யோகிராம் சூரத்குமார்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
யோகிராம் சூரத்குமார் ௮ விசிறி சாமியார் அவர்கள் எனக்கு சிறு வயதில் இருந்தே தெரியும். அவர் கோயிலின் எதிரே உள்ள சன்னதி தெருவில் இருக்கும் வீட்டில் அவர் இருக்கும் போதே நாங்கள் அங்கு போய் அவரைப் பார்த்து இருக்கிறோம். அதற்குப் பிறகு அவர் ரமணாஸ்ரமம் எதிரில் ஆஸ்ரமம் ஆரம்பித்த பிறகும் அங்கு அடிக்கடி போய்வருவோம். அங்கு ஒரு சிறிய குடிசை அமைத்துக் கொண்டு அதில் இருந்து கொண்டே அவ்வளவு பெரிய ஆஸ்ரமத்தைக் கட்டினார். அவர் கட்டிட வேலைகளை நன்கு மேற்பார்வை பார்ப்பார். எனது தம்பி யோகிராம் சூரத்குமாரின் மிக நெருங்கிய பக்தர். அடிக்கடி அவரை தரிசனம் செய்வது, அவரிடம் நெருங்கிப் பழகுவான். என்னுடைய தகப்பனாரும் அவரிடம் போய் நிறைய ஆலோசனைகள் செய்வார். எங்கள் வீட்டில் நடந்த எல்லா திருமணங்களுக்கும் அவரிடம் கலந்து பேசி ஆசீர்வாதம் பெற்று வந்தார். அவர் சமாதி ஆன

when god is my son
Autobiography of The Avatar from KAILASA Presents The Memoirs of the Biological Mother of The Avatar, Ma Nithya Lokanayakananda Swami

ரங்கநாதானந்த மகராஜ்
கல்கத்தா ராமகிருஷ்ண மடத்துத் தலைவராக இருந்தவர் ரங்கநாதானந்த மகராஜ். ஸ்வாமி ராமகிருஷ்ண மடத்தில் சேர்ந்த சில மாதங்கள் கழித்து ரங்கநாதானந்த மகராஜ் சென்னை மயிலாப்பூர் மடத்திற்கு வந்து தங்கி இருந்தார். அப்பொழுது அவர் மந்திர தீட்சை கொடுப்பதாக ஒரு நிகழ்ச்சி இருந்தது. அப்பொழுது நானும் என் கணவரும் சென்று அவரிடம் மந்திர தீட்சை பெற்றுக்கொண்டோம். அப்பொழுது ஒருமுறை நான் அவரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்று இருக்கிறேன். பிறகு மற்றொரு தடவை நான் மயிலாப்பூர் சென்று இருந்த போதும் அவர் வந்து இருந்தார், அந்தத் தடவையும் அவரைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றேன். மொத்தம் இருமுறை அவரை நான் சந்தித்து இருக்கிறேன்.
- *
கௌதமானந்த மகராஜ்
அவர் சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்துத் தலைவராக இருந்தார். நான் எப்பொழுது ராமகிருஷ்ண மடம் சென்றாலும் நமது ஸ்வாமி அவரிடம் அழைத்துக்கொண்டு போய் பேச வைப்பார். அப்போது அவரிடம் பேசிக்கொண்டு இருந்துவிட்டு வந்து இருக்கிறோம். ஒருதடவை அவர் திருவண்ணாமலையில் அருணகிரிநாதர் திருவிழாவில் சொற்பொழிவாற்ற வந்திருந்தார். அப்போது நாங்கள் தனியாகவும் அவரைச் சென்று பார்த்து விட்டு வந்தோம். சொற்பொழிவிற்கும் நாங்கள் சென்று இருந்தோம்.
- *
கிருபானந்த வாரியார் சுவாமிகள்
கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள் சிறுவயதில் இருந்தே எனக்கு நன்றாகத் தெரியும். அருணகிரிநாதர் திருவிழா ஆகஸ்டு மாதம் 14, 15, 16 ஆகிய தேதிகளில் தெரியும் நடைபெறும். அப்பொழுது எல்லா வருடமும் அவருடைய கடைசி காலம் வரை ஆகஸ்டு மாதம் 15ந்தேதி மதியம் 12 மணிக்கு அவருடைய சொற்பொழிவு நடைபெறும். நான் ஒருதடவை கூட அவருடைய

when god is my son
Autobiography of The Avatar from KAILASA Presents The Memoirs of the Biological Mother of The Avatar, Ma Nithya Lokanayakananda Swami

அந்த ஆபீஸ் இருந்ததால் நான், எனது தகப்பனார், எனது தம்பி மூவரும் அந்த ஆபீஸ்க்கு சென்றோம். நானும் எனது அப்பாவும் கீழேயே இருந்தோம். என் தம்பி மட்டும் மேலே போய் ஸ்வாமியை அழைத்து வந்தான். பிறகு நாங்கள் மூவர், ஸ்வாமி நால்வரும் சேர்ந்து நின்று பேசிக்கொண்டிருந்தோம். அப்பொழுது என்னுடைய தகப்பனார் நமது ஸ்வாமியிடம் என்னப்பா உன் அம்மாவிடம் என்ன கூறினாய்? அவர்கள் வந்து நேற்று என்னிடம் ரொம்பவும் கஷ்டப்பட்டார்கள், அவர்கள் வாழ்க்கையில் என்ன கஷ்டப்பட்டிருந்தாலும் அவர்கள் என்னிடம் கூறியது கிடையாது. ஆனால் நேற்றுதான் வந்து அவர்கள் கஷ்டப்பட்டார்கள் என்று கூறினார். இங்கு நீ வேலை செய்யும் இடத்தில் ஏதாவது கஷ்டம் என்றால் சொல், நான் உனக்கு உதவி செய்கின்றேன். என்ன தொழில் செய்யவேண்டும் என்று நீ நினைக்கின்றாயோ அதற்கு தேவையான எல்லா உதவியையும் நான் செய்கின்றேன் என்று கூறினார். அதற்கு அவர் (நமது ஸ்வாமி) "தாத்தா என்னையும் மீறி ஒரு சக்தி இழுக்கின்றது, என்னால் முடியவில்லை" என்று கூறினார். உடனே என் தகப்பனார் என் பக்கம் திரும்பி அம்மா லோகாம்பா நீதான் உன் மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டும். ஆனால் பெற்ற மனது உன்னுடைய கஷ்டம் எனக்குப் புரிகின்றது. சரி வா நாம் ஊருக்குப் போகலாம் என்று என்னிடம் சொன்னார். சாமியிடம் சரிப்பா நாங்கள் ஊருக்குப் போய் வருகின்றோம், நீ போய் உன்னுடைய வேலையைக் கவனி என்று அவரிடம் சொல்லி அவரை ஆபீஸ்க்கு அனுப்பி விட்டு நாம் இப்படியே இங்கிருந்து காஞ்சிபுரம் போய் ஆயாவைப் பார்த்து விட்டு அங்கிருந்து திருவண்ணாமலைக்குப் போகலாம் என்று கூறினார். நானும் சரி என்று சொன்னேன். அங்கிருந்து நாங்கள் இருவரும் காஞ்சிபுரம் சென்றோம். அங்கு போனதும் நான் மிகவும் அமைதியாக இருப்பதைக் கவனித்து^என் பாட்டி என்னப்பா லோகா எப்பொழுதும் கலகலப்பாக இருக்கும், இன்றைக்கு மிகவும் அமைதியாக இருக்கிறதே என்று கேட்டார். அதற்கு என் அப்பா ஒன்றுமில்லை லோகாவினுடைய பெரிய மகன் நேத்தில் கான்பூர்க்கு வேலைக்கு சென்றான். அவனை வழி அனுப்பி
when god is my son
Autobiography of The Avatar from KAILASA Presents The Memoirs of the Biological Mother of The Avatar, Ma Nithya Lokanayakananda Swami



when god is my son
Autobiography of The Avatar from KAILASA Presents The Memoirs of the Biological Mother of The Avatar, Ma Nithya Lokanayakananda Swami

Ebook ISBN: 979-8-88572-674-0