நித்ய விதிகள்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
4.5 காலையில் எழுந்திருந்து மங்களம் உண்டாவதற்காக சிவனை த்யானிக்கவேண்டும்.
4.6 மலவிஸர்ஜன விதி பகலிலும் சந்தியாகாலங்களிலும் வடக்கு திசையை நோக்கியும் இரவில் தெற்குத் திக்கை நோக்கியும், மூக்கினது நுனியில் பார்வையைச் செலுத்தி ஒன்றும் பேசாது, முக்தையும் தலையையும் வஸ்திரத்தினால் மூடி நிலையுற்ற மனத்துடன் மலம் மூத்திரம் கண் காது மூக்கு மலமும் முதலியவற்றை விசர்ஜனம் செய்யவேண்டும்.
4.7-9 யாகத்திற்கு உதவியாகாத புற்களாலேனும், மண் கட்டியாலேனும் முன்னர் நீராலும், இடையில் மண்ணாலும், அதன்பின் நீராலும் சுத்தம் செய்யவேண்டும். குறியை ஒருமுறையும், குதத்தை ஐந்துமுறையும், இடதுகையைப் பத்துமுறையும், இரண்டு கைகளையும் ஏழுமுறையும், மண்ணால் சுத்தம் செய்யவேண்டும். பின்னர் பின்புறங்களையும் துடைத்துக் கொள்ளல் வேண்டும். முழுவதும் சுத்தம் உண்டாகும் வரை அளவாகச் சுத்தம் செய்யவேண்டும் - குறைந்த அளவு பயனற்றதாய் முடியும்.
ஸம்ஸாரத்தில் இருப்பவர்களின் அந்தக்கரணம் மனசுத்தியாவது (சுத்தம் செய்ததுபோதும் என்று மனத்திற்குத் தோன்றுதல்). அதன் சுத்திக்காககால், கைகளை. ஒவ்வொருமுறை மண்ணாலும் ஜலத்தாலும் சுத்தம் செய்துசெய்வது.
11-14 தந்ததாவன விதி
பின்னர் ஆசமனம் செய்து, சுத்தனாய் பல்தேய்த்தல், ஈரமுள்ளதாயும், தோலுடன்கூடியதாயும் சமமாய் ஒடிக்கப்படாதாயும் சுத்தமாயும், கணுவற்றதாயும் சுண்டுவிரல் அளவு பருமனுமான பற்குச்சி சிறந்ததாகும். துறவிகளுக்கு புங்கமரம், கொடிப்புங்கை, வாகை, கருங்காலி, மருது இவற்றின் குச்சிகளை எட்டு அங்குல அளவாகவும் க்ரஹஸ்தர்களுக்கு இரளி, மா, மருது, அசோகம், நாவல், சம்பகம், நாயுருவி, குருக்கத்தி அவற்றின் குச்சிகள் எட்டு பன்னிரு அங்குல அளவாகவும் பல்தேய்த்தல் வேண்டும்.
15-18 பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூதிரர், கீழ ஜாதிக்காரர்கள் ஆகிய இவர்கள் விஷயத்தில் முறையே பன்னிரெண்டு அங்குலத்திலிருந்து ஒவ்வொரு அங்குலம் குறைவாக விதிக்கப்பட்டிருக்கிறது.
நறுவிலி, நெல்லி, நமை, ஆமணக்கு, பழமுன்னி, பாலை, வேம்பு, ஆவிரை, புல், முருங்கை, வஞ்சி (நொச்சி), பைசாசவ்ருக்ஷம், நாணல், விரல், தர்பை இவற்றால் பல் துலக்ககூடாது. நவமி, அமாவாசை, ஷஷ்டி, பிரதமை - இந்த தினங்களில் குச்சியால் பல்துலக்கலாகாது. கிர்ஹஸ்தர் இந்த தினங்களில் பரிசுத்தமான இலைகளால் பல்துலக்கவேண்டும் அல்லது இந்த தினங்களில் தந்த தாவனம் செய்யாமல் பன்னிருமுறை வாயைக்கொப்பளித்து முகத்தை சுத்தி செய்துகொண்டு ஸ்நானம்செய்யவேண்டும்.
19-25 இரண்டு நதிகள் கூடுமிடம் சமுத்திரத்தில் நதிகூடுமிடம், ஓடை, தாமரைத்தடாகம், மேற்குத்திக்கை நோக்கி பிரவிஹிக்கும் வற்றாதநீரையுடைய மடு, குட்டை, அருவி அன்னும் இவற்றில் ஸ்நானம் செய்தல் மிகவும் உத்தமமாகும்.
குளத்தில் ஸ்நானம் செய்வது மத்யமம் ஆகும் கிணறு எடுத்து வந்த தீர்த்தம் இறங்கும் கிணறு இவற்றில் ஸ்நானம் செய்தல் அதமமாகும்.
அஸ்திர மந்திரத்தால் எட்டு அங்குலத்திற்குக் கீழே உள்ள மண்ணை எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும்.
எடுத்து வைத்த மண்ணை, சிரோமந்திரத்தால் தீர்த்த கரையில் வைத்துக் கொண்டு எல்லா அங்கங்களிலும் பூசிக்கொண்டு இருகைகளால் கண் காது முதலிய இந்திரியங்களை மூடிக்கொண்டு, காலாக்னிபோல பிரகாசமுள்ளஅஸ்திரமந்திரத்தை இருதயத்தில் பாவனை செய்துகொண்டு, ப்ராணவாயுக்களை அடக்கி ஜலத்தில் மூழ்கியிருக்கவேண்டும். மல ஸ்நானம் செய்த பின்னர் நீரிலிருந்து மேல் எழுந்து, பின்னர் விதி ஸ்நானம் செய்யவேண்டும்.
விதி ஸ்நான முறை
26) சரஸ்வதி, கங்கை, யமுனை முதலிய தீர்த்தங்களில்
ஏதானும் ஓர் தீர்த்தத்தை, அங்குச முத்திரைசெய்து இருதய மந்திரத்தை உச்சரித்து ஆகர்ஷணம் செய்து, அவ்வாறே ஸமஹார முத்திரை செய்துகொண்டு இருதய மந்திரத்தால் தன்னுடைய முன்பாகத் ஸதாபித்து கொள்ளவேண்டும்.
27) எஞ்சிய மண்ணின் பக்கத்தை எடுத்துக்கொண்டு தொப்புள் அளவாக உள்ள நீருள் சென்று வடக்குமுகமாக நின்றுகொண்டு, இடது உள்ளங்கையில் அம்மண்ணை மூன்றுபாகமாக இடவேண்டும்.
28) தெற்குதிக்கிலுள்ள மண்ணை அங்க மந்திரங்களால் ஒரு முறையும், கிழக்குத்திக்கில் உள்ள மண்ணை அஸ்திர மந்திரத்தால் ஏழுமுறையும்,
29) ஹும்படை இறுதியில் உடைய அஸ்திர மத்திரத்தை உச்சரித்துக்கொண்டு கிழக்குதிக்கில் உள்ள மண்ணை எல்லாதிக்குகளிலும் போகும்படி வீசவேண்டும்.பின்னர் சி வாமந்திரத்தை உச்சரித்து வடக்குதிக்கில் உள்ள மண்ணை கையினால் சுழற்றி நான்கு பக்கங்களிலும் போகும்படி வீசி தீர்த்தத்தை சிவா தீர்த்தமாக்கவேண்டும்.
30) நான்கு அங்க மந்திரங்களை உச்சரித்து கொண்டு அங்க மந்திரங்களால் ஜபிக்கபெற்ற தெற்கு திக்கிலுள்ள மண்ணால் தலை முதல் கால் ஈறாக எல்லா அங்கங்களிலும் பூசிக்கொள்ளவேண்டும்.
31) ஷண்முகீ கிரண முத்திரை செய்து எல்லா இந்திரியங்களையும் மூடிக்கொண்டு, சிவா மந்திரத்தைத் தியானித்து நீரின் மத்தியில் சிவா தீர்த்தத்தினுள் மூழ்கவேண்டும்.
32) பின்னர் எழுந்து நின்று சந்திரசூர்யர்களாய் பாவிக்கப்பட்ட இரண்டு கைகளால் கும்ப முத்திரை செய்து கொண்டு நீரை எடுத்து வெளஷ்டை இறுதியில் உள்ள ஷடங்க மந்திரங்களால் சிரசில் தெளித்துக் கொள்ளவேண்டும்.
33) ஆன்மரக்ஷைாகவும் விக்னங்களை போக்குவதற்கும் தீர்த்தத்தை அஸ்திர மந்திரத்தினால் மந்திரித்து மகா திக்கு மற்றும் உப திக்கு இவற்றில் தாரையாக இறைக்கவேண்டும்.
34) சக்ரவததிக்கு செய்யப்படும் உபசாரத்துடன் பரிமள திரவியங்கள் நெல்லிப் பொடி இவற்றுடன் ஸ்நானம்செய்து கரைக்கு வந்து ஸம்ஹாரமுத்திரையால் சிவதீர்த்தத்தை உப்சம்ஹாரம் செய்யவேண்டும்.
35-36) மாடப்புறா, கோழி, இளிக்கண்குருவி, காகம், கழுகு, கழுதை, நாய், ஊர்ப்பன்றி, பருந்து, ஒட்டகம் இவற்றின் இறக்கை, மூக்கு, ரோமம், குளம்பு, எலும்பு என்ற அங்க விகாரங்கள், மயானம், பதிதன், பிரேதம், பிரசவிதவள், நிர்மால்யம், போஜகன் (புருஷன் இறந்த பின் சோரபுருஷனிடத்தில் உண்டானவன்), பிறமதத்தவர் ஆகிய இவர்களை ஸ்பரிசித்தால் ஜலஸ்நானம் செய்யவேண்டும்.
37) தொப்புளுக்கு மேல் கை நீங்கலாக உள்ள அங்கங்களில் ரேதஸ், மலம், மூத்திரம், இவற்றின் சம்பந்தம் ஏற்பட்டால் ஜல ஸ்நானத்தால் சுத்தி செய்துகொள்ளவேண்டும். வபனம் செய்துகொண்டாலும், வாந்திசெய்தாலும், சுத்தியின்பொருட்டு ஜல ஸ்நானம் செய்யவேண்டும்.
பஸ்ம (பசுமாட்டுசாணம்) ஸ்நானவிதி
38) ஜல ஸ்நானம் செய்த பின்னர், கர்ப்பம் முதலிய முறையாக சித்தித்தித்ததாயும், ஸம்ஹிதா மந்திரங்களால் மந்திரிக்கப்பட்டதாயும் (அகர்பமாயின்) நிவிர்த்தி முதலிய கலைகளால் சுத்தம் செய்யப்பட்டதாயும் நிவ்ருத்தி முதலிய கலைகளால் சுத்தம் செய்யப்பட்டதாயும் உள்ள பஸ்மத்தால் ஸ்நானம் செய்யவேண்டும்.
39) தலை முதற்கொண்டு பாதமளவாக ஹும்படை இறுதியிலுள்ள அஸ்திர மந்திரத்தை உச்சரித்து திருநீற்றால் மல ஸ்நானம் செய்து விதி ஸ்நானம் செய்யவேண்டும்.
40) ஈசான மந்திரத்தால் சிரசு, தத்புருஷ மந்திரத்தால் நெற்றி, அகோர மந்திரத்தால் மார்பு, வாமதேவ மந்திரத்தால் தொப்புள் ஸத்யோஜாத மந்திரத்தால் எல்லா அங்கங்கள் ஆகிய இவற்றில் முறைப்படி 2 உத்தூளனம் செய்யவேண்டும் (யதிகள், உத்தூளனம், கிரஹஸ்தர்கள் திரிபுண்டரம் தரிக்கவேண்டும்)
41-42) மூன்று சந்திகளிலும், இரவிலும் பிக்ஷாடனத்தின்ஆரம்பம் முடிவு இவற்றிலும், நித்திரையினின்றுமிருந்து எழுந்தவுடனும், போஜனத்திக்குக் பின்னரும், தீர்த்தம் அருந்திய பின்னரும் மலஜலம் கழித்த பின்னரும், அவ்வாறே பெண்கள், நபும்ஸகன், சூதிரன், பூனை, கொக்கு, எலி இவைகளைப் பரிசி த்தவிடத்தும் விதிப்படி பஸ்மஸ்நானம் செய்யவேண்டும்.
43) விரதத்தை அனுஷ்டிப்பவன் ஈசுவரர், அக்னி, ஆசிரியர், வித்யாபீடம், இவற்றின் சமீபத்திலும், சண்டாளரின் பார்வையிலும், அசுத்தமான இடத்திலும், வழியிலும் உதுூளனம் செய்யலாகாது.
மாஹேந்திர ஸ்நான முறை
44) சூரிய கிரணங்களோடு (வெய்யிலுடன்) மழை சேர்ந்த காலத்தில் கிழக்கு முகமாக கைகளை உயரே தூக்கி ஈசான மந்திரத்தை உச்சரித்துக்கொண்டு ஏழு அடிகள் நடக்கவேண்டும். இது மகேந்திர ஸ்நானமாகும்.
மாருத ஸ்நான முறை
45) தத்புருஷ மந்தித்தையேனும், கவசமந்திரத்தை ஏனும், கவச்சமந்திரத்தையேனும் உச்சரித்துக்கொண்டு, பசுக்களின் குளம்புகளால் கிளப்பப்பட்ட தூளிகள், தன சரீரத்தில் விழும்படி பசுக்களின் மத்தியில் செல்லுதல் மாருதஸ்நானம் எனப்படும்.
மந்திரஸ்நானவிதி
46) ஸத்யோஜாதம் முதலிய மந்திரங்களை உச்சரித்துக்கொண்டு தீர்த்தத்தைச் சிரசில் புரோக்ஷித்துக் கொள்ளுதல் மந்திர ஸ்நானமாகும். இந்த மந்திர ஸ்நானமானது, வாருண ஸ்நானம் ஆக்னேய ஸ்நானம் இவற்றில் விதிக்கப்பட்டிருக்கிறது.
மானஸஸ்நானவிதி
47) பிராணாயாமம் செய்து மனத்தால் மூலமந்திரத்தை உச்சரித்து மானஸ ஸ்நானம் செய்யவேண்டும் (மூலமந்திரத்தை உச்சரித்தலால் கலக்கப்பட்ட குண்டலினீ சக்தியினின்றும் பெருகிய அமிருத தாரையால் மானஸ ஸ்நானம் செய்யவேண்டும்) இந்த மானஸ ஸ்நானம் எல்லாக்காலங்களிலும் விதிக்கப்பட்டிருக்கின்றது.
48-49) சுத்தமான ஜலத்தால் கால்கைககளைக் கழுவிய பின்னர் சுத்தமான தீர்த்தத்தைப் ( சுக்லபக்ஷத்தில் சந்திர ரூபமாகவும், கிருஷ்ணபக்ஷத்தில் சூர்யரூபமாக) பார்த்து பெருவிரலின் அடியிலுள்ள தீர்த்தத்தை ஸ்வதா என்னும் பதத்தை இறுதியிலுடைய ஆத்மதத்துவம் முதலிய மந்திரங்களால் மூன்றுமுறை ஆசமனம் செய்யவேண்டும். இருதய மந்திரத்தை உச்சரித்துக்கொண்டு வலது கை பெருவிரல் அடியால் கீழ்மேல் உதடுகளை இருமுறை துடைத்து நடுவிரல் மூன்றாலும் பரிசிக்கவேண்டும்.
50) பெருவிரல் சுட்டுவிரல் இவற்றின் நுனியால் இரண்டு நாசிகளையும், பெருவிரல் அணிவிரல் இவற்றின் நுனியால் இரண்டு கண், காது, இவற்றையும் தொடுதல்வேண்டும். அடிக்கடி ஜலத்தால் கையைக்கழுவவேண்டும்.
51) கட்டைவிரல் பெருவிரல் இவற்றின் அடியால் நாபியையும், உள்ளங்கையால் மார்பையும் எல்லா விரல்களாலும் சி ரசு, தோள் இவற்றையும், இருதய மந்திரத்தை உச்சரித்துக்கொண்டு தொடுதல் வேண்டும்.
எம்பெருமான் ஈசன் சொல்லியபடி வாழ்ந்திடுவோம். அனைவரையும் வாழச் செய்வோம்.
வேத நெறி தழைத்தோங்குக
மிகு சைவ துறை விளங்குக
பூதப்பரம்பரை பொழியட்டும்
சிவபூதங்களாக வாழுகின்ற மக்கள் பரம்பரை பொங்கி பெருகிக்கொண்டே செல்லட்டும்...சிவமாகட்டும்.
சமய தீட்சை பெற்றவர்கள் செய்ய வேண்டியவை:
- எல்லா நேரமும் ருத்ராக்ஷமும் திருநீரும் அணிய வேண்டும்.
- எல்லா நேரமும் தொண்டைக் குழியில் இருக்கும் ருத்ராக்ஷம் அசையும் வகையில் உள்ளுக்குள் தீட்சையான 'மூல மந்திரத்தை' அஜபாஜபமாக ஜபித்துக் கொண்டிருக்க வேண்டும்.
சமய தீட்சை பெற்றவர்கள் செய்யக்கூடாதவை:
- உலகத்திற்கு கர்த்தரான சிவபெருமானை நிந்திக்ககூடாது.
- அவரால் கூறப்பட்ட சாஸ்திரங்கள், வேதம் மற்றும் ஆகமங்களை நிந்திக்க கூடாது.
- குரு மற்றும் இதர சாதகர்கள் மற்றும் தீட்சைப்பெற்றவர்களை நிந்திக்க கூடாது.
- சிவபெருமானுக்கு சாற்றப்பட்ட புஷ்பத்தை தாண்டக் கூடாது.
- சண்டிகேஸ்வரருக்கு சாற்றப்பட்ட புஷ்பத்தை தாண்டக் கூடாது.
- சண்டிகேஸ்வரருக்கு நைவேத்யம் செய்யப்பட்டவையை உண்ணக்கூடாது.
- சிவலிங்கத்தின் நிழலை தாண்டவோ, மிதிக்கவோ கூடாது.