KAILASA Library/Hindu Holocaust/பக்தர்கள் கொடுத்த பணம் திரும்ப கிடைக்குமா?Sign in
Hindu Holocaust

பக்தர்கள் கொடுத்த பணம் திரும்ப கிடைக்குமா?

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

சென்னை, ஏப்.24: நித்யானந்தா
நிகழ்ச்சிக்கு வருபவர்களிடம், சாதா
ரணமானவராக இருந்தால் ஆயிரம்,
இரண்டாயிரம், விஐபிக்களாக இருந்
தால் கோடிக் கணக்கில் வசூலித்துள்
ளனர். அவர் மீது உள்ள பக்தியால்
நிலங்களையும் தானமாக வழங்கியுள்
ளனர். அவரை கடவுளாக பக்தர்கள்
மதித்ததால் கேட்டதையும், கேட்கா
ததையும் அள்ளிக் கொடுத்தனர்.
அதனால் நித்யானந்தாவிடம் பண
மும், சொத்தும் குவிந்தது. ரூ.1000
கோடியில் இருந்து 1500 கோடி ரூபாய்
வரை அதன் மதிப்பு இருக்கும் என்பது
அவரது சீடர் சொல்லும் தகவல்.

இப்போது சாமியார் கைது செய்
யப்பட்டதோடு, பொய் பக்தர்களுடன்
செக்ஸ் ஒப்பந்தம் செய்துள்ள தகவ
லும் வெளியானதால், அவரை நம்பி
நன்கொடை கொடுத்த பக்தர்கள்
நொந்தளித்துப் போய் உள்ளனர். பல
ரும், போலீஸ் அதிகாரிகளை தொடர்பு
கொண்டு நாங்கள் கொடுத்த பணம்,
நிலம் ஆகியவை திரும்ப கிடைக்குமா
என்று கேட்டு வருகின்றனர். பலர்
அவர் மீது புகார் கொடுக்க தயாராகி
வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை மத்தியக்
குற்றப்பிரிவு போலீசில் நித்யானந்தா
மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்
பட்டுள்ளது.

விசாரணை நடத்த ஓரிரு நாளில்
தமிழக போலீசார் பெங்களூர் செல்ல
திட்டமிட்டுள்ளனர். இது குறித்து
சென்னை போலீஸ் உயர் அதிகாரி
ஒருவர் கூறுகையில், "சாமியார்
நித்யானந்தாவிடம் நன்கொடையாக
பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் தைரி
யமாக புகார் கொடுக்கலாம். அதன்
மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்ப
டும். புகார் கொடுப்பவர்களின் பெயர்
ரகசியமாக வைக்கப்படும்" என்று
தெரிவித்தார்.

நித்யானந்தா தலைமறைவாக
இருந்தபோது, கைதாகாமல் இருக்க,
அவருக்கு உதவி செய்வதாக கூறி
பலர் முன்வந்தனர். சிக்கலில் இருந்து
வெளியே வந்தால் போதும் என்று,
அவர்களை நம்பி பணத்தை வாரிமி
றைத்துள்ளார் சாமியார். இந்த விவ
காரத்தில் இருந்து தப்பிக்க, இதுவரை
அவர் ரூ.150 கோடி செலவு செய்த
தாக, அவரது முன்னாள் சீடர் லெனின்
கருப்பன் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படை
யிலும் நித்யானந்தாவிடம் போலீசார்
விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

His Divine Holiness in Judicial Custody with the CID

His Divine Holiness in Judicial Custody with the CID