KAILASA Library/Hindu Holocaust/மதுரை ஆதீன மடத்தை மீட்க மீட்புக்குழு இன்று போராட்டம்Sign in
Hindu Holocaust

மதுரை ஆதீன மடத்தை மீட்க மீட்புக்குழு இன்று போராட்டம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

மதுரை, மே 13: நித்யானந்தாவின் பிடியிலிருந்து, மதுரை ஆதீன மடத்தை மீட்க, ஆதீன மடம் மீட்புக் குழு துவங்கப்பட்டு, இன்று உச்சகட்ட போராட்டத்தில் களமிறங்குகின்றனர். மதுரை ஆதீன மடத்தின் இளைய ஆதீனமாக நித்யானந்தா நியமிக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்நிலையில், மதுரையில் புதிதாக 'ஆதீன மடம் மீட்புக் குழு' ஏற்படுத்தப்பட்டு, போராட்டங்கள் வலுவடைந்துள்ளன. மதுரை ஆதீன மடம் மீட்புக் குழு நிர்வாகிகளான நெல்லை கண்ணன், இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜூன் சம்பத், பாரதிய பார்வர்டு பிளாக் தலைவர் முருகனூஜி, சண்டிகேசுவரர் நற்பணிமன்ற நிர்வாகி சுரேஷ்பாபு, வல்லரசு பார்வர்டு பிளாக் தலைவர் அம்மாசி ஆகியோர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

நித்யானந்தா நியமனத்தை கண்டித்தும், மடத்தை மீட்கக் கோரியும் வேலக்குறிச்சி ஆதீனம் தலைமையில், செங்கோல் ஆதீனம் முன்னிலையில் மதுரை வடக்குமாசி வீதி தருமைபுரம் ஆதீனத்தில் 13ம் தேதி காலை, ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. பல்வேறு சமுதாயத் தலைவர்கள், பல்வேறு கட்சியினர், பொதுநல அமைப்பினர், சிவனடியார்கள் பங்கேற்கின்றனர்.

மதியம் 3 மணிக்கு மதுரை ஆதீன மடத்திற்கு இந்து மக்கள் கட்சி மாவட்ட நிர்வாகி சோலை கண்ணன் தலைமையில் ஊர்வலமாகச் சென்று ஆதீன மடத்தில் புகுந்து, அங்குள்ள திருஞானசம்பந்தருக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படும். தொடர்ந்து மாலை 5 மணியளவில்

ஆதீன மடம் மீட்பு குழுவை சேர்ந்த நெல்லை கண்ணன் பேட்டியளிக்கிறார். அருகில், குழுவின் மற்ற நிர்வாகிகள்.

ஆதீன மடம் மீட்பு குழுவை சேர்ந்த நெல்லை கண்ணன் பேட்டியளிக்கிறார். அருகில், குழுவின் மற்ற நிர்வாகிகள்.

ரஞ்சிதாவுக்கு இடம் அளித்தது ஏன்?

ஆதீன மடம் மீட்பு குழுவினர் கூறியதாவது: ரஞ்சிதாவுக்கும், தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனக்கூறும் நித்யானந்தா மதுரை ஆதீன மடத்தில் ரஞ்சிதாவுக்கு முன் இருக்கை அளிக்க ஏற்பாடு செய்திருக்கிறாரே ஏன்? தனது மன்றா னன்றே மணமகனோடும், மணவிழாவுக்கு வந்திருந்தவர்களோடும் பெற்றோர் அருளால் ஞானசம்பந்தர் முக்கியடைந்த திருமடம் இது. உமையம்மையின் தாய்ப்பால் அருந்திய ஞானசம்பந்தரின் மடத்தில், காமப்பால் நித்யானந்தாவை இளைய சன்னிதானமாக்கிய அருணகிரிநாதருக்கு என்ன பெயரிட்டு அழைப்பது? மதுரை ஆதீனம் அருணகிரி நாதரின் பிடரியில், பீடம் ஏறி அமர்ந்து இருப்பது சைவ சமயத்திற்கு ஏற்பட்டுள்ள கேடு.

மேலமாசி - வடக்குமாசி சந்திப்பில் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதுவரை நடந்த போராட்டத்தின் உச்சமாக இப்போராட்டங்கள் அமையும்.

சைவ வேளாளர்களே நியமிக்கப்பட வேண்டிய மதுரை ஆதீன மடத்தில், அகமுடைய முதலியாரான நித்யானந்தாவை நியமித்தது சைவத்திரு மடங்களின் விதிகளுக்கும், மரபுகளுக்கும் புறம்பானது. பாலியல் குற்றச்சாட்டின் கீழ் போலீசாரால் கைது செய்யப்பட்டவரை ஆதீனமாக நியமித்தது அடுத்த தவறு. தன்னை ஆண் தன்மையற்றவர் என நித்யானந்தா கூறிய வாக்குமூலம் பெங்களூர் கோர்ட் குறிப்புகளில் பதிவாகியுள்ளது. ஆண் துறவிகள் அமர வேண்டிய இடத்தில் நித்யானந்தாவை தான்தோன்றித்தனமாக நியமித்தது தவறு.

தனது அமைப்பு மடமல்ல, பிரம்மச்சர்யத்தை போதிப்பதில்லை என்றும், தான் ஒரு பிரம்மச்சாரி இல்லை என்றும் நித்யானந்தா கூறியுள்ளார். பிரம்மச்சாரி அமர வேண்டிய இடத்தில் நித்யானந்தாவை அருணகிரிநாதர் எப்படி நியமித்தார்?.

ஆதீனம் முக்கியடைந்த பிறகே இளைய ஆதீனம் பொறுப்புக்கு வர வேண்டும். ஆனால், நித்யானந்தாவின் கட்டுப்பாட்டில் தற்போது ஆதீன மடம் இருப்பதும், அவரது ஆட்கள் மடம் முழுவதையும் ஆக்கிரமித்திருப்பதும் எந்த வகையில் நியாயம்? இந்த நித்யானந்தாவுக்கு சிவ ஞான போதமும், 4 ஆயிரத்து 31 திருப்பாடல்களும் தெரியுமா? ஞானசம்பந்தரின் திருமுறைகளை இவர் ஓதி உணர்ந்தவரா?

நித்யானந்தாவை கைது செய்து ஆபத்திலுள்ள ஆதீனம் அருணகிரி நாதரையும், மடத்தையும் மீட்க வேண்டும். நாங்கள் ஆதீனத்தை எதிர்ப்பவர்களல்ல, காலில் விழுந்து வணங்கத் தயார். ஆனால் நித்யானந்தாவை ஏற்க முடியாது. அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு உள்ளது. அவர்தான் போக்கிரி. திருவண்ணாமலையிலிருந்து வந்துள்ள அயோக்கியன் தான் மதுரை ஆதீன மடத்தில் தற்போது இருக்கின்றனர். ஆதீன மடத்தில் பாரம்பரிய ஆட்சிகள் இல்லை. கர்நாடக பெண்களையே காண முடிகிறது. சரியான ஆதாரங்களோடு மடத்தை மீட்க வழக்கு தொடர்வோம்.

மதுரை ஆதீனகர்த்தரான அருணகிரி நாதர் நித்தியானந்தாவை நியமித்த தவறை திருத்திக் கொள்ள, திருவாவடுதுறை, தருமபுரம், திருப்பனந்தாள், குன்றக்குடி, குருமகா சன்னிதானங்கள் வேண்டுகின்றனர். ஆனால் பெருமை, புகழ்மிக்க இந்த மடங்களை தனது பிடதி ஆசிரம பக்தர்கள் முற்றுகையிடுவார்கள் என்று நித்யானந்தா சொல்வது மிகப்பெரிய அநாகரீக மிரட்டல்.

திருஞான சம்பந்தர் காலத்தில் மதுரை ஆதீனத்திற்கு ஆபத்து நேர்ந்த போது மட்டது பாண்டியனின் தேவி தான். அதேபோல், இப்போது ஆட்சி செய்கிற ஜெயலலிதா, ஆபத்தில் இருக்கும் இந்த மடத்தை மீட்க வேண்டும். 292வது மகா சன்னிதானமான அருணகிரிநாதரையும் ஜெயலலிதா காப்பாற்றித்தர வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.