பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa
84. ஏன் ஏமாற்றுகிறோம் ....
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
ஒரு கண்டிப்பான பேராசிரியருக்கு அன்று பிறந்தநாள் விழா. எல்லா மாணவர்களும் அவரிடம் வந்து வந்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொன்னபோது அவர் நன்றி என்று சொல்லாமல், "Same to you... Same to you" என்றே சொன்னார். இது வினோதமாகப் பட்டதால் புதிதாய் வந்த பேராசிரியர் கேட்டார். "ஏன் நன்றி சொல்லாமல், இப்படிச் சொல்கிறீர்கள்"
அவர் சொன்னார், "நானும் மாணவனாய் இருந்து வந்தவன் தானே! எனக்கு வாழ்த்துக்கள் சொல்லும்போது.. அவர்கள் மனதில் என்னைப் பற்றி என்ன சொல்வார்கள் என்பது கூடவா தெரியாது!" என்றாராம்.
- ஏன் பிறந்தேன்? என்ற கேள்விக்கான பதில் அனுபவமாகாத வரை, இது போல் ஒருவரையொருவர் ஏமாற்றி வாழும் போலி வாழ்வு தொடரும். தவிர்க்க முடியாதது.
