KAILASA Library/Sri Guru Puja Sri Shiva Puja_Tamil/நீங்கள் சிவபெருமானின் திருவடிவங்கள்!Sign in
Sri Guru Puja Sri Shiva Puja_Tamil

நீங்கள் சிவபெருமானின் திருவடிவங்கள்!

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

வாழ்க்கையில் நாம் புரிந்துகொண்டாலும், புரிந்துகொள்ளாமல் விட்டாலும் ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக்கொள்ளாமல் விட்டாலும், விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், நம்பினாலும், நம்பாது போனாலும் மாற்றவே முடியாத இறுதியான, அறுதியான உறுதியான சில சத்தியங்கள் இருக்கின்றன.

உங்கள் வீட்டின் ஜன்னலையோ வாசற்காலையோ எந்தத் திசை நோக்கி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். ஆனால் சூரியன் கிழக்கில்தான் உதிக்கும், மேற்கில்தான் மறையும். அதை ஒன்றும் செய்யமுடியாது. இல்லையில்லை, எங்கள் ஊரில் உதிப்பதே இல்லை, மறைவதே இல்லை என்று சொன்னால், உங்கள் வீட்டின் ஜன்னல்-வாசற்காலின் திசை வேறாக இருக்குமே தவிர, சூரியன் உதிப்பதும் மறைவதும் மாறுவதில்லை. ஜன்னல்-வாசற்காலின் திசை கிழக்குமேற்காக இருந்தால், சூரியன் உதிப்பதையும் மறைவதையும் பார்க்கலாம். மாறியிருந்தால் பார்க்காமல் போகலாம். சூரியன் உதிப்பதையும் மறைவதையும் நீங்கள் பார்த்தாலும், பார்க்காமல் போனாலும், சூரியன் உதிக்கிறார், மறைகிறார்.

அதேபோன்று இந்த உடலிலும் மனதிலும் நீங்கள் வாழும்பொழுது, ஞானமடைவதற்கு முன்பும், ஞானமடைந்தபிறகும் நீங்கள் சிவபெருமானின் திருவடிவங்கள். சிவபெருமானின் சக்தியோடு ஒன்றானவர்கள். சிலபேருக்குப் புரியும், சிலபேருக்குப் புரியாது. ஆனால், இது சத்தியம்.

சில பேர் ஜன்னலையும் வாசற்காலையும் கிழக்கு மேற்காகவைத்து, சூரியன் உங்ககும்பொழுதும் பார்த்து ரசிக்கிறார்கள், மறையும்பொழுதும் பார்த்து ரசிக்கிறார்கள். சிலபேர் வடக்குதெற்காக வைத்து அதைப் பார்க்காமலேயே வாழ்ந்து முடிக்கிறார்கள். ஆனால் சூரியன் உதிப்பதும் மறைவதும் உண்மை.

அதேபோன்று சிலபேர் வாழும்பொழுதே தியானத்தால், 'சிவ his' என்னும் அனுபூதியை வாழ்ந்து, சக்தியை வெளிப்படுத்தி, அதை மகிழ்ச்சியோடு ஆனந்தத்தோடு கொண்டாடுகிறார்கள். சிலபேர் கொண்டாடுவதில்லை. ஆனால் நாம் எல்லோரும் 'சிவம்' என்னும் சக்தியின் பாகமாகத்தான் இருக்கிறோம்.

சிவ தீக்ஷை தியான முகாம்

அனுமதி இலவசம்-அனைவரும் வருக

இடம் : நித்யானந்த பீடம்
நித்யானந்தபுரி, பிடதி, மைசூர் ரோடு,
பெங்களூரு, கர்நாடகா-562109

7200003311-7200003322

Photograph of Swami Nithyananda