட்டைத் தூக்கிக்கொண்டு செல்வது போன்றிருக்கும்! உண்மையில் கட் அவுட்டை தூக்கிச் செல்வதை சமுதாயத்தில் அனுமதிக்க மாட்டார்கள். அதைத்தூக்கிச் சென்றால் வாசலில் நுழைய முடியாது. இல்லாவிடில் நாம் அதையும் செல்கின்ற இடத்திற்கெல்லாம் தூக்கிக் கொண்டு செல்வோம்!
'நான் யார்... நான் யார்...' என்று சொல்லும் போது எங்கு சென்றாலும், நாம் அவமதிக்கப்படுவதாகவே தோன்றும்! நம்மைப்பார்க்கவே இல்லையே! வரவேற்கவே இல்லையே! என்று மனம் கேட்கத் தோன்றும், அதிலும், நம் தமிழ்நாட்டில் திருமணம் நடத்துபவர்கள் இருக்கிறார்களே, அவர்கள் நரகத்தில் நுழைந்துதான் வெளியில் வரவேண்டும்!
அதாவது, திருமணத்திற்கு வருவதற்காக ஒரு முறை வரவேற்க வேண்டுமாம்! சாப்பிடச் செல்வதற்கு ஒரு முறை அழைத்து வரவேற்க வேண்டுமாம்! இது போல் ஏழெட்டு விதமான முறைகள் வைத்திருக்கிறார்கள். ஆண் மட்டும் சென்று வரவேற்றால் ஆண் மட்டும்தான் வருவாராம்! பெண்ணும் சென்று வரவேற்றால் தான் அந்தப் பெண்ணும் வருவாராம்! இதைப்போல் நிறைய சடங்குகளை நாமே வகுத்து வைத்துக் கொண்டுள்ளோம்.
எனவே, 'நான் யார் தெரியுமா?' என்று இருந்தால் எங்கு சென்றாலும் நாம் அவமதிக்கப்பட்டதாகவே தோன்றும்.
நான் என்ற உணர்வினை விட்டுவிட்டு எளிமைத் தன்மைக்கு, இனிமைத்தன்மைக்கு வந்துவிட்டால், நாம் எங்கு சென்றாலும் நமக்கு அளவிற்கு மீறி மரியாதை வழங்கப்படுவது போலவே தோன்றும்.
இதை எளிதில் புரிந்து கொள்ள ஒரு ஜென் கதை:
ஒரு மிகப்பெரிய போர் வீரன், ஒரு ஞானியிடம் சென்று, "சுவாமி! நரகம் என்றால் என்ன?" என்று கேட்டான். ஞானி இதற்குப்பதில் கூறாமல், நீ என்ன செய்கின்றாய்? என்று கேட்கிறார். "நான் ஒரு போர்வீரன்" என்று சொன்னான். "நீயா! உன்னைப்பார்த்தால் அப்படித் தெரியவில்லையே? உன்னைப் போய் யார் போர் வீரனாக வைத்துக்கொண்டார்கள்? எந்த மடையன் உனக்குச் சம்பளம் கொடுத்தான்?" என்று ஞானி கேட்டவுடன், போர்வீரன் மகா கோபமடைந்து, "என்னைப் பார்த்தா இப்படிக் கூறினாய்? நான் யார் என்று காண்பிக்கிறேன் பார்" என்று கோபம் கொந்தளிக்க, கத்தியை உருவிக்காண்பித்தான்.
அப்போது, ஞானி, "இது தான் நரகம்" என்று சொன்னார். ஒரு விநாடியில் அவனுக்கு உண்மை புரிந்து விட்டது. நமக்குள் கொந்தளிக்கின்ற இந்த கோபம், அகங்காரம், என்னைச் சீண்டி விட்டாரே என்ற அகம், "இது தான் நரகம்" என்று அவனுக்கு பளீச்சென்று புரிந்து விட்டது.
' ஐயோ! எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டோம்! இந்த ஞானியைப் போய்க் கொல்ல நினைத்தோமே! என்று வருந்தி "சுவாமி! என்னை மன்னித்து விடுங்கள்!" என்று வேண்டிக் கெஞ்சினான்.
அப்போது ஞானி "இது தான் சொர்க்கம்" என்று போர் வீரனிடம் விளக்கினார்!!
எங்கெல்லாம் நாம் வருத்தப்படுகின்றோமோ, அவமதிக்கப்பட்டதாக நினைக்கின்றோமோ, அங்கெல்லாம் உண்மையில் ஏதாவது தவறு நடைபெற்றிருக்கும்.
யாராவது ஒருவர் உங்களைப் பார்த்து, "நீ நூறு கோடி ரூபாய் ஊழல் செய்து, ஏமாற்றியிருக்கிறாய்!" என்று கூறினால் உங்களுக்குக் கோபம் ஏற்படுமா?
ஆனால், 'நீ சரியான கோபக்காரன், கஞ்சன்' என்று கூறினால் உடனே உங்களுக்குக் கோபம் வந்து விடும்.
ஏனெனில், 'நூறு கோடி ரூபாய் ஊழல் செய்து
விட்டாய்' என்பதில் சுத்தமாக உண்மை இல்லை.
'கஞ்சன், கோபக்காரன்' என்பதில் எங்கேயோ
உண்மை இருக்கின்றது. அதனால்தான் உடனே
உங்களுக்குக் கோபம் ஏற்படுகின்றது.
நம்முடைய வாழ்க்கையில், பெரும்பாலான சக்தி விரயமாவது, நம்மைப்பற்றி நமக்குள்ளே ஒரு தெளிவில்லாமல் இருப்பதனால்தான்! தெளிவில்லாமல் இருக்கும் போது தான் அளவிற்கு மீறிய அகங்காரத்துடன் வாழ ஆரம்பிக்கின்றோம்! நம்மைப்பற்றி நமக்கு ஒரு தெளிவு வரும் போது அளவிற்கு மீறிய அகத்துடன் வாழ மாட்டோம்!
ஈஸ்வரன் (சிவன்) ஒரு சூத்திரத்தில், "மரியாதைக்கும், அவமரியாதைக்கும் இடையில் சமமாக இருத்தல்" என்று அழகாகக் கூறுகின்றார்,
'மரியாதையின் போதும், அவமரியாதையின் போதும் நான் மாறுவதில்லை' என்ற தெளிவுடன் இருப்பதுதான் சமமாக இருத்தல் என்பதாகும்.
உண்மையில், மற்றவர்கள் நம்மைப் பற்றிக் கூறும் கருத்துக்களையும், நமக்குக் கொடுக்கும் மரியாதையையும் நாம் ஏன் இந்த அளவிற்கு ஆழ்ந்து தேடுகிறோம் என்றால், நம்மைப் பற்றியே நமக்கு ஒரு மரியாதை இருப்பதில்லை. ஒரு தெளிவும் இருப்பதில்லை.
அதனால் தான் மற்றவர்கள் நம்மைப்பற்றி என்ன சொல்கின்றார்கள்? என்று கேட்டுக் கேட்டு தெரிந்து கொள்கின்றோம்! அதை அறிந்து கொள்வதற்காக ஒன்றிரண்டு உளவாளிகளையும் ஏற்பாடு செய்து
நம்முடைய வாழ்க்கையில் பெரும்பாலான சக்தி விரயமாவது, நம்மைப்பற்றி நமக்குள்ளே ஒரு தெளிவில்லாமல் இருப்பதனால்தான்! தெளிவில்லாமல் இருக்கும் போதுதான் அளவிற்கு மீறிய அகங்காரத்துடன் வாழ ஆரம்பிக்கின்றோம்! நம்மைப்பற்றி நமக்கு ஒரு தெளிவு வரும்போது அளவிற்கு மீறிய அகத்துடன் வாழ மாட்டோம்! விடுவோம். என்னைப் பற்றி ஏதாவது பேசினார்களா? என்று இரண்டு, மூன்று பேர்களை வைத்து விசாரணை செய்து கொண்டிருப்போம்!
குழந்தைகள், சீட்டுக்கட்டினை வைத்துக் கட்டிடம் போன்று கட்டிக்கொண்டிருப்பார்கள். அதே போல்தான் நாமும் மற்றவர்கள் நமக்குக் கொடுக்கும் சான்றிதழ்களை வைத்துக் கொண்டு, நம்மைப்பற்றி நாமே ஒரு கட்டிடம் கட்டி வைக்கின்றோம்!
மனிதர்கள் புகழை நோக்கிச் செல்கின்றார்கள். புகழுக்காக மரணமே அடைகிறார்கள்! அதற்கெல்லாம் காரணம் என்ன என்று ஆராய்ந்தோமென்றால் மற்றவர்கள் நமக்கு கொடுக்கும் அந்தச் சான்றிதழ், வாழ்த்துப் பத்திரங்கள். அதன் எண்ணிக்கை கூடக்கூட நம்மைப்பற்றி நமக்கு ஒரு உயர்வான எண்ணம் ஏற்படுகிறது. அதன் எண்ணிக்கை குறையக்குறைய நம்மைப்பற்றி நமக்கு ஒரு தாழ்வான கருத்து ஏற்படுகிறது.
நம்மைப்பற்றி நமக்கென்று ஒரு தெளிவு இருப்பதில்லை. நான்கு பேர் நம்மைப்பற்றி என்ன கூறுகின்றார்களோ அந்தக் கருத்துக்களைச் சேர்த்து வைத்துத்தான் நம்மைப்பற்றியே நாம் ஒரு முடிவிற்கு வருகின்றோம்!
மற்றவர்களுடைய வார்த்தைகளுக்காக, சான்றிதழுக்காக நாம் ஏங்கிக் கொண்டிருக்கின்றோம்!
நம் வாழ்க்கையே ஒரு மிகப்பெரிய கையெழுத்து வேட்டை இயக்கம் தான். ஒரு பெரிய நோட்டை வைத்துக் கொண்டு, நான் நல்லவன், அறப்பணிச்செம்மல், அறமணிச்செம்மல், திருப்பணிச்செம்மல், திருமணச்செம்மல் என்று பல்வேறு வார்த்தைகளை எழுதிக்கொண்டு அதில் எத்தனை பேரிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டிருக்கிறோம். பலர் கையெழுத்திட்டால் நாம் பெரிய ஆள். குறைவாக இருந்தால் நாம் சிறியவர்கள் என்று மற்றவர்களின் கருத்தினை வைத்துத்தான் நம்மை நாமே எடை போட்டுக்கொள்கின்றோம்.
நான்கு பேர் நம்மைப்பற்றி புகழ்ந்தால் தவறில்லைதான்! ஆனால், அதை வைத்து உங்கள் மன அமைப்பினை அமைத்தால், அடித்தளம் இல்லாமல் கட்டப்படும் கட்டிடம் போல் எந்த விநாடியும் நீங்கள் இடிந்து விழலாம்!
அடித்தளம் இல்லாமல் கட்டப்படும் கட்டிடமும், மற்றவர்களின் கருத்தினை வைத்து அமைக்கப்படும் மன அமைப்பும் ஒன்றுதான்!
நம் குடும்பத்தில் உள்ளவர்கள் கூட நம்மைப்பற்றி என்ன சொல்கின்றார்களோ அதையும் சேர்த்து வைத்துதான் நம்மைப்பற்றி ஒரு கருத்தினை வைத்திருப்போம்! என்றாவது ஒரு நாள் சம்பந்தமே இல்லாத யாராவது ஒருவர் கூட, 'நீ உருப்பட மாட்டாய்!' என்று சொன்னால், அதை நினைத்து இரண்டு நாட்கள் மன உளைச்சலிலேயே (Depresed) இருப்போம்!
நம் வாழ்க்கையே ஒரு மிகப்பெரிய கையெழுத்து வேட்டை இயக்கம் தான். ஒரு பெரிய நோட்டை வைத்துக் கொண்டு நான் நல்லவன், அறப்பணிச்செம்மல், அறமணிச்செம்மல், திருப்பணிச்செம்மல், திரு மனச்செம்மல் என்று பல்வேறு வார்த்தைகளை எழுதிக்கொண்டு அதில் எத்தனை பேரிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டிருக்கிறோம்! பலர் கையெழுத்திட்டால் நாம் பெரிய ஆள். குறைவாக இருந்தால் நாம் சிறுவர்கள் என்று மற்றவர்களின் கருத்தினை வைத்து தான் நம்மை நாமே எடை போட்டுக்கொள்கின்றோம்.
நான்கு பேர் நம்மைப்பற்றி புகழ்ந்தால் தவறில்லை தான்! ஆனால், அதை வைத்து உங்கள் மன அமைப்பினை அமைத்தால், அடித்தளம் இல்லாமல் கட்டப்படும் கட்டிடம் போல் எந்த விநாடியும் நீங்கள் இடிந்து விழலாம்!
குழந்தைகள் சீட்டுக்கட்டினை வைத்துக்கட்டும் கட்டிடத்தின் ஒரு சீட்டினை உருவிவிட்டால், மொத்தமும் இடிந்து விழுந்துவிடும்! அது போல் நம்மைப்பற்றி நம் தன்மைக்கு மற்றவர்கள் கொடுத்த சான்றிதழை வைத்து ஒரு கட்டிடம் கட்டி வைத்திருப்போம்! திடீரென யாராவது ஒருவர் ஏதாவது ஒரு சான்றிதழை எடுத்துவிட்டால் மொத்தமாக இடிந்து விழுந்து விடுவோம்! நீங்கள் எப்போதெல்லாம் இடிந்து விழுகின்றீர்களோ, மனமொடிந்து விழுகின்றீர்களோ, அப்போதெல்லாம் பார்த்தால் யாராவது ஒருவர் அவர் சான்றிதழை எடுத்திருப்பார் என்பது தெரியவரும்!.
மற்றவர்கள் உங்களைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என நினைத்து உங்களது காலத்தை வீணாக்காதீர்கள். ஏனெனில் நீங்கள் அவரைப்பற்றி என்ன நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள் என அவரும் நினைத்துகொண்டிருப்பார்!. நம்மைப்பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்று நாம் கவலைப்படுகிறோம்!. ஆனால் அவர், நம்மைப்பற்றி இவர் என்ன நினைக்கிறார் என்று அவர் கவலைப்படுகிறார்!.
ஒருவர் மற்றவரைப்பற்றி என்ன நினைக்கிறார் என்பதில் தான் நம் சக்தியின் பெரும்பங்கு வீணாகிக் கொண்டிருக்கின்றது!.
ஒருவர் என்னிடம் வந்து,
"சுவாமி! என் வாழ்க்கையிலும், வியாபாரத்திலும் நான் ஆனந்தமாக இருக்க முடியவில்லை. என் வாழ்க்கையை ஆனந்தமாக்குவதற்கு ஏதாவது ஒரு கருத்தை, உபதேசத்தை சொல்லுங்களேன்!" என்று கேட்டார்.
ஒரே ஒரு கருத்து வேண்டுமென்றால் சொல்கின்றேன்.
மற்றவர்கள் உங்களைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என நினைத்து உங்கள் நேரத்தை, மனோசக்தியை, எண்ண ஓட்டத்தை வீணாக்காதீர்கள், ஏனெனில் நீங்கள் அவரைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் என நினைத்துக்கொண்டு அவருடைய காலத்தை அவர் வீணாக்கிக்கொண்டிருக்கின்றார்.
பொதுவாக, நமக்கு ஒரு நாளையில் பன்னிரண்டு மணி நேரம் எண்ண ஓட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. தூக்க காலமும் கனவு காலத்திலும் கூட எண்ண ஓட்டம் நடைபெறும். ஆனால் தூக்க காலத்திலும், கனவு காலத்திலும் தெளிவான எண்ண ஓட்டம் கிடையாது.
இந்தப் பன்னிரண்டு மணி நேர எண்ண ஓட்டத்தில் இரண்டு மணி நேரம் மட்டும்தான் உபயோகமான ஏதாவது ஒரு விஷயத்திற்குச் செலவாகிறது. மீதி பத்து மணி நேர மனோ சக்தி, நம்மைப்பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கின்றார்கள் என்பதை யோசிப்பதற்கும், அந்தக் கருத்தை உயர்த்துவதற்கும் தான் செலவாகின்றது.
மரியாதை, அவமரியாதை ஆகிய இரண்டு கருத்துக்களுக்குள்ளாகவே நம் வாழ்வின் பெரும்பகுதி சக்தியை வீணாக்கிக் கொண்டிருக்கின்றோம்!
"நாம் யார்!" என்று நமக்குத் தெரியாத வரையில் நம்மைப்பற்றி மற்றவர்கள் கூறும் கருத்தினை வாங்கித்தான் நம்மைப்பற்றி நாமே ஒரு முடிவிற்கு வருகின்றோம்" என்று இரமண
பெரும்பாலான நேரம், நம்முடைய மதிப்பை உருவாக்குவதில்தான் சக்தி செலவாகின்றது. நம் நடத்தையை உருவாக்குவதில் சக்தியை செலவழிப்பதில்லை. மஹரிஷி அவர்கள் அழகாகக் கூறியுள்ளார்!
இங்கிருந்து சென்னைக்கு ஒரு பார்சல் அனுப்பும் போது உள்ளூர் போஸ்ட் ஆபிஸில் முத்திரை குத்துவார்கள். அதன்பின் ஹெட் போஸ்ட் ஆபீஸில் முத்திரை குத்துவார்கள். அந்தப் பார்சல் சென்னை சென்றதும் அங்கே ஒரு முத்திரை.
அதன் பின் உள்ளூர் போஸ்ட் ஆபிசில் ஒரு முத்திரை குத்துவார்கள். அந்த பார்சல் உரியவரிடம் சேர்க்கப்படும். அவ்வாறு சேர்ப்பதற்குள் ஐந்தாறு முத்திரைகள் அந்தப் பார்சலில் குத்தப்பட்டுவிடும். இவ்வாறு முத்திரை குத்தப்படுவதால், முத்திரைகளின் தொகுப்பு என்று அந்தப்பார்சல் நினைக்க ஆரம்பித்து விட்டால் எவ்வளவு தவறோ, அதைப்போல்தான் சமூகத்தில் நம்மீது, நல்லவன், கெட்டவன், கஞ்சன், வள்ளல், தர்மகர்த்தா என்று பலவிதமான முத்திரைகள் குத்தப்படுகின்றது. இந்த முத்திரைகளையெல்லாம் தொகுத்து இதன் மொத்தத்தொகுதிதான் நாம் என்று நம்மை நாமே நினைத்துக் கொள்கின்றோம்!. பார்சலுக்கு உள்ளே இருக்கும் பொருள்தான், நாம்! நம்மீது குத்தப்படும் முத்திரைகளின் தொகுப்பு நாம் அல்ல!.
பெரும்பாலான நேரம், நம்முடைய மதிப்பை உருவாக்குவதில்தான் சக்தி செலவாகின்றது. நம் நடத்தையை உருவாக்குவதில் சக்தியைச் செலவழிப்பதில்லை.
Creating the image
Creating the Character
என்று இரண்டு விஷயங்கள் உண்டு.
நம் மதிப்பை உயர்த்தும் நேரத்தில், ஆனந்தமான மன அமைப்பை உருவாக்குவதற்குச் செலவு செய்தால் மதிப்பும், புகழும் தானாகவே வந்துவிடும்!
ஆனந்தமான வாழ்க்கைக்கான மன அமைப்பைப் உருவாக்குவது தான் நித்யம்.
மித்யம் என்றால் நிலையில்லாதது.
மதிப்பு இன்று இருக்கும். நாளை போய்விடும்.
தெளிந்த மன அமைப்பினை உருவாக்குவதுதான் சத்யம்.
உண்மையில் நம் மதிப்பை உயர்த்தும் நேரத்தில், ஆனந்தமான மன அமைப்பை உருவாக்குவதற்குச் செலவு செய்தால் மதிப்பும், புகழும் தானாகவே வந்துவிடும்!
புகழ், மதிப்பு என்பதெல்லாம் வேண்டாம் என்று விட்டுவிட்டு, நமது வேலையைப் பார்த்துக்கொண்டு சென்றாலும் உங்கள் பின்னாடியே வரும்.
வேண்டும் என்று நீங்கள் அதை ஓடி, ஓடிப் பிடித்தாலும் பிடிக்க முடியாது. தப்பித்துச்சென்று கொண்டே இருக்கும்.
"சம சத்ரௌஸ மித்ரேச சமோ மானாவ மானயோ ஹோ"
என்ற ஈஸ்வரனின் இரண்டாவது சூத்திரத்தை ஆழமாகப் புரிந்து கொண்டு, இதன் அடித் தத்துவமான ஆழமான மன அமைப்பினை உங்களுக்குள் உருவாக்குங்கள். ஆனந்தமாக இருப்பீர்கள்.
மற்றவர்களால் ஏற்படுத்தப்பட்ட, மற்றவர்கள் நமக்களித்த, போலி மன அமைப்பையும், போலி தனித்தன்மையையும், போலி மனித அமைப்பு, போலி கௌரவம் ஆகியனவற்றை வைத்துக் கொண்டிருக்காமல், நம்மைப்பற்றி நாமே தெளிவாகத் தெரிந்து கொண்டு நித்யமான ஆனந்தத்தைத் தரக்கூடிய மன அமைப்பினை உங்களுக்குள் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்!
பரமஹம்ஸ நித்யானந்தர்

பரமஹம்ஸ நித்யானந்தர்
பரமஹம்ஸ நித்யானந்தர் இன்று நம்
மத்தியில் வாழும் ஒப்பீடற்றஞான குரு
ஆவார். இந்த பூமியில் உள்ளுலக
ஆனந்தத்திற்கான அறிவியலை மீண்டும்
நிர்மாணிப்பதற்கான பணியைச் செய்து
வருகின்றார்.
பரமஹம்ஸர் தென்னிந்தியாவின் ஆன்மீக தலைநகரமாம் திருவண்ணாமலை நகரில் ஜனவரி 1, 1978 அன்று பிறந்தார். சிறு வயதிலிருந்து ஒரு நோக்குடன் செய்த தீவிர தவத்தினால் தன்னுள் உள்ளுலக ஆனந்தத்தை அனுபவமாக அடைந்தார்.
பரமஹம்ஸரின் ஆன்மீகத் தேடுதல் குழந்தைப் பருவத்திலேயே தொடங்கியது. 12 ஆவது வயதில் ஆழ்ந்த முதல் ஆன்மீக அனுபவம் (சத்தோரி) அனுபூதியாக அடைந்தார். தனது 17 ஆவது வயதில் பரமஹம்ஸர் தன் சுய தன்மையை உணர்ந்து கொள்வதற்காக வீட்டை விட்டு வெளியேறி, இந்தியா மற்றும் நேபாளம் முழுவதும் பரிவராஜகம் சென்றார்.
யோகா, தந்திரம் மற்றும் ஞானிகளினால் மட்டுமே உணர்ந்து கொள்ளக்கூடிய நுட்பமான அறிவியலையும், கலைகளையும் கற்றார். இதனுடன் ஆழ்ந்த அறிவுமிகு ஆன்மீக அனுபவங்களையும் பெற்றார்.
பெருமைமிக்க புண்ணியஸ்தலங்களைத் தரிசனம் செய்ததுடன், கடுமையான தியானப்பயிற்சியைத் தொடர்ந்து செய்தார். பல்லாயிரக்கணக்கான மைல்கள் வெறும் கால்நடைப்பயணமாக நடந்து இந்தியா முழுவதும் குறுக்கும் நெடுக்குமாக 70,000 மைல்கள் தூரம் நடந்தே பயணம் மேற்கொண்டார்.
ஆழமாக ஆராய்ந்து அனுபவித்து உணர்ந்த கல்வி மூலமாகவும், ஆழ்ந்து செய்த தியானத்தினாலும் இன்று பரமஹம்ஸர் உலகளவில் பல மில்லியன்களுக்கும் மேற்பட்ட மக்களுக்கு உத்வேகமளிக்கும் மனிதராக நம்மிடையே வாழ்ந்து வருகின்றார்.
தன்னுடைய அனுபவத்திலிருந்து வடிவமைத்த தனிமனித விழிப்புணர்வடையச் செய்யும் ஆனந்த நுட்பங்களின் மூலமாக மனிதனை மகானாக விழித்தெழச் செய்கின்றார். மேலும் இவ்வாறு உலகிலுள்ள ஒவ்வொரு தனி மனிதரும் தன்னுள் இருக்கும் ஆனந்தத்தைக் கண்டுணர்வதற்கான சூத்திரங்களை வடிவமைத்துள்ளார்.
தன்னுடைய வலிமை மிகுந்த எளிமையான தியான நுட்பங்களாலும், ஞானக்கருத்துக்களாலும் மக்களின் நடைமுறைவாழ்க்கைப் பிரச்சனைகளுக்கு உதவக்கூடிய நேரடித் தீர்வுகளைப் பரமஹம்ஸர் வழங்கி வருகிறீர். இதனால் இந்தக் குறுகிய காலத்திலேயே பல லட்சக்கணக்கான மக்கள் வாழ்க்கையில் பெரும் பயன் அடைந்திருக்கிறார்கள்.
பொருள் சார்ந்த உலகில் வெற்றி பெறுவதற்கும், தன்னுள் இருக்கும் ஆழ்ந்த தேடுதலை முழுமையடையச் செய்வதற்கும் தியானமே திறவுகோல் என்று வலியுறுத்தும் பரமஹம்ஸர், உலகின் எல்லா விதமான மனிதர்களும் வெளியிலும், தன்னுள்ளும் ஆனந்தத்தையும், அமைதியையும் அனுபவமாக பெறுவதற்குப் பல தியான நுட்பங்களைப் வடிவமைத்து வழங்கி வருகின்றார்.
தனிமனிதர் ஒவ்வொருவரும் தன்னுள் தானே உணர்வதை உறுதி செய்வதே பரமஹம்ஸர் மேற்கொண்டிருக்கும் பணியின் ஒரே நோக்கமாகும்.
உலகெங்கும் சமூக சேவைகளாற்றி, பல்லாயிரக்கணக்கான மனிதர்களுக்கு உடலளவிலும், மனதளவிலும், ஆன்ம அளவிலும்

நித்யானந்த தியானபீடம்
நித்யானந்த தியானபீடம் தியானத்திற்காகவும், தனிமனித உருமாற்றத்திற்காகவும் பரமஹம்ஸ நித்யானந்தரால் துவங்கப்பட்ட உலகளாவிய இயக்கமாகும்.
காலத்தால் நிரூபிக்கப்பட்ட வேத உள்ளடக்கங்களாலும், நவீன நுட்பங்களாலும் பரிசோதனைக்குட்பட்டு நிரூபணமான நித்யானந்தா மெடிடேசன் அகாடமி (NMA) உலகெங்கிலும் நிறுவப்பட்டு உள்ளுலக வளர்ச்சிக்கான ஆய்வுக்கூடமாக செயல்பட்டு வருகின்றது.

குணமளிக்கும் ஆலமரம், பிடதி ஆசிரமம்
உள்ளுலக வளர்ச்சிக்கு நேரடியான
முக்கியத்துவம் அளித்து வரும்
நித்யானந்த மெடிடேஷன்
அகடமிகளின் தனிச்சிறப்பம்சமே
உள்ளுலக வளர்ச்சியின் பக்க
விளைவாக தன்னிச்சையாகவே
வெளியுலக வளர்ச்சி
நிகழத்துவங்கிவிடும் என்பதாகும்.
இந்த இயக்கத்தின் துவக்கம்
முதற்கொண்டு தியானத்தி
லிருந்து அறிவியல் வரை
ஒருவர் தன்னைப் பற்றி
பூர்வாங்கமாக ஆராய்ந்து
அறிந்து தங்கு தடையின்றி
முழுமையாக வெளிப்படுத்திக்
கொள்வதற்காக துவங்கப்பட்டு
மிகச்சிறப்பாக செயல்பட்டு
வருகின்றது.

கொலம்பஸ் ஆசிரமம், ஒஹியோ, யுஎஸ்ஏ
நித்யானந்த மெடிடேஷன் அகடமி பொருள் சார்ந்த உலகமும், ஆன்மீக உலகமும் கரைந்து ஆனந்த மயமாக வாழும் முறையை வழங்கும் தளமான க்வாண்டம் ஸ்பிரிச்சுவாலிட்டி (Quantum Spirituality) வழங்கி வருகின்றது.
ஆனந்தமான வாழும் முறையால்
வெளிப்படும் ஆழ்ந்த விழிப்புணர்வு
ஒருவருக்குள் இருக்கும் புத்தியூர்வமான
படைப்பாற்றலை அரும்பச்செய்யும்.
2003 ம் ஆண்டு துவங்கப்பட்டு தற்போது
33 நாடுகளில் 1000 கிளைகளுக்கு
மேற்பட்ட கிளைகளுடன் வளர்ந்திருக்கும்
நித்யானந்த தியானபீடம் தனிமனித
உருமாற்றத்தால் மனிதகுல
உருமாற்றத்திற்கு வித்திட்டு வருகின்றது.

ஹைதராபாத் ஆசிரமம், இந்தியா
நித்யானந்த மெடிடேஷன் அகடமியின் முதன் நிலை தியான முகாம் ஆனந்த ஸ்புரண தியான முகாம் (ASP) ஆகும் (லைப் பிளிஸ் ப்ரோகிராம் என்றொரு பெயரும் உண்டு). இது உடன் சக்தி மையங்களைப்பற்றி அறிமுகப்படுத்தும் தியான முகாம் ஆகும்.
உணர்வின் ஜீவாதாரமாக விளங்கும் இந்த முக்கியமான சக்தி மையங்களின் இயக்கத்தை பொருத்துதான் ஒருவரின் உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும் நிர்ணயிக்கப்படுகின்றது. ஆனந்த ஸ்புரண தியான முகாம் நம் உணர்வுகளுக்கும், சக்தி மையங்களுக்கும் இடையே உள்ள நேரடியான தொடர்பை நமக்கு விளக்கும் முகாமாகும். உணர்வுகளை நமக்கு நற்பயனளிக்கும்படி கையாளும் முறையையும், மேம்பட்ட தெளிவையும், நேர்மறையான மன அமைப்பையும், சுமுகமான உறவுகளையும், வேலை மீது புதுப்பிக்கப்பட்ட உத்வேகமான அணுகுமுறையையும், இது அத்துனைக்கும் மேற்பட்ட ஆனந்தமான வாழ்க்கை முறையையும் பெறுவதற்கு ஆனந்த ஸ்புரண

சகல சௌபாக்கியம் அருளும் ஸ்ரீ ஆனந்தேஸ்வரர் கோயில், பிடதி ஆசிரமம்

தியான முகாம் உறுதியளிக்கிறது.
NMA-வில் ஆனந்த ஸ்புரண தியான முகாம் என்பதுடன் பல்வேறு தியான முகாம்கள் வடிவமைக்கப்பட்டு உலகம் முழுவதிலும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றது. நித்யா ஸ்பிரிச்சுவல் ஹீலிங் எனும் அமைப்பின் வழியாக தொடர்ந்து மக்களுக்கு உலகம் முழுவதும் இலவச தியான சிகிச்சையும்,
இளைஞர்களுக்கு இலவசக் கல்வியும், ஓவியம் மற்றும் கலைகளுக்கு ஊக்கமளித்தும் வருகின்றது.
சத்சங்கங்கள் ஏற்பாடு செய்தும் (ஆன்மீக சபைகள்), மறைபொருள் நுட்பங்களை அறிவியல் ஆராய்ச்சியின் மூலமாக நிரூபித்து பதிவு செய்தும், தனித்துவத்தை வளர்க்கும் முகாம்களை நடத்தியும், நகரத்து வாழ்வோருக்கு உரிய முகாம்களை நடத்தியும் வருகின்றது.
மேலும் இலவச மருத்துவ முகாம்கள், இலவச கண் அறுவை சிகிச்சைகள், அன்னதானம், விளைநிலங்களில் வேத விவசாயத்தை

நடைமுறைப்படுத்துதல், குழந்தைகளுக்கென தனியே தங்கும் வசதியுடன் கூடிய குருகுலக் கல்வி அமைப்பையும் உலகெங்கும் வழங்கி வருகின்றது.
உலகெங்கும் உள்ள தன்னார்வத் தொண்டர்கள் - நித்ய தீர சேவ சேனையினர் (NDSS) முழுமையாக உத்வேகத்துடனும், உற்சாகத்துடனும் இயக்கத்திற்கு மிகப்பெரியளவில் பக்க பலமாக இயங்கி வருகின்றனர்.
ஆனந்த ஸ்புரண தியான அனுபவ முகாம் (ASP)
உடல், மனம், உயிர்ச்சக்தி ஆகிய மூன்றும் நம் உடலுக்குள் ஏழிடங்களில் ஒன்றாய்க் கலந்திருக்கின்றன. இந்த சூட்சுமமான இடங்களைத்தான் சக்கரங்கள் அல்லது சக்தி மையங்கள் என்றழைக்கிறோம். சக்தி மையங்கள் சரிவர இயங்காததே எல்லா நோய்களுக்கும் மனப் பிரச்சனைகளுக்கும் மூலகாரணம்.
நம் சிறுவயதிலிருந்து, நம் சக்தி மையங்களைத் தாக்கிய மன வேதனைகள், நிறைவேறாத ஆசைகள், அதிர்ச்சிகள் தான் சக்திமையங்களின் இயக்கத்தைப் பாதித்திருக்கின்றன. இந்த பாதிப்புகளை ஏற்படுத்திய எண்ணங்களைத்தான் 'எண்ணப்பதிவுகள்' என்றழைக்கின்றோம். உடலும் மனமும் ஆரோக்கியம் பெற, "நம்முள் இருக்கும் ஏழு சக்கரங்களை சுறு சுறுப்பாக இயங்கச் செய்வதே எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு" என்று பரமஹம்ஸர் சொல்கிறார்.
உடல் ஆரோக்கியத்தையும், மனத்தெளிவையும் ஒரு சேர தரும் இந்த ஆனந்த ஸ்புரண தியான முகாம், பங்கேற்பவருக்கு வாழ்வியல் கல்வியையும், பேரின்ப சூட்சுமத்தையும் கற்றுத் தரும்.
ஆனந்த ஸ்புரணா தியான முகாமில்
✧ உடல் ஆரோக்கியம், ✧ மனத்தெளிவு, சிந்தனைத் திறன் ✧ உறவுகளிடம் பண்பு ✧ செய்யும் தொழிலில் உற்சாகம் ஆகியவற்றோடு வாழ்வில் ஆனந்தமும் அமைதியும் பெறுவீர்கள்.
தொடர்பு கொள்ள : 09944278705, 09944046883 09945946744, 09486973596
LIFE BLISS TECHNOLOGY
(LBT-ஒரு வருட இலவச வாழும் கலைக்கல்வி)
உங்களுடன் ஒரு நிமிடம்...

● நினைத்ததை சாதிக்கும் தெளிவு!
● விரும்பியதை அடையும் துணிவு!
● சுற்றத்தைக் கவரும் கனிவு!
- பெறத் துடித்துக் கொண்டிருக்கிறீர்களா?
இதைத் கவனித்திருக்கிறீர்களா?...
Computer Technology, Information Technology, Bio Technology என்பதையெல்லாம் பார்த்திருக்கிறோம், இது என்ன Life Bliss Technology, என்று பார்க்கும் ஒவ்வொரு இளைஞர்களுக்கும்!
உங்கள் வாழ்க்கையை வாழ்வதற்குத் தேவையான பொருட்களைச் சம்பாதிக்க உங்கள் வாழ்வில் 3-ல் 1 பகுதியை 25 வருடங்களை செலவு செய்து நீங்கள் கற்றுக்கொள்வதுதான் எல்லாப் படிப்புகளும்.
உங்கள் வாழ்க்கையை ஆனந்தமாக வாழ்வதற்குத் தேவையான நுட்பத்தை 1 வருடம் செலவு செய்து கற்றுக் கொள்வதுதான் Life Bliss Technology.
LBT கல்வித் திட்டத்தில் நீங்கள் கற்க இருப்பவை...
☺ உடல் ஆரோக்கியத்தையும், மனத்தெளிவையும், உணர்ச்சிச் சமநிலையையும் உருவாக்கும் தியான முறைகள் கற்றுத்தரப்படும்.
☺ சாதாரண தலைவலியில் இருந்து கேன்சர் வரை சரி செய்யும் 'தியானசிகிச்சை முறைகள்' (Spiritual Healing) கற்றுத்தரப்படும்.
☺ உலகளாவிய ஆன்மீகக் கொள்கைகள், மதங்களின் தத்துவபூர்வமான அடிப்படை விளக்கங்களும். ✦ சம்ஸ்கிருதம் ✦வேதங்கள் ✦உபநிஷத்துக்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வாழ்க்கைக்குத் தேவையான பகுதிகளும் கற்றுத்தரப்படும்.
உங்களுடைய ஐந்து விரல்களில் எது பெரியது? எது சிறியது? அதில் ஐந்துமே அடிப்படைத் தேவை. அதுபோல் எல்லா மனிதனின் அடிப்படையான தேவைகளையும், ஆசைகளையும் ஐந்தாக பிரிக்கலாம். அத்தேவைகளை சுயமாய் பூர்த்திசெய்து கொள்ள
LBT வழங்கும் பாடத்திட்டங்கள்...
| S. No. | மனிதனின் அடிப்படைத் தேவை | LBT வழங்கும்பாடத்திட்டங்கள் |
|---|---|---|
| 1 | Physical Wellness | Arogyam (Wellness) |
| Blissful Lifestyle | ||
| 2 | Mental Wellness | Deprogramming the Mind |
| Re-programming the Mind | ||
| Quantum Memory Program | ||
| 3 | Relationships | Inter personal relationships Communication Skills |
| Intra personal relationships Personality Development | ||
| International relationships Leadership Training | ||
| 4 | Social Intelligence | Public Speaking Skill |
| Creativity | ||
| 5 | Spiritual Intelligence | Vedic Training |
| Updated Spirituality |
தொடர்பு கொள்ள
09341469170, 09443370552 09442602226, 080 27303201
Nithyananda Dhyanapeetam
வாருங்கள்...
விவேகானந்தர்களே!
தியாக மனப்பான்மையும்,
சேவை மனப்பான்மையும்
கொண்ட
வீர இளைஞர்களுக்கான
அரிய வாய்ப்பு!

இலவச உணவு, இருப்பிடத்தோடு கூடிய 2 வருட பிரமேச்சர்ய பயிற்சிக்கு 18 வயதிற்கு மேற்பட்ட தனிநபர்கள் வரவேற்கப்படுகின்றார்கள்.
33 நாடுகளில் 1200 மையங்களோடு இருக்கும் தியானபீட மஹா சமஸ்தானத்தின் எதிர்கால தியாக வாரிசுகளாக மக்களுக்கெல்லாம் மாபெரும் சேவை செய்யும் அரிய வாய்ப்பு இந்த ஆனந்த பிரம்மச்சர்யம்
பரமஹம்ஸ நித்யானந்தர்
✦ கலவரம் இல்லாத பூமி உங்களின் கனவா? ✦ ஞானியாவது உங்களின் நோக்கமா? ✦ சேவையில் மிகவும் ஆர்வம் கொண்டவரா? ✦ முறையான துறவறம் மேற்கொள்ள விரும்புபவரா?
ஆன்ம ஞானம் பெற்று மனித குலத்தைக் காக்கத்துடிக்கும் இளைஞர்களுக்கு, வேத பாரம்பரிய முறையில் வாழும் ஞானி நேரடியாக இருந்து அளிக்கும், ஆனந்த பிரம்மச்சரிய பயிற்சியில் கலந்துகொண்டு பூரணமான வெற்றியைப் பெற அணுகவேண்டிய முகவரி :
|
| நித்யானந்த தியானபீடம் | போன் : |
|---|---|
| நித்யானந்தபுரி, கல்லுகோப்பஹல்லி, | 093414 69170 |
| ராமநகரம் தாலுக்கா, பீடதி - 562 109. | 099805 87464 |
| பெங்களூர் மாவட்டம், கர்நாடகா. | 080-27202084 |
| [email protected] | |
| www.nithyananda.org |
வானப்பிரஸ்த சன்யாஸ பயிற்சி
உங்களுக்கும் ஓர் வாய்ப்பு!
வாருங்கள்!...ராமகிருஷ்ணராகவும் சாரதா தேவியாகவும் மாறுவதற்கு.

"பொறுப்புக்களை முடிந்தவர்களும், உடல், மன ஆரோக்கியம் கொண்ட தனி மனிதர்களுக்குமான அருமையான வாய்ப்பு."
இலவச உணவு, இருப்பிடத்தோடு கூடிய 2 வருட வானப்பிரஸ்த சந்நியாஸ பயிற்சிக்கு 45 வயதிற்குட்பட்ட தனிநபர்கள் வரவேற்கப்படுகின்றார்கள். வாழ்க்கையின் மீது நம்பிக்கையிழந்து, இனி வாழ என்ன இருக்கின்றது என நினைப்பவர்களை கூட புது தெம்போடு வாழவைப்பது தான் இப்பயிற்சியின் நோக்கம்.
(வானப்பிரஸ்த சன்யாஸ பயிற்சியை எடுப்பதில் ஈடுபாடில்லாத, 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் வேறு பயிற்சிகளில் கலந்து கொள்ள சன்யாஸ பயிற்சி அலுவலகத்தோடு தொடர்பு கொள்ளுங்கள்.)
- தனித்துராய் வாழ்பவர்கள்
- விதவைகள், மனைவியிழந்தோர்
- விவாகரத்து பெற்ற ஆண்கள், பெண்கள்
- ஆதரவற்றோர் ஆகிய அனைவருக்கும் உயர்ந்த உன்னதமான வாழ்க்கை முறையான வானப்பிரஸ்த சந்நியாஸம் எடுத்துக் கொள்வதற்கான அரிய வாய்ப்பு இந்த 2 ஆண்டு பயிற்சி.
எதிர்காலம்
வானப்பிரஸ்த சன்யாஸ பயிற்சியை வெற்றிகரமாக முடித்து தேறுபவருக்கு வாழ்க்கை முழுவதும் உணவு, உடை, அவர்களுக்கான தங்குமிடம், மருத்துவ தேவைகள் அனைத்தையும் ஆசிரமமே கவனித்துக்கொள்ளுகிறது.
வேத பாரம்பரியம்
வெளியுலகத்தில் வாழ்ந்து வாழ்க்கையை முடித்த ஒவ்வொருவரும் உள்ளுலகத்தில் முழுமையடைய முழுமனிதராக வானப்பிரஸ்த சன்யாஸம் ஏற்க வேண்டும்.
இதுவரை 200க்கும் மேற்பட்ட தனிநபர்கள் இப்பயிற்சியில் கலந்துகொண்டு ஆனந்தமாகவும் தங்களின் வாழ்க்கையை அமைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இப்பயிற்சியின் சிறப்பம்சம்
ஞான பயிற்சி : 2 வருட பயிற்சியும் பரமஹம்ச நித்யானந்தரின் நேரடி பார்வையில் நடத்தப்படுகிறது
நேர்முகத்தேர்வுக்கு வரும்போது நீங்கள் கொண்டுவரவேண்டியது:
- Bio-data
- Certificate copies
- Consent letter (Guardian)
- Medical fitness certificate
- Identity proof
தொடர்புக்கு:
9486980474
9980587464
080 27202084
நேர்முகத்தேர்வு நாள்:
ஒவ்வொரு மாதமும் முதல் தேதி நடைபெறும்.
இடம் - பிடதி.
Nithyanandapuri, Kallugopahalli,
Bidadi - 562109, Bangalore.
[email protected]
www.nithyananda.org
CONTACT US
Nithyananda Dhyanapeetam is the wing of Nithyananda Mission that handles the spiritual activities of the mission. Listed below are the main Vedic temples and Nithyananda Mission ashrams world wide.
USA:
Los Angeles
Los Angeles Vedic Temple
9720 Central Avenue, Montclair,
CA 91763
USA
Ph.: 1-909-625-1400
Email: [email protected]
URL: www.lifebliss.org
Life Bliss Foundation
928 Huntington Dr,
Duarte, Los Angeles
CA 91010
Ph.: 1-626-205-3286
San Jose
San Jose Vedic Temple
5788 Riochester Ct.
San Jose CA 95123
Ph.: 510-573-3433, 510-813-
6474
Florida
Orlando Vedic Temple &
International Vedic Hindu
University
113 N. Econlockhatchee Trail,
Orlando
Florida, 32825
Ph.: 626-272-4043
Ohio
Ohio Vedic Temple & Ashram
820 Pollock Rd,
Delaware, Ohio
Ph: 740-362-2046
Oklahoma
Oklahoma City Vedic Temple
3048 N. Grand Blvd.
Oklahoma city
OK 73107
Ph.: 405-833-6107
Missouri
St Louis Vedic Temple
12555 Sunset Dr.
St Louis, MO. 63128
Ph.: 314-849-6760
Washington
Seattle Vedic Temple
2877 152nd Ave Ne building 13
Redmond Washington 98052
Ph.: 425-591-1010
Phoenix
6605 South 39th Ave,
Phoenix, AZ 85041
Ph.: 480 388 2490
Email:
[email protected]
Malaysia
Klang Ashram
No 62, Jalan Serempang Dua,
Off Jalan Sungai Betek,
Taman Betek Indah,
41400 Klang, Malaysia
INDIA:
Bangalore, Karnataka
(Spiritual headquarters. Vedic
Temple located here)
Nithyananda Dhyanapeetam
Nithyanandapuri
Kallugopahalli
Mysore Road, Bidadi
Bangalore - 562 109
Karnataka
Ph.: +91 80 272020801 /
27202084
+91 92430 48957
Email: [email protected]
URL:www.nithyananda.org
Hosur, Karnataka
Nithyanandapuri,
Kanuka Estate
Nallur post,
Hosur - 635 109
Krishnagiri District,
Tamilnadu
Ph.: 99947 77898 / 99443
21809
Hyderabad, Andhra Pradesh
Sri Anandeshwari Temple,
Nithyananda Giri,
Pashambanda Sathamrai
Village
Shamshabad Mandal
Rangareddy District - 501 218
Andhra Pradesh
Ph.: 91 +84132 60311 / 60044
Mob.: 98665 00350 / 93964
82358
Salem, Tamil Nadu
Nithyanandapuri
102, Azhagapurampudur
Salem – 636 016
Tamilnadu
Ph.: +91 94433 64644 / 94432
35262
(Behind Sharada College)
Namakkal, Tamil Nadu
Nithyanandapuri,
2/200, Tirumangkuruchi Post,
Namakkal – 637003
Tamilnadu, INDIA
Ph.: +91 +94433 88437
Tiruvannamalai, Tamil Nadu
Nithyanandapuri,
Othaivaadai street,
Pavazhakundru,
Tiruvannamalai - 606 601,
Tamil Nadu
Tiruvannamalai, Tamil Nadu
Nithyanandapuri,
Opposite Rajarajeswari Temple
Girivalam path
Tiruvannamalai
Ph.: 94449 91089 / 94432
33789
Tiruvannamalai, Tamil Nadu
Arunachala Dhyanapeetam
Keel Katcharappattu Village
Tiruvannamalai
Ph.: 94449 91089 / 94432
33789
Pattanam, Tamil Nadu
Nithyanandapuri, Puthupatti road,
Pattanam
Rasipuram (Taluk) - 605602
Namakkal disrict
Ph.: 04287 222842
Rajapalayam, Tamilnadu
Nithyanandapuri,
Kothainachiarpuram,
Rajapalayam,
Virudhunagar District
Ph.: 04563 260002 / 94426 23768
Pondicherry, Tamilnadu
Nithyanandapuri,
Embalam to Villianoor main road,
Embalam post,
Pondicherry - 605 106
Ph.: 94420 36037 / 97876 67604
Poompuhar, Tamilnadu
Poompuhar Aadeenam
Shivarajayoga Mutt
Opposite Poompuhar College
Melayur Post
Seerkaali Taluk
Nagai District - 609 107
இந்தப் புத்தகம் என் வாழ்க்கையில் பெருமளவு உதவியிருப்பதால் இதை எனது உறவினருக்கு / நண்பருக்கு பரிசளிக்க விரும்புகிறேன்.
நான் :....................................................................... முகவரி:...................................................................... ........................................................................... ...........................................................................
“நாதமில்லா நாதம்” என்ற புத்தகத்திற்கான தொகை ரூ............DD/Cash/Cheque ................ஆக இதனுடன் இணைத்துள்ளேன்.
தேதி................... வங்கியின் பெயர்............................ கிளை................................................(காசோலை/Cheque அனுப்புபவர்கள் ரூ. 30/-சேர்த்து அனுப்பவும்).
கீழ்க்கண்ட முகவரிக்கு...........................புத்தகங்கள் அனுப்பி வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
பெயர் :....................................................................... முகவரி :....................................................................... :....................................................................... :....................................................................... பின்கோடு :....................................................................... போன் :.......................................................................

Ebook ISBN: 979-8-88572-688-7 © 2008 Sri Nithyananda Paramashivam. All Rights Reserved