KAILASA Library/Sri Guru Puja Sri Shiva Puja_Tamil/மாற்ற முடியாத உண்மைSign in
Sri Guru Puja Sri Shiva Puja_Tamil

மாற்ற முடியாத உண்மை

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

சிவபெருமான் ஆகமத்தை, வாழ்வதற்கான வழியைச் சொல்லத் துவங்கிய உடனேயே, அவர் முதன் முதலாகச் சொல்லுகின்ற சத்தியம்... 'உங்கள் எல்லோருக்குள்ளும் நானே வெளிப்பட்டு, என் மயமாகவே நீங்கள் எல்லோரும் இருக்கின்றீர்கள்.'

ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள்.. உங்கள் எல்லோருக்குள்ளும் சீவோஹம் என்கிற அனுபூதியாக சிவபெருமான் இருக்கிறார். சீவோஹம் என்றால் 'சிவ அஹம்'- நான் என்று நீங்கள் எதை நினைக்கின்றீர்களோ, அது 'சிவம்'. 'இந்த அனுபூதியாக உங்கள் எல்லோருக்குள்ளும் இருக்கின்றேன்' என்று சிவபெருமான் சொல்கிறார். சீவோஹத்தை தியானத்தில், சமாதி நிலையில் உணர்ந்தவர்கள் அந்தச் சக்தியை வெளிப்படுத்துகிறார்கள். உணராதவர்கள் அதை வெளிப்படுத்தாமலேயே இறந்து போகிறார்கள். ஆனால் அவருள்ளே சீவோஹம் இருப்பது உண்மை. 'சீவோஹம்' எனும் அனுபூதியை வாழும்பொழுதே நீங்கள் அனுபவித்து வாழலாம். அனுபவிக்காமல் விட்டாலும் விடலாம், ஆனால் 'சீவோஹம்' உங்களுக்குள் இருப்பது உண்மை. இது மாற்ற முடியாத உண்மை.

உண்மையை மறைக்கும் மாயத்திரை