KAILASA Library/நாதமில்லா நாதம் (குந்த்ர சாஸ்திரம்)/முன்னுரை :Sign in
நாதமில்லா நாதம் (குந்த்ர சாஸ்திரம்)

முன்னுரை :

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

ஒரு மிகப்பெரிய பண்டிதர், ஆறு நாள் கதையாக அரிச்சந்திர புராணத்தை அழகாகக் கூறி முடித்தார். முடித்தபின் ஒரு பெருமிதத்துடன், தனக்கு முன்பாக அமர்ந்திருந்தவரைப் பார்த்து, "இந்தக் கதையிலிருந்து நீ என்ன தெரிந்து கொண்டாய்?" என்று கேட்டார். "மரணமே வந்தாலும் கூட நாம் சத்தியத்தைத்தான் பேச வேண்டும் எனத்தெரிந்து கொண்டேன்" என்று அந்த நபர் கூறினார்.

ஆஹா! அனைவருமே சரியாகத்தான் புரிந்து கொண்டுள்ளனர் என மேலும் பெருமிதப்பட்டு, அருகில் இருந்த மற்றொருவரைப் பார்த்து, "நீ என்ன தெரிந்து கொண்டாய்?" என்று கேட்டார்.

"ஒரு அவசரம், ஆபத்து என்றால் மனைவியை விற்றால் கூடத் தவறில்லை என்று தெரிந்து கொண்டேன்," எனச் சொன்னார் அந்த மற்றொரு நபர்!

ஒரே நிகழ்ச்சி, ஒரே கதை, ஒரே சொற்பொழிவு. ஆனால் ஒவ்வொருவரும், ஒவ்வொரு விளக்கத்தில் புரிந்து கொள்கிறார்கள்!

அரிச்சந்திரனின் கதையிலிருந்து சத்தியத்தைப் பற்றி மட்டுமே பேச வேண்டும் என்ற உண்மையையும் கற்றுக்கொள்ளலாம். அவசரத்திற்கு மனைவியை விற்கவும் கூட, செய்யலாம் என்ற உண்மையையும் கற்றுக்கொள்ளலாம்.

எந்த ஒரு செய்தியையும், நித்யம் என்ற கோணத்திலிருந்தும் பார்த்துக் கற்றுக்கொள்ளலாம். அநித்யம் என்ற கோணத்திலிருந்தும் பார்த்துக் கற்றுக்கொள்ளலாம்

பார்க்கும் கோணம் மாறினால் கோளும் மாறும் என்று 5000 வருடங்களுக்கு முன்பே இதன் சாரத்தை, சூத்திரமாக சிவபெருமான் அளித்தது இன்றைய மனிதனுக்கு மட்டுமல்ல, இனி வரப்போகும் சந்ததியருக்குமான தீர்வை அளிப்பதாய் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மனஅமைப்பின் முக்கியத்துவத்தைப் பற்றி சிவபெருமான் அளித்துள்ள இந்த சூத்திரம் ஒன்றே பலரைத் துன்பமயமான வாழ்க்கைச் சக்கரத்தில் இருந்து விடுவித்துள்ளது.

உங்களையும் இது நிச்சயம் விடுவிக்கும்.

இப்படிக்கு

நித்யானந்தத்தில்

தியானபீட சேரிடபுள் டிரஸ்ட்