KAILASA Library/பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa/பதிப்புரைSign in
பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa

பதிப்புரை

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

“என்னை மட்டும் இப்படித் திண்டாட வைக்கிறாயே, இதுவா உன் கருணை, கல் நெஞ்சா உனது?” என யோசித்த சூஃபி சீடனின் கனவில் தோன்றிய கடவுள்,

“இரத்தம் வரவர, தோலைக் கிழித்து, தசையை அறுத்து, உள்ளிருக்கும் கட்டியை எடுத்தெறியும் மருத்துவனின் நெஞ்சு கல் நெஞ்சா?” எனக் கேட்டார் கடவுள்.

மேலும் தொடர்ந்த கடவுள்...

“கொஞ்சம் பொறு. அதிக விழிப்புணர்வோடிரு. திண்டாட்ட காலத்தைத் தாண்டி விடுவாய். உன் கர்மங்கள், எதிர்மறை நினைவுகள், கரைந்து காணாமல் போக தியானம் செய். கொண்டாட்ட காலத்தை தொட்டு விடுவாய்” எனச் சொன்னார் சீடனிடம்.

● உண்மையைப் புரிந்துகொள்ளுங்கள்! திண்டாட்டத்தைக் கூட கொண்டாட்டமாய் தாண்டிவிடுவீர்கள்!

  • பரமஹம்ஸ நித்யானந்தர்

இப்புத்தகத்தில் வரும் கதைகள் ஒவ்வொன்றும் திண்டாட்டத்தை கொண்டாட்டமாக மற்றும் தியான சூத்திரங்கள். ஆழமாய் படித்து உண்மையை புரிந்து கொள்ளுங்கள். ஆனந்தமலராக மலருவீர்கள்.

  • நித்யானந்த தியானபீடம்.

ஞானமடையும் முன் ஞானமடைந்த பின் ...

"ராஜாவாக இருந்த நீங்கள், திருவோடேந்தின பிச்சைக்காரன் போல ஏன் வாழ வேண்டும்?" எனப் புலவர் ஒருவர் கேட்டபோது புத்தர் சொன்னார்...

"ஞானமடையும் முன், எல்லாம் என்னோடு இருந்தும் துக்கமாயிருந்தேன். ஞானமடைந்த பின், எதுவும் என்னோடு இல்லாது இருந்தும் ஆனந்தமாக இருந்தேன். இருக்கிறேன். இருப்பேன். இந்த நிலைக்காக எதை வேண்டுமானாலும் இழக்கலாம்" என்றார்.

  • கொண்டாடப்பட்ட உணர்வு ஒருவனுள் உதயமாகிவிட்டால் அவனுடைய கண்களுக்கு எல்லாமே கொண்டாட்டமாகத் தெரியும்.
  • பரமஹம்ஸநித்யானந்தர் இப்புத்தகத்தில் வரும் கதைகளை ஆழ்ந்து படியுங்கள். உள்ளுலக ராஜாவாக உங்களை வாழ்க்கையை இந்த கதைகள் மாற்றும் என்பதை இந்த முன்னுரையின் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.
  • தியான பீடா சேரிடபிள் ட்ரஸ்ட்

ஜனனத்திற்கும் மரணத்திற்கும் இடையில்தான் எல்லா வேறுபாடுகளும் தெரிகிறது. இருக்கிறது. அப்புறம் இல்லை. மனிதன் மரணிக்கும்போது உடல் இறக்கிறது. மனம் தன் கதையைத் தொடர்கிறது. மீண்டும் ஜனனம்! மீண்டும் மரணம்! சாம்பல் கூட மிஞ்சாத அளவுக்கு உடலை எரித்தாலும், சாகாத மனம் வேண்டும். இந்த நிகழ்வுதான் நிஜமான மரணம். இந்த சுபநிகழ்வு நிகழும்போதுதான் மனிதன் தெய்வமாகின்றான். பித்தன் புத்தனாகின்றான்.

மனம் உயிரோடிருக்கும் வரை நீங்கள் வாழ்வதில்லை. மனமே உங்கள் மூலமாக வாழ்கிறது. மனம் மரணிக்கும் போதுதான் முதல் முறையாக நிஜமாய் நீங்கள் பிறக்கிறீர்கள்.