17. ஒருவருக்குள் ஓராயிரம் மனிதர்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
மெரினா கடற்கரையில் விளையாடிவிட்டு வந்த குழந்தை பருவ நிட்டியிடம், அவன் அம்மா கேட்டார், “எத்தனை பெண் குழந்தைகள் உன்னோடு இன்று இருந்தார்கள்”.
“ஏன் கேட்கிறாய்?” எனக் கேட்ட நிட்டியிடம், அம்மா சொன்னார், “நேற்று மட்டும், நீ மூன்று பெண் குழந்தைகளோடு சண்டையிட்டதாக பக்கத்து வீட்டு ஆன்ட்டி சொன்னார்.... அதனால்தான்!”
“என்னால் இன்று எத்தனை பெண்கள் வந்தார்கள் என்று சொல்ல முடியாது” என்றான் நிட்டி.
“ஏன்?”
“இன்று யாருமே கவுன் போட்டுக் கொண்டு வரவில்லை. எல்லோரும் ஒரே மாதிரி சுவிம்மிங் டிரஸ்தானே போட்டிருந்தோம்.
எல்லோரும் ஒரே டிரஸ்ஸில் இருந்ததால், என்னைப் பொருத்தளவிற்கு இன்று எங்களோடு ஆண்களோ, பெண்களோ விளையாட வரவில்லை. சரிதானே?” என்றான் குழந்தை நிட்டி.
குழந்தையைப் பொருத்தளவிற்கு ஆண், பெண் வேறுபாடு என்பது உடையளவிலானது. வளர வளர வேறுபாடுகளும் வரையறைகளும் மனதில் வளரும்.
மனிதனுக்கு தான் பார்க்கும் ஒவ்வொன்றையும் பகுத்து, பிரித்து வேவுபார்க்கும் அளவுக்கு மனம் வளர்ந்து விடுகிறது.
விளைவு - ஒருவருக்குள்ளேயே பலவிதமான மனப்பான்மைகள் குடிகொள்ள ஆரம்பித்து விடுகிறது!