பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa
28. நீ ஓட, மனம் ஓயும்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
பிரச்சனைகளோடு வருபவர்களுக்கு ரமணர் சொல்லும் தீர்வுகளை நியாயமானதென ஒப்புக்கொள்ள முடியாதவர் கேட்டார்,
"பலரின் பிரச்சனைகளுக்கு தீர்வாக திருவண்ணாமலையை நீங்கள் சுற்றச் சொல்வது, ஒரு தீர்வா! இதனால் என்ன பயன்?"
"நீ ஓய்வாயிருந்தால் மனம் ஓடும். ஓடினால் மனம் ஓய்வடையும். விழிப்போடு மலை சுற்றும்போது வேதனைகளின் வேரான மனம் ஓயும். மனம் சரியாக எல்லாம் சரியாகும். என்னவோய்.... புரிந்ததா?" ரமணர்.
- 'நியாயம் கூட அநியாயமானதாக மனிதனுக்குத் தெரியும்' இது புரிந்தாலே பெரும் புண்ணியம்!
