IV தவ வாழ்க்கை
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
1. பரிவராஜக வாழ்க்கை
பதினேழு வயது முடிந்து ஆறு மாதம் ஆன நிலையில் தன் ஆன்மீகத் தேடுதலின் மிகத் தீவிரமான கட்டத்தை நெருங்கி விட்டார். வீட்டை விட்டு வெளியேறினார்.
சில காலம் ஆன்மீக ஸ்தாபனங் களிலும், சில காலம் மலைகளிலும் கழித்தார்.
இறைவனை நோக்கித் தவம்; தியானம்; சாஸ்திரங்களைப் படிப்பது வேதங்களைப் படிப்பது, ஞானிகள் பலரைச் சந்திப்பது, ஞான வழிகள் என்று பல்வேறு தெய்வீக, ஆன்மீக விஷயங்களில் ஈடுபட்டார்.
இமயம் முதல் குமரி வரை பல தீர்த்த ஸ்தலங்கள், கோயில்கள், புராதனச் சிறப்பு மிக்க இடங்கள் என்று யாத்திரை செய்தார். இந்தியாவின் குறுக்கும் நெடுக்குமாக 2000 கி.மீக்கு மேல் நடந்து சென்றார்.
2. ஸ்ரீ ராமகிருஷ்ணர், சாரதா தேவியின் தரிசனம்
இடுப்புக்கு ஒரு காவித் துணி
தோளுக்கு ஒரு காவித் துணி
கையில் ஒரு காவித் துண்டு
கழுத்தில் ஒரு ருத்ராட்ச மாலை
கமண்டலம் என்று ஒரு பாத்திரம்
- இவையே பரிவராஜக வாழ்க்கையைத் துவங்கிய போது அவரிடம் இருந்த உடைமைகள். கையில் ஒரு பைசாகூட இல்லாமல் அடுத்த வேளைக்கு உணவு சேமிக்கக் கூடாது - என்ற மனக் கட்டளையோடு ஆன்மீகத் தேடுதலை மேலும் தீவிரப்படுத்தினார்.

பல புத்தகங்கள், வேதங்கள், சாஸ்திரங்கள் என்று படித்துக் கொண்டிருக்கும்போது, ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் 'அமுத மொழிகள்' என்ற புத்தகம் அவரை மிகவும் கவர்ந்தது.
ஒரு விஷயம் தன்னைக் கவர்ந்துவிட்டால் அதில் அவர்காட்டும் ஈடுபாட்டுக்கும், ஆர்வத்திற்கும் அவரே இணை. என்னை இவ்வளவு ஈர்க்கிறதே இந்த புத்தகம்! என்று ஒரே மூச்சில் உட்கார்ந்த இடத்தை விட்டு எழாமல் பத்து மணி நேரம் தொடர்ச்சியாகப் படித்து முடித்தார்.
அதன் பின் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் போதனைகளில் லயித்து மூன்று நாட்கள் கழித்த பின் மீண்டும் ஓர் எதிர்பாராத அற்புதம் நிகழ்ந்தது. அதை அவர் கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை.
மூன்று நாட்கள் கழிந்த பின் ஸ்ரீ ராமகிருஷ்ணரும், சாரதா தேவியும் தரிசனம் கொடுத்தார்கள். இந்த தரிசன அனுபவம் ஆன்மீகத் தேடுதல் என்னும் அவரது யாகத்தில் நெய் ஊற்றியது போல் ஆயிற்று. அதன் பின் ராமகிருஷ்ணர் அவரது இதயக் கோவிலில் நீங்காத இடம் பிடித்துவிட்டார்.
3. இமயமலையில் சுவாமிகள்
வடக்கே சாதுக்களிடம் டிக்கெட் கேட்பதில்ல, அவர்கள் எங்கு வேண்டுமானாலும் ரயிலில் செல்லலாம். சுவாமிகள் ஏதாவது ஒரு ரயிலில் ஏறுவார். மனதுக்குப் பிடித்தமான இடத்தில் இறங்கிக் கொள்வார். ஏதாவது ஒரு திசையில் பயணப்படுவார். நடந்து நடந்து களைத்துப் போனால் அடுத்த ரயிலில் ஏறி வேறு இடத்திற்கு போவார். இந்த ரயில் எங்கே போகிறது, இது எந்த இடம் என்று எதையுமே தெரிந்து கொள்ளமாட்டார். ஜன்னலுக்கு வெளியே பார்ப்பார். இடம் பிடித்திருந்தால் இறங்கிவிடுவார்.