KAILASA Library/சமய தீட்சை/ஆன்மீக வாழ்க்கையின் முதல் படிSign in
சமய தீட்சை

ஆன்மீக வாழ்க்கையின் முதல் படி

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

தென்னாட்டில் உள்ள பல்லாயிரக்கணக்கான சிவாலயங்கள் உத்தர காமிக ஆகமத்தின் விதிப்படி பூஜைகளையும், ஹோமங்களையும், திருவிழாக்களையும் நடத்தி வருகின்றன. உத்தர காமிக ஆகமம் என்பது நேரடியாக சிவபெருமானே திருவாய் மலர்ந்தருளியது ஆகும். இதில் பெருமான் சதாசிவன் ஆன்மீக வாழ்க்கை வாழ்பவர்களுக்கென்று ஒருசில தீட்சை முறைகளை விளக்குகிறார். சமய தீட்சை, விசேஷ தீட்சை, நிர்வாண தீட்சை, ஆச்சார்ய அபிஷேகம் போன்ற மிகச் சக்தி வாய்ந்த தீட்சைகளையும், தீட்சை முறைகளையும் அருளியிருக்கிறார்.

இதில் சமயதீட்சை என்னும் இந்த சிவதீட்சையை பற்றி உரைக்கும் பொழுது ஆன்மீக வாழ்க்கையின் முதல் படியாக உரைக்கிறார். இது சிவனடியார்கள், சிவ பக்தர்கள், இந்து மதத்தை, ஆன்மீக வாழ்க்கையை ஏற்று வாழ்பவர்களுக்கான, ஆன்மீக வாழ்க்கையை துவங்குவதற்கான முதற்படியாகும்.

இந்த சிவதீட்சையை எல்லா மதத்தவரும், எல்லா ஜாதியினரும், ஆண்கள், பெண்கள் மற்றும் எல்லா உயிரினங்களுக்கும் பொதுவாக உரைக்கிறார். இந்த தீட்சை பெற்றுக்கொள்ளும் எல்லோருக்கும்

Sri Nithyananda Paramashivam

ருத்ராக்ஷம், திருநீற்றுப்பையும் இலவசமாக அளிக்கப்படும். இந்த ருத்ராக்ஷத்தை தொண்டைக் குழியில்படும்படி கட்டி மந்திர தீட்சை வாங்கும்பொழுது இந்த ருத்ராக்ஷம் தொடர்ந்து மந்திரத்தை இயக்கும். மந்திரம் தன் சக்தியால் ருத்ராக்ஷத்தை அதிர வைக்கும். இந்த சுற்று தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கும். இது சிவோஹம் என்ற அனுபூதி நிலையை- ஜீவன் முக்த நிலையை நாம் அடைவதற்கு துணை செய்யும்.

இந்த சமய தீட்சை பெறும் நீங்கள் எல்லோரும் சிவோஹ அனுபவத்தை பெற்று ஜீவன் முக்தர்களாக வாழ்ந்திட வாழ்த்துகிறோம்.

  • நித்யானந்தா பல்கலைக்கழக அச்சகம்

நீங்கள் சிவபெருமானின் திருவடிவங்கள்

ஆழமான இந்த சில சத்தியங்களைப் புரிந்துக் கொள்ளுங்கள்.

வாழ்க்கையில் நாம் புரிந்து கொண்டாலும், புரிந்துகொள்ளாமல் விட்டாலும் ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக்கொள்ளாமல் விட்டாலும், விரும்பினாலும் விரும்பாமல்விட்டாலும் , நம்பினாலும், நம்பாதுபோனாலும் மாற்றவே முடியாத இறுதியான, அறுதியான உறுதியான சில சத்தியங்கள் இருக்கிறது.

உங்கள் வீட்டின் ஜன்னலையோ வாசற்காலையோ எந்த திசை நோக்கி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். ஆனால் சூரியன் கிழக்கில்தான் உதிக்கும், மேற்கில்தான் மறையும். அதை ஒன்றும் செய்ய முடியாது. 'இல்லையில்லை, எங்கள் ஊரில் உதிப்பதே இல்லை, மறைவதே இல்லை' என்று சொன்னால், உங்கள் வீட்டின் ஜன்னல் - வாசல்காலின் திசை வேறாக இருக்குமே தவிர, சூரியன் உதிப்பதும் மறைவதும் மாறுவதில்லை. ஜன்னல் - வாசல்காலின் திசை கிழக்கு மேற்காக இருந்தால், சூரியன் உதிப்பதையும் மறைவதையும் பார்க்கலாம், மாறியிருந்தால் பார்க்காமல்

Photograph of Sri Nithyananda Swami
Nithyananda seated among disciples

போகலாம். சூரியன் உதிப்பதையும் மறைவதையும் நீங்கள் பார்தாலும், பார்க்காமல் போனாலும், சூரியன் உதிக்கிறார் - மறைகிறார்.

அதேபோன்று இந்த உடலிலும் மனதிலும் நீங்கள் வாழும்பொழுது, ஞானமடைவதற்கு முன்பும், ஞானமடைந்த பிறகும் நீங்கள் சிவபெருமானின் திருவடிவங்கள். சிவபெருமானின் சக்தியோடு ஒன்றானவர்கள். சிலபேருக்கு புரியும் சிலபேருக்கு புரியாது. ஆனால், இது சத்தியம்.

சிலபேர் ஜன்னலையும் வாசற்காலையும் கிழக்கு மேற்காக வைத்து சூரியன் உதிக்கும்பொழுதும் பார்த்து ரசிக்கிறார்கள், மறையும்பொழுதும் பார்த்து ரசிக்கிறார்கள். சிலபேர் வடக்கு தெற்காக வைத்து அதைப்பார்க்காமலேயே வாழ்ந்து முடிக்கிறார்கள். ஆனால் சூரியன் உதிப்பதும் மறைவதும் உண்மை.

அதேபோன்று சிலபேர் வாழும்பொழுதே தியானத்தால், ‘சிவsystemோம்’ எனும் அனுபூதியை வாழ்ந்து, சக்தியை வெளிப்படுத்தி, அதை மகிழ்ச்சியோடு ஆனந்தத்தோடு கொண்டாடுகிறார்கள். சிலபேர் கொண்டாடுவதில்லை. ஆனால் மாறாத உண்மை - நாம் எல்லோரும் ‘சிவம்’ எனும் சக்தியின் பாகமாகத்தான் இருக்கிறோம்.

மாற்ற முடியாத உண்மை

ஆகமத்தை சிவபெருமான் வாழ்வதற்கான வழியைச் சொல்லத் துவங்கிய உடனேயே, அவர் முதன் முதலாக சொல்லுகின்ற சத்தியம்... ‘உங்கள் எல்லோருக்குள்ளும் நானே வெளிப்பட்டு, என் மயமாவே நீங்கள் எல்லோரும் இருக்கின்றீர்கள்.’

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள்... உங்கள் எல்லோருக்குள்ளும் ‘சிவsystemோம்’ என்கிற அனுபூதியாக சிவபெருமான் இருக்கிறார்.

சிவsystemோம் என்றால் சிவ + அsystemம். நான் என்று நீங்கள் எதை நினைக்கின்றீர்களோ, அது ‘சிவம்’. இந்த அனுபூதியாக உங்கள் எல்லோருக்குள்ளும் இருக்கின்றேன் என்று சிவபெருமான் சொல்கிறார்.

சிவsystemோஹத்தை தியானத்தில், சமாதி நிலையில்

Swamiji in orange robes standing in front of a golden throne

உணர்ந்தவர்கள் அந்த சக்தியை வெளிப்படுத்துகிறார்கள். உணராதவர்கள் அதை வெளிப்படுத்தாமலேயே இறந்து போகிறார்கள். ஆனால் அவர் உள்ளே சிவோஹம் இருப்பது உண்மை. ‘ சிவோஹம்’ எனும் அனுபூதியை வாழும்பொழுதே நீங்கள் அனுபவித்து வாழலாம், அனுபவிக்காமல்விட்டாலும் விடலாம், ஆனால் ‘சிவோஹம்’ உங்களுக்குள் இருப்பது உண்மை, இது மாற்ற முடியாத உண்மை.

உண்மையை மறைக்கும் மாயத்திரை

‘நீங்கள்தான் சிவன்’ என்று சொன்ன உடனேயே பலருக்கும் வருகின்ற முதல் கேள்வி... ‘என் மனைவியே நான் சொல்வதை கேட்பதில்லை. நான் எப்படி சாமி சிவனாக முடியும்’

நன்றாக தெரிந்துக்கொள்ளுங்கள்...நீங்கள் என்று உங்களைப்பற்றி நீங்கள் வைத்திருக்கிறீர்களே ஒரு கருத்து, அந்த கருத்துதான் நீங்கள் சிவம் என்பதை உணரவிடாமல் தடுக்கின்ற திரை. ‘உடல்தான் நான், மனம்தான் நான்’ என்று நீங்கள் உங்களைப்பற்றி வைத்திருக்கின்ற தவறான கருத்துதான் நீங்கள் சிவம் என்பதை உணரவிடாமல் தடுக்கின்ற திரை. ‘உடல்தான் நான், மனம்தான் நான்’ எனும் கருத்து நீங்கள் இல்லை என்பது மட்டுமல்லாமல், அந்த கருத்துதான் நிஜமான உங்களை நீங்கள் உணரமுடியாமல் தடுக்கின்ற இரும்புத்திரை.

Portrait of Sri Nithyananda Paramashivam

நிஜமாகவே ‘நீங்கள்’ என்று நீங்கள் எதை கருதுகின்றீர் களோ, ‘நீங்கள்’ என்று நீங்கள் எதை உணர்கின்றீர்களோ, அது நீங்கள் இல்லை என்பது மட்டுமல்லாமல், ‘சிவ his’ எனும் நிலையில் எப்பொழுதும் இருக்கின்ற உங்களை, அதை உணரவிடாமல் தடுக்கின்ற மாயத்திரை அதுதான்.