KAILASA Library/சமய தீட்சை/சமய தீட்சை - ஓர் பின்னணிSign in
சமய தீட்சை

சமய தீட்சை - ஓர் பின்னணி

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

நாம் நம்பினாலும், நம்பாவிட்டாலும், ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாமல் விட்டாலும், புரிந்து கொண்டாலும், புரிந்து கொள்ளாமல் விட்டாலும் பிரபஞ்சத்தை இயக்கும் சக்தி என்று ஒன்று உள்ளது. பிரபஞ்ச சக்தி உருவம், அருவம் இரண்டையும் கடந்தது. பக்தர்களின் பிரார்த்தனைக்கு இறங்கி, திருவுருவமும் தாங்குகிறது.

பிரபஞ்ச சக்தியின் மூலப்பொருள், பரம்பொருள் சிவ பெருமானாய் திருவுருவம் தாங்கி வந்து சிவோஹம் என்னும் ஜீவன் முக்த நிலையை அனுபூதியாக அளித்து பக்தர்களின் பிரார்த்தனைகளை நிறைவேற்றியது.

ஆகமம்

சிவோஹம் என்னும் ஜீவன் முக்த நிலையை அடைவதற்கான வாழ்க்கை முறைகளையும், தீட்சை முறைகளையும் சிவபெருமான் உமாதேவியினுடைய வேண்டுகோளுக்கிணங்கி திருவாய் மலர்ந்தருளிய சாஸ்திரங்கள்தான் ஆகமங்கள். சிவபெருமானுடைய திருவாயிலிருந்து வெளிப்பட்டதாலும், தேவியினுடைய

A photograph of a guru or spiritual leader seated on an ornate golden throne

திருவாய் வழி நமக்கு கிட்டியதாலும் சிவபக்தர்களுக்கு இது வாழ்க்கைமுறை என்பதாலும் இதற்கு ‘ஆகமம்’ என்று பெயர்.