மதுரை ஆதீன சொத்து விவகாரத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
சென்னை, மே.4-
மதுரை ஆதீனத்தின் சொத்துக்கள்
பாதுகாப்பு விவகாரத்தில் தற்போ
தைய நிலையே நீடிக்க வேண்டும்
என்று சென்னை ஐகோர்ட்டு உத்த
ரவிட்டுள்ளது.
உலகப்பிரசித்தி பெற்றது
சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் ஒரு
வர் தாக்கல் செய்த பொதுநல வழக்கில்
கூறப்பட்டு இருப்பதாவது:-
நித்யானந்தா தற்போது 293-வது
மதுரை ஆதீனத்தின் குருமகா சன்னிதா
னமாக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை
ஆதீனம் உலகப்பிரசித்தி பெற்றது. 8-ம்
நூற்றாண்டுக்கு முன்பிருந்தே இந்த ஆதீ
னம் செயல்பட்டு வருகிறது. பல நூற்
றாண்டுகளாக மக்களிடையே வாழ்க்கை
தத்துவங்களை மதுரை ஆதீனம் பரப்பி
வருகிறது.
அந்த ஆதீனத்தின் அசையும் மற்றும்
அசையா சொத்துகளின் மதிப்பு பல ஆயி
ரம் கோடிகளைத் தாண்டும். முன்பு
அனைத்து சொத்துகளும் ஆதீனத்தின்
கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. தற்போது
இந்து சமய அறநிலையத் துறையின் கண்
காணிப்பில் அந்த சொத்துக்கள் உள்
ளன.
ஆதீன கலாசாரம்
குருமகா சன்னிதானம்தான் அனைத்து
நிர்வாகம் மற்றும் நிதி விவகாரங்களை
கவனித்து வருகிறார். இந்து சமய அறநி
லைய சட்டப்படி, மகா சன்னிதானம்
தான் அறங்காவலராக உள்ளார். 1,400
ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டுவரும் அந்த
சொத்துகளை அவர்தான் நிர்வகிக்கி
றார்.
292-வது ஆதீனம் முந்தைய ஆதீனத்
திடம் பயிற்சி பெற்று தத்துவங்களை கற்ற
பிறகே அந்த பதவியில் நியமிக்கப்பட்
டார். இந்து பாரம்பரியத்தின் அடிப்ப
டையில் மதுரை ஆதீனத்தின் கலாசார
மும், பழக்கமும் அதுதான்.
தகுதியற்றவர்
இது மதுரை ஆதீனத்தின் வடிவ
மைக்கப்பட்ட நடைமுறையாகும். தம்பி
ரான் அல்லது இளைய மடாதிபPriority[?]
இளைய சன்னிதானமாக நியமிக்கப்பட
வேண்டும். அவர் மகா சன்னிதானமாக
நியமிக்கப்படுவார். இதுதான் நடை
முறை.
ஆனால் இந்த பாரம்பரிய நடைமுறை
களை எல்லாம் தாண்டி நித்யானந்தா
மதுரை ஆதீனமாக நியமிக்கப்பட்டுள்
ளதற்கு இந்துசமய அறநிலையத்துறை
யுட சூழநிலை எழுந்துவிட்டது.
அவர் இன்னும் ஆதீனத்திற்கு முழுப்
பொறுப்பு ஏற்கவில்லை. அதற்கான
சடங்காச்சாரங்கள் முடிந்து, பொறுப்பு
ஏற்பதற்கு இன்னும் ஒரு வார காலம் ஆக
லாம். எனவே மதுரை ஆதீனத்தின்
293-வது குருமகா சன்னிதானமாக நித்
யானந்தாவை நியமிக்க தடை விதிக்க
வேண்டும். அவரது நியமனம், இந்து சமய
அறநிலைய சட்டங்களுக்கு முரணானது
என்று உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வக்கீல் வாதம்
இந்த மனு நீதிபதிகள் சி.எஸ்.கர்ணன்
மற்றும் கே.ரவிச்சந்திரபாபு முன்னிலை
யில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்
தரப்பில் வக்கீல் எஸ்.பிரபாகரன் ஆஜ
ரானார். மதுரை ஆதீனம் தரப்பில் மூத்த
வக்கீல் ஜி.ராஜகோபாலன் ஆஜரானார்.
அப்போது நடந்த விவாதம் வருமாறு:-
எஸ்.பிரபாகரன்:-நித்யானந்தா மீது
ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் உள்ளன.
அவர் மீது ஒரு வழக்கில் குற்றப்பத்திரி
கையும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது.
இந்த நிலையில் கோடிக்கணக்கான
சொத்துக்களைக் கொண்ட மதுரை
இளைய ஆதீனமாக நித்யானந்தா நிய
மிக்கப்பட்டு இருப்பது சரியல்ல.
நடவடிக்கை எடுக்கலாம்
மதுரை ஆதீனத்தில் ஏராளமான நகை,
வைரங்கள் உள்ளன. குற்ற புகாருக்குள்
சிக்கியவரை அவற்றின் பொறுப்பாள
ராக எப்படி நியமிக்க முடியும்? அவற்
றுக்கு என்ன பாதுகாப்பு இருக்கும்?
எனவே ஆதீன விவகாரங்களில் தற்போ
தைய நிலையே நீடிக்க உத்தரவிடவேண்
டும்.
ஜி.ராஜகோபாலன்:-நித்யானந்தா ஏற்
கனவே பொறுப்பேற்றுவிட்டார். எனவே
அதில் தற்போதைய நிலை நீடிக்கும்படி
கோர்ட்டு உத்தரவிட முடியாது.
எஸ்.பிரபாகரன்:-ஆனால் முன்நேதி யிட்டு தடை விதிக்கலாம்.
நீதிபதிகள்:-இந்த பிரச்சினை குறித்து
நீங்கள் ஏன் இந்து சமய அறநிலையத்து
றையிடம் முறையிட கூடாது. அவர்க
ளும் நடவடிக்கை எடுக்கலாமே. இல்லா
தபட்சத்தில் வேண்டுமானால்
கோர்ட்டை நாடலாம்.
செய்தி புகார்கள்
எஸ்.பிரபாகரன்:-இந்த செய்தி எல்லா
டி.வி., செய்தித்தாள்களில் வந்துள்ளது.
எனவே அந்த துறையினர் தன்னிச்சையா
கவே நடவடிக்கை எடுத்திருக்கலாம்.
| கல்வி | சர்வீஸ் |
|---|---|
| திய அரசு | A/C, பிரிட்ஜ் |