பரமஹம்ஸ ஸ்ரீ நித்யானந்தர் (ஓர் அறிமுகம்)
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.


விஜயா பதிப்பகம்
20, ராஜவீதி
கோயம்புத்தூர் - 641 001. ✆ (0422) 2394614
(C) Copyright 2022
Ebook ISBN: 979-8-88572-630-6
தியான முகாம்கள் மற்றும் தியான சேவை நிகழ்ச்சிகள்
ஆனந்த ஸ்புரணா தியான முகாம் (ASP)
ASP என்பது இரண்டு நாள் தியான முகாம். நமது உடலில் உள்ள 7 சக்கரங்களுக்கு (சக்தி மையங்கள்) 7 வெவ்வேறு மதங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 7 தியானமுறைகள் மற்றும் 7 சொற்பொழிகளோடு நடத்தப்படும் தியான முகாம். உடல், மனம், உயிர் ஆகிய மூன்றும் ஒன்று சேரும் சக்கரங்கள் சுத்திகரிக்கப்பட்டு சக்தியூட்டப்படும்.
ஆனந்த தியானா (AYP)
ஆன்மீகம், தியானம் பற்றிய இரண்டு சொற்பொழிவு களோடு அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட இரண்டு தியான முறைகள் கற்றுத் தரப்படும். பரமஹம்ஸ ஸ்ரீ நித்யானந்தரால் நேரடியாக பயிற்றுவிக்கப்பட்ட 50 ஆச்சாரியார்களால் இந்த தியானமுகாம் உலகெங்கும் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. உலகில் வாழும் வாழ்க்கை இன்னும் அதிக சந்தோஷத்தோடு, ஆனந்தமாக வாழ்வது எப்படி என்று கற்றுத் தரப்படும்.
சக்தி ஸ்புரணா தியான முகாம் (SSP)
மனிதனின் மூன்று உடல்களான ஸ்தூல, சூக்சும, காரண சரீரங்கள் பற்றிய விஞ்ஞான விளக்கமும், மெய்ஞான தியான முறைகளும் இந்த ஒரு நாள் தியான முகாமில் ஆச்சாரியர்களால் கற்றுத்தரப்படும். இதன் மூலம் நமக்குள் மறைந்திருக்கும் சக்திகளையும், அமைதியையும் அனுபவப் பூர்வமாக கண்டுணர முடியும்.
ஞான ஸ்புரணா தியான முகாம் (GSP I & II)
மாணவ, மாணவியருக்கான ஒரு நாள் தியான முகாம். இதில், மூளையின் ஆச்சரியங்கள், ஞாபக சக்தியின் சூட்சுமம், படிப்பு திறன் வளர்த்தல், புரிந்து கொள்ளும் தரம் உயர்த்தல் மற்றும் உற்சாக மூட்டும் செய்முறைகள், தியான முறைகள் பற்றி ஞான ஸ்புரணா தியான முகாம் I-ல் ஆச்சாரியர்களால் கற்றுத் தரப்படும்.
உடலில் உள்ள சுரப்பிகள் (Glands) மற்றும் உணர்ச்சிகள் (Emotions) பற்றிய ஞான விளக்கமும்; ஒரு மாணவனின் எதிர்கால வாழ்க்கையை ஆனந்தமாக அமைத்துக் கொள்வது பற்றிய அடிப்படை வாழ்க்கைக் கல்வியும் ஞான ஸ்புரணா தியான முகாம் II-ல் ஆச்சாரியர் களால் கற்றுத் தரப்படும்.
நித்யானந்த ஸ்புரணா தியான முகாம் (NSP)
பரமஹம்ஸ ஸ்ரீ நித்தயானந்தர் நேரடியாக நடத்தும் நான்கு நாள் தியான முகாம். நமக்குள் இருக்கும் 7 உடல்களை பற்றிய வேத ரகசியங்களையும் பரமஹம்ஸர், தான் ஞானமடைவதற்கு பயன்படுத்திய தியான முறை களையும் NSP-ல் கற்றுத் தருகிறார்கள்.
ஆத்ம ஸ்புரணா தியான முகாம்
ஞானி யார்? நான் எங்கிருக்கிறேன்? நான் எப்படியிருக்கிறேன்? என்ற மிகப் பெரிய ஆன்மீக தத்துவ விளக்கங்களை நமக்குள் இருக்கும் ஐந்து கோஷங்களை அடிப்படையாக கொண்டு பரமஹம்ஸரே நேரடியாக நடத்தும் நான்கு நாள் தியான முகாம்.
தியான சிகிச்சை தீக்சை (HEALER INITIATION)
இரண்டு ASP தியான முகாம்களில் பங்கு பெற்ற பின் உலக மக்களுக்கு ஆனந்த சேவை செய்ய மனப்பூர்வமாக விரும்புபவர்களுக்கு 'தியான சிகிச்சை தீச்சை' ஆசிரமத்தில் இலவசமாக வழங்கப்படுகிறது.
ஆன்மீக சொற்பொழிவுகள்
இலவச ஆன்மீக சொற்பொழிவு மற்றும் தியானமுகாம் ஆஸ்ரமத்திலிருந்து முன் அனுமதி பெறும் பள்ளி, கல்லூரி, சங்கங்களுக்கு ஆச்சாரியர்கள் நேரடியாக சென்ற வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனந்த அனுபவம்
ஒரு வருட இலவச குருக்குல கல்வி. பெற்றோரின் அனுமதி பெற்ற ஆன்மீக விருப்பம் கொண்ட இளைஞர், இளைஞிகளுக்கு வாழும் கலை பற்றிய ஆனந்த கல்வி குருக்கல கல்வி முறையில் இலவச உணவு, உடை, இருப்பிடத்தோடு தியானபீடம் சார்பாக நித்யானந்த புரியில் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. ✧✧✧
OFFERINGS FROM DHYANAPEETAM
TITLES IN ENGLISH
The Formless in Form A pictorial biography of Swamiji
The Gossip Of Nithyananda A collection of Swamiji's most memorable quotes
A Small Story... Swamiji's best-loved parables
The Many Moods of Swamiji Swamiji captured on camera
From Pain to Bliss Insights from Swamiji
From Worrying to Wondering Insights from Swamiji
Question + Swamiji = Answer! Your questions answered
The Simple Truth, Straightaway! A public address by Swamiji
Is Spirituality relevant in our time? A frank talk with the press
Om Mani Padme Hum 27 ways to approach the Master
Discovering Love Insights from Swamiji
Open the door... let the breeze in! Swamiji's practical guide to joyful living
Ananda Healing: Your shortcut to God! An introduction to healing initiation
A Garland of Memories Devotees' reminiscences of time spent with Swamiji
Voices of Gratitude Testimonials about healing miracles
Nithyasmaran A printed collection of devotional songs
Six Days to Total Transformation An introduction to chakra healing through meditation
Open the door... let the breeze in! Tools for joyful living
Meditation is for you! An introduction to the science and art of meditation
ALSO AVAILABLE FROM DHYANAPEETAM
Audio Cassettes, Audio & Video CDs
❖ Swamiji's talks
❖ Mantras (Healing Chants)
❖ Music
Energized products & accessories for meditation & daily use ❖ Red sandalwood malas (rosaries) ❖ Swamiji pendants ❖ Rudraaksh (holy bead) pendants ❖ Bracelets ❖ Rings ❖ Watches ❖ Vibhooti (sacred ash) ❖ Kumkum (vermilion) ❖ T-shirts & sarees ❖ Photographs ❖ Table clocks ❖ Keychains ❖ Yantras (Energy maps) ❖ Meditation Mats ❖ Chanting boxes ❖ Calendars
To order, or to find out more, visit www.dhyanapeetam.org
தமிழ் நூல்கள்
❖ கதவைத் திற... காற்று வரட்டும்!
❖ நித்யானந்தா ஓர் அறிமுகம்
❖ அறிவு அனுபவம் அனுபூதி
❖ ஏன் பாத பூஜை?
❖ பாத பூஜையின் மகத்துவம்

ஆனந்தம் என்னும் பெருங்கடலைத் தன்னகத்தே கண்டு கொண்டவர். இவர் நோயாளிகளுக்கு நோய் தீர்க்கும் மருத்துவர், பிரச்சினைகளோடு வருவோர்க்குச் சிறந்த ஆலோசகர், வாழும் கலை கற்க விரும்புவோர்க்குச் சிறந்த வழிகாட்டி, ஆன்மீகத் தேடுதலோடு வருவோர்க்கு அருமையான குரு.
இந்த நூற்றாண்டில் வாழும் ஒரு சிறந்த மகான் (Contemporary Master) தென்னிந்தியாவின் ஆன்மீக நகரான திருவண்ணாமலையில் அவதரித்தார். 1978ஆம் வருடம் ஜனவரி முதல் தேதி, நள்ளிரவு சரியாக 12.32 மணிக்கு அஷ்டமி திதியில், அருணாசலம், லோகநாயகி தம்பதியருக்கு மூன்று மகன்களில் இரண்டாமவராகப் பிறந்த இவருக்கு பூவுலகில் பெற்றோர் இவருக்கு இட்ட பெயர் ராஜசேகரன்.
2. பிறப்பின் ரகசியம்
முக்காலத்தையும் உணரும் ஞான அனுபவம் கிடைத்த பின் அவருடைய பிறப்பைப் பற்றி ஞான தரிசனத்தில் தெரிந்து கொண்டதை பக்தர்களுடன் பகிர்ந்து கொண்டார். அவர் சொன்னது, "என்னுடைய உடலில் புகுந்து கொள்வதற்கு முன்பும், புகுந்த பொழுதும் இருந்த நிலைகள் எல்லாமே எனக்குத் தெளிவாக நினைவில் இருந்து தெரிகிறது. எல்லாம் நானாக இருக்கும் நினைவில் இருந்து பூமியைப் பார்த்தேன். பூமி இருளால் கவ்வப்பட்டிருந்தது. காற்று மண்டலம் அமைதியாக இருந்தது. அப்போது தென்னிந்தியாவின் ஒரு மூலையில் நட்சத்திரம் போன்ற ஓர் ஒளியைக் கண்டேன். அடுத்த வினாடியே அந்த ஒளியில் புகுந்தேன். கண் விழித்துப் பார்த்தேன். அது திருவண்ணாமலையில் பிறந்திருப்பது தெரிந்தது. அந்த க்ஷணத்தில் தான் நான் உடலில் புகுந்து இந்தப் பிறவியை எடுத்தேன்."
தன் சூட்சம உடலிலிருந்து ஸ்தூல உடலில் புகுந்த பிறகு திருவண்ணாமலைக் குன்றில் தன் ஞானக் கண்ணால் கண்ட காட்சிதான் மேலே தரப்பட்டுள்ள பிறப்பின் ரகசியம்.
குடும்ப வழக்கப்படி அவர் பிறந்த பத்தாம் நாள் ஜாதகம் கணிக்கப்படுவதற்காகக் குடும்ப ஜோதிடர் அழைக்கப்பட்டார். அவரது ஜன்ம திதியில் நக்ஷத்திரங்களின் போக்கை மிகவும் கவனத்தோடு கவனித்து, "இவர் கன்யா ராசி, கன்யா லக்னத்தில் பிறந்தவர். இந்த ஜாதகத்துக் கணிப்பின்படி இவர் ஒரு நாள் உலக வாழ்க்கையைத் துறந்து சந்நியாசியாகி விடுவார்" என்று சொன்னார்.
the தங்கள் மகன் சந்நியாசியாகப் போய்விடுவான் என்று தெரிந்து கொண்ட கணம் பெற்றோர்கள் மிகவும் மனக் கஷ்டத்திற்கு ஆளானார்கள்.
"இதற்கு ஏதாவது பரிகாரம் உண்டா" என்று ஜோசியரைக் கேட்டதற்கு "இந்த கணிப்பு இம்மி அளவு கூடப் பிசகாது, நான் கூறிய படி நடந்தே தீரும் தன் ஜாதகம் பற்றி தெரிந்து கொள்ளாதவரை - சந்நியாசி ஆவது கொஞ்சம் தாமதப்படும்; அவ்வளவுதான்" என்று முடித்துக் கொண்டார்.
இப்படித்தான் நடக்கும்; இதுதான் இறைச் சித்தம் என்று தெளிவாகத் தெரிந்த பின் பெற்றோர் தங்களைத் தேற்றிக் கொண்டு, தங்கள் பிள்ளை சன்னியாசியாகத்தான் போக வேண்டியிருந்தால் அப்படியே நடக்கட்டும். நாம் நமது பிள்ளையின் எந்தச் செயல்களிலும் குறுக்கிட வேண்டாம் என்று தெளிவான முடிவுக்கு வந்தார்கள்.