78. மாயாவில் மாட்டிக் கொள்ளாதீர்கள்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
12 B-க்காக காத்துக் கொண்டிருந்த இரண்டு நண்பர்களும் குடிபோதையின் உச்சத்திலிருந்தார்கள். இரவு மணி இரண்டு என்பது தெரியாததால், "ஏன் 12 B இன்னும் வரவில்லை" என விவாதித்த நண்பர்கள், நேரடியாக பஸ் டிப்போவிற்கே சென்று விட்டார்கள்.
"பஸ்டிப்போவிலிருக்கும் 12 B பஸ்ஸை நாமே எடுத்துக் கொண்டு நம் வீட்டிற்கு ஓட்டிச் செல்லலாம்" எனப் பேசிக் கொண்டே 12 B பஸ்ஸைத் தேடினார்கள்.
பஸ் டிப்போவில் நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் நின்றிருந்தன. ஒவ்வொரு பேருந்திலும் ஏறி இறங்கி "இது 12 B இல்லை... இது12 B இல்லை..." எனச் சொல்லி, தட்டுத் தடுமாறி ஒவ்வொரு பஸ்ஸாக ஆராய்ந்தார்கள்.
இரண்டு மணி நேரத் தேடுதலுக்குப் பின், "ச்சே... ஏமாந்து விட்டோம். இங்கு ஒரு 12 B கூட இல்லையே!" என நொந்து கொண்டு வீட்டுக்கு நடந்தே சென்றார்களாம்.
மயங்கியிருந்தவர்களுக்கு எந்த பேருந்தை வேண்டுமானாலும் ஓட்டிச் செல்லலாம் என்பது உதிக்கவேயில்லை. 12 B-ஐ மட்டுமே தீவிரமாய்த் தேடியிருக்கிறார்கள்.
மாயாவும் இதைப் போன்றதே. வாழ்வின் ஏதாவதொரு அம்சத்தை மட்டுமே பிடித்துக்கொண்டு மனிதனைச் சிக்க வைத்து விடும். விளைவு - வாழ்ந்து முடிந்தபின்தான் ஏமாந்து போனதாக ஒவ்வொரு மனிதனும் உணர்வான்.