KAILASA Library/பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa/110. தியானம் நிகழSign in
பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa

110. தியானம் நிகழ

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

பார்வதிக்கு ரகசியங்களை சிவன் விளக்கும்போது, "மூச்சை கவனிப்பது தூய்மையற்றவனுக்கே மிகக் கடினம்" என்றார்.

பத்து நிமிடம் கூட அமைதியாக உட்கார்ந்து, மூச்சைக் கவனிக்க முடியாத அளவுக்கு, மனித மனம் மாசடைந்திருக்கிறது.

● மாசு நீக்கப்பட வேண்டும்.

Illustration of an industrial plant emitting smoke

112. ஆனந்தமாயிருக்க ஆசையா?

தாந்த்ரீக ஞானியிடம் சீடன், "ஆனந்தமாயிருக்க நான் ஆசைப்படுகிறேன்" என்றான். ஞானி, "உண்மையாகவா?" என்று கேட்க, சீடன் "ஆமாம்.... ஆமாம்..." என்றான்.

"அது மிக எளிது. உன் கோரிக்கையின் இரு கடைசி வார்த்தைகளை நீக்கிவிடு. ஆனந்தமாயிருப்பாய்!"

சீடன் "எது.... எது..." என்று கேட்க,

ஞானி, "ஆசைப்படுகிறேன், நான் என்ற இரண்டையும் அழி. எது மிஞ்சுகிறது பார்" என்றார்.

  • ஞானக்கருத்துக்களை உள்ளே வரவிடுங்கள். அது சண்டையிட்டாவது ஜெயித்து விடும்.
Illustration of two boxers fighting