விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து தூங்குகிறார்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
நித்யானந்தா முரண்டு!
உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிஐடி போலீசார் திட்டம்
பெங்களூர், ஏப். 24-
போலீஸ் கஸ்டடியில் உள்ள
சாமியார் நித்யானந்தா,
விசாரணைக்கு ஒத்துழைக்
காமல் தூங்கியபடியே
இருக்கிறார். இதனால், அவ
ரிடம் உண்மை கண்டறியும்
சோதனை நடத்த சிஐடி
போலீசார் முடிவு செய்துள்
ளனர்.
பாலியல் புகார், பண
மோசடி உள்ளிட்ட வழக்
குகளில் சிக்கி, 45 நாட்க
ளாக தலைமறைவாக
இருந்த சாமியார் நித்யா
னந்தாவை, இமாச்சல பிர
தேசத்தில் கடந்த புதன்கி
ழமை கர்நாடக போலீசார்
கைது செய்தனர். பெங்க
ளூர் கொண்டு வரப்பட்ட
அவரை, மாஜிஸ்திரேட்
முன்னிலையில் ஆஜர்ப
டுத்தி, 4 நாள் போலீஸ்
காவலில் எடுத்தனர்.
இதையடுத்து, நித்யா
னந்தாவை பெங்களூர்
பேலஸ் சாலையில் உள்ள
சிஐடி போலீஸ் அலுவல
கத்துக்கு அழைத்து வந்து
கடந்த 2 நாட்களாக விசா
ரித்து வருகின்றனர். நேற்று
முன்தினம் இரவே
நித்யானந்தா போலீஸ்
காவலில் எடுக்கப்பட்டார்.
ஆனால் அவரிடம் விசார
ணையை உடனே தொட
ங்க முடியவில்லை. சோர்
வாக இருப்பதாக கூறி நித்
யானந்தா தூங்கி விட்டார்.
இதனால் நேற்று மதியம்
தான் விசாரணையை
துவக்கினர்.
நடிகை ரஞ்சிதாவுட
னான தொடர்பு, பெண்
சீடர்களிடம் நடந்து
கொண்ட விதம், செக்ஸ்
ஒப்பந்தம் போட்டது,
சொத்துக் குவிப்பு மற்றும்
சீடர் லெனின், கலிபோர்
னியா பக்தர், கோவை
சாமியார் ஒருவர் கொடுத்த
புகார்கள் குறித்து நூற்றுக்
கும் மேற்பட்ட கேள்வி
களை தயாரித்து அவரிடம்
கேட்டனர். பெரும் பா
லான கேள்விகளுக்கு பதி
லளிக்காமல் மவுனமாக
இருந்தார் நித்யானந்தா.
இதனால், நேற்று நடந்த
விசாரணையில் போலீசா
ருக்கு உருப்படியான தக
வல் எதுவும் கிடைக்க
வில்லை. இன்று காலை
விசாரணையை தொடங்க
விருந்தனர். ஆனால், அவர்
விசாரணைக்கு ஒத்துழைக்
காமல் இன்றும் தூங்கியப
டியே இருக்கிறார். விசார
ணைக்கு ஒத்துழைக்க
மறுத்து தொடர்ந்து
முரண்டு பிடித்தால்,
கோர்ட் அனுமதி பெற்று
அவரிடம் உண்மை கண்ட
றியும் சோதனை நடத்த
சிஐடி போலீசார் முடிவு
செய்துள்ளனர்.
இதற்கிடையே, நித்யா
னந்தா மீது புகார்
கொடுத்த 6 பேர், சிஐடி
அலுவலகத்துக்கு இன்று
வரவழைக்கப்பட்டனர்.
அவர்களிடம் போலீசார்
வாக்குமூலம் பெற்றனர்.
TamilMurasu_24April2010_Pg1_Nithyananda Murundu_Kovai
விழாவில் கலந்துகொண்ட நீதிபதிகள், வக்கீல்கள், கோர்ட் ஊழியர்கள். தலைமை வகித்தார்.