KAILASA Library/Hindu Holocaust/அரசு வக்கீல் அவகாசம் கேட்டார் நித்யானந்தா முன்ஜாமீன் மனு ஒத்திவைப்புSign in
Hindu Holocaust

அரசு வக்கீல் அவகாசம் கேட்டார் நித்யானந்தா முன்ஜாமீன் மனு ஒத்திவைப்பு

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

ராமநகரம், ஏப். 13: நித்யானந்தாவின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருந்த காட்சிகள் வெளியானதை தொடர்ந்து, சாமியார் நித்யானந்தா தலைமறைவானார். அவர் மீது பாலியல் மற்றும் மோசடி புகார்கள் குவிந்தன. இவற்றை விசாரித்து வரும் கர்நாடக சி.ஐ.டி. போலீஸ் படையினர் நித்யானந்தாவை தீவிரமாக தேடி வருகிறது. இதனால், ராமநகரம் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் நித்யானந்தா முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.

portrait

இந்த மனு நீதிபதி நாராயணசுவாமிகள் கடந்த 9ம் தேதி விசாரணைக்கு வந்தது. நித்யானந்தா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சந்திரசேகர், ‘விசாரணையை வேண்டுமென்றே தாமதப்படுத்த நித்யானந்தாவுக்கு போலீசார் தொல்லை தருகின்றனர். எனவே, அவருக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்’ என்று வாதிட்டார்.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நித்யானந்தாவுக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரிய அவரது வழக்கறிஞர் இது தொடர்பாக பல ஆவணங்களை தாக்கல் செய்தார். இவற்றை படித்து பார்க்க அரசு வழக்கறிஞர் ஸ்ரீராம்ரெட்டி அவகாசம் கேட்டார். இதனால், விசாரணையை வரும் 17ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Dinakaran_13Apr2010_Nithyananda Munjamin Manu Othivaipu_Chennai

Dinakaran_11Apr2010_Pg3_Nithyanandavin Seedar Munjamin Kettu Manu_Chennai