KAILASA Library/ஸ்ரீ நித்யானந்தர் ஓர் அறிமுகம் (Sri Nithyanandar Or Arimugam - An Introduction to Sri Nithyananda)/II பால்ய பருவம்Sign in
ஸ்ரீ நித்யானந்தர் ஓர் அறிமுகம் (Sri Nithyanandar Or Arimugam - An Introduction to Sri Nithyananda)

II பால்ய பருவம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

1. பாட்டனாருடன்

பாட்டனார் ராஜி முதலியார் பேரன் ராஜசேகரனை
தனக்கு கிடைத்த பொக்கிஷமாகவே நினைத்து
கொண்டாடினார்கள்.

ராஜசேகரன் நடக்க ஆரம்பித்த காலத்திலிருந்து பாட்டனாரும், பல ஆன்மீகக் கதைகளைச் சொல்லி வளர்த்தார்கள். வளரும் போதே, ஓர் ஆன்மீகச் சூழ்நிலையில் வளர்ந்தார்.

ராஜசேகரனுக்கு முதன் முதலில் கிடைத்த அன்பளிப்பு "விநாயகர் விக்ரகம்!". பிறந்த நாள் பரிசாகக் கிடைத்த இந்த விக்ரகத்தை ஏதோ ஓர் உயிரை பாவிப்பது போல பாவித்துப் பாதுகாத்து வந்தார்.

பால்ய பொழுதில் அந்த விக்ரகத்தை வைத்து பூஜை செய்ய ஆரம்பித்துவிட்டார். சிறுவன் அவனுக்கே உரிய பால்ய மொழியில் விக்ரகத்திற்கு பூஜை செய்து, படையல்கள் படைத்துவிட்டு, "நாளைக்கு காலையில் வரும் போது எல்லாத்தையும் சாப்பிட்டிருக்கணும், இல்லனா உன்ன கிணத்துல தூக்கிப் போட்டுடுவேன்!" என்று பேச உரிமையும், பக்தியும் கலந்த கலவையாக ஆன்மீகப் பாதையில் காலடி எடுத்து வைத்தான். சிறுவனைப் பாட்டனார் அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு அழைத்துச் சென்று கண்ணப்பர், மார்க்கண்டேயன், பிரகலாதன் போன்ற மகான்களின் கதைகளைச் சொல்லுவதுண்டு. இது போன்ற கதைகளைக் கேட்டு முடித்தவுடன் சிறுவன் வீட்டிற்குச் சென்று குடும்பத்தில் உள்ள எல்லோரையும் அழைத்து, தான் கேட்ட கதைகளை ரசனையோடு சொல்லும் விதத்தையும், ஆர்வத்தையும் இன்று நினைத்தாலும் குடும்பத்தார் பூரிப்படைகிறார்கள்.

2. பாட்டியுடன்

பாட்டி தனுக்கோடி அம்மாளுக்கு பேரனின் மீது கொள்ளைப் பிரியம். துருதுருவென இருக்கும் சுட்டிப் பேரனுக்குப் பரிசளிக்க நினைத்தார். ராஜசேகரனைக் கூப்பிட்டு வீட்டின் நகைப் பெட்டியைத் திறந்து காண்பித்து "உனக்கு வேண்டியதை எடுத்துக் கொள்" என்றார். சிறுவனுக்கு ஒரே குஷி.

தங்க நகைகளில் எந்த நகையைப் பேரன் எடுக்கப் போகிறான் என்று பாட்டி ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார்.

நகைப் பெட்டியை உற்சாகத் துள்ளலோடு பார்த்த ராஜேஸ்வரன் தங்க நகைகளுக்கு நடுவே இருந்த ருத்ராட்ச மாலையை அதே துள்ளலோடு தாவி எடுத்துக் கொண்டான். பாட்டிக்கு ஒரு கணம் ஒன்றுமே புரிய வில்லை. இந்தச் சிறுவயதில், ருத்ராட்ச மாலை மேல் எப்படி ஆசை வந்தது என்பது பாட்டிக்கு மிகப் பெரிய வியப்பாக இருந்தது.

3. ரகுபதி யோகியுடன்

திபெத்திலும், பர்மாவிலும் யோகமும், தாந்திரிகமும் கற்றுத் தேர்ந்து மற்றவர்களுக்கும் கற்றுத் தந்து கொண்டிருந்த ரகுபதி யோகியுடன் சுமார் ஐந்து வயதில் அறிமுகம் ஏற்பட்டது.

யோகி என்ற வார்த்தைக்கு இலக்கணம் வகுத்தாற்போல் உடலமைப்பு கொண்டிருந்தார் ரகுபதி யோகி. சிறுவன் ராஜசேகரனை தினம் கோயிலுக்கு அழைத்துச் செல்வதும் அங்கு தினம் "யோகம்" கற்றுக் கொடுத்துச் செய்ய வைப்பதுமாய் இவர்களின் நட்புறவு தொடர்ந்தது.

கிருத்திகை மண்டபத்தில் யோகி இவருக்கு சக்தி தீட்சை கொடுத்தார். தீட்சை பெற்ற அதே கணம் ராஜசேகரனுக்கு பராசக்தியின் தரிசனம் கிடைத்தது. யோகியும் நடந்ததை உணர்வுபூர்வமாக அறிந்து கொண்டார். சிறுவனிடம் "பராசக்திதான், இனி உன் இஷ்டதேவதை" என்று கூறினார்.

வீட்டிற்கு வரும் வழியெங்கும் தரிசனத்தில் தோன்றிய பராசக்தியின் நினைவாகவே சிறுவன் நடந்து வந்தான். வீடு வந்ததும் முதல் வேலையாக ஒரு மாவுக்கல்லை எடுத்து, வெறும் கோணி ஊசி கொண்டு, தரிசனத்தில் பார்த்த அம்பிகையின் சிலையை உருவாக்கினான்.

"பிற்காலத்தில் நீ ஒரு பெருந்துறவி" ஆவாய் என்று ரகுபதி யோகி ஆரூடம் கூறினார். அத்தோடு ஒரு புகைப்படக்காரரை ரகுபதி அழைத்துக் கொண்டு ஒரு மான்தோலின் மீது அமர வைத்துப் புகைப்படம்

பவளக் குன்றில் சுவாமிகள்

பவளக் குன்றில் சுவாமிகள் எடுக்கச் சொன்னார். அவரும் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டார். (பார்க்க பக்கம் 31) இதெல்லாம் எதற்கு என்று புரியாமல் வினாவிய ராஜசேகரனுக்கு "உனக்குக் காலம் வரும் போது புரியும் அதுவரை இந்தப் புகைப்படத்தைப் பத்திரமாக வைத்துக் கொள்" என்றார்.

"இதையெல்லாம் எப்படி நம்புவது?" என்று கேட்ட சிறுவனுக்கு யோகி ஒரே சொடுக்கில், வெறுங்கையில் இருந்து ஒரு சங்கை உருவாக்கிக் கொடுத்தார். என்ன நடக்கிறது இங்கே என்று வியப்போடு சிறுவன் பார்த்துக் கொண்டிருந்தான்.

"அகங்காரம் அற்றுப் போனால் உயரே பறக்க முடியும்" என்று யோகி கூறினார். சொன்னது மட்டு மில்லாமல் செய்தும் காட்டினார். யோகி ஆசனத்தில் அமர்ந்து கொண்டு தியானம் செய்து பூமியில் இருந்து அரை அடி உயரத்தில் எழும்பிக் காண்பித்தார். 'என்ன?' நாம் பார்த்துக் கொண்டிருப்பது நிஜம்தானா! என்று சிறுவன் ஆச்சரியத்தில் மூழ்கிப் போனான். "நேரம் வரும்போது எல்லாம் புரியும்" என்று புன்முறுவலோடு யோகி கூறினார்.

4. சிறுவனின் பூஜை

தனக்குப் பரிசாக கிடைத்த விக்ரகம், தான் செய்த விக்ரகங்கள் என்று விக்ரகங்களைத் தனியே ஒரு பெட்டியில் பத்திரப்படுத்தி வைத்திருந்தான். களி மண்ணைக் குழப்பி, உழப்பி விளையாடும் வயதில் ராஜசேகரன் தான் கோயிலில் பார்த்த தெய்வ விக்ரகங்களின் உருவத்தைக் களி மண்ணில் செய்து பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தான். நேரம் போவது தெரியாமல் சில நேரம் மணிக்கணக்கில் ராஜசேகரன் பூஜையில் ஈடுபடுவதுண்டு. சில நேரங்களில் சிறுவன் குடும்பத்தில் உள்ளவர்களையும் பூஜையில் கலந்து கொள்ளும்படிக் கேட்டுக் கொள்வான். குடும்பத்தார் இந்தச் சிறு பிள்ளையின் ஆர்வத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டு அகம் மகிழ்ந்து கலந்து கொள்வார்கள்.

5. மாதாஜி குப்பம்மாளுடன்...

அண்ணாமலையார் கோவிலுக்குச் சென்று சிறுவன் ஜெபம், பிரார்த்தனை என்று ஈடுபட்டு கொண்டிருக்கும் போது, ஓர் அற்புத முக்கோண வடிவம் தரிசனத்தில் தெரிந்தது. வீட்டிற்கு வந்தவுடன் தான் தரிசனத்தில் கண்ட வடிவத்தை வரைபடமாக்கி விட்டான் சிறுவன்.

தங்கள் குடும்பத்திற்கு நட்பு முறையில் அறிமுகமாகி இருந்த மாதாஜி குப்பம்மாளிடம் ராஜசேகரனின் பாட்டி தன் பேரன் வரைந்த வரைபடத்தை காண்பித்தார். பார்த்த மாத்திரத்தில் வெகு ஆச்சரியத்தோடு, "இது 'ஸ்ரீ சக்கரம்'! ஸ்தபதிகளும், ஆச்சாரியர்களுமே வரையக் கஷ்டப்படும் இந்த ஸ்ரீ சக்கரத்தை இந்தச் சிறுவனால் எப்படி இவ்வளவு தெளிவாக வரைய முடிந்தது?" என்றார். சிறுவனுக்கோ தான் வரைந்திருப்பது "ஸ்ரீ சக்கரம்" என்ற விஷயம் தெரியாது. மாதாஜி குப்பம்மாள் ஆச்சர்யம் நிறைந்த பார்வையோடு சிறுவனை, "நாங்கள் எவ்வளவோ தியானம், பூஜைகள் செய்தும் கிடைக்காத தரிசனம் உனக்கு எப்படிக் கிடைத்தது?" என்று பக்தி கலந்த குரலில் கேட்டார்கள். இது போன்ற கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வதென்று அப்போது சிறுவன் ராஜசேகரனுக்குப் புரியாது. அதன் பின் மாதாஜி குப்பம்மாள் சிறுவனுக்கு "சக்தி மந்திரத்தையும்", 'ஸ்ரீ சக்கர பூஜை" செய்யும் விதத்தையும் கற்றுக் கொடுத்தார்கள்.

6. யோகி ராம் சூரத் குமாருடன்

திருவண்ணாமலை கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ள சின்ன நந்திக்கு எதிரே இருக்கும் படிக்கட்டில் அமர்ந்து கொண்டிருப்பது யோகி ராம் சூரத்குமாருக்கு வழக்கமான ஒரு விஷயம். இளம் மாணவர்கள் யோகியை வணங்கி, "சாமி, நான் இந்தப் பரீட்சையில் தேறி விடுவேனா?" என்று கேட்பது வழக்கம். யோகி சிலசமயம் ஏதாவது பதில் கூறுவார். பெரும்பாலும் பதில் கொடுக்க மாட்டார். சில சமயங்களில் "ராம், ராம்" அல்லது "போய் வா" என்பார். இதனால் அவரை ஒரு புரியாத புதிராகவே எல்லோரும் நினைத்தனர். ஒரு முறை ராஜசேகரன் வணங்கி எல்லோரும் போல் "சாமி, நான் பரீட்சையில் தேறி விடுவேனா?" எனக் கேட்டார். அவரோ, "நீ வாழ்க்கைப் பரீட்சையில் தேறிவிடுவாய்" என்றார்.

ராஜசேகரனுக்கு ஏதோ சம்பந்தா சம்பந்தமில்லாமல் பதிலளிப்பது போல தோன்றியது. எனவே விளக்கம் கேட்டு நின்றார். யோகி சொன்னார், "போ, போ, இது இப்போதைக்குப் புரியாது; ஆனால் போகப் போக இந்த வார்த்தைகளை நீ மறக்க மாட்டாய்" என்றார்.

மெல்ல மெல்ல யோகியின் வார்த்தைகளில் இருந்த அர்த்தம் சிறுவனுக்குப் புரிய ஆரம்பித்தது. இன்றளவும் பரமஹம்ஸ ஸ்ரீ நித்யானந்த சுவாமிகள் அந்த வார்த்தைகளை நினைவில் வைத்திருக்கிறார்.

7. வகுப்பறையில் ஐயப்பன் தரிசனம்

ஒரு நாள் வகுப்பிற்குத் தாமதமாக வந்தததால் அனுமதி வேண்டி வகுப்பு வாசலில் நின்று கொண்டிருந் தார் ராஜசேகரன். அது கணித வகுப்பு. கணித ஆசிரியர் ஏதோ குனிந்தபடி எழுதிக் கொண்டிருந்தார். அவர் ஓர் ஐயப்ப பக்தர். உள்ளுணர்வு தூண்டப்பட்டவராய் வாசலை நோக்கித் திரும்பிப் பார்த்தார். பார்த்ததும் திடீரென்று ஏதோ மாயக் காட்சியைக் கண்டது போல் செயலற்றுச் சில வினாடிகள் எழுந்து நின்றார். பின் ராஜசேகரனுக்கு வணக்கம் தெரிவித்தார்.

வகுப்பு முடிந்ததும் ஆசிரியர் சிறுவனைத் தன் வீட்டுக்குச் சாப்பிட வருமாறு அழைத்தார். அழைத்தி ருந்தபடி ராஜசேகரன் ஆசிரியர் வீட்டிற்கு வந்தார். மாணவன் வீட்டிற்குள் நுழைந்ததும் அவர் காலில் விழுந்த ஆசிரியர் "நீங்கள் என் குருநாதர்" என்றும் "நான் தங்கள் சிஷ்யர்" என்றும் கூறினார். மேலும் "நான் உங்களைப் பார்க்கும்போது சுவாமி ஐயப்பனைத் தரிசனத்தில் கண்டேன்" என்றார். அந்த நிமிடம் ராஜ சேகரனால் 'என்ன நடக்கிறது, என்ன பேசுகிறார் இவர்' என்று தெளிவாகப் புரிந்து கொள்ள முடியவில்லை.